செவ்வாய், 29 ஜனவரி, 2019

தாலி பிரித்து கோர்த்தல்


Image may contain: jewellery

தாலி பிரித்து கோர்த்தல்....!!

திருமணத்திற்கு பிறகு தாலி பிரித்து கோர்க்கும் சம்பிரதாயம் நடத்தப்படுகிறது. இது திருமணமான ஒற்றைப்படை மாதங்களில் (1,3,5) உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து செய்யப்படுகிறது.

தாலி பிரித்து கோர்க்கும் நாளன்று திருமணத்திற்கு எடுத்து பட்டு புடவை மற்றும் வேஷ்டியை புதுமண தம்பதினர்கள் உடுத்திக் கொள்ள வேண்டும். 

அதன்பின் நல்ல நேரம் பார்த்து தம்பதினரை கிழக்கு முகமாக மணப்பாயில் உட்கார வைக்க வேண்டும். 

பின் மணப்பெண் கழுத்தில் இருக்கும் தாலிக்கு பதிலாக ஒரு மஞ்சள் கயிற்றை கட்டிய பிறகு, திருமணத்தின் போது மாப்பிள்ளை கட்டிய தாலியை அவிழ்த்து அதில் காசு, முத்து, பவளம், குண்டு, குழாய் போன்றவை அதனுடன் சேர்த்து மஞ்சள் கயிறு அல்லது செயினுடன் சேர்த்து கட்டி விடப்படுகிறது. 

அதன்பின் சுமங்கலி பெண்கள் ஒவ்வொருவராக வந்து தம்பதினரை மஞ்சள், குங்குமம் வைத்து ஆசிர்வாதம் செய்கின்றனர். 

பிறகு பெண்ணின் மாங்கல்யத்திற்கு பூ , மஞ்சள், குங்குமம் வைத்து எல்லோரும் அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்கின்றனர். பின்னர் நல்ல நேரம் முடிவதற்குள் ஆராத்தி எடுத்து முடித்து விடுகிறார்கள்.

புது செயினில் திருமாங்கல்யத்தை அணிந்துகொண்டபின், சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், புஷ்பம் இவைகளுடன் ஒரு ஜாக்கெட் துண்டு வைத்துக்கொடுக்கலாம். அவர்களுக்கு சாப்பாடு போட்டும் அனுப்பலாம். 

இன்னும் வசதியானவர்கள் சுமங்கலிகளுக்கு புடவையும் கொடுக்கலாம். இன்னும் சில வசதியற்ற முதியவர்களுக்கும் அன்னதானம் செய்யலாம். இப்படி செய்வதால், தானம் பெற்றுக்கொண்டவர்கள் மனமும் வயிறும் நிறைந்து உங்களை வாழ்த்துவார்கள். நீங்கள் எப்போதும் தீர்க்க சுமங்கலியாக வாழுவீர்கள்.

பிரித்து எடுத்த மஞ்சள் கயிறினை கண்ணில் ஒற்றி, பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு கட்டிவிடலாம். சிலர் பத்திரமாக வைத்திருப்பார்கள்.

இந்த சம்பிரதாயம் திருமணமான பெண் கர்ப்பமாக இருந்தால் செய்யமாட்டார்கள். அந்த சமயத்தில் பெண்ணுக்கு தாலி பிரித்து கோர்க்க கூடாது. அதனால் தான் இதை மூன்று அல்லது ஐந்து மாதங்களில் செய்து விடுகின்றனர். சிலர் பதினைந்து நாட்களிலும் இதை செய்து விடுகின்றனர்.



திங்கள், 21 ஜனவரி, 2019

குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

 குல தெய்வம் தெரியாதவர்கள்  என்ன செய்ய வேண்டும்? 


'நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்' என்பார்கள். குலதெய்வ வழிபாட்டை அத்தனை எளிதாக எல்லோராலும் செய்யமுடிவதில்லை.

