செவ்வாய், 31 ஜூலை, 2018

ஆடி மாதம் அம்மனுக்கு பிடித்த வழிபாடுகள்


ஆடி மாதம் அம்மனுக்கு பிடித்த வழிபாடுகள்



புதன், 25 ஜூலை, 2018

முருகனுக்கு பிடித்த சாக்லேட் நைவேத்தியம்!

முருகனுக்கு பிடித்த சாக்லேட் நைவேத்தியம்!

பொதுவாக இந்துமத தெய்வங்களுக்கு அவல், கடலை, மோதகம் என்பவற்றையே நைவேத்தியமாக படைப்பதுண்டு. ஆனால் கேரளாவில் உள்ள இந்த பாலமுருகனுக்கு பிடித்த நைவேத்தியம் என்னவென்று பாருங்களேன்.
குழந்தையும் தெய்வமும் ஒன்றென கூறுவார்கள். அதற்கேற்ப, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்தான் இந்த பாலமுருகனுக்கும் பிடித்த நைவேத்தியமாம்.முருகனுக்கு பிடித்த சொக்கலேட் நைவேத்தியம்! க்கான பட முடிவு
சாக்லேட்  கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கும் இந்த ஆலயம் இந்தியாவின், கேரளா மாநிலத்தின் ஆலப்புழா நகரில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான பாலமுருகன் ஆலயத்திலேயே இந்த விநோத சம்பவம் இடம்பெற்று வருகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய குடும்பத்தினர் குறித்த ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அதன்போது, அந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தை கோயில் மணியை அடித்துள்ளார்.
குழந்தையின் செயலை கண்டித்து பெற்றோர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன், முருகனின் நாமத்தை உச்சரிக்க தொடங்கியுள்ளார்.
தெய்வ குற்றத்தினாலேயே இப்படி நேர்ந்ததாக எண்ணிய பெற்றோர், பரிகாரம் செய்வதற்காக கோயிலுக்கு சென்றுள்ளனர். இதன்போது, கோயிலின் கருவறைக்குள் சென்ற குழந்தை தனது கையிலிருந்து சாக்லேட்டை கடவுளுக்கு படைத்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தை உடனடியாக நலமடைந்துள்ளார். இதனால், பாலமுருகனுக்கு பிடித்த பிரசாதம் சாக்கலேட்தான் என்பது செவிவழியாக பரவ, தற்போது பக்தர்கள் முருகனுக்கு 
சாக்லேட்டை நேர்த்திக்கடனாக செலுத்த தொடங்கியுள்ளனர்.

செவ்வாய், 24 ஜூலை, 2018

ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள்

ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள்

 
காளிகாம்பாள் தலத்தில்
 விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள். 

ஆடி செவ்வாய் விரதம் அனுஷ்க்கும் முறை

ஆடி செவ்வாய் விரதம் அனுஷ்க்கும் முறை

கிருத்திகை என்றால் என்ன?

கிருத்திகை என்றால் என்ன?


ஞாயிறு, 22 ஜூலை, 2018

மகாலக்ஷ்மி ஸ்லோகத்தினால் என்ன நன்மை

செல்வம் பெருக மகாலக்ஷ்மி மந்திரம்

மகாலக்ஷ்மி ஸ்லோகத்தினால் என்ன நன்மை 


ஒரு ஊரில் ஒரு ஏழை பிராமண தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள்.வறுமை அவர்களை வாட்டிய நிலையில் நான்கு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகுந்த இன்னல்களுக்கிடையே போராடிக் கொண்டிருந்தார்கள்.நான்கு பெண் குழந்தைகளை எப்படி படிக்க வைத்து,திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்ற அச்சம் அவர்களை அல்லும் பகலும் வாட்டியது.உண்ண உணவு,உடுத்த உடை கூட இன்றி வறுமையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமெனக் கழிந்துகொண்டிருந்தது.இந்த நிலையில் ஒரு நாள் அவர்களது வீட்டிற்கு ஒரு துறவி யாசகம் கேட்டு வர,அந்தத் தம்பதிகள் என்ன செய்வது என்று புரியாமல் ஐயோ! நம் வீட்டில் எதுவும் இல்லையே இவருக்கு பிக்க்ஷையிட என்று கலங்கி நிற்க அந்தத் துறவி அவர்களைப் பார்த்து உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது.உங்கள் நிலைமை மாற வேண்டுமானால் நான் சொல்லவதை செய்வீர்களா? என்றார்.அதற்கு அந்த தம்பதிகள் என்ன செய்ய வேண்டும் சுவாமி எங்களால் முடியுமானால் நிச்சயம் செய்கிறோம் என்று கூறினார்கள்.அப்போது அந்தத் துறவி அவர்களைப் பார்த்து “நீங்கள் தினமும் காலையிலும்,மாலையிலும் நான் சொல்லும் இந்த மந்திரமான
ஓம்,
ஸ்ரீம்,
ஹ்ரீம்,
க்லீம்,
மகாலக்ஷ்மி,மகாலக்ஷ்மி,
யேகி,யேகி,
சர்வ சௌபாகியமே 
தேகி ஸ்வாஹா”
 மகாலக்ஷ்மி மந்திரத்தை 108 முறை பக்தியுடன் சொல்லி வாருங்கள்.



