புதன், 29 நவம்பர், 2017

சிவபெருமானை பற்றிய சனீஸ்வரர்

சிவபெருமானை பற்றிய சனீஸ்வரர்
சனீஸ்வரர் க்கான பட முடிவு

சனிபகவான் தீவிரமான சிவ பக்தர். காசியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து அதன் பயனாக கிரக பதவியையும் அதிகாரமும் பெற்றார். எனினும் தனக்கு அருள் கொடுத்த சிவபெருமானை பற்றித் திருவிளையாடல் செய்தவர்

ஒருசமயம், சனிபகவான் சிவபெருமானைத் தேடிக் கைலாயம் சென்றார். கயிலையில் சிவபெருமான் பார்வதியோடு அமர்ந்திருந்தார். தன்னைப் பற்றுவதற்காக வெகுதூரத்தில் சனி வருவதை அறிந்த சிவபெருமான், சனியின் பிடியிலிருந்து தப்பிக்க எண்ணினார். தான் செய்த முடிவை நிறைவேற்ற எண்ணிய சிவபெருமான் தேவியிடம் ""நான் சிறிது காலம் தவம் செய்யப்போகிறேன்'' என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். பக்கத்தில் கயிலை மலையில் இருந்த ஒரு குகைக்குள் புகுந்தார். அந்த குகை வாசலையும் பெரிய பாறையால் நன்றாக அடைத்துவிட்டார். உள்ளே சென்ற சிவபெருமான், நிஷ்டையில் யோக சமாதியில் ஆழ்ந்து விட்டார்.


ஏழரை ஆண்டுகள் ஆனபிறகு சமாதி கலைந்து எழுந்தார். சனிபகவான் பிடியிலிருந்து தப்பிவிட்ட மகிழ்ச்சியோடு சிவபெருமான் குகையில் பாறையை விலக்கிவிட்டு வெளியே வந்தார். குகை வாசலில் வெளியே சனிபகவான் நின்று கொண்டிருந்ததைக் கண்டு சிவபெருமான் அதிர்ச்சியுற்றார். வாசலில் நின்ற சனிபகவான் சிவபெருமானை நோக்கி, "" பிரபோ, என்னுடைய கடமை முடிந்தது. தங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்'' என்றார்.


அதைக்கேட்ட சிவபெருமான், ""உன் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகவே, குகைக்குள் சென்றேன். ஆனால் நீயோ, உன் கடமை முடிந்தது என்கிறாயே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே!'' என்றார்.


சனிபகவான் புன்னகையோடு சிவபெருமானை நோக்கி, ""ஐயனே, தங்களை அம்பிகையிடமிருந்து பிரித்து இருளாக இக்குகைக்குள் ஏழரை ஆண்டுகள் அடைத்து வைத்தது அடியேன் தான். அதனால் இப்பொழுது நான் சென்று வருகிறேன். விடை கொடுங்கள்!'' என்று கூறி பணிந்து நின்றார்.


சிவபெருமானால் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரனின் பிறப்பு வியப்பானது. சூரியபகவானின் மனைவி சஞ்சிகை. சூரியனோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த அவள், தனது சாயலில் ஒரு பெண்ணைப் படைத்து அங்கேயே விட்டுவிட்டு தன்னுடைய கணவனுக்குத் தெரியாமல் நீங்கினாள். சஞ்சிகை சாயலில் இருந்த சாயா தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்த இரண்டாவது மகன் சனிபகவான் ஆவார்.


சனிபகவான் நீல ஆடை புனைந்தவர். எட்டுக்குதிரை பூட்டிய இரும்புத் தேரை உடையவர். காகத்தை வாகனமாக உடையவர். கழுகு இவருடைய வாகனமாகக் கருதப்படுகிறது. மை போனற கருமை நிறம் உடையவர். மேற்குத் திக்கை இடமாகக் கொண்டவர்.
"சனைச்சரன்' என்பதே இவரின் இயற்பெயர். இவர் ராசிமண்டலத்தில் மெதுவாக இயங்கக்கூடியவர். முட்டை வடிவமான ராசி மண்டலம் 360 பாகைகளைக் கொண்டது. அந்த 360 பாகைகளும் 12 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் ராசி என்று 12 ராசிகளாக அழைக்கப்படுகிறது.


