புதன், 28 அக்டோபர், 2015

வில்வம்

ஹலோ ப்ரண்ட்ஸ் ,


எல்லாருக்கும் என் இனிய காலை வணக்கங்கள் .ஒவ்வொரு நாளையும் சந்தோசமாக ஆரம்பியுங்கள் .நம்முடன்  எப்போதும் கடவுள் இருக்கிறார் என்றும் ,கையைப் பிடித்து நம்மை நல்ல வழிகளுக்கு அழைத்து செல்கிறார் என்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள் .


சில பேருக்கு பேசிக்கிட்டு கல கல என்று இருந்தால் ஆனந்தமாக இருக்கும் .இன்னும் சில பேருக்கு நல்ல இனிமையான பாட்டுகள் கேட்டால் ஆனந்தமாக இருக்கும்.இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றில் சந்தோஷத்தை அனுபவித்து கொண்டு இருக்கோம் .

எனக்கு கடவுளுடைய நாமங்களை சொல்வதிலும்,அவர் புகழை பேசுவதிலும் தான் ஆனந்தம் .


அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது இது என் எண்ணம் .

இதே சந்தோசத்துடன் உங்களுடன் என்  கருத்தை பகிர்ந்து கொள்கிறேன் .


இன்னிக்கு வில்வத்தைப்  பற்றி தெரிந்ததை சொல்கிறேன் .







வில்வம் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம்  வருவது சிவபெருமானைத் தான் .சிவபெருமானுக்கு 
பூஜிக்கப்படும் இலை  வில்வம் .

தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் என வில்வம் ,பாதிரி ,வன்னி ,மா ,மந்தாரை போன்ற மரங்கள் அழைக்கப்படுகின்றன .

வில்வ இலை சிவனாகவும் ,அதன் முட்கள் சக்தியாகவும் ,கிளைகள் வேதங்களாகவும்,வேர்கள் முக்கோடி தேவர்களாகவும் போற்றப்படுகின்றன .


1 வில்வ இலையால் சிவனை பூஜித்தால் 1லட்சம் தங்க புஷ்பங்களை கொண்டு பூஜிப்பதற்கு  சமம் .சிவனுக்கு பிடித்த வில்வ இலை கொண்டு பூஜிக்க அவனை மிக அருகில் நெருங்க முடியும் .சிவனின் அருளை பெற முடியும் .



வில்வம் லக்ஷ்மி தேவியின் திருக்கரத்திலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது .வில்வ மரத்தை வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் அருள் பரிபூரணமாக கிட்டும் .சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீயசக்தி அகன்று தோஷங்கள் மறைந்து ,ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.

சிவன் திருவாதிரை நட்சத்திரம் .அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினை தணிக்க நம் முன்னோர்கள் குளிமை பொருந்திய வில்வத்தை சாற்றி வழிப்பட்டன .

பூஜைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை சூரியோதயத்திற்கு முன்னதாகவே பறிக்கவேண்டும். வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது.எத்தனை நாட்கள் ஆனாலும்,உலர்ந்து போனாலும் கூட பூஜைக்கு பயன்படுத்தலாம்.


அமாவாசை,பெளர்ணமி ,அஷ்டமி,நவமி ,சதுர்த்தி ,மாதப்பிறப்பு ,சோமவாரம் போன்ற தினங்களில் வில்வத்தைப்  பறிக்கக் கூடாது .இந்நாட்களில் பூஜைக்கு தேவையெனில் முதல் நாளே பறித்து வைக்க வேண்டும் ,

ஓம் நமச்சிவாயா என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம் . 


3 இதழ் கொண்ட வில்வ இலையையே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் .7ஜென்ம பாவங்கள் விலக ஒரு வில்வம் போதும்.

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது போல் வில்வ இலையையும் வளர்க்கலாம் .வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும் ,ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும்  ,புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் ,உலகிலுள்ள எல்லா சிவாலயங்களை தரிசித்த பலனும் கிடைக்கும் .


