திங்கள், 23 நவம்பர், 2015

கார்த்திகை திருநாள்

ஹாய் பிரண்ட்ஸ் எப்பிடி இருக்கீங்க ? எல்லோருக்கும் என்  இனிய காலை வணக்கம் .


இன்னிக்கு நான் கார்த்திகை தீபம் பற்றி உங்களுடன் என்  கருத்தை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் .



ஆதி காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் அக்கினியை தெய்வமாக வழிப்பட்டு வந்துள்ளனர் .
அதன் அடிப்படையில் தான் பெரும் பாலான பண்டிகைகளை  நாம் தீபங்களை ஏற்றி கொண்டாடி வருகிறோம்.

கார்த்திகை மாதம் ,கார்த்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது .

பஞ்ச  பூதங்களையும் திருப்தி செய்வதுதான் இந்த பண்டிகையின் நோக்கமாகும்.அதாவது ,கிளியான் சட்டியில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது .களிமண் அகல் விளக்குகள் மண் கொண்டு நீர்  ஊற்றி, காயவைத்து ,நெருப்பில்  சுட்டெடுத்து செய்யப்படுகிறது .


இந்த அகல் விளக்குகளை வாங்கி விளக்கு ஏற்றுவதால் ஒரு ஏழை தொழிலாளி வாழ நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் .ஆகையால் அகல் விளக்குகளை  வாங்கி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவோம்.எத்தனையோ தீபங்கள் விற்பனைக்கு இருந்தாலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது மிகவும் அழகுதான் .



கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் கடைசி தேதி வரை இந்துக்கள் தினமும் மாலையில் வீடுகளிலும் ,ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்து கொண்டாடுவர் .தினமும் விளக்கு ஏற்ற இயலாதவர்கள் துவாதசி,சதுர்த்தி ,பெளர்ணமி  ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும் .






ஆண்டுதோறும் திருவண்ணா மலையில் கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது .


அடி முதல் முடி வரை சிவபெருமான்  ஜோதி பிழம்பாக காட்சி அளித்ததை உணர்த்தும் விதமாக கார்த்திகை தீபம் அமைந்துள்ளது .மற்றுமொரு காரணம்,கார்த்திகை பெண்களை போற்றும் நாளாக திருகார்த்திகை விளங்குகிறது.


தீபம் ஏற்றி வழிபடுவதால் முப்பெரும் தேவியரது அருள் நமக்கு கிடைக்கும் .


பொருள் ,புகழ் அனைத்தும் இருக்கும்.ஆனால் ,மன நிம்மதி இருக்காது.ஜென்ம ஜென்மங்களுக்கும் நாம் செய்த பாவங்களே மனநிம்மதி இல்லாமைக்கு காரணம் .ஜென்மாந்திர பாவங்கள்  போக  தொங்கும் சர விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும் .


நாரதர்,கார்த்திகை விரதத்தை  12 ஆண்டுகள் கடைபிடித்து,சப்த ரிஷிகளுக்கும் மேலான பலன்களை பெற்றார் .

திரிசங்கு மன்னன்,பகீரதன் இந்த விரதத்தை மேற்கொண்டதால்  பேரரசன் ஆனார்கள் .

தீபம் ஏற்றினால் எல்லா தீவினைகளும் விலகும் என்று கூறப்படுகிறது .கார்த்திகை தீபம் அன்று  தீபதானம் செய்வது மிகவும் நல்லது.வெள்ளி ,வெண்கலம் ,பித்தளை ஆகிய ஏதாவது  ஒன்றினை ஏற்றி ,தீபதானம் செய்ய வேண்டும் .

வஸ்திர தானம் பித்ரு தோஷம் நீக்கும் .

என்  ஊரில் கார்த்திகை தீபம்  அன்று  பாயாசம் வைத்து ,சிவனை வேண்டி தீபம் ஏற்றுவர் .அனைவருக்கும் கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம் .

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி








செவ்வாய், 17 நவம்பர், 2015

விரத வழிபாடுகளும் அதன் சிறப்புகளும்

விரத வழிபாடுகளும் அதன் சிறப்புகளும்


ஹாய் பிரண்ட்ஸ் ,

வணக்கம் . இந்த பதிவில் நாம் இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்  கிடைக்கின்றன ?என்பதைப்  பற்றி  பார்ப்போம் .