சூரியன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதமாகும். ஆனால் சனிபகவானோ ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த முறையில் 12 ராசிகளையும் கடந்து செல்ல சனிபகவானுக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன. மெதுவாகச் சென்றாலும் உறுதியாகப் பற்றக் கூடியவர் சனிபகவானே ஆவார்.


சனிபகவான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இங்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி இவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.
 

நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்


நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்

கூட்டுப் பிரார்த்தனை



கூட்டுப் பிரார்த்தனைதொடர்புடைய படம்


வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் எதிரிகள் என்பது ஊரறிந்த விஷயம். ஒருமுறை இருவருக்கும் ஒரு பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம், ஓய் வசிஷ்டரே! உலக உயிர்கள் அனைத்தும் இறைவனை அடைய வேண்டும் என்பது என் ஆசை. உயிர்கள் இறைவனை அடைய மனம் ஒருமித்த தவம் இருக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட தவசீலன் என்பதால் தான் இறைவனை பார்க்க முடிந்தது. எனவே தவத்தின் பெருமை குறித்து பிரசாரம் செய்யப் போகிறேன். உலகமக்கள் என்னைப் பின்பற்றி இறைவனை அடைவார்கள், என்றார். வசிஷ்டர் சிரித்தார். விஸ்வாமித்திரரே! நீர் எப்போதும் அவசர குடுக்கை தான். ஏற்கனவே, ஒரு அரிச்சந்திரனை உம் பொருட்டு பாடாய் படுத்தினீர். இப்போது உலகத்தையே பாடாய் படுத்தப் போகிறீரோ! இறைவனை அடைய நினைப்பவன் தவம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. தவம் என்பது உலகத்தாருக்கு ஏற்புடையதும் அல்ல. உடலை வருத்தி இருக்கும் உண்ணாவிரதம் கூட இறைவனை அடைய உதவுமா என்பது சந்தேகமே! துறவிகளுக்கு வேண்டுமானால் தவமிருக்கலாம். இறைவனை அடையலாம். ஆனால், சம்சார சாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் குடும்பஸ்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுவே அவர்களை இறைவனிடம் சேர்ப்பித்து விடும், என்றார்.


இருவரும் நீண்ட நேரமாக விவாதித்தனர். பிரச்னை தீர்வுக்கு வரவில்லை. நேராக பிரம்மாவிடம் சென்றார்கள். பிரம்மா இவர்களிடம், நான் படைப்புத் தொழிலில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறேன். நீங்கள் சிவனைப் பாருங்கள், என சொல்லி விட்டார். சிவனிடம் சென்றார்கள் இருவரும். என் பரமபக்தன் ஒருவன் பூலோகத்தில் மிகவும் கஷ்டப்படுகிறான். என்னை வருந்தி அழைத்தான். அவனைப் பார்க்கப் போகிறேன். பெருமாள் தான் இது போன்ற விஷயங்களுக்கு தகுதியானவர். அமைதியானவர். உங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்வார், என்றார். பெருமாளிடம் ஓடினார்கள் இருவரும். முனிவர்களே! இதற்கு எனக்கு பதில் தெரியுமாயினும், என்னை விட இதோ படுத்திருக்கிறேனே! ஆதிசேஷன். அவனுக்கு ஆயிரம் நாக்கு. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நொடியில் பதில் சொல்லி விடுவான், என்று தப்பித்துக் கொண்டார். அவர்கள் ஆதிசேஷனிடம் கேட்டனர்.


முனிவர்களே! உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதைச் சொல்ல ஒரு நிபந்தனை. நான் தான் இந்த உலகைத் தாங்குகிறேன். இப்போது பாரம் அதிகமாக இருக்கிறது. பேசவே முடியவில்லை. இதை நீங்கள் குறைத்து வையுங்கள். பதில் சொல்கிறேன், என்றது. விஸ்வாமித்திரர் தான் செய்த தவத்தில் நூறில் ஒரு பங்கை ஆதிசேஷனுக்கு கொடுத்தார். பாரம் இறங்கவில்லை. அவ்வளவு தவத்தையும் கொடுத்தார். ஓரளவு கூட அசையவில்லை. வசிஷ்டர் ஆதிசேஷனுக்கு, தன் சிஷ்ய கோடிகளுடன் செய்த கூட்டுப்பிரார்த்தனையின் பலனில் லட்சத்தில் ஒரு பங்கு தான் கொடுத்தார். ஆதிசேஷனின் பாரம் நீங்கி விட்டது. விஸ்வாமித்திரர் தலை குனிந்தார். 


தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் பிரார்த்தனை இலகுவானது. இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும். ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். 

அதுபோல், குடும்பத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும் ஒட்டு மொத்தமாக கூடி பிரார்த்தனை செய்வோம். நம் கோரிக்கை இறைவனால் நிறைவேற்றப்படும்.

தீபங்கள் பற்றிய தகவல்கள்

Related image
தீபங்கள் பற்றிய  தகவல்கள்



1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.தொடர்புடைய படம்

2. நெய்வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.

3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது. ஊது பத்திகளுக்கென்று உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது. இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.

4. கற்பூரம் ஏற்றும் போது தட்டில் சிறிதளவு திருநீறை   வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும். திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம். பூஜைக்குரிய வெற் றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.

5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.

7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.

8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

10. விநாயக பெருமானுக்கு - 1, 7 தீபம், முருகருக்கு - 6 தீபம், பெருமாளுக்கு - 6 தீபம், நாக அம்மனுக்கு - 4 தீபம், சிவனுக்கு - 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு - 2 தீபம், மகாலட்சுமிக்கு - 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம். சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன் - சிங்கம் - நந்தி முன்பாக, பிள்ளையார் - பெருச்சாளி முன்பாக, பெருமாள் - கருடன் முன்பாக, முருகர் - மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.


12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும்,  தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு - 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.elumichai vilakku க்கான பட முடிவு

13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந் தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயா லாற்ற வைத்து, நிலை யான அமைதியைத் தரும்.

14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில தீபம் ஏற்ற வேண்டும்.

15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடைய லாம்.

17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண் டாது.

18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.

19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண் டும்.

20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.* 

செவ்வாய், 28 நவம்பர், 2017

கார்த்திகை தீப திருநாள் கொண்டாட சில குறிப்புகள்

அன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு  வணக்கம்.karththikai deepam greetings க்கான பட முடிவு

கார்த்திகை தீபம் வரும் சனிக்கிழமை வருவதால் இந்துக்களாகிய நாம் அனைவர் வீடுகளிலும்,கோவில்களிலும்  கொண்டாடுவோம் என்பது தெரிந்ததே.வரவிருக்கும் கார்த்திகை தீபத்திருநாளை சிறப்பாக கொண்டாட நாம் முன் கூட்டியே என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி எனக்கு தெரிந்ததை  இந்த பதிவில் எழுதுகிறேன்.

இந்த குறிப்பு அனைவருக்கும் பயன்னுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

கார்த்திகை தீப திருநாள் கொண்டாட சில குறிப்புகள் 
கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான்.கடைசி நேரத்திலே விளக்குகள்  வாங்காமல் முன்கூட்டியே விளக்குகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மிடம் போன வருஷம் பயன்படுத்திய பழைய அகல் விளக்குகள் இருந்தாலும்,சாஸ்திரத்திற்காக 6புதிய அகல் விளக்குகள் மட்டுமாவது வாங்குவது நல்லது.  Picture of Agal Vilakku Medium


தொடர்புடைய படம்தொடர்புடைய படம்
மண் அகல் விளக்குகளுடன்,   நம் வீட்டிலுள்ள மற்ற (பித்தளை,வெள்ளி,செம்பு )விளக்குகளையும் ஏற்றுவதால் நம் வீடு தீப ஒளியில் பிரகாசிக்கும்.நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு.

புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி  விளக்குகளை 4மணி நேரமாவது போட்டு வைக்க வேண்டும்.இந்த முறையில் செய்வதால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய்  கசிந்து விடாமல் இருக்கும்.4மணி நேரம் கழித்து அதை நன்றாக தேய்த்து கழுவவும்.கழுவியத்தை மின் விசிறி இருக்கும் இடத்திலோ வெயில் படும் இடத்திலே காயவைத்து எடுக்க வேண்டும்.

பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில் துவைக்கும் சோப்பு சிறிது போட்டு ஊற வைக்கவும்.அப்போதுதான் எண்ணெய் பிசுக்கு போகும்.நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.




காய்த்த மண் அகல் விளக்குகளை எடுத்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.மஞ்சள் குங்குமம் வைப்பதால்  மங்களமாக இருக்கும். திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.நிறைய விளக்குகளுக்கு பொட்டு வைக்க வேண்டியுள்ளதால்  சந்தானம் கரைத்த கிண்ணத்தில்  ஒரு பட்ஸ்சும்,குங்குமத்தில் ஒரு பட்ஸ்சும் போட்டு வைத்து கொண்டு போட்டு வைக்கவும்.குங்குமத்தை தொடுவதற்கு முன்னால் தண்ணீர் தொட்டு அதன்பிறகு எடுக்கவும்.

சில சந்தானம் நிறம் இல்லாமல் இருக்கும்.நிறம் கிடைக்க சிறிது மஞ்சள் தூள் கலந்து பயன் படுத்தவும். 

 எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை.காமாட்ஷி விளக்கு,குத்து விளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் நல்லது.மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.நெய் விலை அதிகம் என்பதால் அனைவராலும் வாங்கமுடியாது என்பதால் இந்த டிப்ஸ்.

எண்ணெய் ஊற்றிய பின்தான் திரி போடவேண்டும்.பஞ்சு திரி மிக மெல்லிதாக இருந்தால் இரு திரியை ஒன்றாக்கி ஒரே திரியாக போடலாம்.  இருதிரி போட்டு ஏற்றுவதால் வெளியே வைக்கும் விளக்குகள் காற்றில் அணையாமல் இருக்கும்.வீட்டிற்குள் ஏற்றும் விளக்குகளுக்கு இரு திரி தேவை இல்லை.ஒரு திரியே போதுமானது.

விளக்கை தரையில் வைக்காமல் ஒரு சிறு தட்டின் மீதோ ,வெற்றிலை மீதோ,வாழை இலையை சதுரமாக வெட்டி அதன் மீதோ வைக்கலாம்.பாக்கவும் அழகாக இருக்கும்.தரையிலும் எண்ணெய் வடியாது.தீபங்கள் அனைத்தையும் வாசலில் ஏற்றி பிறகு வீட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு செய்வது மகா லக்ஷ்மியை  நம் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சாயந்திரம் வாசல்  தெளித்து அலம்பிட்டு, அழகான கோலங்கள் போட்டு அதன்மீது விளக்குகளை வையுங்கள்.பச்சை அரிசியை முதலிலேயே ஊற வைத்து கோலம் போட வேண்டும்.நேரம் இல்லை என்றால் அரிசிமாவு கொண்டு கோலம் போடவும்.காவி நிறத்தை கோலத்தை சுற்றி வர்ணம் தீட்டவும்.காவி நிறம் சிவசக்தி வடிவமாக கருதப்படுகிறது.தொடர்புடைய படம்தொடர்புடைய படம்

 காலையிலேயே தலைவாசல் படிக்கு மேலே மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.மாவிலை தோரணம் விசேஷ நாட்கள் மட்டும் இல்லாமல் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் கட்டுவது நல்லது.காய்ந்த மாவிலையை கழட்டி விட வேண்டும்.மாவிலை தோரணம் கெட்ட சக்திகள் வருவதை தவிக்கிறது.திருஷ்டி ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு வளையமாக  அமைகிறது.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து  தீபொறிகள்  கங்கையில் விழுந்து 6குழந்தையாக , முருகப் பெருமான் தோன்றியதால், சிவபெருமானுக்கு பொரி உருண்டை செய்து நிவேத்தியம் செய்வது விசேஷம்.தொடர்புடைய படம்முருகனுக்கு உகந்த நெய் அப்பம்,அடை,கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்யலாம்.தொடர்புடைய படம்

சில வீடுகளில் மாவிளக்கு எடுப்பதும்,கொழுக்கட்டையை அகல் விளக்கு போல் செய்து 6தீபமாக ஏற்று வழிபடுவதும்  உண்டு.agal vilakku designs க்கான பட முடிவுagal vilakku designs க்கான பட முடிவுநிவேதனத்திற்கு தேவையானவற்றை இரு தினங்களுக்கு முன்பே வாங்கி வைத்து கொண்டால் டென்ஷன் வராது.