வில்வத்தால் நம் கருணைக்கடலான சிவபெருமானை துதித்து ,அவன் அருள் பெறுவோம்.

நன்றி வணக்கம் 

மீண்டும் அடுத்த பதிவில் ,
உங்கள் தோழி ஈஸ்வரி 













ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சுமங்கலி பூஜை

என் அன்பு தோழிகளுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள் .நவராத்திரி சீரும் சிறப்புமாக கொண்டாடிட்டோம் .நவராத்திரி நாட்களில் நமக்கு தெரிந்தவர்கள் ,நண்பர்கள் அனைவரையும் அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channel


அடுத்த நவராத்திரிக்கு இன்னும் ஒரு வருடம் காத்து இருக்க வேண்டும் .இந்த 10 நாட்களும் எப்படி நேரம் போனது ?என்றே எனக்கு தெரியவில்லை .பூஜை ,சுலோகம்,பாடல்கள் என போய் கொண்டு இருந்தது .


அம்பிகைகளின் அருளுடன் மீண்டும் பதிவை எழுதுகிறேன் .என் தோழிகள் ,குடும்பம் இதை எழுத உதவியாக இருப்பது நான் செய்த பாக்கியம் என்றே சொல்லலாம் .

இன்னிக்கு சுமங்கலி பூஜையைப் பற்றி எழுதலாம் அது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன் .







அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயர் அம்மனுக்கு கொடுத்து சிறப்பிக்கிறது .

சுவாஷினி என்றால் மங்களம் நிறைந்தவள் என்று பொருள் .சுவாஷினி தான் சுமங்கலி என்று காலப்போக்கில் மாறியது .

கணவனோடு கூடி இல்லறத்தை நல்லறமாக நடக்கின்ற பெண்களே சுமங்கலி  என அழைக்கப்படுவாள் .


நல்ல இல்லம் நடத்துகின்ற பெண்ணை இந்து மதம் பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறது .அந்த பெண்களை வழிபடுவது பராசக்தியையே வழிபடுவதாகும் .

சுமங்கலி பூஜை நவராத்திரி தினத்தில் நடைபெறுவது சிறப்பானது .ஒரு வீட்டில் நெடு நாட்களாக திருமணம் ஆகாமல் கன்னி பெண் இருந்தால் அந்த பெண்ணின் தோஷத்தை நீக்க பூஜை நடத்தலாம் .

சுமங்கலி பூஜை எல்லா தோஷங்களையும்  நிவர்த்தி செய்யும் என்பது  நம்பிக்கை .

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?


இல்லத்தை தூய்மைப்படுத்தி ,மாக்கோலமிட்டு ,மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.
சுவாமி படங்களுக்கு பூ,தூபம்  போட்டு விளக்கேற்ற வேண்டும்.

சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .

நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி ,வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .சந்தனம் ,குங்குமம்,மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி ,தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.

தனித்தனியாக பஞ்சாங்க நமஸ்காரம் செய்து ,அவர்களுக்கு புடவை ,ரவிக்கை ,மஞ்சள் ,குங்கும சிமிழ் ,கண்ணாடி ,வெற்றிலை ,பாக்கு ,பூ ,பழம் ,தட்சனை கொடுக்க வேண்டும் .இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .ஆனால்  தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .

பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே ,இல்லத்தலைவி சாப்பிட வேண்டும் .மீண்டும் ஒரு முறை வந்த பெண்களை வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.

இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள் ,புதன்,வெள்ளி .


இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே .இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை ,நோய் ,துன்பம்,தோஷம் நீங்கி வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம் .இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது .அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழிவகுக்கிறது .


அம்மனின் அருள் என்றென்றும் நிலைத்து ,இன்புற்று இருக்க  வேண்டுவோம் .

என் பதிவைப் படிக்கும் தோழிகள் உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் ,எனக்கு ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் .

