செவ்வாய், 18 டிசம்பர், 2018

வீட்டில் பூஜை முடிந்ததும் விளக்கைத் தானாக அணையவிடலாமா?

வீட்டில் பூஜை முடிந்ததும் விளக்கைத் தானாக அணையவிடலாமா? தீபம் விளக்கு பூஜை

பூஜை முடிந்ததும் திருவிளக்கு தீபம் எவ்வளவு நேரம் சுடர்விட வேண்டும். தீபம் 

எண்ணெய் தீரும் வரை சுடர்விட்டு, பிறகு தானாக அணையவிடலாமா?


அதிகாலை ஐந்தரை மணிக்கே பளபளவென விடிந்துவிட்டால், மின் விளக்கை அணைத்துவிடுவோம். ஆறரை மணிக்குத் தாமதமாக விடியும்போது, அதுவரைக்கும் மின்விளக்கு எரியும். தேவை இருக்கும்போது சேவை தொடர்வது பொருந்தும்.poojai arai in tamil க்கான பட முடிவு

கருவறையில் அலங்கார தீபம் காட்டியதும் அதை அணைத்து விடுவார்கள். பஞ்சமுக தீபம், கும்ப தீபம் போன்றவற்றையும் வேலை முடிந்ததும் அணைத்துவிடுவார்கள். பூஜை முடிந்ததும் திருவிளக்கை அணைக்கலாம். தர்சனார்த்திகள் வந்துகொண்டிருந்தால், அவர்களுக்காக திருவிளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும்.

வீட்டு பூஜையின்போது... அந்த பூஜை முடிந்ததும் அணைத்து விடலாம். விளக்கைத் தானாக அணையவிடக்கூடாது. படுத்திரி எரிதல் அபசகுனம். அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம் ஏற்காது. விளக்கை இறை வடிவமாகப் பார்க்கும் நாம் உபசாரத்துடன் அணைக்க வேண்டும். அணைப்பதற்கு முன் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை அளித்து அணைக்க வேண்டும். தானாகவே அணைய விடுவது அபசாரமாகும்.வெளிச்சத்துக்காக மட்டும் நாம் தீபம் ஏற்றுவதில்லை. நாம் செய்யும் சடங்குகளுக்குச் சாட்சியாக விளக்கை எண்ணுவோம். விளக்கை வழிபடுவது பண்பின் அடையாளம்.



நாம் பூஜை செய்யும் போது என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது

நாம் பூஜை செய்யும் போது என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது poojai arai in tamil க்கான பட முடிவு

பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி, பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.

வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது.

திருக்கோவிலின் பிரதான வாசல் வழியே தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

எலுமிச்சை விளக்கை கோவிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

நல்ல காரியங்கள் பற்றிப் பேசும்போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் தலத்திற்கு சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்கு செல்லும்பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

கோவில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது.

விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

செவ்வாய்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை குத்து விளக்கை துலக்கக் கூடாது.

இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

சிதம்பரத்தை தரிசித்தாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், திருவண்ணாமலையை நினைத்தாலும் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.

விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவபிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும், முருகனை மூன்று முறையும் சுற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.

காலையில் படுக்கையில் இருந்து கண் விழித்தெழுந்ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற்பலன்களை தரும் என்பது சாஸ்திர நெறியாகும்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை!

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை!

வைகுண்ட ஏகாதசி

'
மாதங்களில் நான் மார்கழி' என்பது கீதாசார்யனின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான். அந்தப் புராணச் சம்பவம்...

கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.
அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், 'ஹூம்' என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.
ஏகாதசி
அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. அந்த வரலாறு...
முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.
சொர்க்க வாசல்
மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக்கொண்டு, ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.
ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம்

தொடர்புடைய படம்
மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம் 

மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குருவாயூர் கோவிலில் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது. 

"குசேலம்" என்றால் கிழிந்து நைந்துபோன துணியைக் குறிக்கும். ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்த படியால், சுதாமா என்ற அவரது இயற்பெயர் மறைந்து குசேலர் என்ற பெயராலேயே அழைக்கப்படலானார்.