அப்படிச் சொன்னால் உங்களுக்கு அந்த மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைக்கும்.உங்கள் வறுமை நீங்கும்” நான் சில காலம் கழித்து வருகிறேன். என்று கூறிவிட்டுச் சென்று விடுகிறார்.
அந்தத் துறவியின் அறிவுரைப்படி பிராமணரின் மனைவி தினமும் என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வந்தாள்.அந்தத் துறவி கூறியது போல் அவர்கள் வீட்டில் மகாலக்ஷ்மி கடாக்ஷம் பெருகி அவர்களது நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து மிகுந்த செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தனர்.அப்பொழுது அந்தத் துறவி மீண்டும் வந்து அவர்களின் வாசலில் நிற்க,அந்த தம்பதிகள் அவரது காலில் விழுந்து வணங்கி,அவரை உள்ளே அழைத்து வந்து விருந்து உபசரித்து,சுவாமி! நீங்கள் கூறியது போல் அந்த மகாலக்ஷ்மி ஸ்லோகத்தை நான் விடாமல் தினமும் சொல்லி வருகிறேன்.இப்பொழுது நங்கள் செல்வச் செழிப்போடும்,மிகுந்த சந்தோஷத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார்கள்.துறவியும் அவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்.
மகாலக்ஷ்மியின் பூரண கடாக்ஷத்தைப் பெற:
இன்றைய காலகட்டத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் வருவதால் செல்வத்தைக் கட்டிக் காப்பது அவசியம்.இப்படிப்பட்ட நிலைமையில் நாம் இவ்வாறு மகாலக்ஷ்மியின் மந்திரத்தைச் சொல்லி வருவோமானால் நம் வீட்டில் மகாலக்ஷ்மி குடி கொண்டு அனுக்ரஹம் செய்வாள்.செல்வத்தை வரவழைக்கவும்,வந்த செல்வத்தை தக்கவைத்துக் கொள்ளவும் இந்த மந்திரத்தை சொல்லி நல்ல பல செல்வங்களைப் பெற்று வாழுவோமாக.
இந்த மந்திரத்தை சொல்வதனால் நாம் மகாலக்ஷ்மியின் பூரண கடாக்ஷத்தைப் பெற்று வாழலாம்.தினமும் சொல்லி வருவதால் பல நன்மைகள் உண்டாகும்.
மகாலக்ஷ்மி மந்திரத்தை சொல்லும் முறை:
இந்த மகாலக்ஷ்மி மந்திரத்தை மிகவும் கவனமாக, உடலும் உள்ளமும் சுத்தமாக வைத்து பூஜை அறையில் உட்கார்ந்து,யாரிடமும் பேசாமல்,கண்களை மூடிக்கொண்டு மகாலக்ஷ்மியை மனதில் நினைத்து  108 முறை சொல்லவேண்டும். மகாலக்ஷ்மிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு,வீடு முழுவதும்  சாம்பிராணி,தூபம் போட்டு,குத்து விளக்கு ஏற்றி பின்பு கிழக்கு திசை நோக்கி அமர்ந்து இதைச் சொல்வது நல்ல பலனைத் தரும்.

