வியாழன், 5 டிசம்பர், 2019

மதுரையை காக்க சிவனே நேரில் வந்த சம்பவம்







மதுரையை காக்க சிவனே நேரில் வந்த சம்பவம் Meenakshi Temple


ஆதிவாசியாக இருந்த மனிதன் நாகரீகமான மனிதனாக மாறத்தொடங்கிய காலத்தில் அவன் வாழ்ந்த நகரம் சார்ந்த வாழ்க்கை முறை நாகரீகங்களாக அறியப்படுகின்றன. அந்த வகையில் உலகின் மிகப்பழமையான நாகரீகங்கள் இருந்தாலும், அத்தகைய காலத்திலேயே தாங்கள் பேசிய மொழிக்கு சங்கம் வைத்து அதை வளர்த்த பெருமை தமிழர்களையே சாரும். அந்த பெருமைக்குரிய சங்கம் இருந்த இடம் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான “ஆன்மீக நகரமான” “மதுரை” மாநகரைப் பற்றிய ஒரு கதையை இங்கு தெரிந்து கொள்வோம்.
meenatchi amman temple
உலகின் மிகப் பழமையான, இன்றும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நகரங்களில் நம் தமிழ் நாட்டின் “மதுரை” மாநகரும் ஒன்று. நம் பாரத நாட்டின் மிக பழமையான ஆன்மீக நகரங்கள் பெரும்பாலும் வட பாரதத்தில் இருக்கின்றன. ஆனால் தென்பாரதத்தில் இருக்கும் மிகப்பழமையான ஆன்மீக நகரங்கள் இரண்டு தான். ஒன்று “காஞ்சி மாநகரம்” மற்றொன்று “மதுரை மாநகரம்” அதிலும் இந்த மதுரை மாநகரம், காஞ்சி நகரத்தை விடவும் பழமையானது. அதே நேரத்தில் பல ஆன்மீக அதிசயங்கள் நிறைந்த ஒரு நகரமாகும்.



புராண காலத்திலேயே மதுரை மாநகரம் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் நாகரீகத்தின் மையமாக திகழ்ந்தது. அக்காலத்திலேயே உலகின் பிற பழமையான நாகரீகங்களுடன் தொடர்பு கொண்டு செல்வத்திலும், இன்ன பிற துறைகளிலும் மதுரை மாநகரம் மிகப்பெரும் வளர்ச்சியையடைந்தது.
,எட்டுத்திக்கும் புகழ் பரவிக்கிடந்த மதுரை நகரின் வளர்ச்சியைக் கண்டு பயமும், பொறாமையும் கொண்டனர் அந்த பாண்டிய நாட்டின் அண்டை நாதனை ஆண்ட மன்னர்கள். எனவே தங்கள் ராஜ்ஜியத்தில் வசித்து வந்த, மாந்திரீகத்தில் அனுபவம் வாய்ந்த “ஜைன” மத துறவிகளை வைத்து ஒரு தீய யாகத்தை வளர்த்தனர். அப்போது அந்த யாகத்தில் தீய மாந்திரீக கலையின் மூலம் ஒரு ராட்சத யானை, ஒரு ராட்சத பசு, ஒரு ராட்சத நாகம் ஆகிய விலங்குகளை தோன்றச் செய்து அம்மூன்று விலங்குகளையும் மதுரை மாநகரை அழிப்பதற்கு ஏவி விட்டனர்.

Sivan
இதை எப்படியோ அறிந்து கொண்ட அப்போது ஆட்சியிலிருந்த பாண்டிய மன்னன், தன் மதுரை மாநகரையும் அதன் மக்களையும் அந்த ராட்சத விலங்குகளிடமிருந்து காக்குமாறு “மதுரையின் நாயகனாகிய” சிவபெருமானிடம் வேண்டினான். அப்பாண்டிய மன்னனின் வேண்டுதலுக்கிணங்க மதுரை நகருக்கும், அதை ஆட்சி புரியும் “மீனாட்சியின்” நாயகனான சிவ பெருமான், தன்னுடைய திரிசூலத்தை எடுத்து அந்த ராட்சத விலங்குகள் மீது வீச, அந்த மூன்று விலங்குகளும் மதுரை நகரத்திற்கு மூன்று திசைகளில் மலைகளாக மாறியதாக சிவ புராண கதை கூறுகிறது. இன்றும் மதுரை மாநகருக்கு மூன்று திசைகளில் அந்த ராட்சத விலங்குகள் பெயரிலேயே யானை மலை, பசு மலை, நாக மலை என்று அந்த மூன்று மலைகளும் அழைக்கப்படுகின்றன.மலைகளின் அருகாமையிலும் பல வழிபாட்டு தலங்களும் உள்ளன.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்Image result for all gods brahma vishnu shiva with family       

         1 .கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும்.