நன்றி வணக்கம் .

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி






























திங்கள், 19 அக்டோபர், 2015

சரஸ்வதி பூஜை

ஹாய் பிரண்ட்ஸ்  எப்பிடி இருக்கிறீர்கள் ? எல்லோரும் நவராத்திரி கொண்டாடிக்கிட்டு இருப்பீர்கள்? .சந்தோஷாமாக கொண்டாடுங்கள் .

இன்னிக்கு நவராத்திரி 8ம் நாள் .சரஸ்வதிக்குரிய நாள் .நாளை சரஸ்வதி பூஜை இருப்பதால் அதைப் பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளலாம் என இதை எழுதுகிறேன் .



சரஸ்வதி பூஜை எல்லோருக்கும் பொதுவான பூஜை ஆகும் .கொலு வைத்து இருப்பவர்கள் ,வைக்காமல் இருப்பவர்கள் அனைவருமே செய்யும் பூஜை ஆகும் .நவராத்திரியை மூப்பெரும் தெய்வங்களான துர்க்கா ,லக்ஷ்மி ,சரஸ்வதியை வணங்குவதற்காகவே உள்ள நாட்கள் .

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் ,அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மிக்கும் ,அடுத்த மூன்று நாட்கள்  சரஸ்வதிக்கும் உரியவை .10ம்  நாள் மூன்று  தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி ,மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்து வெற்றி வாகை சூடுகிறாள் .அதையே விஜய தசமியாக கொண்டாடுகிறோம் .


சரஸ்வதியை கலைமகள் என்று அழைப்பர்.சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம் .அன்று ஆயுத பூஜை என்பதால் அலுவலகங்களிலும் பயன் படுத்தி வரும் இயந்திரங்களை வைத்து வணங்குவர்.


கல்வி, ஞானம் ,கலைகளில் வளர்ச்சி தருபவள் சரஸ்வதி .சரஸ்வதிக்கு வெள்ளை தாமரை ,முல்லை ,மல்லிகை,நந்தியா வட்டி ,சம்பங்கி ,தும்பைப் பூ ,வெள்ளரளி  அணிவிக்கலாம் .



உயிர் உள்ளவற்றிலும் ,உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள் .அதனாலேயே ,ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம் .


கல்வியுடன் கலைகளுக்கும் உரியவள் சரஸ்வதி .அவல் ,பொரி ,பொட்டுக்கடலை ,சர்க்கரை சேர்த்து கலந்து நிவேதினம் செய்யலாம்.


அவரவருக்கு ஏற்ற  காலை அல்லது இரவு நேரத்தில்  பூஜை செய்யலாம். கடலை சுண்டல் ,தேங்காய் சாதம் ,பால் சாதம் ,இனிப்பு வகைகள் வைத்து சரஸ்வதியை வணங்கலாம் .


புத்தகம் ,எழுது பொருள் ,கல்வி உபகரணங்கள் ,வாகனங்கள் ,கணினிகள் போன்றவைகளுக்கு சந்தனம் ,குங்குமம் வைத்து வணங்க வேண்டும் .


கொலு வைப்பவர்கள் தான் தாம்பூலம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை .இந்த நாட்களில் கொலு வைக்காதவர்கள் கூட அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து தாம்பூலம் கொடுக்கலாம் .இவ்வாறு செய்தால் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது உறுதி .




என்  வீட்டில் அம்மன் மூவரும் அழகாக வீற்றிருப்பது என்  மனத்தை  கொள்ளை கொள்ள செய்கிறது .தினமும் பாடல்கள் ,பூஜைகள் செய்வது மனதிற்கு சந்தோஷம் கிடைக்கிறது . இதே சந்தோஷ த்துடன் ,நீங்களும் என்றென்றும் சந்தோசமாக இருக்க மூன்று தேவியரையும் பிராத்திக்கிறேன் .சந்தோஷமாக சரஸ்வதி பூஜையை கொண்டாடுங்கள் .


