புதன், 28 நவம்பர், 2018

பஞ்சமுக ஹனுமான்

பஞ்சமுக ஹனுமான்


உலகமெங்கும் உள்ள ஆலயத்திலும் வீட்டு பூஜை அறையிலும் ஆஞ்சனேயர் எனும் ஹனுமான் வழிபடப்பட்டு வருகிறார். பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்கள் உட்கார்ந்த நிலையில் அல்லது நின்றுள்ள நிலையில் கைகளைக் கூப்பிக் கொண்டு ஒரே முகத்துடன் காணப்படும் ஹனுமானின் அடி வாலில் இருந்து நுனி வால் வரை சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டு இட்டு தமது பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டிக் கொள்வார்கள். நுனி வாலில்  கடைசி பொட்டு வைத்தப் பின்னர் அவருக்கு நெய்வித்தியம் படைத்து பிரார்த்தனையை  முடிக்க வேண்டும். நெய்வித்தியப் பொருள்  வெறும் சக்கரைப் போட்ட பாலாகக் கூட இருக்கலாம், தவறல்ல.

அதே போல சில பெண்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்துள்ள பஞ்சமுக அனுமானுக்கும் பொட்டு வைத்து துதிக்கிறார்கள். இது சரியா அல்லது தவறான முறையா என்பதை தெரிந்து கொள்ள கீழ் கண்டதைப் படிக்கவும்.

பொதுவாக வீட்டின் பூஜை அறைகளில் கோபமில்லாத அதாவது உக்கிரக பாவனை இல்லாத தெய்வங்களையே வைத்து வணங்க வேண்டும் என்பதாக நமது சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள். அவற்றில் சீதையுடன் உள்ள ராமர், பார்வதியுடன் உள்ள சிவன், லஷ்மியுடன் உள்ள விஷ்ணு அல்லது நரசிம்மர் , வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய முருகன், பசுவுடன் கூடிய கிருஷ்ணர், வினாயகப்  பெருமான், சரஸ்வதி, அமர்ந்த நிலையில் உள்ள லஷ்மி, வெங்கடசலபதி, தத்தாத்திரேயர், கூப்பிய கரங்களுடன் அமர்ந்துள்ள அல்லது சுற்றிலும்  ராமா, ராமா என்ற சொற்கள் இருக்க நின்ற நிலையில் காட்சி தரும் ஹனுமான், சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு செல்லும் ஹனுமான் மற்றும் பல தெய்வங்கள் உள்ள பட்டாபிஷேகம் போன்றவை உண்டு.anuman tail kunkum image க்கான பட முடிவு

உக்கிர தெய்வங்களான நரசிம்மர், சன்யாச கோலத்தில் காணப்படும் சிவபெருமான், பசு மாடு இல்லாத கிருஷ்ணர், பிரத்தியங்கா தேவி, மஹிஷாசுரமர்தினி, காளி, பஞ்சமுக ஹனுமான் போன்றவர்களை நியமப்படி ஆராதனை செய்து வணங்கி துதிக்க முடியாதவர்கள்  தமது பூஜை அறைகளில் வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.  அவற்றுக்கு பூஜை செய்து முடியும்வரை சில ஆசாரங்களை அனுஷ்டிக்க வேண்டும்.  ஏன் என்றால் நாம் செய்யும் வழிபாட்டு முறை தவறானதாக இருந்து விட்டால் அத்தகைய உக்கிர மூர்த்திகளினால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் மற்றும் தொல்லைகள் ஏற்படும் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆகவே வீட்டு பூஜை அறைகளில் அப்படிப்பட்ட உக்ரக மூர்த்திகளை வைத்துக் கொண்டால் அவற்றை பொதுவாக வணங்கி விட்டு இருந்து விடலாம்.  பிரார்த்தனை மற்றும் பூஜைகளுக்கு அவற்றை உட்படுத்தினால் நியமப்படி அவற்றை செய்ய வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி அவை உபாசனை தெய்வங்கள் ஆகும். அவை பெரும்பாலும் மந்திர தந்திரங்களில் சித்தி பெற சாதனாக்களை செய்பவர்களும், உபாசனை செய்பவர்களும் பூஜிக்கும் தெய்வங்கள் ஆவார்கள்.