குலதெய்வ 
முத்தையா படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று  சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாது. காரணம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறிவிட்ட இன்றைய சூழலில், குலதெய்வம் பற்றிய விவரங்களைக் குடும்பப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாத நிலை. 
நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய  துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி,  “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.
குலதெய்வம் வழிபாடு 
இன்னொரு முறையும் இருக்கிறது. உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.
கருப்பு
மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அது பெருமாளாக இருக்கலாம், சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம். அடுத்து குலதெய்வம். பிறகு காவல் தெய்வமாக   ஒரு தெய்வம் - அது ஆண் தெய்வமாக இருக்கலாம் அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம். மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஐய்யனார்,  மதுரை வீரன்,  காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் உள்ளனர்.  இந்தக் காவல் தெய்வங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம், ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே பொதும். அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று, எந்தக் கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள்.



தழைக்கச் செய்யும் தை வெள்ளி வழிபாடு!

Image result for ambaal

தழைக்கச் செய்யும் தை வெள்ளி வழிபாடு

அம்பாளுக்கு உகந்த தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள் அம்பிகை!

  • அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு ரொம்பவே விசேஷமானவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 
  • தை மாத வெள்ளிக்கிழமை,அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள்.
  • ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால்தான், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.

  • வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கியருளும் என்பார்கள். எனவே  வெள்ளிக்கிழமை , அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சந்நிதியில் நெய்  தீபமேற்றி வழிபடுங்கள்.

  • வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!
  • தை முதல் வெள்ளி தொடங்கி, அடுத்தடுத்த தை வெள்ளியிலும் அம்மன் தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். கூடவே, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதம் வழங்குங்கள். தனம் தானியம் பெருகி நிறைவாய் வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

வியாழன், 10 ஜனவரி, 2019

குலம் தழைக்க குலதெய்வம்

குலதெய்வ வழிபாடு பற்றிய 51 குறிப்புகள்

குலதெய்வ வழிபாடு பற்றிய 51 குறிப்புகள்குலம் தழைக்க குலதெய்வம்

நாம் வாழ்வதற்கு சுவாச காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள்
குழந்தைக்கு காது குத்துவது, முடிகாணிக்கை போன்ற தங்கள் வீட்டு முதல் விசேஷங்களை குலதெய்வ கோவிலில்தான் நிறைவேற்றுவார்கள். நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். காரணம், எப்படி நாம் ஒரு வீட்டுக்குள் செல்வதற்கு முன் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனுமதியை பெற்ற பிறகு நுழைகிறோமோ அதுபோல், மற்ற தெய்வங்கள் தன் பக்தர்களுக்கு உதவும் முன் குலதெய்வத்தின் அனுமதியை கேட்பார்கள். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது. துன்பகரமான சம்பவங்கள் நடக்கிறது. திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நமது இந்து சமுதாயத்தில் ஒரு சுப செயலை துவங்குவதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் என்பது கட்டாய விதி. அதுபோல குலதெயவத்தையும் வணங்கி வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலில் பொங்கல் படைத்து வணங்கினால், அந்த பொங்கல் பொங்குவது போல வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். தடைகள் விலக பரிகாரம் எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம். அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.
குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது? ஒருவேலை தமது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எப்படி தங்களின் தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால், வெள்ளிகிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின் தலைவாசல் காலிலும், வீட்டின் பூஜை அறையிலும் மஞ்சள் குங்குமத்தை அவரவர் குலவழக்கத்தின்படி வைத்து வணங்கி, வாசனை மலர்களை தூவி கற்பூர தீபஆராதனை காட்டி, "எங்கள் குலதெய்வமே நீ இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவேண்டும். உன்னை நாங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு உன் அருள் வேண்டும். நம் குலத்தை காக்க வா." என்று மனதால் வேண்டினாலே நிச்சயம் ஒருநாள் உங்கள் குலதெய்வத்தை பற்றிய விபரம் யார் மூலமாவது தெரிந்துக்கொள்வீர்கள். இது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை.
பொதுவாக யாரை பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவர்கள் நம்மை ஒருநாள் தேடி வருவார்கள். டெலிபதி என்று கூறுவார்களே… அந்த டெலிபதி மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வ செயலுக்கும் இது பொருந்தும். தலைவாசல் காலிலும், பூஜை அறையிலும்தான் தன் குல மக்களை காக்க குலதெய்வம் வாசம் செய்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வாசல்படியிலும், வீட்டின் பூஜை அறையிலும் அவரவர் குலவழக்கத்தின்படி மஞ்சள் – குங்கமம் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும் என்று ஒரு விதியாக சொல்லி வைத்தார்கள். குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஒடி வரும் தெய்வமே, குலதெய்வம்தான்.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