கண்ணன் சிறுவயதில் சாந்தீபனி என்ற முனிவரின் குருகுலத்தில் வேதங்கள் பயின்றபோது, அவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாமா. திருமணம் முடிந்து 27 குழந்தைகள் பெற்றெடுத்து மிகவும் வறுமையில் வாடினார் சுதாமா. இவரது மனைவி பெயர் "க்ஷுத்க்ஷாமா(சுசீலை) என்பதாகும். பசியால் வருந்தி மெலிந்த தேகம் உடையவள் என்பது இப்பெயரின் பொருள். தங்கள் வறுமை நீங்கும் பொருட்டு சுதாமாவின் இளமைக்கால நண்பரான யாதவ குல அரசன் கண்ணனைப் போய் பார்த்து வரும்படி அவள் கேட்டுக் கொண்டு, கண்ணனுக்குக் கொடுக்கும் பொருட்டு பலரிடம் யாசகம் பெற்று நான்கு பிடி அவலை ஒரு கிழிந்த துணியில் முடிந்து தன் கணவனிடம் அளித்தாள் அவள்.

தன் இளமைக்கால நண்பனைக் கண்ட கண்ணன் மிகவும் மகிழ்ந்து, தனது மனைவி ருக்மிணியுடன் பணிவிடைகள் புரிந்தார். குசேலர் கொடுக்கத் தயங்கிய அவலை அவரே கையிலிருந்து பிடுங்கி ஒரு கைப்பிடி எடுத்து வாயில் போட்டுக் கொள்ள, அந்த நிமிடமே குசேலரின் வறுமை அகன்று குபேரனைப் போன்ற பெரிய செல்வத்தைப் பெற்றார் என்பது கதை.

ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அவலே முக்கிய நிவேதனமாக அமைகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டு மென்று வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவனுக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர்.

குசேலர் தினமான மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று நம் வீடுகளிலும் குருவாயூரப்பன் படம் அல்லது கிருஷ்ணர் படம் வைத்துப் பூஜித்து, வெல்லம் கலந்த அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

குசேல சரித்திர ஸ்லோகம்
குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ


ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூ ரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா? கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா? 
ஸமான ஸீலாபி ததீயவல்லபா
ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே
ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே


குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந் தாள். ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது. அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான கோபாலன் தாங் களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள். அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல் லவா?
இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா
ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே
ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ
வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்


குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர் கிருஷ்ணனை காண புறப்பட்டார். லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும் பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை. ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண் டார். அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா? 
கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதிஸம்பாவனயா து கிம் புன: 


ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய பட்டினத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார். அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு 
எல்லையே இல்லை. அப்படித்தானே? 

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்
யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை
ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே

நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தார்கள். குசேலர் பேரானந்தமடைந்தார். அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர் களே? ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள். வரும்போது பெருமழையில் சிக்கினீர் களே? பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா? 

த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்யகரம் ருரோத தே


குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார். நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமா கப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய். அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’’ என்று உன்னைத் தடுத்து 
நிறுத்தினார்கள், இல்லையா? 

பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா
புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்
பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :


உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக் கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா? இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்லவா? 
யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ
வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ
த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:
க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்


‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்திருப்பார். மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் பேச்சின் ரஸம், அழ கிய சிரிப்பு இவற்றில் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார். ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது நவமணிகளால் பிரகாசிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா? 
கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்
ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்


‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார். பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார். சகிகளால் சூழப்பட்டவளும் ரத்தினம், தங்கம் முதலிய ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவளுமான பத்தினியைப் பார்த்தார். உடனே, மிகவும் ஆச்சரியமான உனது கருணையை 
அப்போது அவர் உணர்ந்தாரல்லவா? 


ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்
ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ
த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.


ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்துகொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா? இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.
இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்...

இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று பாராயணம் செய்தால் வறுமை நீங்கும். சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

புதன், 28 நவம்பர், 2018

பஞ்சமுக ஹனுமான்

பஞ்சமுக ஹனுமான்


உலகமெங்கும் உள்ள ஆலயத்திலும் வீட்டு பூஜை அறையிலும் ஆஞ்சனேயர் எனும் ஹனுமான் வழிபடப்பட்டு வருகிறார். பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்கள் உட்கார்ந்த நிலையில் அல்லது நின்றுள்ள நிலையில் கைகளைக் கூப்பிக் கொண்டு ஒரே முகத்துடன் காணப்படும் ஹனுமானின் அடி வாலில் இருந்து நுனி வால் வரை சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டு இட்டு தமது பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டிக் கொள்வார்கள். நுனி வாலில்  கடைசி பொட்டு வைத்தப் பின்னர் அவருக்கு நெய்வித்தியம் படைத்து பிரார்த்தனையை  முடிக்க வேண்டும். நெய்வித்தியப் பொருள்  வெறும் சக்கரைப் போட்ட பாலாகக் கூட இருக்கலாம், தவறல்ல.

