அன்பான ஆன்மீக தோழிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.என் பதிவை பார்த்து பலன் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.நிறைய பேர் தங்கள்  சந்தேகங்களை சொல்கிறார்கள்.என்னுடைய பதிவை follow பண்ணுகிறார்கள்.அவர்களுக்கு என் நன்றிகள்.இப்பொழுது நான் youtube channel Tamilnattu samayal  எனvideo போடுகிறேன்.அதையும் பார்த்து பயன் பெறுங்கள்.see my  channel சப்போர்ட் அண்ட் subscibe ,like,comment .ஏதாவது ஆன்மீக தொடர்பான விஷயங்களை என்னுடன் share பண்ணுங்கள். 

பூஜை அறை பற்றிய விஷயங்கள் 

பூஜை அறையை மெழுகி விட்டு சிறிது மஞ்சள் தண்ணீர் தெளிப்பது நல்லது.  மணியடித்து பூஜை செய்வது நல்லது. நிவேதனம் செய்ய எதுவுமே இல்லாத போது உலர்ந்த திராட்சை , கல்கண்டு போன்றவற்றை வைத்து பூஜை செய்யலாம்.
தெய்வ படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும், முடியாத போது வடக்கு பார்த்தும் வைக்கலாம். அறையில் வடமேற்கு மூலையில் பூஜை இடத்தை அமைப்பது வீட்டில் வாஸ்து தோஷம்  இருந்தாலும் சரி செய்து விடும் தனியாக பூஜை அறை இல்லாத போது நம் தலைக்கு மேற்பட்ட உயரத்தில் சாமி மாடத்தை அமைப்பது நல்லது. எப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் சாமி மாடத்தில் இருப்பது நல்லது.
வீட்டில் அமைதியும் நிம்மதியும் செல்வவளம் இவை இருக்க பூஜை அறையை சிறிது கவனித்தால் போதும்.
சுவாமியின் இடதுபுறம் சாம்பிராணி காட்டும் தூபக்கரண்டியையும், வலதுபுறம் கற்பூரத்தட்டையும் வையுங்கள். இடதுபுறம் பழங்களையும், வலதுபுறம் பலகாரங்களையும் வையுங்கள். தீர்த்தம் பருகிய பிறகு, மீதமுள்ளதை மறுநாள் காலையில் செடிகள், மரங்களில் கொட்டுங்கள். பூந்தொட்டி இருந்தால் அதில் விடலாம். தரையில் ஊற்றக்கூடாது. படங்களையும், பூஜைக்குரிய மேஜையையும் வாரம் ஒருமுறை துடையுங்கள். விளக்கை வாரத்தின் வியாழக்கிழமை காலை வேளையில் தேய்க்க வேண்டும். வெறுமனே தீபதூபம் காட்டுவதை விட, கடவுளைக் குறித்த நாமங்கள், பாடல்கள், ஸ்லோகங்களை உச்சரித்தபடி காட்டுவதே உயர்ந்தது. பூஜை நேரத்தில், குடும்பத்தினர் எல்லாரும் பத்துநிமிடமாவது செலவழிக்க வேண்டும். கூட்டாக பாடல்களைப் பாடுவது, ஸ்லோகங்களைச் சொல்வது அதிக பலனைத் தரும்.வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை செய்வது குடும்பத்திற்கு நல்லது. 
செவ்வாய், வெள்ளியில் தூபமிடுவது வீட்டிற்கு சுபமாகவும், விஷஜந்துக்கள் அண்ட விடாமலும் தடுக்கும். குங்கிலியம் சேர்த்து தூபமிடுவது விசேஷம்.அதே போல் வீட்டுவாசலில் 1எலுமிச்சம் பழத்தை  பாதியாக  வெட்டி ஒன்றில் மஞ்சளும்,ஒன்றில் குங்குமமும் தடவி வெள்ளிக் கிழமைகளில்,விசேஷ நாட்களில் வைப்பது லட்சுமியை வரவேற்பதாகவும் இருக்கும்.மற்றொரு காரணம் திருஷ்டி போக்கவும் பயன்படுத்தலாம். வாசற்படிக்கு மஞ்சள் தடவி சந்தனம் ,குங்குமம் போட்டு வைத்து பூ வைக்க வேண்டும்.இருபுறமும் இரு அகல்விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும்.இவையெல்லாம் நேர்மறை சக்திகளை கொடுக்கும்.எந்த தீய சக்திகளும் நம் வீட்டுக்குள் வர விடாது.