இந்த பதிவை நான் எழுதுவதற்கு முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் .அத்துடன் இதை எழுத என் கணவரும் ,குழந்தைகளும் எனக்கு உறுதுணை இருப்பது  நான் செய்த பாக்கியம் .


எனக்கும் ,என்  ஆன்மீக நண்பர்களுக்கும் என்றென்றும் கடவுள் அருள் கிடைக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் .


எந்த செயல் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்காமல் செய்வது இல்லை .அவரே நமக்கு முழு முதல் கடவுள் .நானும் அவரை வணங்கி ஆரம்பிக்கிறேன் .


சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நம் வாழ்வில் ஏற்படும்  சங்கடங்கள் அனைத்தும் விலகி மனஅமைதி ஏற்படும் .


விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் கவலை தீர்ந்து பூரண அருள் கிட்டும் .


சிரவண விரதம் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகி ,ஆனந்தம் ,சந்தோசம் உண்டாகும்.


வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் வறுமை நீங்கி ,செல்வவளம் கிட்டும்.


சஷ்டி விரதம் முருகனுக்கு இருந்தால் மனதில் எண்ணிய காரியம் அனைத்தும் இனிதே நிறைவேறும் .

கெளரி நோன்பு இருந்தால் குறையாத செல்வம்,நீண்ட ஆயுள் ,நல்ல மனைவி ,குழந்தைகள் கிடைக்கும் .


வரலக்ஷ்மி விரதம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியமும்,கணவன் மனைவி ஒற்றுமை நிலைத்து இருக்கும் .


பிரதோஷ விரதம் இருப்பதால் மன அமைதி ,நீண்ட ஆயுள்,செல்வவளம் கிடைக்கும் .


மகா சிவராத்திரியில் சிவனை நினைத்து விரதம் இருந்தால் ,அய்யனின் அருளும் ,அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.


வைகாசி விசாகம் விரதத்தினால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் .


நவராத்திரி விரதம் இருந்தால் மன நலம் ,நீண்ட ஆயுள் ,குன்றாத செல்வம் கிடைக்கும் .முப்பெரும் தேவியரின் அருள் நம் இல்லத்தில் நிலைத்து இருக்கும் .


பெளர்ணமி விரதம் இருந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி ,சுகமான வாழ்வு அமையும்.


கார்த்திகை விரதம் இருப்பதால் எல்லாவித நன்மைகளும் கிடைப்பதுடன் ,முருகனின் பரிபூரண ஆசி  கிட்டும் .


கோகுலாஷ்டமி விரதத்தினால் மனநிம்மதி ,நல் ஆயுள் ,கண்ணனின் அருளும் கிடைக்கும் .



விரதம் இருக்க முடியாதவர்கள் உள்ளன்புடன் ஒரு பூ ,கற்கண்டு ,பேரீச்சம் பழம் ,பழம் ஏதாவது ஒன்றை வைத்து , எந்த கடவுளை நினைத்து வணங்கினாலும் , நம்முடைய குரலுக்கு செவி சாய்த்து ,நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மை எல்லையில்லா ஆனந்ததிற்கு அழைத்து செல்வர் .


நன்றி வணக்கம்            


இன்னுமொரு ஆன்மீக  தேடலில் சந்திப்போம்

உங்கள் தோழி
ஈஸ்வரி























திங்கள், 16 நவம்பர், 2015

பஞ்சமுக ஆஞ்சநேயர்

என் அன்பார்ந்த ஆன்மீக தேடல் அன்பர்களுக்கு என் இனிய வணக்கம் .



நமக்கு அஞ்சநேயரை தெரியும் .பஞ்சமுக அஞ்சநேயரை சில   கோவில்களில் பார்த்தீருப்போம் .அவரைப் பற்றி என் பதிவில் போடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.ஏன்? என்றால் எனக்கு அஞ்சநேயரை மிகவும் பிடிக்கும் .அதுவும் ஐந்து முகம் கொண்ட அஞ்சநேயரை தரிசிக்க இரு கண்கள் போதாது .


         



அஞ்சநேயர் பலம் நிறைந்தவர் .நம்மால் ஆகாத மிகப் பெரிய காரியத்தையும் நொடி பொழுதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்.

பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பீர்கள்? .வாங்க !அவரைப் பற்றி பார்ப்போம் .