அதே போல சில பெண்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்துள்ள பஞ்சமுக அனுமானுக்கும் பொட்டு வைத்து துதிக்கிறார்கள். இது சரியா அல்லது தவறான முறையா என்பதை தெரிந்து கொள்ள கீழ் கண்டதைப் படிக்கவும்.

பொதுவாக வீட்டின் பூஜை அறைகளில் கோபமில்லாத அதாவது உக்கிரக பாவனை இல்லாத தெய்வங்களையே வைத்து வணங்க வேண்டும் என்பதாக நமது சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள். அவற்றில் சீதையுடன் உள்ள ராமர், பார்வதியுடன் உள்ள சிவன், லஷ்மியுடன் உள்ள விஷ்ணு அல்லது நரசிம்மர் , வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய முருகன், பசுவுடன் கூடிய கிருஷ்ணர், வினாயகப்  பெருமான், சரஸ்வதி, அமர்ந்த நிலையில் உள்ள லஷ்மி, வெங்கடசலபதி, தத்தாத்திரேயர், கூப்பிய கரங்களுடன் அமர்ந்துள்ள அல்லது சுற்றிலும்  ராமா, ராமா என்ற சொற்கள் இருக்க நின்ற நிலையில் காட்சி தரும் ஹனுமான், சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு செல்லும் ஹனுமான் மற்றும் பல தெய்வங்கள் உள்ள பட்டாபிஷேகம் போன்றவை உண்டு.anuman tail kunkum image க்கான பட முடிவு

உக்கிர தெய்வங்களான நரசிம்மர், சன்யாச கோலத்தில் காணப்படும் சிவபெருமான், பசு மாடு இல்லாத கிருஷ்ணர், பிரத்தியங்கா தேவி, மஹிஷாசுரமர்தினி, காளி, பஞ்சமுக ஹனுமான் போன்றவர்களை நியமப்படி ஆராதனை செய்து வணங்கி துதிக்க முடியாதவர்கள்  தமது பூஜை அறைகளில் வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.  அவற்றுக்கு பூஜை செய்து முடியும்வரை சில ஆசாரங்களை அனுஷ்டிக்க வேண்டும்.  ஏன் என்றால் நாம் செய்யும் வழிபாட்டு முறை தவறானதாக இருந்து விட்டால் அத்தகைய உக்கிர மூர்த்திகளினால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் மற்றும் தொல்லைகள் ஏற்படும் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆகவே வீட்டு பூஜை அறைகளில் அப்படிப்பட்ட உக்ரக மூர்த்திகளை வைத்துக் கொண்டால் அவற்றை பொதுவாக வணங்கி விட்டு இருந்து விடலாம்.  பிரார்த்தனை மற்றும் பூஜைகளுக்கு அவற்றை உட்படுத்தினால் நியமப்படி அவற்றை செய்ய வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி அவை உபாசனை தெய்வங்கள் ஆகும். அவை பெரும்பாலும் மந்திர தந்திரங்களில் சித்தி பெற சாதனாக்களை செய்பவர்களும், உபாசனை செய்பவர்களும் பூஜிக்கும் தெய்வங்கள் ஆவார்கள்.


எதற்காக ஹனுமானுக்கு வேண்டுதல்
செய்கிறார்கள் ?


வீட்டில் பூஜை அறையில் வைத்துள்ள ஹனுமானை எதெற்கெல்லாம் வேண்டுகிறார்கள்?
  • சனி பகவானின் தொல்லைகள் அகல
  • தடைகள் விலக
  • கணவன் மனைவி மனஸ்தாபங்கள் நீங்கி மன மகிழ்ச்சி பெற
  • குடும்ப அமைதி நிலவ
  • பில்லி சூனியங்களின் தாக்கம் நீங்க
  • ஆன்மீக நாட்டம் மேன்மை அடைய
  • கிரஹ தோஷம் விலக மற்றும்
  • மன பயம் விலகி தைரியம் உண்டாக
குளித்தப் பின் நல்ல உடை அணிந்து ஒரு முக அமைதியான ஹனுமானை பொட்டு இட்டு வணங்குவதைப் போல வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை மேற்கண்ட காரணங்களுக்காக குங்கும சந்தன பொட்டு இட்டு வேண்டலாமா?