2.       கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால்சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று அர்த்தம்.

3.       ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

4.       கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.


5.       கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால் நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

6.       எந்த கடவுளை கனவில் கண்டாலும் பிரச்சனைகள் விலகும். எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.

7.       ஒரு கோவில் கோபுரத்தை கனவில் கண்டால்வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டது என்றும் பொருள்.

8.       கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மனகவலைகள் ஏற்படும் என்று பொருள்.

9.       கோவில் தெப்பத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறு ம்.

10.   கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது, இது விரைவில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.

11.   விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.

12.   விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

13.   ஏசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.

14.   ஏசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம் வரும். ஆனால் அது விரைவில் மாறிவிடும்.

15.   காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

16.   கடவுள் விக்கிரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.

17.   கோவில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.

18.   கோவில் மணி அடிப்பது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டு.

19.   கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் காரியங்கள் இடையூறுகள் ஏற்படும்.

20.   ஐய்யனார் தெய்வத்தை கனவில் கண்டால் சகல சௌகரியமும் கிட்டும்.

21.   நவகிரகங்களை கனவில் கண்டால் அருகில் உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இல்லையேல் தீமை ஏற்படும்.

22.   விநாயகரை கனவில் கண்டால் உங்களின் எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது என்று பொருள்.


23.   யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்தி கடன் வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

24.   யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களின் அணைத்து காரியமும் வெற்றியுடன் முடியும் என்று பொருள்.

25.   முருகனை கனவில் கண்டால் உங்களின் எல்லா விதமான தோஷமும் நீங்கிவிட்டது என்று பொருள். உங்களுக்கு நடப்பது எல்லாமே நன்மையாகவே நடக்கும்.

26.   அம்பாள்/அம்மனை கனவில் கண்டால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

27.   அம்பாள்/அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது போல கனவு வந்தால் எந்த தீமையும் நம்மை அண்டாது என்று அர்த்தம்.

28.   திருநீறு பூசுவது போல கனவு கண்டால் நல்ல ஞானம் பிறக்கும்.
 
29. கோவிலை கனவில் கண்டால் நன்மையான பலன்கள் ஏற்படபோகிறது  என்று அர்த்தம். 

30. பாழடைந்த கோவிலை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.

31. கோவிலில் இறைவனை வழிபடுவதுபோல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள் தோன்றும். ஆனால் தெய்வ அருளால் முடிவில் நன்மையாகவே  முடியும்.

32. கனவில்ஆலய மணியோசையை கேட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைச் பாக்கியம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும்.






























ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சிவபெருமான் உமையம்மையோடு திருவிளையாடல்

சிவபெருமான் உமையம்மையோடு திருவிளையாடல்

ஒரு காலத்துல உமையம்மை காஞ்சிபுரத்துல, கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தாராம்.”
“அவங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு சொல்லிக் கொடுத்திருக்கீங்களே தாத்தா, பின்ன ஏன் அவங்க பூசை செய்யணும்?”
“நல்ல கேள்விதான்! உமையம்மை நம்மளை இந்த பூமிக்கு அனுப்பிச்சா மட்டும் போதுமா? எப்படி வாழணும்னு சொல்லிக் கொடுக்க வேண்டாமா.. அதைத்தான் நமக்காக அவங்க செஞ்சு காண்பிச்சாங்க…!”

“சிவபெருமான் உமையம்மையோடு திருவிளையாடல் புரியத் திருவுளங் கொண்டு கம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வருமாறு செய்தாராம். அம்பிகை அதைப்பார்த்துட்டு, சிவலிங்கம் கரைந்து சிதையாமல் இருக்கறதுக்காக,  அந்த சிவலிங்கத்தைத் தன்னோட இரு கைகளாலும் மார்போடு தழுவிக்கிட்டாங்களாம்”.