குத்து விளக்கு பூஜை  கார்த்திகை தீபத்தன்று  செய்வது மிகச்  சிறந்த பலனை அளிக்கும்.குத்து விளக்கு தண்டு பகுதியில் பூ அல்லது மஞ்சள் கயிறு சாற்றி வழிபடவும்.
தொடர்புடைய படம்


கார்த்திகை திருநாள் சிவபெருமானுக்கும்,முருகனுக்கும் உகந்த நாள்.அதைப்பற்றிய கதைகள் என்னுடைய முந்திய பதிவில் போட்டு இருக்கிறேன்.எந்த பூஜை செய்வது என்றால் பூஜை தங்கு தடங்கல் இன்றி சிறப்பாக நடை பெறவும்,அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும் முழுமுதல் கடவுளான விநாயகரை முதலில் வழிபட வேண்டும் .மஞ்சளால் பிடித்த விநாயகர் பூஜைக்கு ஏற்றது.பிறகு சிவபெருமான் ,முருகன் படத்திற்கு அல்லது விக்கிரகங்களுக்கு சந்தானம்,குங்குமம் வைத்து நமக்கு தெரிந்த ஸ்லோகங்கள்,மந்திரங்கள்,108போற்றி சொல்லி வாசனை மிகுந்த பூவால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

நம்மால் முடிந்த நிவேதனங்களை செய்து கார்த்திகை தீபத்தை சிறப்பாக கொண்டாடலாம்.இந்த வகையில் திட்டமிட்டு செய்வதால் டென்ஷன் இல்லாமல்,நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்பது எனது எண்ணம். 

சந்தோஷமாக குடும்பத்துடன் கார்த்திகை தீபத்தை கொண்டாடுங்கள்.அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

இந்த பதிவைப் படித்து உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
"கற்றது கைமண்  அளவு .கல்லாதது உலகளவு "என ,எனக்கு தெரிந்த பழமொழியை சொல்லி மகிழ்ச்சியுடன் இந்த பதிவை  முடிக்கிறேன்.


உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி சரவணன் 







  






கார்த்திகை தீபம் பற்றிய கதைகள்

கார்த்திகை தீபம்


Matir Pradip
lord murugan birth history க்கான பட முடிவு
கார்த்திகை தீபம் என்பது பண்டையக் காலம் முதல் இன்று வரை கொண்டாடப்படுகின்ற தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாகும். கார்த்திகை தீபம் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளை திருக்கார்த்திகை என்றும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்றும் அழைக்கின்றனர்.

கார்த்திகை தீபம் பற்றிய கதைகள்
சூரபத்மன் என்னும் அசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை உருவாக்கினார். பொறிகள் கங்கை நதியின் சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின.
ஆறு குழந்தைகளையும், கார்த்திகைப் பெண்கள் தாலாட்டி சீராட்டி, பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவி ஆறு சிறுவர்களையும் ஒன்றாக அனைத்து ஒரே குழந்தையாக மாற்றினாள். குழந்தையும் ஆறுதலைகள், பன்னிரெண்டு கைகள் ஒரே உடலுடன் காட்சியளித்தது. இக்குழந்தையை கந்தன், ஆறுமுகன், கடம்பன் மற்றும் முருகன் ஆகிய பெயர்களில் பார்வதி தேவி  அழைத்தாள்.

முருகன்
முருகன்

முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு சிவபெருமான் வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாக ஜொலிக்கும் அந்தஸ்தும், அவர்களைப் போற்றும் விதமாக கார்த்திகை தீப வழிபாட்டையும் அருளினார் என்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.