எதற்காக ஹனுமானுக்கு வேண்டுதல்
செய்கிறார்கள் ?


வீட்டில் பூஜை அறையில் வைத்துள்ள ஹனுமானை எதெற்கெல்லாம் வேண்டுகிறார்கள்?
  • சனி பகவானின் தொல்லைகள் அகல
  • தடைகள் விலக
  • கணவன் மனைவி மனஸ்தாபங்கள் நீங்கி மன மகிழ்ச்சி பெற
  • குடும்ப அமைதி நிலவ
  • பில்லி சூனியங்களின் தாக்கம் நீங்க
  • ஆன்மீக நாட்டம் மேன்மை அடைய
  • கிரஹ தோஷம் விலக மற்றும்
  • மன பயம் விலகி தைரியம் உண்டாக
குளித்தப் பின் நல்ல உடை அணிந்து ஒரு முக அமைதியான ஹனுமானை பொட்டு இட்டு வணங்குவதைப் போல வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை மேற்கண்ட காரணங்களுக்காக குங்கும சந்தன பொட்டு இட்டு வேண்டலாமா?

கூடாது. வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை மேற்கண்ட காரணங்களுக்காக குங்கும சந்தன பொட்டு இட்டு சாதாரண நிலையில் இருந்தவாறு வணங்கலாகாது. அதற்குக் காரணம் ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு உள்ள உக்கிர தெய்வமான பஞ்சமுக ஹனுமான் உபாசனை தெய்வம் ஆகும்.  அவரிடம் வேண்டுதல்களை வைக்கும்போது நியமப்படி பூஜித்து வணங்க வேண்டும். கண்டபடி எல்லாம் செய்யக் கூடாது. அதற்க்கு பல விதி முறைகள் உள்ளன.  ஆகவே வேண்டுதல்களுக்காக பொட்டு  இட்டு பூஜிக்காமல் பஞ்சமுக ஹனுமானை அவரது ஆலயங்களில் மட்டுமே சென்று வேண்டி துதிக்க வேண்டும். ஆலயத்தில் சென்று அவரை வணங்கும்போது அவர் நமக்கு வேண்டியதை தருகிறார். ஏன் என்றால் ஆலயத்தில் அவருக்கு முறைப்படி ஆராதனை செய்து பூஜிப்பதினால் அவர் சாந்தமாக இருப்பார். பஞ்சமுக ஹனுமானை ஏன் உக்கிர தெய்வமாகக் கருதுகிறார்கள்?

பஞ்சமுக ஹனுமான் யார் ?


