வெள்ளி, 29 டிசம்பர், 2017

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்





20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்



1. தினசரி பிரதோஷம் :தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாகஅன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

3. மாதப் பிரதோஷம் :பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப்பிரதோஷம் :பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆரா
தனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள"திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இதுமுருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்துநீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19.நவக்கிரகப் பிரதோஷம் :ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்

திங்கள், 11 டிசம்பர், 2017

ஆனந்த ராமாயண தியானம்

aanjaneya க்கான பட முடிவு
ஆனந்த ராமாயண தியானம் 

ஆஞ்சநேயர் துதி 
கோதண்ட தீக்ஷா குருராம நாமத்தை
நீதண்ட வாடியேன் செப்புதற்கு - கோதண்டா
மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை வாருதியே நீ துணையே வா
பெருமாள் துதி
அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து
தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி
கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி
 





1 - வது பாலகாண்டம் 
தேவர் குறை தீர்த்திடவே ராமா ராமா
மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா
தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா
புஜபலத்தோடு ஜனித்தாய் ராமா ராமா
கோசலைதன் கர்பத்தில் ராமா ராமா
கூசாமலே நீ பிறந்தாய் ராமா ராமா
தவமுனிக்கு உதவி செய்ய ராமா ராமா
கவனமுடன் பின் சென்றாய் ராமா ராமா
தாடகையை சங்கரித்தாய் ராமா ராமா
பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா
கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் ராமா ராமா
வில் வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா
ஜனகன்வர லாறு கேட்ட ராமா ராமா
தனக்குப்பதில் முனியுரைக்க ராமா ராமா
தனுசைக் கையிலெடுத்தாய் ராமா ராமா
மனதில் கிலேசமுற்றாய் ராமா ராமா
வில்முறிய சீதைக்கண்டு ராமா ராமா
நல்மணஞ் செய்து கொண்டாய் ராமா ராமா
மங்களங்கள் பாடவே ராமா ராமா
தங்கனீர் மிதிலைதனில் ராமா ராமா
பரசுராமர் வில்முறித்தீர் ராமா ராமா
கரசனமா வயோத்தி சென்றீர் ராமா ராமா
சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா
சிறப்பவே அயோத்தி நகர் ராமா ராமா


  2 -வது அயோத்தியா காண்டம்

அயோதிக்கரசனாக ராமா ராமா
ஆவதனில் தசரதனும் ராமா ராமா
உந்தனையே வேண்டிக்கொண்டார் ராமா ராமா
சிந்தை களித்திருந்தார் ராமா ராமா
சிற்றன்னை கைகேயியை ராமா ராமா
பற்றில்லாது கூனியுமே ராமா ராமா
பக்குவமாய்த் தான் கலைத்து ராமா ராமா
பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா
உத்திரவு கேள் என்று ராமா ராமா
ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா
தாய் மொழி தவராமலே ராமா ராமா
தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா
தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா
தானடைந்தாய் கானகமும் ராமா ராமா
சீதையுடன் புறப்படவே ராமா ராமா
லக்ஷ்மணர் கூடவந்தார் ராமா ராமா
பக்தரெல்லாம் புலம்பிடவும் ராமா ராமா
பலநீதி சொல்லி தானகன்றாய் ராமா ராமா
கங்கை கரை அடைந்தாய் ராமா ராமா
நங்கை சீதையுடன் ராமா ராமா
ஒடம்விட்ட குகனுடன் ராமா ராமா
உளவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா
சேனையுடன் பரதன் வர ராமா ராமா
சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா
பட்டங்கட்டி அரசு செய்ய ராமா ராமா
பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா
  