நன்றி வணக்கம் .

உங்கள் அன்பு தோழிஈஸ்வரி
















செவ்வாய், 13 அக்டோபர், 2015

நலம் தரும் நவராத்திரி

நலம் தரும் நவராத்திரி 


என்  அன்பார்ந்த நண்பர்களுக்கு என்  இனிய காலை வணக்கங்கள் . முதலில் ,எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.


நாம் எல்லோரும் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறோம் .ஒரே பரப்பரப்பு .
இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் போது இந்த சக்தியை கொடுக்குறது யாரு ?என்பதை எண்ணி பார்க்க வேண்டும் .நமக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிட்டே இருக்கு .அந்த சக்தி உங்க இஷ்ட தெய்வம் ,குல தெய்வம் யாராகக்  கூட இருக்கலாம் . கடவுளுக்காக ஒரு நிமிடம் ஒதுக்கினாலே, நம்மை தேடி, நம் தேவைகளை நிறைவேற்ற ஓடி வருவார்கள் .
நவரத்திரியில் என்ன சிறப்பு? என்றால் மூன்று  தேவியரையும் வணங்குகிறது தான். நமக்கு ஒன்று வேண்டும்  என்றால் நாம்  முதலில் யாருகிட்ட கேட்போம் ?சந்தேகமே இல்லை .அம்மாக்கிட்டே தான் .நமக்கு என்ன வேண்டும் என்பதை  ,அகிலத்தை ஆளும் ஜெகன் மாதா பார்த்து பார்த்து கொடுக்கககூடியவள் .எல்லா உயிர்களையும் காத்து ரட்சிப்பவள் ஆதி பராசக்தி.



நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி  என்றால் ஒன்பது நாள்  தேவியை இரவில் வழிபடுவது .இது பெண்களுக்கே உரிய திருநாள் ஆகும் .  முதல் நாள் துர்கைக்கும் ,அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மிக்கும் ,அடுத்த 3 நாட்கள் சரஸ்வதிக்கும் வணங்கக்கூடிய நாட்கள் ஆகும் .வீரம் ,செல்வம் ,ஞானம் 3 தேவியரை வணங்குவதால் நமக்கு  கிடைக்கும் .

நவராத்தியில்  பகல்  நேரம் சிவனையும்,இரவில் சக்திதேவியை பூஜிக்க வேண்டும்.தேவியை இரவில் தேவர்கள் வழிபாடு செய்வதால் தேவியை இரவில் வழிபடுதல் வேண்டும்.

புராணங்களில் நவராத்திரி :

வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.

பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

நவராத்திரி உருவான கதை
ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள்.

மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார்.அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது 

“போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான்.
தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.



கொலுவில்  பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான சம்பவம்.



தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.

“நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள்.” என்றார் குருதேவர்.தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.

காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.



மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் யை படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.

நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. 


  • அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
  • 1. ஏழ்மை வராது
  • 2. அன்பு கிடைக்கும்
  • 3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
  • 4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
  • 5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
  • 6. கல்வி ஞானம் பெருகும்
  • 7. உத்யோக உயர்வு
  • 8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
  • 9. மன அமைதி கிடைக்கும்.
  • 10. தேக ஆரோக்கியம் தேவி வழிபாடும் ,தேவி மகாத்மியம் படிப்பது அளவற்ற நன்மை தரும் .700 மந்திரம் கொண்ட ஸ்ரீ சப்தசதி பாராயணம் நன்மைகளை தரும் .மறுமையில் மோட்சத்திற்கு வழிகாட்டும் .
  • தேவியின் துதிகளை ,9 நாட்கள் சொல்லி ,நிவேத்தியம் செய்து அவளின் திருவடியை வணங்க வேண்டும் .
  • நவராத்திரி நாட்களில் தாம்பூலம் கொடுப்பதும் ,வாங்குவதும் நல்லது .வெற்றிலை ,பாக்கு ,மஞ்சள் ,குங்குமம் ,வஸ்திரம் கொடுப்பது பல மடங்கு பலனைத்  தரும் .அம்மா 9 நாட்கள் மகிசாசுரனிடம் போர் புரிந்து ,10வது நாள் வெற்றியுடன் வருவதைத் தான் விஜய தசமி நாளாக கொண்டாடுகிறோம் .அன்று செய்யும் நல்ல காரியங்கள் வெற்றியைத்  தரும்.
  • நன்றி வணக்கம்

