கூடாது. வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை மேற்கண்ட காரணங்களுக்காக குங்கும சந்தன பொட்டு இட்டு சாதாரண நிலையில் இருந்தவாறு வணங்கலாகாது. அதற்குக் காரணம் ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு உள்ள உக்கிர தெய்வமான பஞ்சமுக ஹனுமான் உபாசனை தெய்வம் ஆகும்.  அவரிடம் வேண்டுதல்களை வைக்கும்போது நியமப்படி பூஜித்து வணங்க வேண்டும். கண்டபடி எல்லாம் செய்யக் கூடாது. அதற்க்கு பல விதி முறைகள் உள்ளன.  ஆகவே வேண்டுதல்களுக்காக பொட்டு  இட்டு பூஜிக்காமல் பஞ்சமுக ஹனுமானை அவரது ஆலயங்களில் மட்டுமே சென்று வேண்டி துதிக்க வேண்டும். ஆலயத்தில் சென்று அவரை வணங்கும்போது அவர் நமக்கு வேண்டியதை தருகிறார். ஏன் என்றால் ஆலயத்தில் அவருக்கு முறைப்படி ஆராதனை செய்து பூஜிப்பதினால் அவர் சாந்தமாக இருப்பார். பஞ்சமுக ஹனுமானை ஏன் உக்கிர தெய்வமாகக் கருதுகிறார்கள்?

பஞ்சமுக ஹனுமான் யார் ?


ராமனையும் லஷ்மணனையும் சிறைபிடித்து பாதாளத்தில் அடைத்து வைத்திருந்தான் ராவணனின் தம்பியான மயில் ராவணன். அவர்களை சிறையில் இருந்து மீட்க வேண்டுமானால் அதை சுற்றி ஐந்து திசைகளில் எரிந்து கொண்டிருந்த ஐந்து எண்ணை  விளக்குகளை ஒரே சமயத்தில் அணைத்திட வேண்டும். மயில் ராவணனுடன் அதற்காக யுத்தம் செய்து கொண்டிருந்த ஹனுமான் கோபமடைந்து தன்னுடைய முகத்துடன் நரசிம்மர், வராஹர், கருடன் மற்றும் ஹயக்ரீவர் போன்றவர்களின் உக்கிர உருவங்களை ஏந்திக் கொண்டு கைகளில் ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு பாதாளத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை ஒரே சமயத்தில் அணைத்து மயில் ராவணனைக் கொன்று ராம லஷ்மணர்களை சிறையில் இருந்து மீட்டார். ஆகவே கோபமான அம்சத்தைக் கொண்டவர்  பஞ்சமுக ஹனுமான் என்பதினால் சரியான பூஜா நியமங்களை அனுஷ்டிக்காமல் வீட்டில் அவரை பொட்டிட்டு வணங்கலாகாது. உண்மையில் பஞ்சமுக ஹனுமானை எதற்காக வேண்டித் துதிக்கிறார்கள்?
  • பில்லி சூனிய தோஷங்கள் அகல
  • ஆன்மீக மேன்மை அடைய
  • வியாபாரங்களில் வெற்றி கிடைக்க
  • கிரஹ மற்றும் வாஸ்து தோஷங்கள் அகல மற்றும்
  • மன பயம் அகன்று தைரியம் கிடைக்க
ஆனால் அதே நேரத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவ, மன அமைதி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வீட்டின் பூஜை அறையில் வைத்துள்ள ராம நாம வார்த்தைகள் நிறைந்து அமைதியாக கூப்பிய கைகளுடன் உட்கார்ந்த அல்லது நின்றுள்ள நிலையில் உள்ள ஹனுமனிடம்தான் அவர் வாலில் பொட்டு இட்டு வேண்டலாமே தவிர உபாசன தெய்வமான பஞ்சமுக ஹனுமானுக்கு சரியான குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் சரியான பூஜா விதிகளைக் கடைபிடிக்காமல், சுத்தமான மனதுடனும், உடல் நிலையிலும் இல்லாமல் வெறுமனே பொட்டு இட்டு வேண்டுவது சரி அல்ல. அதனால் வீட்டில் மேலும் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கவும், குழப்பங்கள் அதிகரிக்கவும் வழி வகுக்கும் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை. விதிப்படி வணங்கினால் மட்டுமே அவர் வேண்டியதை அருள்வார்.