குழந்தை பேறுக்கான தடை நீங்க சந்தான கணபதி ஹோமம்

குழந்தை பேறுக்கான தடை நீங்க சந்தான கணபதி ஹோமம் 


watch my youtube channel  Tamilnattu samayal.support and subscribe my channel 


சந்தான கணபதி ஹோமத்திற்கு வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி, லட்சுமி இரண்டு கலசங்களில் ஆவாகனம் செய்து மலர் மாலை அணிவித்து கருப்பு  திராட்சை பழத்தால், வெண்ணை பரப்பிய தட்டில் கணபதி யந்திர கோலமிட்டு சிவப்பு மலர்களால் அர்ச்சித்தல் வேண்டும். அறுகோணமாக குண்டம் அமைத்து  கோலம் இட வேண்டும்.



பொருத்தமான நாட்கள்: வளர்பிறை சதுர்த்தி. செவ்வாய் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 1/2 மணி முதல் 6 மணி வரை சுபமுகூர்த்த வேளை.
 
ஹோமம் பொருட்கள்: தாமரை மலர் நவசமித்து, நவதான்யம் கருங்காலி தேவாரு, சந்தனத் தைலம், 108 வகையாகப் பொருள், ரவா கொழுக்கட்டை, அப்பம், வடை, ஐந்து வகை பழங்கள், பசு நெய் ஆகியன. 
 
நிவேதனங்கள்: பால் சாதம், வெண் பொங்கல், பால், கொழுக்கட்டை புட்டு, அதிரசம், எள்ளுருண்டை, சத்துமாவு கலந்த அஷ்டதிரவியங்கள் கலவை.
 
பலன்கள்: குழந்தை பேறுக்கான தடை நீங்கும். கருக்காலக் கோளாறு, மலட்டித்தன்மை விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூஜை செய்த பழத்தை  கணவன் -மனைவி இருவரும் சாப்பிட வேண்டும்.
 
மூலமந்திரம்: 
 
ஓம் ஸ்ரீ க்லீம் ஐம்சந்தான கணபதியே ஸ்வாஹா.
ஓம் ஸ்ரீ கணேசாய ஹஸ்தி பிசாசிலிகே கேஸ்வாஹா, 
ஓம் கம் கணபதியே சர்வ குல வார்த்தனாய ல்ம்போதராய 
ஹ்ரீம் கம் நம ஸ்வாஹா
 
கடைசியில் கணபதி சோடச நாமத்துதி வழிபாட்டுப் பாடல் பாடவேண்டும்.

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்?

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்? 

உலக அனைத்துக்கும் ஆதார சக்தியாக திகழ்பவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியிடமிருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள் கொண்டு கோயில் கொண்டிருக்கிறார்.  புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன.  இதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்...தொடர்புடைய படம்
மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி  
மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காஞ்சி காமாட்சி அம்மன்

காஞ்சி காமாட்சி  

அன்னை காமாட்சி நம்முடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவள். கமாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.

இருக்கன்குடி மாரியம்மன் 

விருதுநகர் மாவட்டம்  இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனை வழிபட்டால், தீராத வயிற்று வலி, கை, கால் வலி ஆகியவை குணமாகும். கண் நோய் உள்ளோர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.

சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்

திருச்சிராப்பள்ளியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, 'மகமாயி・என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். 

வெக்காளி அம்மன்
வெக்காளி  
வெக்காளி அம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளைத் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக இருப்பவள்; வெக்காளி அம்மனை வெள்ளிக்கிழமைகளில்  மனதார வழிபட்டு, அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
வாராஹி அம்மன்தொடர்புடைய படம்

வாராஹி  அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் பஞ்சனி திதிகளில் விரலி மஞ்சள் மாலையை சமர்பித்து, அர்ச்சனை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. வாராஹியை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி, முழுமனதோடு வழிபட்டால் எல்லா வகையிலும் வெற்றிகிட்டும்

துர்கை அம்மன்
வாராஹி
துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரியவள்.  ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புத்தியோ நடைபெறும்போது, துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.