ராமாயணத்தில், இராவணன் ராமனுடன் போர் புரிந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .அந்த யுத்தம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது .ஒரு முறை ராமருக்கும் ,ராவணனுக்கும் நடந்த போரில் ராவணன் நிராயுதபாணியானான் .


கருணைக்கடலான ராமன் ராவணனை கொல்ல  மனமின்றி ,"இன்று போய்  நாளை வா "என திருப்பி அனுப்பி விட்டார் .இதன் மூலம், ராவணன் திருந்த ராமர் ஒரு வாய்ப்பு கொடுத்தார் .ஆனால் ,அரக்கக் குணம் படைத்த ராவணன் ராமன் அளித்த மன்னிப்பு ,தான் திருந்துவதற்குத்தான் என உணராமல் மீண்டும் ராமருடன் போர்  புரியவே நினைத்தான் .


 


மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான் .ராமனை அழிக்க  மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என உணர்ந்த விபீஷணன் ,யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்புமாறு ராமரிடம் கூறினான் .ராமர் கூறியதன் பேரில், ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர்,ஹயக்கிரீவர் ,வராகர் ,கருடன் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற்றார் .இந்த தெய்வங்கள் எல்லாம் போரில் அனுமன் வெற்றி பெற ,தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர் .



இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார் .

இப்படி பஞ்சமுகத்தில் அவதாரம் எடுத்ததால் பக்தரின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார் .


இவரை வழிபடுபவருக்கு , நரசிம்மனின் அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி ,லக்ஷ்மி கடாட்சமும்,ஹயக்கிரீவர் அருளால் அறிவாற்றலும்,ஆன்மீக பலன் ,வராகரின் அருளால் மன துணிவு ,கருடனின் அருளால் அனைத்து விதமான ஆபத்து விலகும் தன்மையும் ,ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி ,சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை .


ஆஞ்சநேயர் எப்படி பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்தார் என்பதைப் பற்றி  தெரிந்து கொண்டோம் .இனி பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி ,எல்லா நலமும்  பெறுவோம் .


                                               ஸ்ரீ ராம ஜெயம் 
நன்றி வணக்கம் 

 உங்கள் அன்பு தோழி

ஈஸ்வரி 




















வியாழன், 12 நவம்பர், 2015

கந்த சஷ்டி விழா

ஹாய் பிரண்ட்ஸ்


தீபாவளி முடிந்து ,அன்றாட வாழ்க்கைக்கு  வந்து இருப்பீர்கள்? .உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இன்னிக்கு கந்த சஷ்டி விழாவைப் பற்றி உங்களுடன் பகிர இருக்கிறேன் .

எந்த வினை ஆனாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி  ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு .


முருகனுக்கு உரிய விரதங்களில் இது முக்கியமானது .தேவர்களுக்கு தொல்லை தந்த சூரபத்மன் , தாரகன் -சிங்கமுகன் போன்ற கொடிய அரக்கர்களை சம்ஹாரம் செய்தார் .


கந்த பெருமான் தமது வேலாயுதத்தால் சூரபத்மனை இரு கூறாக்கினார் .அவரது பேரருளால் ஒன்று சேவலானது .மற்றொன்று மயிலானது.முருகன் மயிலை வாகனமாகவும்,சேவலை கொடியாகவும் கொண்டார்.


சஷ்டி விரதம் 6 நாட்கள் கொண்டாடப்படுகின்றன .ஆறு நாட்களும் பூரண  உபவாசம் இருத்தல் வேண்டும் .இதை கடைப்பிடிக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்கள் பால்,பழம்  உட்கொள்ளலாம். ஆறாவது நாள் சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.


குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த விரதத்தை கடைபிடித்தால்  ,முருகனே குழந்தையாக  அவதரிப்பார்  என்பது ஒரு நம்பிக்கை .

இதைத் தான் சஷ்டியில் இருந்தால் (அகப்பை)கருப்பையில் வரும் என்பது  பழமொழி .


முசுகுந்தச் சக்ரவர்த்தி ,வசிஷ்ட முனிவர் இந்த விரதம் பற்றி கேட்டறிந்து ,கடைப்பிடித்து பெரும் பயன் அடைந்துள்ளனர் .