    3 -வது ஆரண்ய காண்டம்

அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா
அப்புறம் தண்டகம் சென்றாய் ராமா ராமா
கொடிய விராதகனை ராமா ராமா
மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா
தண்டக வனத்து ரிஷிகள் ராமா ராமா
அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா
பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா
பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா
சூர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா
தம்பியால் பங்கம் அடைந்தாள் ராமா ராமா
வெம்பியமனம் வாடினாள் ராமா ராமா
கரதூஷ்ணாதியரை ராமா ராமா
வரைமுறை இட்டாள் ராமா ராமா
கோதண்டத்துக்குச் சிறையாக ராமா ராமா
கூகுரலிட்டோடி வந்தார் ராமா ராமா
சூர்பனகை தூண்டுதலால் ராமா ராமா
ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா
மாரீசனை மானாகவர ராமா ராமா
மருமகனும் வேண்டிக்கொண்டான் ராமா ராமா
மாரீச்சன் மறுத்ததற்கு ராமா ராமா
தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா
சீதை முன்னே மான் வரவே ராமா ராமா
அதைப்பிடிக்க பின் சென்றாய் ராமா ராமா
அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா
நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா
சிந்தை கலங்கிடவே ராமா ராமா
சீதை வருந்தினாளே ராமா ராமா
ராவண சந்நியாசி வந்தான் ராமா ராமா
நிலத்தொட சீதையை ராமா ராமா
தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா
தெரிந்து எதிர்க்க ஜடாயுவும் ராமா ராமா
சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா
சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா
தேடி வரும் வழியில் ராமா ராமா
தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா
நல்வரமும் தந்தளித்தாய் ராமா ராமா
செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா
சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா
சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா
நல்வரமும் தான் அளித்தாய் ராமா ராமா
 
4 -வது கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமான் எதிரில் வர ராமா ராமா
அவரால் சுக்ரீவனை ராமா ராமா
நேசங்கொண்டு யோசனைகள் ராமா ராமா
நீனிலத்தில் செய்துகொண்டீர் ராமா ராமா
சீதையின் நகைகளை ராமா ராமா
கண்டுமனங் கசிந்தீர் ராமா ராமா
சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா
துளைத்து விட்டீர் மாமரத்தை ராமா ராமா
வாலியை வதைத்து அவனை ராமா ராமா
வைகுந்தம் போக செய்தீர் ராமா ராமா
சீதையைத் தேடும்படி ராமா ராமா
சேதிசொல்லி விடுத்தீர் ராமா ராமா
நான்கு திசைகளிலும் ராமா ராமா
நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா
காடுமலை வனமெல்லாம் ராமா ராமா
கண்கூடாய்த் தேடுகிறார் ராமா ராமா
5 -வது சுந்தர காண்டம்
சீதை இருப்பிடத்தை ராமா ராமா
சம்பாதி உரைத்திடுவே ராமா ராமா
மயேந்திரம் ஏறியே ராமா ராமா
பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா
இலங்கணி அனுமானும் ராமா ராமா
கலங்கிட வடித்தானே ராமா ராமா
சீதையைத் தேடிக் கண்டாளே ராமா ராமா
சேதியடை யாளந்தன் ராமா ராமா
அசோகவன மழித்தான் ராமா ராமா
அசுரர்களை தான்வதைத்தான் ராமா ராமா
இலங்கைக்கு கொள்ளிவைத்து ராமா ராமா
கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா
சீதை தந்த சூடாமணி ராமா ராமா
அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா
இந்திரஜித்தின் அஸ்திரத்தால் ராமா ராமா
சந்திக்க அனுமானும் ராமா ராமா
ராவணனைக் கண்டு அனுமானும் ராமா ராமா
பாலாமைக்கும் புத்தி சொன்னான் ராமா ராமா
விதியை வெல்வாரில்லை ராமா ராமா
மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா
6 -வது யுத்த காண்டம்  


சேதுவை அணைகட்ட ராமா ராமா
சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா
சரணமடைந்த விபீஷணனுக்கு ராமா ராமா
சிரஞ்சீவி பட்டம் தந்தாய் ராமா ராமா
ராவணாதி யசுரரைக் கொன்றாய் ராமா ராமா
ராக்ஷதர் வேரற்றுப்போக ராமா ராமா
சீதையை சிறைநீக்கு விட்டாய் ராமா ராமா
விபீஷணனுக்கு முடிதரித்தாய் ராமா ராமா
அயோத்திக்கு திரும்பிவர ராமா ராமா
சேதுவிற்  குரைசெயதாய் ராமா ராமா
புஷ்பக விமானத்தில் ராமா ராமா
புண்ணிய முனிவரிடம் ராமா ராமா
போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா
போகவிடுத் தனுமானை ராமா ராமா
பரனுயிரை காப்பாற்றிய ராமா ராமா
அயோத்தி நகர் வந்து சேர்ந்த ராமா ராமா
மகுடாபிஷேகங் கொண்ட ராமா ராமா
மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா
குவலயத்தை ரட்சிக்கும் ராமா ராமா
குறைகளொன்றும் வாராது ராமா ராமா

ஆனந்த ராமாயணம் தியானம் சம்பூர்ணம்