செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

இராகு காலம்,எமகண்டம்,குளிகை நேரத்தை கண்டுபிடிக்க சுலபமான வழி

இராகு காலம்,எமகண்டம்,குளிகை நேரத்தை கண்டுபிடிக்க சுலபமான வழி 

நம் வாழ்க்கையில் ராகுகாலம்,எமகண்டம்,குளிகை காலம்.இவற்றைப் பார்த்தே பல செயல்களைச் செய்கின்றோம்.ஆனால் இவற்றை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.இதை எளிதில் நினைவே வைத்துக் கொள்ள எளிமையான வழிமுறைகள்.

 இராகு காலம் நேரம் 
தினந்தோறும் ராகுவால் ஆளப்படுகின்ற 1.30மணி  நேரமே ராகுகால நேரம் என அழைக்கப்படுகிறது.இந்த நேரம் கெட்ட நேரமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
திருவிழா சந்தையில் வெண்  புட்டு  விற்க சென்றான் ஞானம் 
ராகு காலம் முதலில் ஆரம்பிப்பது திங்கட்கிழமையாகும்.

திங்கள் =காலை  7.30 – 9.00
சனி = 09.00 – 10.30
வெள்ளி = 10.30 – 12.00
புதன் = மதியம் 12.00 – 01.30
வியாழன் = 01.30 – 03.00
செவ்வாய் = 03.00 – 04.30
ஞாயிறு = 04.30 – 06.00


எமகண்டம்
எமகண்ட நேரம் 1.30மணி   இது கெட்ட நேரமாக கருதப்படுகிறது.எமனுக்கு ஏற்ற நேரம்.இவர் குருவின் புதல்வர் ஆவதால் வியாழக் கிழமையையே முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு பின்னோக்கி கிழமைகளை புதன்,செவ்வாய்,திங்கள்,ஞாயிறு,சனி,வெள்ளி என்று நினைவில் வைத்துக் கொண்டால் எமகண்ட நேரம் சரியாக இருக்கும். 
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
வியாழன் =காலை 6.00--7.30
புதன் : 07.30 – 09.00
செவ்வாய் : 09.00 – 10.30
திங்கள் : 10.30 – 12.00
ஞாயிறு : மதியம் 12.00 – 01.30

சனி : 01.30 – 03.00
வெள்ளி : 03.00 – 04.30

இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
குளிகை காலத்தின் அளவு 1.30மணி நேரம் .குளிகன் என்பவர் சனியின் மைந்தன்.குளிகை காலம் ஆரம்பிப்பது முதலில் சனிக்கிழமை,பின்பு மற்ற நாட்களை பின்னோக்கினால் சனிக்கப் பின்,வெள்ளி,வியாழன்,புதன்,செவ்வாய்,திங்கள்,ஞாயிறு என்று கணக்கில் கொள்ளவும்.குளிகை காலமும் கெட்ட நேரமாகும்.இதில் ஆரம்பிக்கும் எந்த செயலும் முற்றுப் பெறாது மீண்டும் தொடரும் என்று கருதப்படுகிறது.
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில் 
சனி =காலை 06.00 – 07.30
வெள்ளி = 07.30 – 09.00
வியாழன் = 09.00 – 10.30
புதன் = 10.30 – 12.00
செவ்வாய் = மதியம் 12.00 – 01.30
திங்கள் = 01.30 – 03.00
ஞாயிறு = 03.00 – 04.30

தமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகள்

தமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகள்



இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும் ,பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும்.
விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய
நாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ  நாட்களாகும்.

சித்திரை – சித்ரா பவுர்ணமி
சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும். சித்ரா பவுர்ணமி யன்றுதான் யமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். சிவாலயங்களில் சிவனுக்கு மருக்கொழுந்தால் அபிஷேகம் செய்வார்கள்.

வைகாசி – வைகாசி விசாகம்
வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப் பெருமான் பொய்கையில் ஆறு முகங்களுடன் அவதரித்த நாளாகும் என்பதால் முருகன் கோயில்களில் இந்தநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனதத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள்.

ஆனி – ஆனித் திருமஞ்சனம்
ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப் பெற வழிவகுக்கும் நாளாகும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆடி – ஆடி குரு பூர்ணிமா
ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோயில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆவணி – ஆவணி அவிட்டம்
ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு வெல்ல சர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள். உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம்.

புரட்டாசி – புரட்டாசி பூரட்டாதி
புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐப்பசி – ஐப்பசி அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள்.

கார்த்திகை – கார்த்திகை தீபம்
கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரத்திலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்குப் பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் உலக பிரசித்தம். அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரன் ஆனார் என்பர்.
மார்கழி – மார்கழி திருவாதிரை
மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்குப் பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோயில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்றுதான் கொண்டாடப்படும்.

