சனி, 30 ஜூன், 2018

கடன் தொல்லை நீக்கும் கணபதி விரதம்


கடன் தொல்லை நீக்கும் கணபதி விரதம்


வியாழன், 28 ஜூன், 2018

எம்பெருமான் சிவனைப்பற்றி அரிய தகவல்கள்

sivan abhishekam க்கான பட முடிவுஎsiசிம்பெருமான் சிவனைப்பற்றி அரிய  தகவல்கள்  
‬: 1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்
8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்
10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.
12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்
14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை
19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்
20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)
21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை
23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்
24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)
25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை
26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை... 
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு... 
1997, டிசம்பர் 12
29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்
33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? 
திருவாசகம்
34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்
38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)
39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
: 41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்
42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)
43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்.... 
களி.
46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி
47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி
48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி
49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை
50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது
51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்
52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்
53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12
54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்
55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)
56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி
57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்
58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்
59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்
60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்
[2:13PM, 08/05/2017] ‪+91 90366 64586‬: 61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்
62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)
63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு
64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி
65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்
66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய
67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம
68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்
70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்
71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி
72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12
73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்
75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்
76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81
77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்
79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி
80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல் 81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி
82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி
84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்
85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்
86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்
87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்
88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்
89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்
90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி
91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்
92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்
93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்
94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)
95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)
96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)
97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)
98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்
99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்
100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்
101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்
102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்
103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)
104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்
105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்
106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்
107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்
108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.
109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்
110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)
111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)
113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்
114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி
115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்
117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்
118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்
119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர் 120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்
121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்
122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்
123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்
124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்
125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்
126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்
127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை
128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்
130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்
131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்
132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்
133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்
133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு
134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்
135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்
136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.
137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்
138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி
139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)
140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர் 141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்
142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)
143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி
145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்
146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை
147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)
148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)
149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)
150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்
151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்
152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)
153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்
154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்
155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)
157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்
158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)
159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்
160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்  
161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்
162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்
164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்
165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)
166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்
167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்
168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)
169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14
170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்
171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.
172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி
173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்
174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்
175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி
176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்
177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி
178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்
179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்
180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்
181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?64
Image may contain: 1 person
         

சொந்த வீடு வாங்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

ஹலோ பிரண்ட்ஸ் எல்லோருக்கும் வணக்கம்.இந்த பதிவு என் அன்பு சகோதரி ஒருவர் கேட்டதால் போட்டுள்ளேன்.

சொந்த வீடு வாங்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!





house


எலி வளை என்றாலும் தனி வளையாக இருக்க வேண்டும் என்பது பழமொழி. சொந்த வீட்டில் வாழ்வதென்பது ஒரு தனி பெருமையும், மகிழ்ச்சியும் கூட. நமக்கென்று சொந்த வீடு இருப்பது எப்போதும் மனநிறைவை அளிக்கும். ஆனால், இப்பொழுது வளர்ந்துவரும் டெக்னாலஜியில் சொந்தவீடு என்பது பலருக்கு எட்டாக்கனியாகத் தான் உள்ளது. 
ஒரு சிலர் பணவசதி படைத்தவராக இருந்தாலும், சொந்த வீடு வாங்கும் யோகம் அமையாது. அப்படியே சொந்த மண் வாங்கினாலும், அதைக் கட்டி குடிபோகும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.
சொந்த வீடு கட்டும் யோகம் அமைய என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் பரிகாரம் செய்யலாமா? என்று கேட்பவருக்கு நிச்சயம் உள்ளது. 
ஜாதகருக்கு சொந்த வீடு கட்டும் யோகம் அவரது ஜாதகத்தில் இருக்க வேண்டும். சொந்தவீடு யோகம் ஜாதகருக்கு இல்லையெனில் என்னதான் முட்டி மோதினாலும் அமைவது கடினம் தான். சொந்தவீடு கட்டி குடிபோனாலும், அது நிலைக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும். 
செவ்வாய் பலம் கூடுவதற்கான சில பரிகாரங்களைப் பார்க்கலாம்....
• ஜாதகருக்கு செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அந்தத் தடை நீங்க செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு மலர்களால் அங்காரகனைப் பூஜித்து வர வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 
• நிலம் அமைந்து, வீடு கட்ட தாமதமாகினால், திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை வணங்கி "ஓம் சரவண பவ" எனும் மந்திரத்தை உச்சாடனம் செய்து ஆலயத்திலேயே 6 மணி நேரம் தங்கி, அங்குள்ள கடல் நீரை எடுத்து அதில் மஞ்சள் கலந்து நீங்கள் கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி தெளிக்க வேண்டும். 
• சிறுவாபுரியில் உள்ள முருகப்பெருமானை ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.
• சொந்த வீடு யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரலாம். 
• பிச்சைக்காரர்களுக்கு செம்பால் ஆன தட்டு,கிண்ணம் எதுவானாலும்  தானம் கொடுத்து வந்தாலும் சொந்தவீடு நிச்சயம் அமையும். இதற்கு கிழமை நேரம் தேவை இல்லை.நமக்கு சொந்த வீடு கிடைக்க வேண்டும் என முருகப்பெருமானை வேண்டி இந்த தானத்தை செய்யலாம்.
• ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கும் கனவு நிறைவேறும். 
வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக பாட வேண்டிய பாடல் 
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே


இந்த பாடலின் விளக்கம் 

என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!
தினமும் இந்த பாடலை  பாடினால் வீடு வாசல் கிடைக்கும் என அபிராமி அந்தாதியில் கூறப்பட்டுள்ளது.

என்னுடைய பதிவை காண வந்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.நான் புதிதாக Tamilnattu samayal என்ற சேனல்  ஆரம்பித்துள்ளேன்.குத்து விளக்கிற்கு பொட்டு வைத்து தீபம் ஏற்றுவது எப்படி?Tamilnattu Samayal
Published on Jun 27, 2018அதில் நேற்று குத்து விளக்கிற்கு பொட்டு வைத்து தீபம் ஏற்றும் போது என்ன சொல்ல வேண்டும் என சொல்லி இருக்கிறேன்.உங்கள் ஆதரவை தெரிவிக்கும் படியாக என்னுடைய சேனலை Tamilnattu samayal subscribe பண்ணுங்கள்.

 Comments போடுங்கள்.உங்களுக்கு நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்கள்.இன்னும் நிறைய ஆன்மீக விஷயத்தை அந்த சேனலில் உங்களுக்கு ஷேர் பண்ணுகிறேன்.வாழ்க வாழமுடன்.


செவ்வாய், 26 ஜூன், 2018

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channelசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் க்கான பட முடிவு

                   ஒரு முறை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் பெரியவர் "என்ன படிக்கிறாய்?" என்றார். அவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான். சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம் பாக்கு வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி "அதன் பெயர் என்ன?" என்று வினவினார். மாணவனும் 'வெற்றிலை' என்றான். "அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?" என்று சுவாமிகள் கேட்க மாணவன் சொல்லத் தெரியாமல் திகைத்தான். சுவாமிகள் கூறினார் "எல்லாக் கொடிகளும் பூவிடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது. உண்ணக்கூடிய வெறும் இலை மட்டும் தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று' என்றார்.

             இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. வெற்றிலையில்
எல்லா வைட்டமின்களும் இருக்கிறது. வெற்றிலையில் இரும்பு, சுண்ணாம்பு, பி.கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், லைகோபின், டோட்டல் பினால்ஸ், டோட்டல் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக்டிவிட்டி போன்ற 'டங்க் ட்விஸ்டர்கள்' இருக்கிறது. வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம்  நல்ல எனர்ஜி இருக்கும். வயிறு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக  வெற்றிலை, பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. வாயுத் தொல்லை நீங்கும்.
வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்ஷியம் உடலில் சேரும்.  வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக்  குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.  தலை வலித்தால் பலர் வெற்றிலையை கிள்ளி தலையில் ஒட்டிக்கொள்வதை பார்த்திருப்போம்.  வெற்றிலைச் சாறும் சீரகமும் வயிற்று வலிக்கு நல்லது. சளி இருமல் போன்றவற்றிற்கு வெற்றிலையுடன் சுக்கு கஷாயம் குடிப்பார்கள்.
 வெற்றிலையையும் மிளகையும்  சேர்த்து தின்றால் தேள் விஷம் கூட முறியும் என்பார்கள். 
          வெற்றிலை பாக்கு சுண்ணாம்புக்   கலவை ஆண்மையின் உந்துதலுக்கு நல்லது. கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்து கொடுத்து சந்தோஷப்படுத்துவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும். அதனால் தான் சிறு வயது பிள்ளைகள் வெற்றிலை போட்டால் மாடு முட்டும் என்று பயமுறுத்துவார்கள். வாழைப்பழமும் வெற்றிலையும் ஆண்மைக்கு நல்லதென்பதாலேயே கல்யாணம் மற்றும் சுபகாரியங்களுக்கும் ஒருவருக்கொருவர்  வெற்றிலைபாக்கு பழம் கொடுத்து பரிமாறிக்கொள்கிறார்கள். குறிப்பாக  பெண்கள் வீட்டிற்கு வரும் பிற பெண்களுக்கு வழியனுப்பும்போத   வெற்றிலை பாக்கு பழம்  வைத்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். அதாவது இதனால் எனக்கு கிடைத்த இன்பத்தை நீயும் உன் வீட்டில் அனுபவி என்பது பெண்களுக்குள்ளான சிம்பாலிக் 'கோட் வேர்ட்'. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு க்கான பட முடிவு 
ஏனெனில் கணவன் மனைவி உறவு எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்தளவிற்கு குடும்பம் பலப்படும். அதனால் வெற்றிலை பாக்கு பழம் இல்லாத சுபகாரியங்களும் நற்காரிய  பரிமாற்றங்களும் நம் சமூகத்தில் பார்க்கவே முடியாது. நமக்கு குடும்பமே கோவில் அல்லவா! அந்த காலத்து ராஜாக்களெல்லாம் இப்படி பக்குவமாக  வெற்றிலையை மடித்து கொடுப்பதற்கே சம்பளத்திற்கு ஆள் வைத்திருந்தார்களாம். சம்பளத்தில்  வெற்றிலையும் அடங்கும்! பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும்,  குழந்தை பெற்ற பின்பும் வயிற்றின் செரிமான சுழற்சி மாறுபடும். அதனை சீர்செய்ய  வெற்றிலை பயன்படும். அதனால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுதும் சரி, குழந்தைப்  பிறந்து தாய்ப்பால் குடுக்கும் நேரங்களிலும் சரி, வெற்றிலைப் போடுவது வழக்கம்.

திங்கள், 25 ஜூன், 2018

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channel தோரண கணபதி க்கான பட முடிவுபிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’ 

னிதர்களாகப் பிறந்தவர்களுக்கு, அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடிதான்

 வாழ்க்கையில் சுக-துக்கங்கள் ஏற்படுகின்றன.இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. 


கடன் பிரச்னை, செய்யும் தொழிலில் பிரச்னை, கொடுக்கல்- வாங்கலில் பிரச்னை, எதிரிகளால் பிரச்னை, சொத்துப் பிரச்னை... என விதவிதமாகத் தோன்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’ என்ற வாக்கின்படி, நம்முடைய பிரச்னைகள் நீங்குவதற்குத் தெய்வ வழிபாடு துணை செய்யும். அவ்வகையில் மிக அற்புதமான வழிபாடு ஒன்றை நாம் அறிந்துகொள்வோம்.

சகல வழிபாடுகளிலும் முதன்மை பெறுவது விநாயகர் வழிபாடு. பிரதான வழிபாடு எதுவாக இருந்தாலும், எந்தத் தெய்வத்துக்கு உரியதாக இருந்தாலும், அதில் முதல் வணக்கம் பெறுவது பிள்ளையாரே. 