புதன், 7 அக்டோபர், 2015

அன்னபூரணி

ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள் . ஆன்மீகக் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சசி  அடைகிறேன் .


அன்னபூரணி என்றாலே நமக்கு எல்லாம் நினைவில் வருவது காசி மாநகரம் தான் . அங்கே தான் பார்வதி தேவியார் அன்னபூரணியாக இருந்து உணவு அளிக்கிறாள் .காசி நகரின் தலைமை கடவுள் அன்னபூரணி .


அன்னபூரணி கையில் தங்கக் கரண்டியும் ,உணவு பாத்திரத்தில் பால்  சோறும் கொண்டிருக்கிறாள் .தன்னை நாடி வருபவருக்கு வயிற்று பசியை போக்குவது மட்டுமில்லாமல் ஆன்ம பசியையும் தீர்த்து வைக்கிறாள்.


சிவபெருமானுக்கு அன்னம் அளித்து தோஷத்தை நீக்கியவள் .




ஒரு சமயம் சிவபெருமான்  பார்வதியிடம் ,உலகம்  மாயை .உணவு உட்பட எல்லாம் மாயை என்று கூறினார்,அதைக்கேட்ட பார்வதி அனைத்து பொருட்களிலும் இருப்பவளான பார்வதி கோபம் அடைந்தாள் .இவ்வுலக பொருட்களுக்குள் ஆற்றல் (சக்தி ) உண்டென்று நிரூபிக்க மறைந்தார் .தேவியின் மறைவு உலகத்தையே பதித்தது .எங்குமே உணவின்று எல்லோரும் பசியால் வாடினார்கள்.சிவனும் தன்  தட்டை எடுத்து பார்வதியிடம் ,உலக பொருட்கள் மாயையல்ல என புரிந்து கொண்டேன்.இதைக் கேட்டு தாய் உள்ளம் கொண்ட நம் அன்னை சிவபெருமானுக்கு உணவு அளித்தாள் .இது நம் புராணங்களில் சொல்லப்பட்டது.


சிவபெருமான் பிச்சை எடுத்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு .







ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்மா ,தனக்கும் 5 தலை .சிவனுக்கும் 5 தலை .தானே !பெரியவன் என்ற ஆணவத்துடன் இருந்தார்  .சிவன் அவரது ஆணவத்தை அடக்க ,பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி  ஏறிய முயன்ற போது ,அந்த கபாலம் கையில் ஓட்டி  கொண்டது. அந்த தோஷத்தை விலக்கவே ,அம்பாளிடம் சிவன் திருவோடு ஏந்தி அன்னம் யாசித்தார் .


உலக மக்களுக்கு மிகவும் இன்றியாமையாதது உணவு .அதை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறாள் நம் அன்னை ,தங்கு தடையில்லாமல் உணவு நமக்கு கிடைக்க ,அன்னையை நாள்தோறும் வணங்குவோம் .

நன்றி 
மீண்டும் சந்திப்போம்.

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி 









ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நவகிரகங்களும் தீபங்களும்


ஹாய் பிரண்ட்ஸ் ,

வணக்கம் .எல்லாரும் இன்புற்று வாழ நான் இறைவனை பிராத்திக்கிறேன் .நவகிரகங்கள் நமக்கு
பல சோதனைகளை கொடுத்தாலும் கடைசியில் நன்மையே செய்யும் .அவை எல்லாம் கடவுளின் ஆணையின்படி செயல்படுகின்றன .

