செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சிவபெருமான் உடலில் தோன்றிய கொப்புளங்கள்!

தொடர்புடைய படம்காவிரியாற்றங்கரையில் உள்ள திருச்சாத்தமங்கை என்னும் ஊர் சிவனருள் பெற்ற புண்ணியபூமி. படைப்புத் தொழில் செய்யும் நான்முகன், சிவபெருமானைப் தொழுது அருள்பெற்ற தலம். இங்குள்ள கோயிலில் மலர்க்கண்ணியம்மை உடனாய அவயந்திநாதர் என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டிருக்கிறார்.

இங்கு சிவத்தொண்டு செய்யும் குடும்பத்தில் பிறந்தார் திருநீலநக்கர். எப்போதும் சிவனையே சிந்திப்பவராய் வாழ்ந்து வந்த இவர் ஒரு மார்கழித் திருவாதிரை நாளில் சிவதரிசனத்திற்காக தன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நீல நக்கருக்கு உதவியாக அவருடைய மனைவி தொழுகைக்கான பூக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அயவந்திநாதர் சிலையில் விடம் கொண்ட சிலந்திப்பூச்சி ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கண்ட அம்மையாரின் மனம் துடித்தது. செய்வதறியாமல் தன் வாயினால் ஊதி லிங்கத்தின் மீது சென்ற பூச்சியை கீழே விழச் செய்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது எச்சில் துளிகள் ஈசனின் சிலையில் பட்டுவிட்டது.

இதைப் பார்த்த திருநீலநக்கருக்கு கோபம் அதிகமாகி விட்டது. சிவஅபசாரம் செய்த தன் மனைவியை நோக்கி வெகுண்டு எழுந்தார். "அறிவில்லாதவளே! அபசாரம் செய்துவிட்டாய். எம்பெருமானின் மேனியை எச்சில்படுத்திவிட்டாயே!'' என்று அடிக்க கையை ஓங்கினார்.

ஆத்திரம் கொண்ட கணவர் முன்னால் ஒடுங்கி நின்ற அந்தப் பெண்மணி மெல்லிய குரலில், "பொன்னார் மேனியனின் திருமேனி புண்ணாகாமல் இருக்க சிலந்தியை ஊதி விரட்டியது பாவமா?'' என்று சொல்லி அழுதாள்.

அவரோ சமாதானம் ஆகவில்லை. "ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நீ செய்த பழிச்செயலை ஒருபோதும் என்மனம் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. சிவ அபச்சாரம் செய்த நீ இன்றுமுதல் என்மனைவி அல்ல. நான் உன் கணவனும் அல்ல,'' என்று சொல்லி தொழுகையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இல்லம் நோக்கி கிளம்பினார்.

நீலநக்கரின் மனைவி வேறு வழியின்றி கோயிலேயே தங்கிவிட்டார். ஈசன் முன்னால் அமர்ந்து, "உனக்கு பூச்சேவை செய்தேன். ஆனால், நான் சூடும் பூவுக்கு காரணமானவரிடம் இருந்து பிரித்து விட்டாயே,'' என்று கதறினார்.

அன்றிரவில், நீலநக்கர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இறைவன் கனவில் தோன்றி, "நீலநக்கரே! என் உடம்பைப் பாரும். உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்ற இடமெல்லாம் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. என்மேல் கொண்ட அன்பினால் செய்த செயலுக்கு அவள் மேல் நீர் ஆத்திரம் கொண்டது முறையா?'' என்றார்.

கண்விழித்த நாயனார் பதறியடித்து மனைவியைத் தேடி கோயிலுக்கு ஓடிவந்தார். ஈசனே கனவில் தோன்றி தன்னிடம் குறைபட்டுக் கொண்டதை அவரிடம் தெரிவித்ததோடு, உண்மையான அன்புடன் தவறே செய்தாலும் கூட இறைவன் மன்னிப்பான் என்ற உண்மையை உணர்வதாகவும், மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காகவும் வருத்தப்படுவதாகச் சொன்னார்.

இருவரும் அவயந்திநாதரைப் பணிந்து வணங்கினர். அன்று முதல் தம்பதியர் இருவரும் காதலால் ஒன்றிணைந்து சிவ வழிபாட்டை தொடர்ந்து வந்தனர்.

சிவயாத்திரையாக பல தலங்களுக்கும் சென்று வந்த திருஞானசம்பந்தர் ஒருசமயத்தில் திருச்சாத்த மங்கைக்கு வருவதாக அறிந்தார் நீலநக்கர். அவயந்தி நாதரை தரிசிக்க வந்த திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதங்கசூளாமணி அம்மையார் ஆகியோரை மேளதாளத்துடன் வரவேற்றார். அவர்களோடு அவயந்திநாதரை வழிபாடு செய்து மகிழ்ந்தார். திருஞானசம்பந்தரையும் மற்ற  அடியவர்களையும் பிரிவதற்கு நீலநக்கரால் முடியவில்லை. அவர்களோடு நீலநக்கரும், அவரது மனைவியும் உடன் புறப்பட்டனர்.

திருஞானசம்பந்தருக்கு ஆச்சாள்புரத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்கும் பாக்கியத்தைப் பெற்ற நீலநக்கர். அங்கு தோன்றிய சிவபரஞ்சுடரொளியில் கலந்து சிவப்பேறு பெற்றார்.

வாரியார் சொன்ன கற்பூர கதை!




பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன. 


தேங்காய் பேச ஆரம்பித்தது: ''நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!'' என்றது. 
                                                                                                                  

அடுத்து வாழைப்பழம், ''நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்'' என்று பெருமைப்பட்டுக் கொண்டது. 


கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது. பக்தன் சந்நிதியை அடைந்தான். 

தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. 

பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம். 

திங்கள், 18 பிப்ரவரி, 2019

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது


madurai meenakshi amman photos க்கான பட முடிவு

🌺 மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது !!!
பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான்.வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.
இப்படியாக துவங்கியதுதான் கல்திரை.
கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.
இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள்.
தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.
சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள்.
வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.
வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான்.

பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.
அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது.
கோவிலே பாழாக இருந்தது.
அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது.
முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள்.
அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள்.
அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.
அப்போது தள்ளாத வயதான ஒருசிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார்.
என்ன சொல்கிறீர்கள்.
இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர்.
இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.
சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார்.
உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.....
உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!!
48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது.
திளைத்தனர் பக்தியில் அனைவரும்.
அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.
இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக துர்க்கை அம்மன் எதிரில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை
👁👃👁

Photo