இங்கே நாம் பார்க்கப்போகும் பிரதான வழிபாடே பிள்ளையார் பெருமானுக்குரியதுதான்.விநாயகர் அகவல், விநாயகர் நான்மணி மாலை, கணேசரின் காரிய ஸித்தி மாலை உட்பட பிள்ளையாரின் பெருமைகளை எடுத்துரைக்கும் ஞான நூல்களில் - துதிப் பாடல் தொகுப்புகளில் ஒன்று ஸ்ரீபிள்ளையார் பிரசன்னம்.
அற்புதங்களும் மகத்துவங்களும் நிறைந்த இந்த அருள்கோவைப் பாடல், அகத்திய மாமுனிவரின் அருள்வாக்காகத் திகழும் ஓலைச் சுவடிகளின் பாகங்களிலிருந்து வெளி வந்தது என்பது பெரியோர் வாக்கு. அதாவது, அகத்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ளது இந்த ‘ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’. 
இந்த துதிப்பாடலை தினமும் மூன்றுமுறை படித்து, விநாயகரைத் தொழுது வழிபட்டு வந்தால்,  கடன், வறுமை முதலான பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் வளம் பெருகும் என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

பிள்ளையார் பிரசன்னம்
‘இறை பிரசன்னம்’ என்ற சொல்லை அறிந்திருப்போம். 

`பிரசன்னம்' என்றால் `வெளிப்படுதல்' என்று பொருள். அதாவது, பிள்ளையார் பெருமானை வெளிப்படுத்துவதற்காகப் பாடப்படும் துதி என்று சொல்லலாம். 

இந்தப் பாடலைப் பாடி வழிபட்டால், பிள்ளையார் பெருமானின் சாந்நித்தியம் வெளிப்பட்டு, அவரின் அனுக்கிரகத்தால் நமது பிரச்னைகள் தீர்த்துவைக்கப்படும் என்பது நம்பிக்கை.
அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலுக்காக, திருப்பள்ளி எழுச்சி பாடினார்கள் ஆழ்வார்கள். திருப்பதி திருவேங்கடவனுக்கானது சுப்ரபாதம். ‘எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே’ என்று பாடி பரமனைத் துயிலெழுப்பி, பக்தர்களுக்கு அருள்செய்யும்படி வேண்டினார் மாணிக்கவாசகர். 

அதுபோல், தும்பிக்கையானிடம் நம்பிக்கை வைத்து, கடன், சத்ரு பயம், தீவினைகள், திருமணத் தடை, சொத்துப் பிரச்னை, தொழில் முடக்கம் முதலான சகலவிதமான பிரச்னைகளையும் தீர்த்துவைத்து அருள் செய்யும்படி அவரைப் பிரார்த்தனை செய்யும் துதி நூலே, பிள்ளையார் பிரசன்னம். 

இந்தத் துதிப்பாடலில் பிள்ளையாரின் குணாதிசயம், அவர் அமர்ந்து  அருள்பாலிக்கும் இடத்தின் மகத்துவம், அவரது சாந்நித்தியம், பிரச்னைகளுக்கான தீர்வு ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. இதன் தோத்திர பகுதியைக் காணும்போது, பிள்ளையார் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தோரண வாயில் முன் அமர்ந்து, தன்னைத் தேடி வரும் அடியவர்களுக்கு அருள் வழங்குவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, இந்தத் துதிப்பாடலில் சொல்லப்படும் பிள்ளையாரின் திருநாமம் `தோரண கணபதி’ என்றே வழங்கப்படுகிறது. ஆக, பிள்ளையார் பிரசன்னம் துதிப்பாடல் ஒவ்வொன்றின் நிறைவிலும் `தோரண கணபதியே தோன்றிடுக என் முன்னே’ என்று கூறி வணங்குவ்து சிறப்பு.
இனி, துதிப்பாடல் ஒவ்வொன்றையும் அதன் மகத்துவத்தோடு அறிந்துகொள்வோம்.
1. கடன் தொல்லைகள் நீங்கும்
சக்தியின் மைந்தனாய்ச்
   சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன 
     மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே  
    கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே!             
   தோன்றிடுக என் முன்னே 

(தோரண)