“பெருமான் மனங் குழைந்து அம்மையோட தனத் தழும்பும் கைவளைத் தழும்பும் அவர்மீது தோன்ற வெளிப்பட்டு நின்றாராம். உமையம்மைக்கு அருள் புரிந்ததோடு அவங்ககிட்ட இரு நாழி நெல்லளித்தாராம்.”
“நெல்லு தெரியும். அது என்ன இருநாழி…?”
“நாழின்றது ஒரு அளவு முறைம்மா. லிட்டர்ன்னு இப்ப சொல்றீங்களே அதைப் போல. இன்னிக்கு கணக்குல ஒரு நாழி நெல் என்பது சுமார் ஒன்றே கால் லிட்டர். ஆக,  சிவபெருமான் உமையம்மைக்குக் கொடுத்தது, இரண்டரை லிட்டர் நெல்.…!” 

“கொடுத்த நெல்லைக் கொண்டு அறச்செயல்களை மக்களுக்கு கற்றுக்கொடுத்து காஞ்சிபுரத்துல நீ இருன்னு சொன்னாராம். அம்பிகை அந்நெல்லை அந்நாட்டு வேளாளர்களிடம் கொடுத்து, உழவுத்தொழிலைப் பெருக்கி, பல அறச்செயல்களை செய்து வந்தாராம்…!”




“அறம்னு சொன்னீங்களே, அறம்னா மத்தவங்களுக்கு தருமம் செய்யறதுதானே தாத்தா”
“அறத்திற்கு அவ்வளவு சாதாரணமா விளக்கம் கொடுத்துட முடியாதும்மா. சுருக்கமாகச் சொல்லணும்னா நமக்கு மட்டும் எது நன்மைன்னு பார்க்காம, சமூகத்திற்கும் நன்மை கிடைக்கறதுமாதிரி வாழணும். காமாட்சி அம்மை அதன்படி 32 அறங்களைச் செய்தாங்கலாம்”.
“அப்ப அறங்கள் மொத்தம் 32 தானா?”
“அப்படியில்லைம்மா… இப்படியெல்லாம் அறங்கள் செய்யலாம்னு எடுத்துக்காட்டா 32 செய்தாங்களாம். அதன் அடிப்படையை புரிஞ்சிகிட்டு வாழ்ந்தோம்னா நம்ம வாழ்க்கையே அறவாழ்க்கையா ஆகிடும்.”
“ஏன் தாத்தா அறச்செயல்கள் செய்யணும்? நாம நம்மள மட்டும் பாத்துக்கிட்டா போதாதா…?
“வாழ்க்கையின்றது தனி ஒருவனைச் சார்ந்தது இல்ல. சமூகத்தையும் உள்ளடக்கியதுதானே. அதுமட்டுமில்லாம அறச்செயல்களை தொடர்ந்து செய்து வரும்போது அறமானது அன்பில் கொண்டுவிடும். அதற்கப்புறம் அன்பானது அருளிடம் கொண்டு சேர்க்கும். அருளிடம் சேர்ந்தால் அருள் தவத்தில் சேர்க்கும். தவமானது சிவத்தில் சேர்ந்துவிடும்.!”
“ஓ..! சிவத்தோட சேர்றதுக்குதான் ‘அறம் செய விரும்புன்னு’ ஒளவைப்பாட்டி ஒரே வரியிலே சொன்னாங்களோ… இப்பத்தான் புரியுது தாத்தா. அந்த 32 அறங்கள் என்னென்ன தாத்தா?”
“ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுவது, அவர்கள் ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுவது, ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுவது, ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுவது, பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் (குறைந்த பட்ச நகைகள்) அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுவது, பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மருந்தான கண்மை அளிப்பது, நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாக மருந்தளிக்கிறது, படிக்கிறவங்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி அவர்களுக்கு உணவு அளிப்பது, பசுக்களை தெய்வமாக பாவித்து அவற்றுக்கு உணவளிப்பது, சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு நல்ல உணவளிப்பது, சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குவது. அப்புறம்…..!”
“ஓ…! சமபந்தி போஜனம் காமாட்சியம்மா கத்துகொடுத்துதானா? ஆச்சரியமாய் இருக்கே…!”
“ஆமாம்மா..! அப்புறம் இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்வது, வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசியை தீர்ப்பது, ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளிப்பது, குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுவது! ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்ய உதவுவது, ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காப்பது, கோயிலுக்கு சுண்ணம் இடித்துக் கொடுப்பது, நோயில தவிக்கிறவங்ககளுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுவது…! பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்வது..! ”
“பிரசவத்திற்கு இலவசம்னு ஆட்டோவிலோ எழுதியிருக்கும். அப்போ காமாட்சியம்மா ஆட்டோ காரங்களுக்கும் அறச்செயல்களைக் கத்துக்கொடுத்திருக்காங்க இல்லயா..”
“அகில உலகங்களையும் படைத்து, காத்து ஆட்டுவிக்கறவ நம்ம அம்பிகை அனைவருக்குமாகத்தான் கத்துக்கொடுத்துருக்காங்க. இன்னும் இருக்கு கேளு…, தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளிப்பது, அனாதைகள் மற்றும் பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுப்பது, தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருவது, காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுவது, தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுவது, வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைப்பது.”
“இயற்கை உபாதையைத் தணிக்க இப்பல்லாம் கட்டண கழிப்பிடமாக் கட்டி அதிலயும் காசு பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே தாத்தா ...”
“ரொம்ப லென்த்தியா போய்க்கிட்டு இருக்குது அப்பா..!  நாம எதுக்காக இந்த டாபிக்கை ஆரம்பிச்சமோ அதை விட்டு விலகிப்போயிட்டீங்க நினைக்கிறேன்..!” என்றாள் அமுதா.
“எங்கயும் விலகலம்மா..! இந்த புராணங்களெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருந்ததுன்னா நான் நேரடியா விஷயத்துக்கு வந்திருப்பேன்… தெரியல அதனால அடிப்படையில இருந்து சொல்ல வேண்டியிருக்கு.” என்றவர் “கேளுங்க…! வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுவது, அவற்றை பராமரிப்பது, நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுவது, ஆ உரிஞ்சு தறி நிறுவுவது : பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவவது, பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுவது மற்றும் எருதுகளை பேணுவது, பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுவது, கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காப்பது, வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுவது… இப்படி 32 அறங்களையும் காமாட்சி அம்மா செய்து காட்டியிருக்காங்க.