வியாழன், 19 ஜூலை, 2018

ஆடி மாதம் என பெயர் வரக்காரணம்

ஆடி மாதம் என பெயர் வரக்காரணம்


ஆடி மாதத்திற்கு இப்பெயர் வர கூறப்பட்ட பல கதைகளுள் சிவா மகா புராணத்தில் இடம் பெற்றுள்ள இந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.
கிரகங்கள் மனிதர்களையும் தேவர்களையும்  மட்டுமல்லாமல் சில நேரங்களில் தெய்வங்களையும் ஆட்டுவித்த சம்பவங்கள் உண்டு .
அப்படி ஒரு சமயம் கிரகங்களின் திருவிளையாட்டால் சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒருவரை விட்டு   ஒருவர் விலகி  இருக்க நேரிட்டது.
அந்தச் சமயத்தில்  ஆடி என்று பெயர் கொண்ட ஒரு அரக்கன், இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு சிவபெருமானை நெருங்க நினைத்தான். ஆனால் பார்வதி தேவியின் நெருங்கிய தோழியான “உத்தாலகுசுமை”யின் கண்களிலிருந்து தப்ப முடியாது என்று பாம்பு ரூபம் கொண்டு உள்ளே புகுந்து சிவபெருமானின் அருகில் சென்றவுடன் பார்வதியாக உருமாறினான். வந்திருப்பது பார்வதி அல்ல  அரக்கன் ஆடி தான் என்று அறிந்துகொண்ட பெருமான் அவனை திரிசூலத்தல் கொன்று சூரசம்ஹாரம் செய்தார்.
இதை அறிந்த பார்வதி தேவி தன்னுடைய வடிவம் கொண்டு வந்ததால் அந்த அரக்கனின்பால் இரக்கம் கொண்டு அவனுக்கு நற்கதி வழங்கினாள். அந்த அரக்கனின் பெயராலேயே அந்த மாதம் அழைக்கபடுவதாகவும்  இந்த மாதத்தில் அம்பிகையை வழிபட்டால் அன்னை தன் அருட் கடாக்ஷத்தை முழுமையாக நமக்களிப்பாள்.

செவ்வாய், 17 ஜூலை, 2018

ஆடி வெள்ளிக்கிழமை சிறப்புகள்




 subcribe,support,like  and share in my you tube  channal Tamilnattu samayal 

 

ஆடி வெள்ளிக்கிழமை சிறப்புகள்


திங்கள், 16 ஜூலை, 2018

கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூட வரலட்சுமி விரத வழிபாடு

தொடர்புடைய படம்





















கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூட வரலட்சுமி விரத வழிபாடு

varalakshmi nombu kayiru க்கான பட முடிவு




வரலட்சுமி விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதிமிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். முதலில் முழுமுதல் கடவுளான  கணேஷருக்கு  பூஜை செய்ய வேண்டும்.பிறகு லக்ஷ்மி தேவி பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பூஜா மந்திரங்கள் :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)


மகாலட்சுமி காயத்ரீ :
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்


அர்ச்சனை நாமாக்கள் :

ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :
ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :


ஸ்கந்த புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகிமையை சிவபெருமான் விளக்குகிறார். சுமங்கலிகளால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செல்வம் மற்றும் மங்கலத்தின் இருப்பிடமாக மகாலட்சுமி விளங்குகிறாள். அறிவுசார்ந்த, நற்குணமுள்ள மக்கட்பேறு, கணவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி மகாலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்த விரதத்தன்று நீராடி, புத்தாடை அல்லது தூய ஆடை உடுத்த வேண்டும். தாமரை கோலம் வரைந்து, அதன் நடுவில் தேர் வடிவ சிற்பம் அல்லது பலகை வைக்கவேண்டும். புது அரிசி, மாவிலை, தேங்காயுடன் கூடிய ஒரு கலசத்தை அதில் வைத்து மகாலட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். குடத்தில் இருக்கும் புது அரிசி, எதிர்கால வளர்ச்சியையும், சுபிட்சத்தையும் குறிப்பதாகும். கலசத்துக்கு பூஜை செய்த பிறகு, கணேச பூஜையும், பிறகு மங்கல சூத்திரமான மாங்கல்ய பூஜையும் நடத்த வேண்டும். 

வரலட்சுமி பூஜையின் முக்கிய அம்சமே பெண்ணின் வலக்கையில் ரட்சை(காப்பு) கட்டுவது தான். பூஜை முடிந்த பின், குங்குமம், மஞ்சள்கயிறு, பூ , வஸ்திரம் முதலிய மங்கல திரவியங்களை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுப்பர். உணவும் வழங்குவர். லட்சுமிதேவி தன் பக்தர்களுக்கு பொருள் வளத்தை மட்டுமல்லாது உயர் ஞானத்தையும் அருள்கிறாள். அவள் வித்யாசக்தியாக இருந்து, நல்ல கல்வியும் தருகிறாள். தன் பக்தர்களை பகவான் விஷ்ணுவுக்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள். அவர்களது முக்திக்காக அவரிடம் சிபாரிசு செய்கிறாள். பகவான் விஷ்ணு அல்லது ஹரியான ஸ்ரீமன் நாராயணனின் சக்தியே மகாலட்சுமி. அழகு, கருணை, அழகான இயற்கைக் காட்சி, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் எல்லாமே அவளது தோற்றங்கள். 