அது மட்டும் அல்ல. ஒருமுறை வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள பொட்டு  இட ஆரம்பித்த உடன் மாதவிலக்கு நாட்களைத் தவிர பிற நேரத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் இடையில் நிறுத்தி விட்டு, அதாவது ஒருவாரம் பொட்டு வைத்து விட்டு, மீண்டும்  ஒருவார இடைவெளிக்குப் பிறகு  விட்ட இடத்தில் இருந்து பொட்டு வைக்க துவங்குவது பெரும் தவறான செயல் ஆகும்.

அதனால்தான் வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை முறைப்படி ஆராதனை செய்யாமல் வெறுமே பொட்டு வைத்து பிரார்திப்பவர்களுடைய வீடுகளில் அமைதியும் இருப்பது இல்லை, நிம்மதியும் கிடைக்காது, வேண்டிய காரியங்களும் சரிவர நிறைவேறுவது இல்லை. 

செவ்வாய், 20 நவம்பர், 2018

வெள்ளிக் கிழமையில் நகம் வெட்ட கூடாது என கூறக் காரணம் என்ன...?

வெள்ளிக் கிழமையில் நகம் வெட்ட கூடாது என கூறக் காரணம் என்ன...? 





நம் முன்னோர்கள் சொல்லிவிட்ட சில செயல்களின் பொருள் உணர்ந்து பழக்கங்களை அறிந்து கொண்டால் அதன் மதிப்பு நமக்கு புரியும். அதற்கான ஒரு சிரிய முயற்சியே இந்தப் பதிவு. செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம். அதேப் போல செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று கூறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது.  மேலும் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் செவ்வாய்க் கிழமைகளில் பெரும்பாலான முடிதிருத்த நிலையங்கள் இயங்குவதில்லை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய உகந்த நாள். அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்கக் கூடாது என்பது நம்பிக்கை.

நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும். பொருளை இழப்பதே இழப்பு என்கிறபோது, உடலின் உறுப்பான நகத்தை இழப்பது பெரும் தவறு, இதனால் தான் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றனர் நமது முன்னோர்கள்.

நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்...!

நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்.                                            நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க தினந்தோறும் இரவு சீக்கிரமாக தூங்கி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக துகிலெழுந்து, சிறிது நேரம் தியானம் செய்து உங்களின் விருப்ப தெய்வம்,
உங்களின் முன்னோர்கள் மற்றும் சித்தர்கள், முனிவர்களை மானாசீகமாக வணங்க வேண்டும்.
 சூரிய பகவான் ஒரு மனிதனின் முழு உடல்நலத்திற்கும் காரகனாகிறார். அதிகாலையில் நீராடி காலையில் உதிக்கின்ற சூரிய பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை வழிபட்டு வரவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரம் இருக்கும் கோவிலுக்கு காலை நேரத்தில் சென்று இறைவனை வழிபட்டு, பின்பு அரசமரத்தை சுற்றிவருவது உங்களின் உடலில் ஏற்கனவே இருக்கும் பிணிகளை போக்கும்.  
ஒரு மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்தும் தன்மை சனி, ராகு-கேது கிரகங்களுக்கு அதிகம் உண்டு. சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சனி, ராகு-கேது கிரகங்களுக்கு நெய் தீபங்கள் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் உடல் நலம் மேம்படும். தினமும் காலையில் உங்கள் வீட்டிற்கு அருகில் வாழும் நாய்கள், பூனைகள், காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து வந்தால், அப்புண்ணிய செயலின் பலனாக உங்களின் நீண்ட கால நோய்கள் நீங்கி, உடல்நலம் மேம்படும். எதிர்காலங்களில் கொடிய வியாதிகள் ஏற்படமாலும் தடுக்கும்.