தை – தைப்பூசம்
தை மாதத்தில் பவுர்ணமி பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் தைப்பூசம் முருகன் வழிபாட்டிற்கு ஈடு இணையே இல்லை. தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் அன்று முருகனுடன் சிவனையும் வழிபட வேண்டும். சிவனுக்கு அன்று கருப்பஞ்சாறால் அபிஷேகம் செய்வது உகந்தது. தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்தியஞான சபையைத் தோற்றுவித்த வள்ளலார் தைமாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஏற்றி வைத்த ஜோதி ஜோதி தரிசனமாகக் காட்டப்படுகிறது. சிவபெருமான் உமா தேவியுடன் ஞான சபையான சிதம்பரத்தில் நடனம் ஆடி தரிசனம் தந்ததும் இந்த தைப்பூசத் திருநாளில்தான்.

மாசி – மாசிமகம்
மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோயில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்குப் படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.

பங்குனி – பங்குனி உத்திரம்

பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாக் கொண்டாடப்படுகிறது. கடவுளரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோயிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் – சீதை, ஆண்டாள் – ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி – சத்தியவான், மயிலை கற்பகாம்பாள் – கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜுனனும் அவதரித்த திருநாள்.

ஸ்ரீ கணபதியின் திருவுருவங்கள் - நாமகரணங்கள்




திருவுருவங்கள்

1. பாலகணபதி
2. தருண கணபதி
3. பக்த கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிஷ்ட கணபதி
9. விக்கினராஜ கணபதி
10. ஷிப்ர கணபதி
11. ஹேரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. நிருத்த கணபதி
14. ஊர்த்துவ கணபதி
15. ஏகாட்சர கணபதி
16. வர கணபதி
17. திரியட்சர கணபதி
18. ஷிப்ரப்பிரசாத கணபதி
19. ஹரித்திரா கணபதி
20. ஏகதந்த கணபதி
21. சிருஷ்டி கணபதி
22. உத்தண்ட கணபதி
23. ரிணமொச்சக கணபதி
24. துண்டி கணபதி
25. துவிமுக கணபதி
26. திரிமுக கணபதி
27. சிம்ம கணபதி
28. துர்க்கா கணபதி
29. யோக கணபதி
30. சங்கடஹர கணபதி



நாமகரணங்கள்

1. ஏகதந்தர்
2. சுமுகர்
3. கஜகர்ணர்
4. கபிலர்
5. லம்போதரர்
6. விகடர்
7. விநாயகர்
8. விக்னராஜர்
9. தூமகேது
10. கணாத்யட்சர்
11. கஜானனர்
12. பாலசந்திரர்


ஆயுதங்கள் - அணிகலன்கள்

1. பாசம்
2. அங்குசம்
3. தந்தம்
4. வேதாளம்
5. சக்தி
6. அம்பம்
7. வில்
8. சக்கரம்
9. கத்தி
10. கேடகம்
11. சம்மட்டி
12. கதை
13. நாகபாசம்
14. சூலம்
15. குந்தாவி
16. மழு
17. கொடி
18. தண்டம்
19. கமண்டலம்
20. பரசு
21. சங்கம்
22. கரும்புவில்
23. புஷ்பபாணம்
24. கோடாரி
25. அஷமாலை
26. சாமரம்
27. கட்டுவாங்கம்
28. தீஅகல்
29. வீணை.

9ன் சிறப்பு

9ன் சிறப்பு


எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.
அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,
சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும்  9-ஆம் எண்ணை  விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.
புத்த மதத்தில், மிக முக்கியமான  சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்
பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்  இன்னும் மகத்துவங்கள்  கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.
நவ என்ற சொல்  புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,
நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி
நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்
நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.
நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.
நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது
நவமணிகள்:-
(நவரத்தினங்கள்)
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்
நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்
நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்
நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை
சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்
நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்
அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,
(விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி
அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.
நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்
நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,
பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்
நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்
நவக்கிரக தலங்கள் –
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்
நவபாஷாணம் –
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்
நவதுர்க்கா –
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி
நவ சக்கரங்கள் –
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.
நவநாதர்கள் –
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்
உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்
உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்
ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்

என் இணையத்தளத்தை காண வந்த அத்தனை நெஞ்சங்களுக்கும்  என் அன்பு வணக்கங்கள்.வரலக்ஷ்மி விரதத்தை சிறப்பாக கொண்டாடிய சந்தோஷத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன்.


இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயகருக்கு எந்த பூவினால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு தந்துள்ளேன்.படித்து பயன் பெற முழுமுதல் கடவுளை வேண்டுகிறேன்.

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் 
1. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற 

2. 
வில்வம் - இன்பம் அடைய 

3. 
அரசு - உயர் பதவி கௌரவம் அடைய 

4. 
மாவிலை - அறம், நீதி காக்க 

5. 
துளசி - கூர்மையான அறிவினை பெற 

6. 
மாதுளை - பெரும் புகழ் அடைய 

7. 
அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற

8. 
நாயுருவி - வசீகரம் உண்டாக 

9. 
கண்டங்கத்திரி - வீரம் உண்டாக 

10. 
தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட 

11. 
மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற 
 

12. 
ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற 

13. 
நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக 

14. 
இலந்தை - கல்வி ஞானம் பெற 

15. 
ஊமத்தை - பெருந்தன்மை உயர 

16. 
தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற

17. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க 

18. 
எருக்கு - வம்ச விருத்தி அடைய 

19. 
மருதம் - குழந்தை பேறு அடைய 

20. 
அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட 

21. 
வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய 
 

விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம்வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.


விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் அர்ச்சனைக்கு துளசி பயன்படுத்தலாம். மற்றநாட்களில் விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தக் கூடாது.

இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்.சந்தோஷமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.

நீங்களும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை குடும்பத்தினரையும் சந்தோஷபடுத்துங்கள். 







புதன், 23 ஆகஸ்ட், 2017

விநாயகர் சதுர்த்தி பூஜை

பிள்ளையார் சுழி எதற்காகப் போடுகிறோம் தெரியுமா?
நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டேஆரம்பிக்கிறோம். அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது, முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம். பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.


எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக்கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.
விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி.
மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள். நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.
இவரை நினைத்து அனுசரிக்க வேண்டிய விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம். ஆவணி மாத அமாவாசையின் 4-ஆம் நாள், சுக்லபட்ச சதுர்த்தியன்று நம் முதல்வனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி பூஜை

விநாயகர் சதுர்த்தியன்று குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கியபின், நம்  வீட்டுப் பூஜைக்குரிய மண் பிள்ளையாரை வலஞ்சுழியாகப் பார்த்து வாங்கி வரவேண்டும். அதற்குமுன் நிவேதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு வரவேண்டும். பிள்ளையார் வாங்கி வந்தபின் தண்ணீர், எண்ணெய், சீயக்காய்ப்பொடி, கதம்பப் பொடி, பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வரிசைப்படி நிதானமாக அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின் சந்தனம் இட்டு, அதன்மீது குங்குமப் பொட்டிட்டு, இடுப்பில் பிள்ளையார் துண்டுகட்டி, தொப்பை யில் காசு வைக்கவேண்டும்.
பூமாலை, வன்னி இலைமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றுடன் முப்புரிநூலும் அணிவிக்கவேண்டும். பின்னர் பூஜையறையில் நாம் தயாராக வைத்திருந்த கோலமிட்ட மனைப்பலகையில் மெதுவாக பிள்ளையாரை அமர்த்தியபின், குன்றிமணியால் பிள்ளையாரின் கண்களைத் திறக்கவேண்டும். பின்னால் குடை வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு பிள்ளையார் தயார்.
இருபுறமும் குத்துவிளக்கை வைத்து ஐந்துமுக தீபம் ஏற்றவேண்டும். நிவேதனப் பொருட்களை தட்டுகளில் பிள்ளையார்முன் வைக்கவேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவை முக்கியம். அதன்பின் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவையும் வேண்டும். பிறகு நம் வசதிப்படி போளி, அல்வா, லட்டு போன்றவற்றை வைக்கலாம். வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், சோளக்கதிர், கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை பிள்ளையார்முன் வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம். சர்க்கரைப் பொங்கலும் வைக்கவேண்டும்.
எளிமையான பிள்ளையார் பாடல்களைப் பாடலாம். விநாயகர் துதி, விநாயகர் அகவல், நான்மணி மாலை போன்றவற்றைப் படிக்கலாம்.
முதலில்,
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் பிரசன்னவதனம்
யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே’
என்னும் விநாயகர் மந்திரம் கூறிவிட்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.
அதன்பின்,
“ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லௌம், கம், கணபதயே வரவரத
சர்வஜனமேய வஸமானய ஸ்வாஹா’
என்னும் கணபதி மூலமந்திரத்தை 21 முறை, 108 முறை என நம் வசதிப்படி ஜெபிக்கலாம். குழந்தைகளையும் சொல்லச்செய்யலாம். பழக்கிவிட்டால் தானாக வந்துவிடும். அதன்பின் தூப, தீபம் செய்தபின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவுசெய்யவேண்டும்.
பூஜை முடிந்தபின் பலகாரங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்கவேண்டும். அதுவரை பிள்ளையாரை பின்னமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அன்றேயும் செய்யலாம். 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள், 9-ஆம் நாள் என ஒற்றைப் படைநாளில் செய்யலாம்.
பிள்ளையாரை நீரில் விடும் நாள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமையாக இருக்கக்கூடாது. இவ்வாண்டு வியாழனன்று பிள்ளையார் சதுர்த்தி வருவதால், 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள் செய்யலாம். அப்படி செய்ய எடுத்துச் செல்லும்போது தொப்பையிலுள்ள காசை எடுத்து பூஜையறையில் வைத்துவிடவேண்டும்.
“மங்களமூர்த்தி மகாராஜா, அடுத்த வருடமும் வா ராஜா’ எனக் கூறி வழியனுப்பி வைக்கவேண்டும். இதை ஆண்கள் மட்டுமே செய்யவேண்டும். எத்தனை நாள் பிள்ளையார் நம் வீட்டில் உள்ளாரோ, அத்தனை நாளும் விளக்கேற்றி மூன்று வேளையும் நிவேதனம் செய்யவேண்டும்.