லட்சுமிதேவி இல்லாமல் சந்நியாசிகள் கூட தங்கள் ஆஸ்ரமத்தையோ, பிரசாரத்தையோ நடத்த முடியாது. இல்லறத்தாரைக் காட்டிலும் அவர்களுக்குத் தான் லட்சுமி தேவி அதிகம் தேவைப்படுகிறாள். ஏனெனில், மக்கள் நன்மைக்காக அவர்கள் பெரும் தொண்டு செய்ய வேண்டியுள்ளது. ஆதிசங்கரர் தேவியையும், லட்சுமியையும், சரஸ்வதியையும் தமது பணியில் வெற்றிக்காக வழிபட வேண்டி நேரிட்டது. கடந்த காலத்தில் பெரும் ஆன்மிகப்பணி ஆற்றிய பெருமக்களும் இறை தூதர்களும் அன்னை லட்சுமிதேவியையும், சரஸ்வதியையும் ஆராதித்தவர்களே ஆவர். அன்னை மகாலட்சுமி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாளாக! அவளது மந்திரத்தை நாம் பாராயணம் செய்வோம்.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்!

ஞாயிறு, 15 ஜூலை, 2018

ஆடி மாதம் கூழ் ஊற்றுவதற்கான காரணம்; புராணக் கதை...!

 subcribe my you tube  channal Tamilnattu samayal .support,like    and share       ஆடி மாதம் கூழ் ஊற்றுவதற்கான காரணம்; புராணக் கதை...! 

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம்  தாங்கமுடியாமல் ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவுசெய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க  அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.
ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை  உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.
அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த  உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்  வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள் 

ஆடி மாதம்… ஆனந்தம் அருளும் மாதம்!

friends subcribe my you tube  channal 
Tamilnattu samayal .support,like    and share your  friends  

காமாட்சி அம்மன் விளக்குக்கு பொட்டு வைப்பது எப்படி?


ஆடி மாதம் முதல் நால் பூஜை எப்படி செஇவது க்கான பட முடிவு

காமாட்சி அம்மன் விளக்குக்கு பொட்டு வைப்பது எப்காமாட்சி அம்மன் விளக்குக்கு பொட்டு வைப்பது எப்படி?படி?

ஆடி மாதம்… ஆனந்தம் அருளும் மாதம்! 