கருத்து: அகிலத்தை ஆட்சிசெய்யும் ஆதிபராசக்தியின் முதல் மகனாக அவதரித்து, தம்மை வணங்கும் அடியவர்களது வாழ்வில் பல வெற்றிகளை வழங்கும் பிள்ளையாரே, மனித வாழ்வில் இறை சக்தியால் விளையும் பயன்களையும் தெய்வ ரகசியங்களையும் எடுத்துரைத்த மூத்தப் பிள்ளையே, அட்ட மங்கலங்களில் ஒன்றான யானையின் முகத்தைக் கொண்டிருக்கும் யோக வடிவினரே...
பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாவாக விளங்கும் நீங்கள், வாழ்வில் நாங்கள் பட்ட கடன்கள் அனைத்தும் தீர்ந்திட அருள்செய்யும் சக்தி படைத்தவர் என்பதை அறிவோம். 

உலகம் போற்றும் வண்ணம் பெரும்புகழ் கொண்டவரே, தோரண கணபதியே... தாங்கள், ஒருமுறை எங்கள் முன் தோன்றி அருள்பாலிக்க வேண்டும்.

2. துயரங்கள் விலகும்
திருமகள் அருளிருந்தும் 
   திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில்         
   ஒளியின்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும் 
   நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள் 
    காட்டிடுவாய் கரிமுகவாய்!


கருத்து: வைகுந்த வாசனாம் மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிதேவியின் திருவருள் பார்வை எங்களுக்குக் கிடைத்த போதும், பதினாறு செல்வங்களும் எங்களிடம் நிலைத்திருக்காமல் நீங்குவதை நீங்கள் காணவேண்டும்.

திருவருள் பரிபூரணமாக இருந்தபோதும், எங்களது வாழ்க்கை களையிழந்து திகழ்வதை உங்களின் கடைக்கண்ணால் ஒரு கணம் நோக்கவேண்டும். 

இந்தக் கலியுகத்தில் பல ஆன்மாக்களிடம் நாங்கள் பெற்ற உதவிகளையும் கடன்களையும் நன்றியோடு திருப்பியளிக்க முடியாமல் தவிக்கிறோம். அதெபோல், எங்களிடம் பணம் பொருளைக் கடனாகப் பெற்றுச் சென்றவர்களிடம் அவற்றைத் திரும்பப் பெற இயலாமலும் கலக்கத்துடன் வாழ்கிறோம்.
தங்களின் உண்மையான பக்தர்களாகிய எங்களுக்கு, இந்தச் சோதனைகள் நீங்கும் வகையில் நீங்கள்  அருள்பாலிக்கவேண்டும். அதன்பொருட்டு, தோரண கணபதியே... ஒருமுறை எங்கள் முன் தோன்றி அருள்பாலிப்பீராக! 

3. வீண் விரயங்கள், வீண் பழிச்சொற்கள் விலகும்!
பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக


கருத்து: இந்தக் கலியுகத்தில், நண்பர்களும் உறவினர்களும் எங்களிடம் பொருளை அன்போடு கேட்டுப் பெறுகிறார்கள். திருப்பிக் கேட்கும்போதோ, அன்பான வார்த்தைகளைத் தவிர்த்து கடுஞ்சொற்களால் வசைபாடுகிறார்கள். 

தரிசித்த கணமே துன்பங்களை நீக்கி ஆனந்தம் அருளும் யானைமுகக் கணபதியே, கஷ்டங்கள் நிறைந்த இந்தத் தருணத்தில், திருக்கண்களைத் திறந்து தங்களின் அருள் பார்வையை எங்கள் மீது விழச்செய்ய வேண்டும்; எங்களுடைய துயரங்களுக்குத் தீர்வு காண, நல்ல வழியை அருளவேண்டும்.
எங்களது வாழ்வில் பொருள் நஷ்டம் எதுவும் ஏற்பட்டுவிடாமலும், கையைவிட்டுச் சென்ற திரவியங்கள் மீண்டும் எங்களை வந்து அடையும்படியும் அருள்பாலிக்க வேண்டும். தோரண கணபதியே எங்கள் முன் ஒரு கணம் தோன்றி, வீண் விரயங்களும் வீண் பழிச் சொற்களும் வராதபடி எங்களைக் காப்பாற்றவேண்டும்.