சஷ்டி அன்று ,அதிகாலையில் எழுந்து ,நீராடி நெற்றிக்கு விபூதி,சந்தனம் ,குங்குமம் இட்டு பூஜை அறையில் கோலம் போட்டு வாசனை மலர்களால் முருகனின் படம் அல்லது விக்ரகத்தை  அலங்கரித்து திருவிளக்கை ஏற்றி நறுமண பொருட்களான பத்தி ,சாம்பிராணி ஏற்றி வைத்து  முதலில் குலதெய்வம் ,பிள்ளையார் ,முருகன் என சுலோகம் சொல்லி வணங்க வேண்டும்.


கந்த சஷ்டி கவசம் ,கந்த குரு கவசம் ,கந்தர் அனுபூதி ,சுப்ரமணிய புஜங்கள் துதியை சொல்ல வேண்டும் .இதுவும் சொல்ல தெரியாதவர்கள் கந்த சரணம்,முருகா சரணம் என்று கூறி வணங்கலாம் .


தீப ஆராதனை செய்து பழம்,பால் நிவேதியம் வைக்க வேண்டும்.



அன்று மாலை அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று,தரிசனம் செய்து ,விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.எளியோனான முருகன் நாம் நிவேதியமாக எது வைத்தாலும் ஏற்று கொண்டு நினைத்ததெல்லாம் கொடுப்பார்.


முருகன் அருளால், மணப்பேறு ,மகப்பேறு ,நல்வாழ்வு ,ஆரோக்கியம் ,ஆயுள் ,புகழ்,செல்வம் நிச்சயம் கிடைக்கும் .


என்றென்றும் நம் வாழ்வில் நிம்மதி ,சந்தோசம் ,உற்சாகம் கிட்ட முருகனை வேண்டுவோம்.

நன்றி ,அடுத்த பதிவில்
ஈஸ்வரி



















ஞாயிறு, 8 நவம்பர், 2015

தித்திக்கும் தீபாவளி

 தீபாவளி




என் அன்பு ஆன்மீக தோழிகளுக்கு என் அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் .

தீபாவளியை கொண்டாட உற்சாகத்துடன் எல்லோரும் ரெடி ஆகிட்டு இருப்பீங்க .இந்த சமயத்தில் தீபாவளியைப்  பற்றி ஆன்மீகத்தில் என்ன உள்ளது? என தெரிந்து கொண்டாடால்  அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நான் எண்ணுகிறேன் .


தீபாவளி என்றாலே நமக்கு எல்லாம் புத்தாடை ,பட்டாசு ,பலகாரங்கள் தான் உடனே ஞாபகத்திற்கு வரும்.சிறு குழந்தைகளுக்கு   கூட தீபாவளிக்கு பட்டாசு போடுவது என்றால் ஆனந்தம் தான்.


ஒவ்வொரு நாளையும் நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் .காலையில் வேலை ,இரவில் ஓய்வு , அன்றாட கடமைகள் என நாட்கள் செல்கின்றன .அதற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கவே ,நம் முன்னோர்கள் பண்டிகைகளையும் ,விழாக்களையும் வைத்து கொண்டாடி மகிழ்தனர்.



பண்டிகை காலத்தில் நம் உறவினர்களை சந்திப்பது ,ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது ,விளையாடுவது போன்ற செயல்கள் நம் மனதிற்கு சந்தோசத்தையும் ,தெம்பையும் அளிக்கிறது.



அடுத்து வரும் பண்டிகைகளுக்காக மனம் ஏங்குகிறது .






தீபம் என்றால் விளக்கு .ஆவளி என்றால் வரிசை .வரிசையாய் விளக்கேற்றி ,இருள் நீக்கி ,ஒளிதரும் பண்டிகை தீபாவளி .
நம் மனத்தில் உள்ள இருட்டாகிய அகங்காரம் ,பொறாமை ,தலைக்கனம்  போன்றவற்றை அகற்றி ,பிரகாசமான ஒளியை நாம் கொண்டு வரவேண்டும் என்பதே இதன் கருவாகும் .

தீபாவளியை கொண்டாடுவதற்கு பல காரணங்கள்  உள்ளன .
ராமர் 14 வருடங்கள் வனவாசம் முடித்து ,நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி  வரவேற்றனர் .


புராண கதைகளின் படி ,கிருஷ்ணனின் இரு மனைவிகளில்  ஒருவரான பூமாதேவிக்கும் ,வராக (பன்றி) அவதாரம் எடுத்த கிருஷ்ணனுக்கும்  பிறந்த மகன் நரகாசுரன்.