ராமனையும் லஷ்மணனையும் சிறைபிடித்து பாதாளத்தில் அடைத்து வைத்திருந்தான் ராவணனின் தம்பியான மயில் ராவணன். அவர்களை சிறையில் இருந்து மீட்க வேண்டுமானால் அதை சுற்றி ஐந்து திசைகளில் எரிந்து கொண்டிருந்த ஐந்து எண்ணை  விளக்குகளை ஒரே சமயத்தில் அணைத்திட வேண்டும். மயில் ராவணனுடன் அதற்காக யுத்தம் செய்து கொண்டிருந்த ஹனுமான் கோபமடைந்து தன்னுடைய முகத்துடன் நரசிம்மர், வராஹர், கருடன் மற்றும் ஹயக்ரீவர் போன்றவர்களின் உக்கிர உருவங்களை ஏந்திக் கொண்டு கைகளில் ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு பாதாளத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை ஒரே சமயத்தில் அணைத்து மயில் ராவணனைக் கொன்று ராம லஷ்மணர்களை சிறையில் இருந்து மீட்டார். ஆகவே கோபமான அம்சத்தைக் கொண்டவர்  பஞ்சமுக ஹனுமான் என்பதினால் சரியான பூஜா நியமங்களை அனுஷ்டிக்காமல் வீட்டில் அவரை பொட்டிட்டு வணங்கலாகாது. உண்மையில் பஞ்சமுக ஹனுமானை எதற்காக வேண்டித் துதிக்கிறார்கள்?
  • பில்லி சூனிய தோஷங்கள் அகல
  • ஆன்மீக மேன்மை அடைய
  • வியாபாரங்களில் வெற்றி கிடைக்க
  • கிரஹ மற்றும் வாஸ்து தோஷங்கள் அகல மற்றும்
  • மன பயம் அகன்று தைரியம் கிடைக்க
ஆனால் அதே நேரத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவ, மன அமைதி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வீட்டின் பூஜை அறையில் வைத்துள்ள ராம நாம வார்த்தைகள் நிறைந்து அமைதியாக கூப்பிய கைகளுடன் உட்கார்ந்த அல்லது நின்றுள்ள நிலையில் உள்ள ஹனுமனிடம்தான் அவர் வாலில் பொட்டு இட்டு வேண்டலாமே தவிர உபாசன தெய்வமான பஞ்சமுக ஹனுமானுக்கு சரியான குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் சரியான பூஜா விதிகளைக் கடைபிடிக்காமல், சுத்தமான மனதுடனும், உடல் நிலையிலும் இல்லாமல் வெறுமனே பொட்டு இட்டு வேண்டுவது சரி அல்ல. அதனால் வீட்டில் மேலும் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கவும், குழப்பங்கள் அதிகரிக்கவும் வழி வகுக்கும் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை. விதிப்படி வணங்கினால் மட்டுமே அவர் வேண்டியதை அருள்வார்.

அது மட்டும் அல்ல. ஒருமுறை வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள பொட்டு  இட ஆரம்பித்த உடன் மாதவிலக்கு நாட்களைத் தவிர பிற நேரத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் இடையில் நிறுத்தி விட்டு, அதாவது ஒருவாரம் பொட்டு வைத்து விட்டு, மீண்டும்  ஒருவார இடைவெளிக்குப் பிறகு  விட்ட இடத்தில் இருந்து பொட்டு வைக்க துவங்குவது பெரும் தவறான செயல் ஆகும்.

அதனால்தான் வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை முறைப்படி ஆராதனை செய்யாமல் வெறுமே பொட்டு வைத்து பிரார்திப்பவர்களுடைய வீடுகளில் அமைதியும் இருப்பது இல்லை, நிம்மதியும் கிடைக்காது, வேண்டிய காரியங்களும் சரிவர நிறைவேறுவது இல்லை. 

செவ்வாய், 20 நவம்பர், 2018

வெள்ளிக் கிழமையில் நகம் வெட்ட கூடாது என கூறக் காரணம் என்ன...?

வெள்ளிக் கிழமையில் நகம் வெட்ட கூடாது என கூறக் காரணம் என்ன...? 





நம் முன்னோர்கள் சொல்லிவிட்ட சில செயல்களின் பொருள் உணர்ந்து பழக்கங்களை அறிந்து கொண்டால் அதன் மதிப்பு நமக்கு புரியும். அதற்கான ஒரு சிரிய முயற்சியே இந்தப் பதிவு. செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம். அதேப் போல செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று கூறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது.  மேலும் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் செவ்வாய்க் கிழமைகளில் பெரும்பாலான முடிதிருத்த நிலையங்கள் இயங்குவதில்லை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய உகந்த நாள். அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்கக் கூடாது என்பது நம்பிக்கை.

நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும். பொருளை இழப்பதே இழப்பு என்கிறபோது, உடலின் உறுப்பான நகத்தை இழப்பது பெரும் தவறு, இதனால் தான் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றனர் நமது முன்னோர்கள்.

நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்...!

நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்.                                            நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க தினந்தோறும் இரவு சீக்கிரமாக தூங்கி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக துகிலெழுந்து, சிறிது நேரம் தியானம் செய்து உங்களின் விருப்ப தெய்வம்,
உங்களின் முன்னோர்கள் மற்றும் சித்தர்கள், முனிவர்களை மானாசீகமாக வணங்க வேண்டும்.
 சூரிய பகவான் ஒரு மனிதனின் முழு உடல்நலத்திற்கும் காரகனாகிறார். அதிகாலையில் நீராடி காலையில் உதிக்கின்ற சூரிய பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை வழிபட்டு வரவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரம் இருக்கும் கோவிலுக்கு காலை நேரத்தில் சென்று இறைவனை வழிபட்டு, பின்பு அரசமரத்தை சுற்றிவருவது உங்களின் உடலில் ஏற்கனவே இருக்கும் பிணிகளை போக்கும்.  
ஒரு மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்தும் தன்மை சனி, ராகு-கேது கிரகங்களுக்கு அதிகம் உண்டு. சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சனி, ராகு-கேது கிரகங்களுக்கு நெய் தீபங்கள் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் உடல் நலம் மேம்படும். தினமும் காலையில் உங்கள் வீட்டிற்கு அருகில் வாழும் நாய்கள், பூனைகள், காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து வந்தால், அப்புண்ணிய செயலின் பலனாக உங்களின் நீண்ட கால நோய்கள் நீங்கி, உடல்நலம் மேம்படும். எதிர்காலங்களில் கொடிய வியாதிகள் ஏற்படமாலும் தடுக்கும்.

சனி, 17 நவம்பர், 2018

லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்

தொடர்புடைய படம்
லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்
*ப* டிகாரம்,
*சு* ண்ணாம்பு தண்ணீர்,
தொடர்புடைய படம்*ம* ஞ்சள்..
இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும்.
இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை,
*‘ஹரித்ரா குங்குமம்’*
என்று சொல்வார்கள்.
குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது.
படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது.
தொற்றுநோய்களும் அண்டாது.
மூளைக்கு செல்லும் நரம்புகள்,
அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும்.
குங்குமம் அணிவதால் நெற்றியில் சூடு தணிகிறது.லட்சுமி குங்குமம் க்கான பட முடிவு
பெண்களின் தலை வகிட்டின் நுனியை,
*‘சீமந்தபிரதேசம்’*
என்பார்கள்.
 பெண்கள் அணியும் மாங்கல்யம்,
பெண்களின் நெற்றி,
தலை வகிட்டு பகுதி ஆரம்பம்..
ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள்.
இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால்,
லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.
நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால்,
கொடுப்பவர் – பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும்.
பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக,
தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும்.
ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில்,
குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்