*********

மாலை நேரம் நெருங்கவே வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட ஈசுவரி அம்மாளும் விளக்கேற்றுவதற்காக விளக்கில் திரி வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார். 
“ஏன் திருமணத்துல காமாட்சியம்மன் விளக்கு கொடுக்கறோம்ங்கறதுதான டாபிக்... சொல்றேன். எப்படி அம்மை கம்பையாற்றில் வெள்ளநீர் வரும்போது சிவலிங்கத்தை தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாத்துனாங்களோ அதைப்போல திருமணமான புதுப்பெண், தன் கணவனையும் குடும்பத்தையும் எவ்வித இன்னல்களும் நேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.”
“ஓஹோ அப்படியா..!”
“திருமணத்தில தாலிகட்டி முடிந்ததும் புதுமணப் பெண்ணுக்கு பனைஓலை கூடையிலே நெல்லும் அதன்மேல காமாட்சியம்மன் விளக்கும் வைத்து ஏற்றி மணவறையை வலம் வரச் சொல்லுவாங்க.
“இதுக்கு மேல நான் சொல்றேன் தாத்தா ..! உமையம்மைக்கு எப்படி சிவபெருமான் நெல்லைக் கொடுத்து உழவைப்பெருக்கி அறச்செயல்களைச் செய்யச் சொன்னாரோ அதைப்போலவே, மணப்பெண்ணும் தன்னுடைய புகுந்த வீட்டில் முறையாக செல்வத்தைப் பெருக்கி, அறச்செயல்களைச் செய்யனும். சரிதானே..!”
“சரிதான். இப்ப சொல்லுங்க. காமாட்சியம்மன் விளக்குல என்னப் படம் இருக்கணும்..?”
“சிவபெருமானைப்போல பிறை நிலாவோடும் கிளி வைத்துக்கொண்டு கரும்போடு காமட்சி அம்மன் இருக்கணும்…! என அத்தனை பேரும் கோரஸாக கூறினார்கள்.
“இந்த நேரத்தில், கழுவி விளக்கப்பட்ட காமாட்சி அம்மன் விளக்கை உரிய மந்திரங்களைச் சொல்லி ஈசுவரி அம்மையார் ஏற்றினார். விளக்கின் ஒளியில் விளக்கிலிருந்த காமாட்சியம்மையின் புன்முறுவல் தெரிந்தது ; அந்த அறையிலிருந்த இருளும் விலகியது.