4. நலன்கள் யாவும் கைகூடும்
மாதுளை மாங்கனியும் கொவ்வை 
   என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி 
   செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் 
   மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின் 
   மூத்தவனே! செவி சாய்ப்பாய்!


கருத்து: பிள்ளையாரப்பா! உமக்கு மிகவும் பிடித்தமான கனிகளாகிய மாதுளை, மா, கொவ்வைப் பழம், சாத்துக்குடி, திராட்சை ஆகிய ஐவகைக் கனிகளைச் சமர்ப்பிக்கிறோம். 

மங்கள வாரமாகிய செவ்வாய்க்கிழமையிலும், வளர்பிறை சதுர்த்தி தினத்திலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், உமது திருச்சந்நிதியில் நறுமணம் கமழும் மலர்களைச் சமர்ப்பித்து, மூன்று தீபங்களை ஏற்றிவைத்து வணங்குகிறோம்.
முறம் போன்ற பெரிய செவிகளுக்குக் கேட்கும் படியாக எங்களுடைய கஷ்டங்களைச் சொல்லி, எங்களது வாழ்வில் ஒளி தரும்படி வேண்டு கிறோம். தோரண கணபதியே, முருகனுக்கு மூத்தோனே... எங்களுடைய  கஷ்டங்களைக் காது கொடுத்துக் கேட்டு, அவற்றை தீர்த்தருள்வீராக.

5. அச்சம் நீங்கும் 
அல்லல்கள் அகலும்
பூரணியின் மைந்தனாகப் 
   புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து 
   துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் 
   புத்தி தரும் புகழ்மகவே
எத்திக்கும் கடன்பட்டோர் 
  எதிர்வந்து நிற்கையிலே!


கருத்து: உலக உயிர்களுக்கெல்லாம் பசி தீர அன்னம் பரிபாலிக்கும் அன்னபூரணியின் மைந்தனே, தோரண வாயிலில் அமர்ந்து, தேடி வரும் பக்தர்களின் துன்பங்களை நீக்கிக் காத்தருளும் கருணா மூர்த்தியே, அன்னையின் ஆலய முகப்பில் - மேகலைப் பகுதியில், தாமரைப் பீடத்தில் அமர்ந்து, அடியார்களின் வாழ்க்கைச் சிறக்க வழிகாட்டும் புகழ்பெற்ற பிள்ளையாரே, எங்களின் அச்சங்கள் யாவற்றையும் தாங்கள் போக்கியருள வேண்டும்.
வாழ்க்கைச் சூழல் காரணமாக எட்டுத் திசைகளிலும் எங்களைச் சூழ்ந்து நிற்கும் கடன் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவீராக. பொன்- பொருளையும், இழந்துவிட்ட நல்வாழ்க்கையையும் மீட்க முடியாமல் போராடித் தவிக்கும் நாங்கள், தங்களின் திருமுன்னே கலங்கி நிற்கிறோம். எங்களது பிரார்த்தனையை ஏற்று திருவருள் புரியவேண்டும். அச்சம் நீங்கி நாங்கள் நல்வாழ்வு பெற்றிட வழிகாட்ட வேண்டும். 

6. ஆனந்தம் பெருகும்
சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்


கருத்து: கலைகளில் நாயகன் என்று சந்திரனைப் போற்றுவார்கள். வான் வழியே உலகைச் சுற்றும் அந்தச் சந்திரனையே ஒளியிழக்கச் செய்து, அவருக்குப் புத்தி கொடுத்து, புகழ் வரலாறு படைத்தவரே! உலக நீதியை எடுத்துரைத்த பெருமானே!  