மகாவிஷ்ணு மற்றும் பிரம்மதேவர் ஆகியோருக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியில், சிவபெருமான் அவர்களுக்குகிடையே ஜோதி பிழம்பாகத் தோன்றி யார் ஜோதியின் அடி, முடியைக் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார்.தொடர்புடைய படம்
பின் மாகவிஷ்ணு வராகமாகவும், பிரம்மா அன்னப்பறவையாகவும் மாறி அடி முடியை தேடிச் சென்றனர். ஜோதிப் பிழம்பின் அடியைக் காணாது மகாவிஷ்ணு திரும்பினார். முடியைத் தேடிச்சென்ற பிரம்மா வழியில் தாழம்பூவைச் சந்தித்தார். தாழம்பூ சிவனின் முடியிலிருந்து வருவதாகக் கூறியது. தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் முடியைக் கண்டதாக பிரம்மா கூறினார்.
தாழம்பூ, பிரம்மா  பொய்யுரைக்காக தாழம்பூ சிவ பூஜையில் இடம் பெறாது எனவும், பிரம்மாவுக்கு பூலோகத்தில் தனிகோயில் கிடையாது என்கின்ற தண்டனையையும் சிவபெருமான்விதித்தார்.
சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
கார்த்திகை தீப வழிபாடு பற்றி சங்ககால நூலான அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளவையார், திருஞான சம்பந்தர் ஆகிய புலவர்களும் கார்த்திகை தீப வழிபாடு பற்றி தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

கார்த்திகை தீபம் கொண்டாடும் விதம்
கார்த்திகை தீபத்திற்கு மக்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப்படுத்துகின்றனர். மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் இடுகின்றனர். பின் மண், பீங்கான் மற்றும் உலோகத்தினான சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு விளக்கேற்றுகின்றனர்.
விளக்குகளை வாயிற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள், முற்றம் ஆகியவற்றில் வைத்து அலங்கரிக்கின்றனர். வீடுகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள், பணிபுரியும் இடங்கள், கோவில்கள் ஆகியவற்றிலும் விளக்குகள் ஏற்ற‌ப்படுகின்றன.
சிறுவர்கள் கார்த்திகை தீபத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீப  வழிபாட்டில் பொரி உருண்டை முக்கிய இடம் பெறுகின்றது.
கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் ஏற்படுகின்றன.
ஒரு சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் சிறிய அகல்விளக்குகள் இரண்டை மட்டும் தலைவாயில் ஏற்றி வைக்கின்றனர்.
மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகைத் திருநாளன்று விரதம் மேற்கொள்கின்றனர்.

திருவண்ணாமலை மகாதீபம்
திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி பிழம்பாக மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு காட்சியளித்தார் என்று நம்பப்படுகிறது. அதன்காரணமாக கார்த்திகை தீபத்தன்று மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபத்தை தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த மகாதீபத்தை ப‌ல கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் காணமுடியும்.

சொக்கப்பனை
கார்த்தகை தீபம் அன்று சொக்கப்பனை எல்லா சிவன்கோவில்களிலும் ஏற்றப்படுகிறது. பனை ஓலையானது பச்சையாக இருந்தாலும் தீபற்றக்கூடியது. பனை ஓலைகளை கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இது சொக்கர்பனை, சொக்கப்பனை எனவும் அழைக்கப்படுகிறது.
சிவபெருமான ஜோதிப் பிழம்பாக காட்சியளித்ததை குறிப்பிடும் வகையில் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. மனதில் உள்ள‌ இருளாகிய அறியாமை, பொறாமை ஆகியவற்றை ஒளியாகிய ஞானத்தைக் கொண்டு இறைவன் போக்குகின்றனார் என்பதே சொக்கப்பனை ஏற்றுவதன் தத்துவமாகும்.

கார்த்திகை சோமவார விரதம்

 கார்த்திகை சோமவார விரதம்

சந்திரனின் சாபம் போக்கிய கார்த்திகை சோமவார விரதம்


















கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை சோமவார விரதமாகும். சிவபெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம் ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். திங்கட்கிழமை என்பது சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.

இந்த விரதத்தை கார்த்திகை முதல் சோமவாரத்தில் இருந்து சோமவாரம் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும். இல்லையெனில் 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்க வேண்டும்.


Lord Shiva

சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில்தான். அவன் பெரியவன் ஆனதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி, பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.

பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்தான்.

தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.

சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.

விரதம் இருக்கும் முறை :

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும். 

கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.

பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும், நோய் அண்டாது என்பது ஐதீகம். 