அந்த தாக்கத்தில் இருந்து சிறிது தப்பிக்கவே ,நவகிரகங்களை  நாம் வணங்குகிறோம் . சில ஊர்களில் உள்ள நவகிரகங்களை வணங்குவது மிகச் சிறப்பு வாய்ந்தது .







நவகிரக கோவில்களில் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றினால் பற்பல பலன்கள் உண்டாகும் .எந்த கோவில்களில் எத்தனை  தீபங்கள் ஏற்றினால் என்ன பலன்? என்பதை பார்ப்போம் .


சூரியனார் கோவில் -----11 தீபம் ஏற்றினால் கண் நோய் தீரும் .

திங்களூர் ------10 தீபம் ,கவலைகள் அகலும்

வைத்தீஸ்வரன் கோவில் ----9 தீபம் ,திருமணம் கூடும்


திருவெண்காடு ------9 தீபம் ,கல்வி பெருகும்

ஆலங்குடி -----28 தீபம் ,வாக்கில் வன்மை

தென் திட்டை ----33 தீபம் ,மன சாந்தி உண்டாகும்

கஞ்சனூர் -----11 தீபம் , வாழ்வில் நல்ல துணை கிட்டும் .


திருநள்ளாறு ----9 தீபம் ,ஆயுள் கூடும்

திருநாகேஸ்வரம் -----21 தீபம்,நாக தோஷம் விலகும் .

கீழபெரும்  பள்ளம் -----9 தீபம் ஏற்ற மோட்சம் கிட்டும்


இந்த ஊருக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபட்டால் ,நன்மைகள் நம்மை தேடி வரும் என்பது நம் முன்னோர்கள் கூற்று .

நன்றி வணக்கம் .

மீண்டும் அடுத்த பதிவில் ,
ஈஸ்வரி



வியாழன், 1 அக்டோபர், 2015

லக்ஷ்மி கடாட்சம் பெருக

லக்ஷ்மி கடாட்சம் பெருக






என் அன்பு தோழிகளுக்கு இனிய காலை வணக்கம் .


எனக்கு தெரிந்த ,அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இந்த பதிவை பகிர்ந்து கொள்வதே பகவான் எனக்கு அருளிய பாக்கியமாக கருதுகிறேன் .இன்னிக்கு வெள்ளிக் கிழமை .எல்லா நாளையும் விட வெள்ளிக்கிழமை  என்றால் அது தனிச் சிறப்புதான் போங்கள்  !

  இன்னிக்கு செய்கின்ற குபேர லக்ஷ்மி பூஜைக்கு பலன் உண்டு என நான் நம்புவதால் ,தொடர்ந்து பூஜை பண்ணுகிறேன் .


லக்ஷ்மி அருள் நமக்கு கிடக்க என்ன செய்யலாம்? 

  • அதிகாலை 5 மணிக்கு பின்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே முன்வாசலைத்  திறக்க வேண்டும் .


  • காலையில் விழித்தவுடன் பசுவையாவது ,தன் முகத்தை கண்ணாடி கொண்டு பார்த்தோ ,தன்  வலது உள்ளங்கையையாவது முதலில் பார்க்க வேண்டும் .













  • செவ்வாய் ,வெள்ளிக்கு 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளான லக்ஷ்மியை வழிபட வேண்டும் .


  • வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும் ,தண்ணீரும் கொடுக்க வேண்டும் .அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பொருளும் ,சந்தோஷமும் கிடைக்கும் .


  • ஒவ்வொரு பெளர்ணமி  அன்றும் மாலை குளித்து ,சத்திய நாராயணரை துளசி ,செண்பக மலர் கொண்டு அர்ச்சித்து ,பால் ,பாயாசம் ,கல்கண்டு ,பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண  வேண்டும் .







அன்பு தோழி ஈஸ்வரி