நரகாசுரன் பிரம்மாவிடம் தன் தாயால் மட்டுமே மரணம் உண்டாக வேண்டும் என்று வரம் வேண்டி னான்.பிரம்மாவும் வரம் அளித்தார் .தாய் தன் மகனை கொல்ல மாட்டாள் என்ற காரணத்தால் அவ்வரம் வாங்கினான்.தேவர்களை துன்புறுத்தி வந்ததால் ,துன்பத்திலிருந்து விடுபட கிருஷ்ண பகவானை தேவர்கள்  நாடினர்.

அதர்மம் தோன்றும் போது ,கிருஷ்ணர் அவதாரம் எடுப்பார் .பூமாதேவி சத்ய பாமாவாக அவதரித்து ,கிருஷ்ணருக்கு துணையாக தேர் ஓட்டி சென்றாள் .கிருஷ்ணனுக்கும் ,நரகாசுரனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது.கிருஷ்ணனின் எண்ணம், நரகாசுரனை பூமா தேவியால் மட்டுமே கொல்ல முடியும் என்பதால் கிருஷ்ணன் நரகாசுரனின் அம்பு வரும் போது வீழ்வது போல் நடித்தார்.தேவி மானிட பிறவி எடுத்ததால் ,தன்  மகனை வீழ்த்துகிறோம் என்பதை மறந்து ,தன்  கணவனை காப்பாற்ற நரகாசுரனை கொன்றாள் .


கணவனுக்கு  மனைவி  துன்பத்திலும் ,இன்பத்திலும் சேர்ந்து இருக்க  வேண்டும் என்பதை உலக மக்களுக்கு  கிருஷ்ணபகவான்  உணர்த்துகிறார் .
தன் இறப்பை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என நரகாசுரன் பகவானிடம் வேண்டிக் கொண்டதால், நாம் எல்லோரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் .


தீபாவளி அன்று  நாம் சூரியன் வருவதற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும் .அன்று தண்ணீரில் கங்கையும்,எண்ணெயில் லக்ஷ்மியும்,அரப்பில் சரஸ்வதியும்,சந்தனத்தில் பூமா தேவியும்,புத்தாடையில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம் .

எல்லோரும் சிறப்பாக ,மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்க .என்றென்றும் ,உங்கள் குடும்பங்களில் மகிழ்ச்சியும் ,இன்பமும் நிலைத்திருக்க நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன் .

நம் வீட்டு பக்கத்தில்  உள்ள  ஏழை மக்களுக்கு ஆடை ,பலகாரம் வாங்கி கொடுங்க .ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் .நீங்களும் சந்தோஷமாக இருங்கள் .உங்களை  சுற்றி இருப்பவரையும் சந்தோஷப்படுத்துங்கள் .
உங்கள் கருத்துகளை சொன்னால் ,எனக்கு பதிவினை எழுத தூண்டுகோலாக இருக்கும் .
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .





உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி






திங்கள், 2 நவம்பர், 2015

அஷ்டமி ,நவமி

ஹாய் பிரண்ட்ஸ் ,

என்னுடைய பதிவை தொடர்ந்து படித்து வரும் ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.


இன்னிக்கு என்ன தலைப்பு எழுதலாம்  என நினைத்து கொண்டிருக்கையில் ,நாட்காட்டியில் நாளை அஷ்டமி என்று போட்டிருந்ததால் அதைப் பற்றி எழுதலாம் என நினைத்து எழுதுகிறேன் .

இந்துக்கள் வழிபாடுகளில் முக்கிய இடம் வகிப்பது நட்சத்திரங்களும் ,திதிகளும் தான் .


ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வரும் நட்சத்திரங்கள் ,திதிக்கு ஏற்ப விரதம் ,பண்டிகைகள் வருகின்றன.

சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி ,ஆவணி மாதம் ஆவணி அவிட்டம் ,தை மாதம் தை அமாவாசை வருகின்றன .

இந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு  பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே "நவராத்திரி "விழாவாகும்.

இது பராசக்திக்கு எடுக்கப்படும் விழா.
  

நவமி முடிந்தவுடன் அடுத்த நாள் வருவது தசமி .இந்த நாளை தேவி மகிசாசுரனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடியதால் விஜய தசமியாக நாம் கொண்டாடுகிறோம் .