சனி, 17 நவம்பர், 2018

லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்

தொடர்புடைய படம்
லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்
*ப* டிகாரம்,
*சு* ண்ணாம்பு தண்ணீர்,
தொடர்புடைய படம்*ம* ஞ்சள்..
இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும்.
இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை,
*‘ஹரித்ரா குங்குமம்’*
என்று சொல்வார்கள்.
குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது.
படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது.
தொற்றுநோய்களும் அண்டாது.
மூளைக்கு செல்லும் நரம்புகள்,
அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும்.
குங்குமம் அணிவதால் நெற்றியில் சூடு தணிகிறது.லட்சுமி குங்குமம் க்கான பட முடிவு
பெண்களின் தலை வகிட்டின் நுனியை,
*‘சீமந்தபிரதேசம்’*
என்பார்கள்.
 பெண்கள் அணியும் மாங்கல்யம்,
பெண்களின் நெற்றி,
தலை வகிட்டு பகுதி ஆரம்பம்..
ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள்.
இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால்,
லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.
நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால்,
கொடுப்பவர் – பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும்.
பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக,
தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும்.
ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில்,
குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்



மகாலட்சுமி  வாசம் செய்யும் 108 இடங்கள் 
*அவை:-*
வெற்றிலை மேற்புறம்,
விபூதி,
வில்வம்,
மஞ்சள்,
அட்சதை,
பூரணகும்பம்,
தாமரை,
தாமரைமணி,
ஜெபமாலை,
வலம்புரிச்சங்கு,
மாவிலை,
தர்ப்பை,
குலை வாழை,
துளசி,
தாழம்பூ,
ருத்ராட்சம்,
சந்தனம்,
தேவ தாரு,
அகில்,
பஞ்சபாத்திரம்,
கொப்பரைக்காய்,
பாக்கு,
பச்சைக்கற்பூரம்,
கலசம்,
சிருக்சுருவம்,
கமண்டலநீர்,
நிறைகுடம்,
காய்ச்சிய பால்,
காராம்பசு நெய்,
குங்கிலியப் புகை,
கஸ்தூரி,
புனுகு,
பூணூல்,
சாளக்கிராமம்,
பாணலிங்கம்,
பஞ்ச கவ்யம்,
திருமாங்கல்யம்,
கிரீடம்,
பூலாங்கிழங்கு,
ஆலவிழுது,
தேங்காய்க்கண்,
தென்னம் பாளை,
சங்கு புஷ்பம்,
இலந்தை,
நெல்லி,
எள்,
கடுக்காய்,
கொம்பரக்கு,
பவளமல்லி,
மாதுளை,
திரு நீற்றுபச்சை,
அத்திக் கட்டை,
ஆகாசகருடன்,
வெட்டிவேர்,
அருகம்புல்,
விளாமிச்சுவேர்,
நன்னாரிவேர்,
களாக்காய்,
விளாம்பழம்,
வரகு,
நெற் கதிர்,
மாவடு,
புற்றுத்தேன்,
எலுமிச்சை,
மணிநாக்கு,
சோளக்கதிர்,
பாகற்காய்,
அகத்திக்கீரை,
காசினிக்கீரை,
பசலைக்கீரை,
கூந்தல்பனை,
மலைத்தேன்,
வெள்ளி,
தங்கம்,
வைரம்,
உப்பு,
யானை,
மூங்கில்,
பசு நீர்த்தாரை,
குளவிக்கூட்டு மண்,
நண்டுவளை மண்,
காளை கொம்பு மண்,
யானைகொம்பு மண்,
ஆலஅடி மண்,
வில்வ அடி மண்,
வெள்ளரிப்பழம்,
மோதகம்,
அவல்,
காதோலை,
கடல்நுரை,
கண்ணாடி,
மோதிரம் (தந்தம்),
பட்டு,
தையல்இல்லாத புதுத் துணி,
பெண்ணின் கழுத்து,
ஆணின் நெற்றி,
கோவில் நிலை மண்,
வெயிலுடன் கூடிய மழைநீர்,
கீரிப்பிள்ளை,
நுனிமுடிந்த கூந்தல்,
படிகாரம்,
அரச சமித்து,
பன்றிக்கொம்பு,
சந்திர காந்தக்கல்,
பிரம்பு,
நாயுருவி,
கெண்ட,
வாசல் நிலை,
நெற்றி..
போன்ற இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.