திருமணமான புதுபெண்ணுக்கு காமாட்சி விளக்கு கொடுப்பது ஏன்?


திருமணமான புதுபெண்ணுக்கு காமாட்சி விளக்கு கொடுப்பது ஏன்? 

உமையம்மை கம்பையாற்றில் வெள்ளநீர் வரும்போது சிவலிங்கத்தை தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாத்துனாங்களோ அதைப்போல திருமணமான புதுப்பெண், தன் கணவனையும் குடும்பத்தையும் எவ்வித இன்னல்களும் நேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.”என்பதை விளக்கவே 

“திருமணத்தில தாலிகட்டி முடிந்ததும் புதுமணப் பெண்ணுக்கு பனைஓலை கூடையிலே நெல்லும் அதன்மேல காமாட்சியம்மன் விளக்கும் வைத்து ஏற்றி மணவறையை வலம் வரச் சொல்லுகிறார்கள்.

 உமையம்மைக்கு எப்படி சிவபெருமான் நெல்லைக் கொடுத்து உழவைப்பெருக்கி அறச்செயல்களைச் செய்யச் சொன்னாரோ அதைப்போலவே, மணப்பெண்ணும் தன்னுடைய புகுந்த வீட்டில் முறையாக செல்வத்தைப் பெருக்கி, அறச்செயல்களைச் செய்யனும்.

காமாட்சியம்மன் விளக்கு எப்படி  இருக்க வேண்டும்? 

“சிவபெருமானைப்போல பிறை நிலாவோடும் கிளி வைத்துக்கொண்டு கரும்போடு காமட்சி அம்மன் இருக்கணும்…! 


விளக்கின் ஒளியில் விளக்கிலிருந்த காமாட்சியம்மையின் புன்முறுவல் தெரியும் . இருளும் விலகி நம் வாழ்க்கை பிரகாசமாக ஒளிரும்.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

நவராத்திரி நாட்களில் அகண்ட தீபம் ஏற்றுங்கள்



நவராத்திரி நாட்களில் அகண்ட தீபம் ஏற்றுங்கள்


குல தெய்வத்தை வீட்டிலேயே வழிபடும் முறை

குல தெய்வத்தை வீட்டிலேயே வழிபடும் முறை

தொடர்புடைய படம்
குல தெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு இருந்து வருவதாகும். எந்த ஒரு நல்ல செயலை செய்ய தொடங்கும் போதும் முதலில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து விட்டு தொடங்குவது மிகவும் சிறந்த ஒன்றாகும்.


நம் வீட்டில் நடக்கும் ,காது குத்து, கல்யாணம், வளைகாப்பு, வீட்டு கிரகப்ரவேசம், புதிய தொழில் தொடங்குதல் என அனைத்திற்கும் குல தெய்வத்தை வழிபட்டு பின்னர் செய்ய தொடங்குவது நன்மையை தரும்.
குல தெய்வத்தை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும், கடன் பிரச்சனை தீர்ந்து விடும். குழந்தை வரம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேன்மை பெரும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் விலகும். குடும்ப வாழ்க்கை சுபிக்க்ஷமாக அமையும். கணவன், மனைவி இருவருக்கிடையே புரிதல் ஏற்பட்டு குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும்.
குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோஅவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
நம் வேண்டுதலை ஏற்று நிறைவேற்றும் குல தெய்வத்திற்கு  காணிக்கையாக  மொட்டை போடுதல்
தீ மிதித்தல்தீச்சட்டி எடுத்தல்தொட்டில் கட்டுதல்,பொங்கலிடுதல் போன்றவை குல தெய்வங்களுக்காக நடத்தப்படுகின்றன. சிலர் குலதெய்வதை ஆண்டுக்கு ஒரு முறையே வழிபடுகின்றனர். அது தவறாகும் குல தெய்வத்தை அடிக்கடி வழிபட வேண்டும்.
அப்படி அடிக்கடி வழிபட முடியாதவர்கள் வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டில் சாமி கும்பிடும் போது ஒரு கலசத்தில் நிறைய தண்ணீர் வைத்து அதில் மாவிலை, வேப்பிலை, மஞ்சள் போட்டு கலசத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கலசத்திற்கு பூ வைத்து அதை குல தெய்வமாக நினைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வது நம் குல தெய்வத்தை வழிபடுவதற்கு சமமாகும்.
தொடர்புடைய படம்
தொடர்ந்து எவர் ஒருவர் வீட்டில் அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதுவது வழக்கம்.