தங்களை வழிபடாமல் ஆணவத்துடன் சென்று விட்ட தேவர் தலைவனான இந்திரனுக்குப் புத்தி புகட்டும்விதம் தேரின் அச்சை முறியச் செய்து, வழிபாட்டின் தத்துவம் சொன்ன முழுமுதற் தெய்வமே... உம்மை வணங்குகிறோம்.
தங்களைப் போற்றி பிரார்த்தனை செய்ய வந்திருக்கும் எங்களின் முன் தோன்றி... பசுவானது தான் ஈன்றெடுத்த கன்றினைக் கண்டதும் எவ்வாறு மகிழ்ச்சியோடும் கனிவோடும் இன்முகம் காட்டிப் பாலூட்டுகிறதோ, அதுபோல் தாங்களும் எங்களுக்கு இன்முகம் காட்டி, மனநிறைவான தீர்வுகளைத் தந்தருள வேண்டுகிறோம். அதன்பொருட்டு,  தோரணப் பிள்ளையாரே... காலம் தாழ்த்தாமல் எங்கள் முன் தோன்றி அருள் பாலிக்கவேண்டும்.

`பிள்ளையார் பிரசன்னம்' வழிபாடும் மகத்துவமும்!
`கணபதி பூசை கைமேல் பலன்’ என்று ஔவைப் பிராட்டியார் அருளியிருக்கிறார். அவரது திருவாக்குப்படி, அடியார்களின் எளிமை யான வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வரம் வாரி வழங்கும் கற்பகத் தருவாகத் திகழ்பவர் கணபதி. 

கடன், நிலம்-மனையில் பிரச்னை, குடும்பப் பிரிவினைகள், வேலையின்மை, திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை, தீவினைகள் முதலான சகல பிரச்னை களுக்கும் காப்பாகத் திகழ்வது, கணபதி பிரசன்ன துதி வழிபாடு.


வழிபடும் முறை: 

சக்தி வாய்ந்த இந்தத் துதிப்பாடல் ஒவ்வொன்றையும் மூன்றுமுறை  படித்து, ஒவ்வொரு துதிக்கும் ஒரு நமஸ்காரம் வீதம் (3x6) 18 நமஸ்காரங்கள் செய்யவேண்டும்.

கடன் தீர்ந்து மனநிம்மதி பெறுவதற்கு, ஆறு செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் பிள்ளையாருக்குத் தீபமிட்டு பாராயணம் செய்ய வேண்டும்.

ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்துச் சனி கண்டச்சனி, சனி தசை காலங்களில் ஏற்படும்  பாதிப்புகளால் இடர்களைச் சந்தித்து வரும் அன்பர்கள், சனிக்கிழமை காலையில் ராகு நேரத்தில் இந்தத் துதியைக் கூறி பிள்ளையாரை வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் அகன்று நல்வாழ்வை அடைவார்கள்.
பெண்களில் சிலருக்கு, திருமணமான பிறகு, நவ கோள்களின் நகர்வால் கணவனைப் பிரிந்து வாடும் நிலை ஏற்படலாம். இவர்கள், சனிக் கிழமைகளில் காலை வேளையில் பிள்ளையாருக்கு ஒன்பது தேங்காய்களைச் சமர்ப்பித்து, அவரின் சந்நிதிக்குப் பின்புறமாக மூன்று தீபங்கள் இட்டு வழிபடவேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் தோரண விநாயகரை வழிபட்டு வந்தால்,  பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேர்வார்கள். ஊரும் உறவுகளும் மெச்சும்படி கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து குடும்பம் நடத்துவார்கள்.

வளர்பிறை சதுர்த்தி தினத்தில், பிள்ளையாரின் திருமுன்பாக பிரசன்ன துதியைப் பாராயணம் செய்து வழிபட்டால்,  தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவரும் கடன் பிரச்னைகள் நீங்கும். எதிர்பாராத வகையில் லாபம் பெருகும். தொழிலில் விரைவில் வெற்றி உண்டாகும்.

அதேபோல், உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள அம்பாள் ஆலயத்தில், தோரண கணபதியாய் (நுழை வாயிலின் அருகில்) அருளும் பிள்ளையாரைத் அனுதினமும் தரிசித்து வழிபட்டால், சகலவிதமான தடங்கல்களும் நீங்கி காரிய வெற்றி உண்டாகும்.

தோரண கணபதி தரிசனமும் வழிபாடும்!

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார், அருள்மிகு தோரண கணபதி.

ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங் களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், தோரண கணபதி.
இவர், தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள `ருணம்' எனும் கடன்களைத் தீர்த்து அருளும் தெய்வம் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் 
  சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் 
  கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் 
  தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் 
  நௌமி ஸதா ப்ரசன்னம்!


எனப் போற்றுகிறது ஒரு துதிப்பாடல்.

மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் வல்லவராகத் திகழ்கிறார்.

தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, தம்மைத் தேடிவந்து வழிபடும் பக்தர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும்.  இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். 
இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். 
ஸ்ரீதோரண கணபதி மந்திரம்: 
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே 
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய 
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா. 

அத்துடன் மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில், ஸ்ரீசாரதாம்பா ளின் திருச்சந்நிதியில், காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.
குன்றத்தூரில் தோரண கணபதி
சென்னையில் குன்றத்தூர் அருள்மிகு முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். 

இங்கே, பல்லவர் காலத்துக் கட்டடக் கலை அமைப்பில், நகர்ந்து வரும் தேர் போன்று அமைக்கப் பட்டுள்ளது சக்திதேவியின் சந்நிதி. சக்தி தேவியின் கருவறையைச் சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் நின்ற கோலத்தில் அருள் தருகின்றனர். நம்முடைய கஷ்டங்கள் அனைத் தையும் நீக்கி, இந்தத் திருக்கோயிலில், கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் வ்தோரணகணபதி.
 
இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள், ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம் பெற்றுச் செல்கிறார்கள்.
வளர்பிறை சதுர்த்தி, செவ்வாய்க் கிழமைகளில் தோரண கணபதிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, `ஸ்வர்ண தீப வழிபாடு' மூன்று முறை செய்து வர வேண்டும். இதன் பலனாக கடன் தொல்லைகள் நீங்கும். கடனாகக்  கொடுத்த பணமும் பொருளும் விரைவில் மீளும். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

சாஸ்திரங்கள் மூவகை எதிரிகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது பணி நிமித்தமான எதிரிகள், வெளிப்படையான பகைவர்கள், மறைமுகப் பகைவர்கள் ஆகியோரால் ஏற்படும் தொல்லை களிலிருந்து விடுபடவும் தோரண கணபதியைத் தரிசித்து அருள்பெறலாம்.

சனிக்கிழமை- காலை வேளையில், இத்தலத்தின் பிள்ளையார் சாந்த சொரூபியாக - வித்யா கணபதியாகக் காட்சி தருவார். அப்போது நிகழும் பூஜை-வழிபாடுகளில் கலந்து கொண்டு பிள்ளையாரைத் தரிசித்து வழிபட்டால், படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள் நன்கு படிக்கத் தொடங்குவார்கள்; தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். 

நன்கு படித்தும் வெகு நாள்களாக நல்லதொரு வேலை கிடைக்காமல் அல்லல் படும் இளைஞர்கள், சனிக்கிழமை காலையில், குன்றத்தூர் ஸ்ரீசக்தி கார்த்தியாயினி கோயிலில் அருளும் தோரண கணபதியைத் தரிசித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் நல்ல 
வேலை அமையும் என்பது நம்பிக்கை.
`வளர் பிறை சதுர்த்தியில் பிள்ளையாரை வழிபட்டால், சுகங்கள் தொடரும்' எனும் ஞானநூல்களின் அறிவுரைப்படி, இந்தக் கோயிலில் வளர்பிறை சதுர்த்தி தினங்களில், கூட்டு வழிபாடும் வேள்வியும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சதுர்த்தித் திருநாளில், மாலை 6 முதல் 8 மணி வரை, அன்பர்கள் (பலன் பெற்றோரும், பலன் பெற விரும்பும் அன்பர்களும்) ஒன்றிணைந்து, `ருண விமோசன கணபதி' வேள்வி நடத்தி, வலம்புரிச் சங்கு மூலம் பிள்ளையாருக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

நீங்களும், `பிள்ளையார் பிரசன்னம்' வெளியான தலமாகக் கருதப்படும் குன்றத்தூருக்குச் சென்று தோரணரை வழிபட்டு நலம் பெற்று வாருங்கள்.