மகாலட்சுமி  வாசம் செய்யும் 108 இடங்கள் 
*அவை:-*
வெற்றிலை மேற்புறம்,
விபூதி,
வில்வம்,
மஞ்சள்,
அட்சதை,
பூரணகும்பம்,
தாமரை,
தாமரைமணி,
ஜெபமாலை,
வலம்புரிச்சங்கு,
மாவிலை,
தர்ப்பை,
குலை வாழை,
துளசி,
தாழம்பூ,
ருத்ராட்சம்,
சந்தனம்,
தேவ தாரு,
அகில்,
பஞ்சபாத்திரம்,
கொப்பரைக்காய்,
பாக்கு,
பச்சைக்கற்பூரம்,
கலசம்,
சிருக்சுருவம்,
கமண்டலநீர்,
நிறைகுடம்,
காய்ச்சிய பால்,
காராம்பசு நெய்,
குங்கிலியப் புகை,
கஸ்தூரி,
புனுகு,
பூணூல்,
சாளக்கிராமம்,
பாணலிங்கம்,
பஞ்ச கவ்யம்,
திருமாங்கல்யம்,
கிரீடம்,
பூலாங்கிழங்கு,
ஆலவிழுது,
தேங்காய்க்கண்,
தென்னம் பாளை,
சங்கு புஷ்பம்,
இலந்தை,
நெல்லி,
எள்,
கடுக்காய்,
கொம்பரக்கு,
பவளமல்லி,
மாதுளை,
திரு நீற்றுபச்சை,
அத்திக் கட்டை,
ஆகாசகருடன்,
வெட்டிவேர்,
அருகம்புல்,
விளாமிச்சுவேர்,
நன்னாரிவேர்,
களாக்காய்,
விளாம்பழம்,
வரகு,
நெற் கதிர்,
மாவடு,
புற்றுத்தேன்,
எலுமிச்சை,
மணிநாக்கு,
சோளக்கதிர்,
பாகற்காய்,
அகத்திக்கீரை,
காசினிக்கீரை,
பசலைக்கீரை,
கூந்தல்பனை,
மலைத்தேன்,
வெள்ளி,
தங்கம்,
வைரம்,
உப்பு,
யானை,
மூங்கில்,
பசு நீர்த்தாரை,
குளவிக்கூட்டு மண்,
நண்டுவளை மண்,
காளை கொம்பு மண்,
யானைகொம்பு மண்,
ஆலஅடி மண்,
வில்வ அடி மண்,
வெள்ளரிப்பழம்,
மோதகம்,
அவல்,
காதோலை,
கடல்நுரை,
கண்ணாடி,
மோதிரம் (தந்தம்),
பட்டு,
தையல்இல்லாத புதுத் துணி,
பெண்ணின் கழுத்து,
ஆணின் நெற்றி,
கோவில் நிலை மண்,
வெயிலுடன் கூடிய மழைநீர்,
கீரிப்பிள்ளை,
நுனிமுடிந்த கூந்தல்,
படிகாரம்,
அரச சமித்து,
பன்றிக்கொம்பு,
சந்திர காந்தக்கல்,
பிரம்பு,
நாயுருவி,
கெண்ட,
வாசல் நிலை,
நெற்றி..
போன்ற இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

ஞாயிறு, 11 நவம்பர், 2018

கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் !


கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் ! சில விதிகள் ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும். சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும். வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் . எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும். தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது. கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் சனிக்கிழமை பவளமல்லி கோலம் ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் போடுதல் நல்லது. பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது. அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து,அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது. இடது கையால் கோலம் போடக்கூடாது. பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும். ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும். கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.

சனி, 10 நவம்பர், 2018

கனகதார ஸ்தோத்திரம் தமிழில்: ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது


கனகதார ஸ்தோத்திரம் தமிழில்: ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது Related image

வியாழன், 1 நவம்பர், 2018

ஸ்ரீமகாலக்ஷ்மி அருள் கிடைக்க 21 தாமரைப் பூக்களும் ,மந்திரமும்

lakshmi poojai 21lotus kolam க்கான பட முடிவுஸ்ரீமகாலக்ஷ்மி அருள் கிடைக்க 21 தாமரைப் பூக்களும் ,மந்திரமும்  

21 தாமரைப் பூக்களை அரிசிமாவால் போட்டு, அதன் மேல் சந்தன, குங்கும பொட்டு வைத்து ஸ்ரீகனகதாரா சுலோகத்தை  ஒவ்வொன்றுக்கும் ஒரு  பூ வைத்து சொல்லி  பூஜிக்கவும். கோலம் போடும் போதும், சந்தனம், குங்குமம் வைக்கும்போதும் கீழ்க்கண்ட சுலோகம் சொல்லவும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை!
ஸர்வாகர்ஷண தேவ்யாயை!
ஸர்வ தாரித்ர்ய நிவாரண்யை!
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா!

இவ்வாறு ஸ்ரீமகாலக்ஷ்மியை பூஜித்தால் செல்வம் பெருகும்.