இது போன்று நிகழ்ச்சிகள் நடந்த வீட்டில் ஒரு வருடத்திற்கு பிறகு கண்டிப்பாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். அப்போது தான் குல தெய்வத்தின் அருள் கிடைத்து வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
எனவே குலதெய்வத்தை மறந்து விடாமல் வழிபட்டு குலதெய்வத்தின் அருளை பெற்று வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற வேண்டும்.

புதன், 26 ஜூன், 2019

திருமணம் தடைநீங்க செய்ய வேண்டிய பரிகார பூஜை



திருமணம் தடைநீங்க செய்ய வேண்டிய பரிகார பூஜை


செவ்வாய், 21 மே, 2019

சிவன் கோயிலில் முதலில் யாரை கும்பிட வேண்டும்

தொடர்புடைய படம்

சிவன் கோயிலில் முதலில் யாரை கும்பிட வேண்டும்



நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.
சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.
சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.
விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.
இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.
கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.
விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.
சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.
ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.
மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.
நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.
நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.
பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.
நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

லக்ஷ்மி நரசிம்மர் 108 போற்றி

 ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
ஓம் யோக நரசிங்கா போற்றி
ஓம் ஆழியங்கையா போற்றி
ஓம் அங்காரக் கனியே போற்றி
ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
ஓம் சங்கரப்ரியனே போற்றி
ஓம் சார்ங்க விற்கையா போற்றி

ஓம் உலகமுண்ட வாயா போற்றி
ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
ஓம் தாமரைக்கண்ணா போற்றி
ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
ஓம் இராவணாந்தகனே போற்றி
ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

ஓம் பெற்ற மாளியே போற்றி
ஓம் பேரில் மணாளா போற்றி
ஓம் செல்வ நாரணா போற்றி
ஓம் திருக்குறளா போற்றி
ஓம் இளங்குமார போற்றி
ஓம் விளங்கொளியே போற்றி
ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
ஓம் எங்கள் பெருமான் போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேங் கடத்துறைவா போற்றி
ஓம் நந்தா விளக்கே போற்றி
ஓம் நால் தோளமுதே போற்றி
ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

ஓம் மூவா முதல்வா போற்றி
ஓம் தேவாதி தேவா போற்றி
ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
ஓம் வடதிருவரங்கா போற்றி
ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

ஓம் மாலே போற்றி
ஓம் மாயப் பெருமானே போற்றி
ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
ஓம் அருள்மாரி புகழே போற்றி
ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
ஓம் முந்நீர் வண்ணா போற்றி
ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
ஓம் அரவிந்த லோசன போற்றி
ஓம் மந்திரப் பொருளே போற்றி
ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
ஓம் பின்னை மணாளா போற்றி
ஓம் என்னையாளுடையாய் போற்றி

ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
ஓம் நாரண நம்பி போற்றி
ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
ஓம் இனியாய் போற்றி
ஓம் இனிய பெயரினாய் போற்றி
ஓம் புனலரங்கா போற்றி
ஓம் அனலுருவே போற்றி
ஓம் புண்ணியா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் கோளரியே போற்றி

ஓம் சிந்தாமணி போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மாமணி வண்ணா போற்றி
ஓம் பொன் மலையாய் போற்றி
ஓம் பொன்வடிவே போற்றி
ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
ஓம் தயரதன் வாழ்வே போற்றி

ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வரமருள்வாய் போற்றி
ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
ஓம் பத்தராவியே போற்றி
ஓம் பக்தோசிதனே போற்றி 













ஓம்