திங்கள், 27 நவம்பர், 2017

பக்தியை உணர்த்தும் கதை

பக்தியை உணர்த்தும் கதை 

ஹலோ பிரண்ட்ஸ் எப்பிடி இருக்கீங்க.என் பதிவை பார்க்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் வணக்கம்.எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பதிவை படிச்சுட்டு உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.இன்னும் பல தகவல்களை எழுத அது தூண்டுகோலாக அமையும். 

எல்லாம் பகவான் செயல் என சொல்லி,இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். தொடர்புடைய படம்

அணிலின் பக்தி

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஜெபித்து விட்டு செய்வதும், ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது .” திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை ” என்று அடிக்கடி சொல்லும்  . அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.

விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை . உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் பட வில்லையென்றபோதிலும் , கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது.” பெரிய ஆபத்திலேர்ந்து என்னைக் காப்பாத்திட்டீங்க கடவுளே. உங்களுக்கு நன்றி ” என்றது .இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது.” கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன் ” என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது.பக்தியுள்ள அணில் சொன்னது ,” கடவுளை நம்புற நாங்கள்லாம்துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.அதனால கடவுள் எங்கள கீழே தள்ளிவிட்டாலும் அதுலயும் காரணம் இருக்கும் ” என்றது.ஆமாமாம் . கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை ” மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது , கண்களை மூடி விண்ணை நோக்கி ,” கடவுளே , இந்த அவமானத்துக்கும் , வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுங்க ” என்றது.அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது.” டேய் , உன் பக்கத்துல பாம்புடா ” என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை.கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது . தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது .சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம் . அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம் . நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடமேது ?

பக்தியோடு இருப்போம்.பகவானை  நம்பியே.




ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 100 வழிபாட்டு தகவல்கள்!

தொடர்புடைய படம்
மகாலட்சுமி பற்றிய 100 வழிபாட்டு தகவல்கள்!


1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் சாமந்திப்பூ.4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. 7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். 9. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். 11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள். 12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ‘ஸ்ரீஸ்துதி’ என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.15. நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும். 22. லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.23. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை – குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.25. லட்சுமியின் திருக்கரங்கள் ‘ஸ்வர்ண ஹஸ்தம்’ எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள். 26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும். 29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். 30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது. 31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். 32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும். 33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள். 34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். 35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை. 36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.41. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.42. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். 43. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். 44. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.45. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். 46. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். 47. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. 48. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.49. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.50. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.51. ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.52. லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.53. திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.54. லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ‘ஸ்ரீ’ என்றும் போற்றப்படுகிறாள்.55. தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.56. சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம். 57. பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கஜலட்சுமியை காண முடியும். கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.58. திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.59. ‘சீல’ கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.60. கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.61. ஜைனர்கள் மகாலட்சுமியை ஜீவஜகத்தின் தென்புறத்துப் பாதியைக் காக்கும் தேவதைகளில் ஒருத்தியாகப் பாவிக்கின்றனர். தீபாவளியின்போது இவளை வழிபடுகின்றனர்.62. மகாலட்சுமி வடிவங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென லட்சண கிரந்தங்கள் உள்ளன. அம்சுபேதாகமத்தின் படி, திருமகள் தாமரையில் வீற்றிருப்பாள்.

63. வராக அவதாரத்தில் திருமால் பூமியை தோண்டி விட்டுத் தம் சிரமத்தை மறந்திருக்கத் திருமகளைத் தம் தொடை மீது நிறுத்தி இன்பமடைகிறார். மாமல்லபுரத்தில் இவ்வமைப்புடைய சிலை உள்ளது.
64. பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.
65. தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.
66. குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
67. மகாராஷ் டிரத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர். மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அத்துடன் துணியில் மறைத்த ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.
68. ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் ‘காரி’ என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.
69. இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம்.
70. கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.
71. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
72. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
73. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
74. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
75. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
76.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.
77. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
78. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
79. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
80. நாம் செய்யும் பாவ, புண்ணிய¢த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
81. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.
82. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
83. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.
84. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
85.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
86. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
87. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
88. வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது.
89. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
90. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.
91. வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.
92. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
93. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.
94. வரலட்சுமி பூஜை தினத்தன்று 3 தடவை அம்மனை வணங் கினால் நல்லது.
95. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.
96. சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.
97. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.
98. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.
99. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.
100. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.