தசம் என்றால் பத்து .பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால் 'தசரா 'என்று அழைக்கிறோம்.நவராத்திரியில் கடைசி மூன்று நாட்களான  அஷ்டமி ,நவமி ,தசமி மிகவும் விசேஷமானது .

சாதாரணமாக நம் இல்லங்களில் நடக்கும் நல்ல காரியங்கள் ,விசேஷங்கள் ,முக்கிய நிகழ்ச்சிகளை அஷ்டமி ,நவமியில்  செய்ய மாட்டோம் .

அஷ்டமி ,நவமி இந்த நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது.தொடர்ந்து கொண்டே இருக்கும்  என்பதால்  தான் .  


ராமர் பிறந்தது நவமி ,கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமி .நவராத்திரியில் வரும் அஷ்டமி ,நவமி இரு தினங்களும் ,ராமர்,கிருஷ்ணர் பிறந்த இரு தினங்களில் மட்டுமே கொண்டாடுகிறோம் .இதை தவிர வரும் அஷ்டமி ,நவமி நாட்களில் நாம் நல்ல காரியங்கள் செய்வது இல்லை .

அஷ்டமியில் பிறந்த  காரணத்தால் கிருஷ்ணன் பல துன்பங்களை அனுபவித்தார்.நவமியில் பிறந்த ராமன் நாட்டை இழந்து காட்டிற்கு சென்று ,சீதையை பிரிந்து பல துன்பங்களை அனுபவித்தார் .அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த திதிகளில் எந்த நல்ல காரியங்களையும் செய்யவில்லை .

அஷ்டமி ,நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம் .அஷ்டமி திதியில் சரபேஸ்வரர் ,பைரவர் ,வராகி போன்றவர்களுக்கு பூஜைகள் ,ஹோமங்கள் செய்யப்படுகின்றன .

காவல் தெய்வம்,எல்லை  தெய்வங்களுக்கு பூஜை செய்ய இந்த இரு திதிகளும் உகந்தது.


எனக்கு தெரிந்ததை உங்கள் அனைவருக்கும்  சொன்ன மகிழ்ச்சியில் என்  பதிவை முடிக்கிறேன் .


வாழ்க வளமுடன் 

நன்றி வணக்கம் .


ஞாயிறு, 1 நவம்பர், 2015

மஞ்சள்

அனைவருக்கும் என்  இனிய வணக்கம் .


மஞ்சள் என்றாலே நமக்கு ஞாபகம்  வருவது மஞ்சள் நிறம் ,மங்கள பொருள்  என்பதுதான் .






மஞ்சள்  பூசி குளிக்கும் வழக்கம் கிராமங்களில் இருந்து வந்தது.இப்ப கிராமங்களில் கூட ஒரு சில பெண்கள் மட்டுமே மஞ்சள் பூசி குளிக்கிறார்கள் .கஸ்தூரி மஞ்சள்  வாசனையுடன் இருக்கும்.இன்றைய  பெண்கள் இதை பூசுகிறார்கள் 



மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .


ஆன்மீகத்தை வைத்து பார்க்கும் போது ,மஞ்சளில் லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள் .அதனால்தான் மஞ்சளை தாம்பூலத்துடன் வைத்து கொடுக்கிறார்கள்.


அறுவடை நாளான பொங்கல் பண்டிகையின் போது ,பொங்கல் பானையில் மங்கள அடையாளமாக மஞ்சளை வைத்து கட்டுகிறார்கள்.நல்ல நாட்களில் மஞ்சள் சிறப்பிடம் வகுக்கிறது .நிம்மதியை கொடுக்கும் திறன் மஞ்சள் வாசனைக்கு உரிய குணமாகும்.

மஞ்சள் கலந்த நீரை வீட்டு வாசலில் தெளித்தால் பூச்சிகள்,எறும்புகள் ,கரையான்கள் வராமல் தடுக்கலாம் .



மஞ்சள்  உடலுக்கு நிறத்தை கூட்டும் .மஞ்சளை  புனிதமானதாக இந்துக்கள் கருதுகிறார்கள் .அம்பாளுக்கு மஞ்சள் மிகவும் பிடிக்கும் .அதனாலேயே வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுத்து அம்பாளே வந்ததாக கருதி ,உபசரிக்கிறோம் .


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .

உங்கள் ஈஸ்வரி