லக்ஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி
என் இனிய ஆன்மீக தோழிகளுக்கு என் காலை வணக்கங்கள்.மருதாணி அழகுக்காக போடுகிறார்கள் என்று அநேகம் பேர் நினைப்பதுண்டு.அதையும்தாண்டி ஆன்மீகத்திலும் மருதாணிக்கு பங்குண்டு.அது என்ன? என்பதையே இந்த பதிவில் எழுதியுள்ளேன்.
படித்து பயன்பெறுவதே என் அன்னை லக்ஷ்மிதேவிக்கு நான் செய்யும் பக்தி என்றே சொல்லலாம்.
மருதாணி என்று சொன்னாலே நமக்கு எல்லாம் தீபாவளி,திருமணம்,விழாக்கள் என்றுதான் ஞாபகம் வரும்.தீபாவளி முதல் நாள்,திருமணத்தின் முதல் நாள் ,விழாக்கள் போன்ற நேரங்களில் பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்தி கொள்வதற்கு மருதாணியை பயன்படுத்தி வருவது வழக்கத்தில் உள்ளது.
மருதாணி இலையை பயன்படுத்துவது நல்லது.இப்போது செயற்கை மருதாணி பொடியை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.அது நம் கைகளுக்கு நல்லதல்ல.செயற்கை மருதாணி பொடியால் நம் தோலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயன கலவைகள் கலக்கப்படுகின்றன.எப்போதும் இயற்கையோடு ஒன்றிணைக்கும் பொருட்களையே பயன்படுத்துவது நன்று.
நாசினி.கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கவல்லது.
லக்ஷ்மி தேவியின் அருளை சுலபமாக பெற மருதாணியை கைகளில் இட்டு கொண்டு பூஜை செய்தால் நாம் கேட்கும் வரத்தை பெறலாம்.அத்தகைய சிறப்புமிக்கது மருதாணி இலை.
லட்சுமிக்கும், மருதாணிக்கும் என்ன சம்பந்தம்? என்று அறிய உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
லக்ஷ்மி தேவி, பூலோகத்தில் சீதையாக பிறந்தார்.திருமால் அவதாரமான ஸ்ரீ ராமரை மணந்தார்.லக்ஷ்மி என்றாலே அழகுக்கு பிறப்பிடம் என்பது நமக்கு தெரியும்.உலகத்தின் அழ குகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக கொண்ட சீதாதேவியின் அழகில் மயங்கிய ராவணன் என்ற அரக்கன், தேவியை தன் மனைவியாக்கி கொள்ள விரும்பினான்.ஆதலால் நயவஞ்சனையாக சீதாதேவியை கடத்தி சென்று அசோகவனத்தில் அடைத்தான்.
ஸ்ரீராமரை பிரிந்த வருத்தத்தில்,சீதாதேவி தன் கவலைகளை அங்கிருந்த செடி,கொடிகளிடம் சொன்னாள்.அப்போது மருதாணி செடி சீதாப்பிராட்டியார் சொல்வதை கேட்பதுபோல் தலை அசைக்கும்.இதை பார்த்த சீதாதேவி தன் கஷ்டங்களை கேட்க,மருதாணி செடியாவது இருக்கிறதே !என எண்ணி ஆறுதல் அடைந்தார்.
தினமும் மருதாணி செடியிடம் தன் தோழிகளிடம் கூறுவதை போல்,தன் கவலைகளை கூறி வந்தார்.பிறகு ஒரு நாள்,ராமன் ராவணிடம் போர் செய்து சீதையை மீட்டார்.அப்போது தன் கவலைகளை இதுநாள் வரை கேட்ட மருதாணி செடிக்கு,நன்மை செய்ய வேண்டும் என நினைத்து ,மருதாணி செடியிடம் போய்," என்ன வரம் வேண்டும்?" என்று சீதாப்பிராட்டியார் கேட்டார்.
மருதாணி செடி ,"எங்களுக்கு எதுவும் வேண்டாம் .நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்."என்று கூறியது.
உன்னதமான உங்கள் குணத்திற்கு "நான் வரம் தருகிறேன் என்று கூறி ,உன்னை கைகளில் இட்டு கொண்டு எவர் பூஜிக்கிறார்களோ அவர்களுக்கு சகல வரங்களையும் தருவேன்"என நம் அன்னை லக்ஷ்மிதேவியார் வரம் தந்தார்.
அதன்காரணமாகவே, இன்றும் திருமணங்களில் பெண்கள் மருதாணி இடுகின்றனர்.இதனால் லக்ஷ்மிதேவியின் அருளாசி மணப்பெண்ணுக்கும்,திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும்,சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக