திங்கள், 29 பிப்ரவரி, 2016

கற்பக விருட்சம்



கற்பக மரம் அல்லது கற்பக விருட்சம்
 

என் அன்பு தோழிகளுக்கு என்னுடைய நமஸ்காரம் .இன்னிக்கு நான் கற்பக விருட்சகத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

தேவலோகத்தில் இருக்கும் மரம்தான் கற்பக விருட்சம் .இந்து சமயத்தில் கற்பக மரத்தின் கீழே நின்று கொண்டு என்ன வேண்டும் என்று  நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் எனபது நம்பிக்கை .



சக்தி தேவி நமக்கு வேண்டியதை தந்து அருள்பாவிப்பது போல் பாற்கடலில் தோன்றிய மரம் வேண்டியதை தரும் தெய்வ அம்சம் கொண்டது .


தேவர்கள் அனைவரும் அமிர்தம் வேண்டி,பாம்பை கயிறாகவும் ,மகாமேரு மலையை மத்தாகவும் பயன்படுத்தி பாற்கடலை ஆழமாக கடைந்து கொண்டிருந்தனர் .அப்போது ஒரு அற்புதம் நடந்தது .பாற்கடலிருந்து 16 வகையான பொருட்கள் வெளி வந்தன .அப்படி தோன்றிய பொருள் வலம்புரி சங்கையும் , மகா லக்ஷ்மியையும் தன்னுடன் சேர்த்து கொண்டார்.


திரவியம் ,பொன்,மாணிக்கம் ,சிந்தாமணிகள் என பல பொருட்கள் வெளி வந்தன.அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு சென்று விட்டன.இதை தொடர்ந்து பச்சை நிற மரக்கிளை போல பாசி கற்றைகள் பின்னியது போல ஒரு உருவம் நீரில் மிதந்து வந்தது .அந்த மரம் போன்ற உருவத்தின் நடுவில் ரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு அழகிய தேவி பொற்காசுகளுடன் மகா லக்ஷ்மி போன்று நின்று கொண்டிருந்தாள் .அவளே ஸ்வர்ண வர்ஷினி ஆவாள்.

அந்த மரம் குபேர திசையான வடக்கு திசை நோக்கி சென்றது.கேட்டதை தரும் சக்தி நிறைந்த மரம் கற்பக விருட்ச மரம் .


நன்றி வணக்கம்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

சண்டேசுவரர் வழிபாடு

 என்  அன்பார்ந்த ஆன்மீக அன்பர்களாகிய  நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள் '.எல்லாம் அவன் செயல் .அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்று சொல்லி ,என்  பதிவை எழுத தொடங்குகிறேன்.



 சண்டேசுவரர் வழிபாடு 

நாம் எல்லோரும் சிவனை தரிசிக்க சிவலாயத்திற்கு போகிறோம் .அங்கே கருவறை வலம் வரும் 
போது ,அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் சண்டிகேசுவரர் எழுந்தருளி இருப்பார்.சண்டேசுவரரை   "சண்டிகேசுவரர் " என்று  நாம் கூறுகிறோம் .இவர் சிவபெருமான் பக்தர் .இறைவன் திருவருள் பெற்ற அடியார் .எப்போதும் தியானத்திலேயே இருப்பவர்.

ஏதோ சாமி கும்பிட்டோம் என்று இல்லாமல் அவருடைய வாழ்க்கையை  தெரிந்து கொண்டு, சாமி கும்பிட்டால் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன் .


ஆதலால்  இந்த சண்டேசுவரரைப்   பற்றி தெரிந்து கொள்ள உங்களையும் அழைக்கிறேன் .ஓம் நமச்சிவாயா!


இவர் மண்ணையாற்றின் தென்கரையில் சேய்ஞலூர் எனும் சிற்றூரில் அந்தணர் வீட்டில் எச்சதத்தன் ,பவித்திரை என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்,இவர் பெயர் விசாரசருமர் .


மாடுகள் மேய்ப்பதை விடுத்து ,மண்ணால் சிவலிங்கம் செய்து ,பூஜை செய்து வந்தார் .பசுக்கள் சொரிந்த பாலை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார் விசாரசருமர் .இதையறிந்த தந்தை ,அவரை கோலால் அடித்தார்.ஆனால்  அவர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டார் .இதனால் கோபம் அதிகமாகி ,அபிஷேக பால் குடத்தை எட்டி உதைத்து சிவலிங்கத்தை சிதைத்தார் அவருடைய தந்தை .சிவ பக்தியால் கீழே கிடந்த கோலை  எடுத்தார் .அது மழுவாக மாறியது .



அதை கொண்டு தன்  தந்தையின் இரு கால்களையும் வெட்டினார் விசாரசருமர் .அப்போது சிவபெருமான் காட்சி தந்து இனி நாமே உமக்கு தந்தை எனக்கூறி ,திருதொண்டர்களுக்கு அவரை தலைவராக்கினார்.தன் சிரசில் கிடந்த கொன்றை மாலையை அவருக்கு சூட்டி ,இனி உன் பெயர் "சண்டேசுவரர்"என்று அனைவரும்  அழைப்பர் .என்றென்றும் என்  அருகில் இரு என்று அருள்மழை பொழிந்தார் நம் அய்யன் சிவபெருமான்.


சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள் எல்லாம் சண்டிகேசுவரர் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன .


நாம் எல்லோரும் "சிவன் சொத்து குல நாசம்"என்று கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.எந்தவொரு  பொருளையும் சிவன் ஆலயத்திலிருந்து வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது .மூலவரை தரிசித்து விட்டு ,இறுதியாக இவர் சந்நிதிக்கு வந்து வழிபடவேண்டும் .

இவர் முன் சிலர் தங்கள் ஆடைகளில் உள்ள நூலை எடுத்து போடுவதை காணலாம் .இது அறியாமையால் ,மற்றவர்கள் செய்வதை பார்த்து ,சிலர் செய்கிறார்கள் .இது தவறான ஒன்று .இன்னும் சிலர் இரு கைகளைத் தட்டியும்,சொடுக்கிட்டும் சண்டிகேசுவரரை வணங்குகிறார்கள் .இவர் சிவபெருமானை நினைத்து தியானத்தில் இருப்பவர் என்பதால் அவரை வணங்கும் போது  நம் இரு கைகளையும் துடைத்து விட்டு, இங்கிருந்து நான் எதையும் கொண்டு செல்லவில்லை என்று வணங்க வேண்டும் .


நாம் சிவபெருமானை வணங்கி சென்றதை கணக்கு வைத்து கொண்டு ,சிவபெருமானிடம் நம் பிராத்தனைகளை சேர்ப்பார் என்பது  ஒரு நம்பிக்கை.


இனிமேல் சிவனை வணங்கிவிட்டு சண்டேசுவரரை தொந்தரவு செய்யாமல் வணங்குங்க .எல்லா வளமும் எல்லோருக்கும் கிடைக்க நானும் பிராத்திக்கிறேன் .
   
வாழ்க !வளமுடன் !

நன்றி வணக்கம் .

உங்கள் அன்பு தோழி ,

ஈஸ்வரி 







சனி, 13 பிப்ரவரி, 2016

மந்திரம் சொல்வதால் கிடைக்கும் பயன்

மந்திரம் சொல்வதால் கிடைக்கும் பயன் 


நாம் எல்லோரும் இறைவனை வீட்டிலும் ,கோவிலுக்கு சென்றும் வணங்குகின்றோம் .நாம் வணங்கும் போது எந்த கடவுளை நினைத்து வணங்குகிறோமோ அந்த கடவுளுக்கு உரிய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும் .


ஆலய வழிபாட்டில் மிக மிக முக்கியமானது மந்திரம் சொல்வது தான்.மந்திரத்தை தெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து ,வழிபாடு செய்யும் போது கடவுள் மகிழ்ந்து ,நமக்கு தேவையானவற்றை கொடுப்பார் .


மந்திரம் என்றால் என்ன? 

மனம் + திறம் = மந்திரம் .மனத்திற்கு திடம் கொடுப்பது மந்திரம் .சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் போது ,முதலில் நமது மனது திடப்படும்.பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை  விலக்கி ,இனிய பாதைக்கு நம்மை அழைத்து செல்லும் .


இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல 1000  ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டனர் ஆலய பிரகாரங்களில் அமர்ந்து மந்திரம் சொன்னால் நிச்சயம் பல மடங்கு பலன் கிடைக்கும்.


மந்திரம் என்றதும் நிறைய பேர்கள் எங்களுக்கு மந்திரம் எல்லாம் தெரியாது என்று சொல்வர் .மந்திரங்கள் மிக எளிய தமிழில் உள்ளனர். ஓம் நமச்சிவாயா ,ஓம் நமோ நாராயணா ,ஓம் சக்தி பராசக்தி ,ஸ்ரீ ராம ஜெயம் என 108 தடவை சொல்லுவது மிக எளியது .


திருமந்திரம் ,கந்த சஷ்டி கவசம் ,பெரிய புராணம் போன்ற பாடல்கள் சக்தி வாய்ந்தவை .அருளும் பொருளும் பெற அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும் .

ஸ்ரீ துர்கா கவசம் பாடினால் கணவன்,மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் .பிரிந்த கணவர் ஒன்று சேர்வர் .


சுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால் முருகன் அருள் கிடைக்கும் .விஸ்வநாதாஷ்டகத்தில்  உள்ள 8 ஸ்லோகம் மந்திர வலிமை மிக்கவை .திங்கள் கிழமை சிவபெருமான் சன்னதியில் பாடி வழிபட்டால் வாழ்வில் எந்த இடையூறும் வராது.

திருநீறு பூசும் போது ஓம் நமச்சிவாயா என்று கூறி பூசிக் கொள்ள வேண்டும் .


அனுமன் கவசம் ,ஆஞ்சநேயர் மந்திரம் சொன்னால்  கொடிய நோயும்  குணமாகும் .அம்மாள் சன்னதியில் அம்மாளுக்கு உரிய மந்திரம் ,பாடல்கள் பாடினால் சகல நலன்களையும்  அம்மாள் நமக்கு தருவாள் .


காயத்ரி மந்திரம் எல்லா மந்திரங்களையும் விட மிகவும் உயர்ந்தது .இது தேவர்களின் தாய் என போற்றப்படுகிறது ,பிரணவ மந்திரம் ஓம் மிக மிக சக்தி வாய்ந்தது .மந்திரங்களில் காயத்திரி மந்திரமாகத் தான் இருப்பதாக பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறியுள்ளார் .

காயத்திரி மந்திரத்தை குருவின் துணையுடன் பிரம்மோ உபதேசம் பெற்று அதன் பிறகு சொல்வது உத்தமம் .பெரியவர்கள் வலது காதில் உபதேசிக்க .தான் பயபக்தியுடன் ,அதை வாயால் சொல்லி மனதில் வாங்கிக் கொண்டு பிறகு தினமும் சொல்ல வேண்டும் .















வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

எந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்கலாம்

எந்த கிழமையில் எந்தெந்த  கடவுளை வணங்கலாம் ?


நாம் எல்லாம் கடவுளை தினமும்  வணங்குகிறோம்.எந்த  கிழமைகளில் அதற்குரிய  தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து வணங்குதல் வேண்டும்.


ஞாயிறு  அன்று சூரியனை வணங்குவது நல்ல பலனை கொடுக்கும்.ஆதித்ய ஸ்ருதயம் ஸ்லோகம் சொல்ல வேண்டும் .


திங்கள் அன்று சிவாலய தரிசனம் செய்ய நன்மை கிடைக்கும் .தேவாரம்,திருவாசகம்,அபிராமி அந்தாதி போன்றவற்றை படிக்கலாம்.அம்பிகையையும்,சிவபெருமானையும் வணங்குதல்  வேண்டும்.



செவ்வாய் கிழமை சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்துக்கு சென்று 6 விளக்கு ஏற்றி வணங்கினால் நினைத்தது நடக்கும் .எதிரிகள் காணாமல் போவர் .அன்று கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும் .


புதன் கிழமை பெருமாளை சேவிப்பது ,துளசி மாட பூஜை செய்வதற்கு உகந்த நாள் .விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ,நாலாயிர திவ்ய  பிரபந்தம்  பாடல் படித்தால் நன்மை கிட்டும்.


வியாழக் கிழமை குருவை வணங்குவது நன்று .குருவாக என்னும் மகான்கள் சாயி பாபா ,ராமானுஜர் ,ராக வேந்தர் ,காஞ்சி பெரியவா போன்றவர்கள் வணங்குவது நல்லது .அன்று பகவத் கீதையை  படிக்க வேண்டும் .


வெள்ளி கிழமை மஹா லக்ஷ்மி வழிபாடு ,கோ பூஜை ,பஞ்சமுக குத்து விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்வது விசேஷம் .அம்பிகையின் ஆலயங்களுக்கு சென்று லக்ஷ்மி ஸ்தோத்திரம் ,மகிசாசுரமர்தினி ஸ்தோத்திரம்  படிக்கலாம் .


சனி கிழமை அன்று ஆஞ்சநேயர் ,கருடாழ்வார் ,நந்திகேஸ்வரர் ,நாயன்மார்கள் ,ஆழ்வார்கள் போன்ற இறைபக்தியில் மூழ்கி இருக்கும் அடியவர்களை வணங்குதல் வேண்டும்.சுந்தர காண்டம்,இராமாயணம் .மகா பாரதம் ,பெரிய புராணம் போன்றவற்றை படிக்க வேண்டும்.  


விநாயக பெருமானை எல்லா நாட்களிலும் ,எல்லா நேரத்திலும் வணங்கலாம்.ஒரு நிமிடம் மனக்கண்களில் விநாயகரை இருத்தி ,மனமுருகி அழைத்தால் நம்மை தேடி அருள்மழை பொழிய வருவார் .


இந்த வலைத்தளத்தை பார்க்கும் என் அன்பு நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து, எல்லா வளங்களும் எல்லோரும் பெற ஆண்டவனை வேண்டி கொண்டு இந்த பதிவை முடிக்கிறேன்.

நன்றி வணக்கம்.