டி மாதம்… அம்மனை வணங்கி ஆராதனை செய்யும் மாதம்.
இந்த  மாத அம்மன் வழிபாடு என்பது நமது கலாசாரத்தில்  இணைந்த ஒன்று.  வருடம் முழுதும் கோவிலுக்கு சென்று அம்மனை  வழிபடலாம்.  என்றாலும் என்றாலும் சாஸ்திர உருவாக்கப்படி  12 மாதங்களை  இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கப்பெறும். சூரியன், ஆடி மாதத் தொடக்கத்தில், தனது பாதையை தெற்கு நோக்கித் திருப்பிச் (தக்ஷ்ணம் அல்லது தட்சிணம்) செல்லும் (அயனம்) காலம். ஆகவே, இது ‘தட்சிணாயன புண்ணியகாலம்’  என்றழைக்கப்படுகின்றது. (தை மாதம் சூரியன் வடக்கு (உத்தரம்) நோக்கிச் செல்வதால் ‘உத்தராயண புண்ணிய காலம்’ ஆகும்). உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும். தட்சிணாயனம் இரவுக் காலமாகவும் அமைகின்றது. அதாவது, பூலோகத்தில் ஒரு வருட காலம் என்பது தேவலோகத்தில் ஒரு நாளாகும். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
suriya god க்கான பட முடிவு
தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படுகின்றன. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்திரீகம் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  பிராண வாயு அதிகமாகக் கிடைப்பதும் ஆடி மாதத்தில்தான். இது ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் கருதப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான நம் மக்களின் மனநிலை என்ன தெரியுமா ? ‘ஆடிமாதம்… எந்த நல்ல காரியத்துக்கும் சரிப்பட்டு வராத மாதம்’ என்கிற நம்பிக்கை, இங்கே பல காலமாக ஊறிக் கிடக்கிறது. திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா என்று எல்லாவிதமான சுப நிகழ்ச்சிகளையும் இந்த மாதத்தில் புறக்கணிப்பது இங்கே தொடர்கிறது. அதே நேரத்தில், கோயில், தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம்தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக, அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது, செடல் உற்சவம், பூச்சொரிவது, காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி ஊற்றுவது என்று ஆடி வெள்ளிகளில் தெருவுக்குத் தெரு திருவிழாதான். ஆனால், ‘ஏன் ஆடியில் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு? ஏன் இத்தனை திருவிழாக்கள்..?’ என்று ஆராயப் போனால், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமையும், மனிதநேயமும், மருத்துவ விளக்கமும் நமக்குப் புரிய வரும்.
karumariamman
பொதுவாக அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள், அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது. அந்தக் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்து, கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பலி வாங்கும். அது எப்படி வருகிறது, எப்படிப் பரவுகிறது என்று அறியாமலேயே  அப்பாவித்தனமாக உயிர்களை இழந்தார்கள் அன்றைய மக்கள். அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாகத் தோன்றியதுதான் அம்மன் வழிபாடு. ‘அம்மை நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவது மாரியம்மன்தான்’ என்றும், ‘காலரா நோயிலிருந்து காப்பாற்றுவது காளியம்மன்தான்’ என்றும் முடிவு செய்து, அதற்கான உருவை அமைத்து, வழிபாடு செய்து வேண்டிக் கொண்டார்கள். அதில் அர்த்தமும் இருந்தது.
அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக்கொண்டார்கள்.
கொற்றவை வழிபாடு நம் தொன்மைக் காலத்தில் இருந்தே இருக்கிறது. எதிரியை அழிக்கப் புறப்படும் போது கொற்றவையை வழிபட்டுவிட்டுத்தான் கிளம்பினார்கள் பழந்தமிழர்கள். கொற்றவைதான் பிற்காலத்தில் காளியாகவும் துர்க்கையாகவும் மாறினாள்.
ஆடி வெள்ளியன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைக்க வேண்டும்.குலதெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்கும்.எந்த தெய்வத்தை கும்பிடுவதற்கு முன்னும் குலதெய்வத்தை முதலில் கும்பிட்ட் பிறகு தான் மற்ற தெய்வங்களை கும்பிட வேண்டும்.தொடர்புடைய படம்
ஆடி மாதத்தின் சிறப்புகள்… 
ஆடியை ‘கற்கடக மாதம்’ என்றும் அழைக்கலாம்.
‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி. செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து, தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
amavasai
ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கமும் உண்டு. தொடர்புடைய படம்ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  இந் நாட்களில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அன்று தாலி மாற்றி புதுத்தாலி அணிவார்கள். இம்மாதம் விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.  ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்று நம் முன்னோர் காரணமில்லாமல் சொல்லவில்லை. அடுத்த போகத்துக்குத் தேவையான தானியங்களை விதைப்பதும் ஆடிமாதத்தில்தான்.
ஆடி வெள்ளியின்  சிறப்புகள், பூஜை முறைகள்…
 ஆடி வெள்ளி அன்று வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி, நிவேதனமாக பால் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, அம்மன் பாடல்களைப் பாடி, பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று சிறு பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.
thulasi poojai க்கான பட முடிவு
ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடத்துக்கு முன் கோலமிட்டு, மாடத்துக்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டு பூஜிக்க வேண்டும்.  குளித்த பின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.
ஆடி வெள்ளியில்  மாலை நேரத்தில் மகாலட்சுமி வழிபாடு, அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.
தொடர்புடைய படம்ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
சிவனின் சக்தியைவிட அம்மனின்  சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது வழமை . இம்மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடலாம் . பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து அம்மனை வழிபட வேண்டும்.
‘அருளோடு வரும் பொருள் தான் சிறப்பு‘ என்பது ஐதீகம். அந்தப் பொருள் வளம் தரும்  லட்சுமியை, ‘திருமகள்‘ என்றும் சொல்கிறோம். எட்டுவகை லட்சுமியின அருள் இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது உண்மை. அந்த  வரம் தரும்  லட்சுமியை ‘வரலட்சுமி‘ என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையாகும்.
ஆடி மாதம் முதல் நால் பூஜை எப்படி செஇவது க்கான பட முடிவுஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்  அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களைக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர். 3 நாட்கள் கழித்து கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை வரம் கிடைக்கும். ஆடி வளர்பிறை துவாதசியில் மகாவிஷ்ணுவை எண்ணி விரதமிருந்தால் செல்வ வளம் பெருகும்.
ஆடி வளர்பிறை தசமியில் திக்வேதா விரதம் ஏற்க வேண்டும் . திக்தேவதைகளை அந்தத்தத் திசைகளில் வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்.ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினால் தீவினைகள் நீங்கும் என்பர்.
ஆடி அற்புதங்கள் நிறைந்த மாதம் மட்டும் அல்ல;
அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு நினைத்த அற்புதங்களை
அள்ளித்தரும் மாதமும் கூட!