செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

விக்னேஸ்வர சோடச நாமாவளி

விக்னேஸ்வர சோடச நாமாவளி

விநாயகரை வழிபடும் போது தலையில் குட்டி நாம்  செய்த தவறுகளை மன்னிக்குமாறு,வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.நாம் அறிந்தும்,அறியாமல் செய்த தவறுகளை  மன்னித்து அருள் புரிவார் விநாயக பெருமான்.

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே.



விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன அவை "விக்னேஸ்வர சோடச நாமம்" என்று பெயர் பெற்றவை.


அவருக்குச் சிறப்பாக பதினாறு நாமங்கள் கொண்ட சோடச நாமாவளியும் இருக்கிறதுஇந்தச் சிறப்பான நாமாவளி விநாயகரின் விக்னநாசன கணபதி அம்சத்துக்கு உரியது

சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி

அதுபோலவே விக்னங்களை நீக்குவதற்கு விக்னநாசனன் அல்லது விக்னஹரன்

விக்னநாசன கணபதியின் சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம்.

பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்

சுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக: 
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக: 
தூமகேதுர் கணாத்யக்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன: 
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: 


இதனையே நாமாவளியாக:

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம


இவை அனைத்திற்கும் சுருக்கமான விளக்கவுரையும் இருக்கிறது

சுமுகாய நம: = மங்கலகரமான முறுவலுடன் கூடிய இனிய முகத்தோன்.

ஏகதந்தாய நம: = ஒற்றைத் தந்தமுடையவன்.

கபிலாய நம: = கபில நிறமுடையவன்.

கஜகர்ணகாய நம = யானைக்காது உடையவன்.

லம்போதராய நம = தொப்பையான வயிற்றையுடையவன்.

விகடாய நம = வேடிக்கையானவன்.

விக்நராஜாய நம = விக்னங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன்.

விநாயகாய நம = தனக்கு மேலாக  தலைவன் யாரும் இல்லாதவன்.

தூமகேதவே நம = புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்.

கணாத்யக்ஷ¡ நம = கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன் .

பாலச்சந்த்ராய நம = நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்.

கஜானனாய நம = யானை முகத்தோன்.

வக்ரதுண்டாய நம = வளைந்த துதிக்கையை உடையவன்.

சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்.

ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.

ஸ்கந்தபூர்வஜாய நம = முருகனுக்கு முன்பு தோன்றியவன்.



இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல செள  பாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

நடராஜப்பத்து

 நடராஜப்பத்து


 கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம். சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.

நடராஜப் பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது. மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே"என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது. ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார்.இதனை ஒவ்வொரு திருவாதிரை திருநாளிலும் சிவத்தலத்திலுள்ள நடராஜர் சந்நிதியில் பாடி பாராயணம் செய்து வர நடராஜர் அருளால் 16 பேறுகளும் பெற்று முக்தியடைவர். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.

ஓம்சிவமயம்

நடராஜப்பத்து


பாடல் : 1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.


பாடல் : 2
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.



பாடல் : 3
கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.


பாடல் : 4
வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அ‎ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
எ‎ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 5:
நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமு‎ன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக‎ன் அறுமுகன் இருபிள்ளை ‏ இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னி‏டமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை ‏ இதுவல்லவோ ‏
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை ‏
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.


பாடல் 6:
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும் ‏ இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்
கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ 
எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 7
அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வி‎னை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழு‎வனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமெ‎ன்று
உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உ‎ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ ‏ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.


பாடல் : 8
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ, தந்த பொருள் ‏ இல்லை
யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ, எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.


பாடல் 9 :
தாயார் ‏ இருந்தென்ன தந்தையும் ‏ இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் ‏ இருந்தென்ன குருவாய் ‏ இருந்தென்ன சீடர்கள் ‏ இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க 
உதவுமோ ‏ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 10 :
இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ ‏
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ ‏ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ ‏ இதுவென்ன சாபமோ, இதுவே உன்
செய்கைதானோ
‏இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்
கெடுவனோ,
ஓஹோ ‏ இது உன்குற்றம் என்குற்றம்  ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ‏ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் ‏ இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் ‏ இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் 
கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டராம்  தொழும்பனாக்கி 
இனியவள மருவு சிறுமணவை முனுசாமி  எமை ஆள்வது  இனியுன் கடன் காண் 
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

நடராஜ பத்து பாடல்களைப் பாடி, நடராஜரைப் பணிந்து நற்கதி அடைவோம்.


வியாழன், 23 பிப்ரவரி, 2017

எந்த ராசிக்காரர்கள் எப்படி மகா சிவராத்திரி அன்று சிவனை வணங்க வேண்டும் தெரியுமா?

எந்த ராசிக்காரர்கள் எப்படி மகா சிவராத்திரி அன்று சிவனை வணங்க வேண்டும் தெரியுமா?



மகா சிவராத்திரி அன்று ஒருவர் சிவனை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம் மற்றும் ஆசை நிறைவேறும்.அதோடு, இந்நாளில் சிவ லிங்கத்திற்கு பல பொருட்களால் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும்.இங்கு மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளைக் கொண்டு சிவனை வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள், சிவ லிங்கத்தை கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்து, ஊமத்தை பழத்தை படைத்தால், ஆசைகள் நிறைவேறும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள், பாங் பால்/நீரால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், சிவன் நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள் புரிவார்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், சிவன் வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.

கும்பம்

மகா சிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம்/லாபம் கிடைக்க உதவுவார்.

மீனம்


மீன ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று குங்குமப்பூ பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க வழி செய்வார்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ராம நாம மகிமை

ராம நாம மகிமை  





1.   நமக்கு நன்மை   வரவேண்டுமானால்   'ராம  நாமத்தை'         இடைவிடாமல்   கூறவேண்டும். நமது  ஒவ்வொரு  மூச்சும்    'ராம் 'ராம்'   என்றே  உட்சென்றும் ,  வெளியேறுதலும்  வேண்டும்.   

2. நாம்  அறியாமல்   செய்த தவறுக்கு  ராம நாமமே 
    மிகச்சிறந்த  பிராயசித்தம்.  அறிந்தே  செய்த   தவறானால்   அதற்கு வருந்துவதும் ,   தண்டனையை ஏற்பதுவும்,   பிராயசித்தமும்   ராம  நாமமே. காலால்  நடக்கும்  ஒவ்வொரு  அடியும்  'ராம் '  என்றே  நடக்கவேண்டும் .

3.  எல்லா விதமான  கஷ்டங்களுக்கும்  நிவாரணம்  'ராம  நாம  ஜெபமே.' கிழக்கு  நோக்கி  செல்ல  செல்ல  மேற்கிலிருந்து  விலகிடுவோம். அதுபோல  ராம  நாமாவில்  கரைய  கரைய  துக்கத்திலிருந்து  விலகிசெல்கிறோம்.



4. ' ராம  நாம'  ஜெபத்திற்கு  குரு கிடைக்கவேண்டும்  என்று  கால  தாமதம்  செய்தல்  கூடாது. ஏனெனில் 'ராம  நாமமே '  தன்னுள்  குருவையும்   கொண்டுள்ளது . நாமமே  பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில்  விழிப்பு  வந்தவுடனே  சொல்லவேண்டியது   'ராம நாமம்.'  எழுந்து  கடமைகளை  செய்யும்போதும்  சொல்லவேண்டியதும்  'ராம நாமம்.' அந்த  நாள்  நமக்கு  'ராம  நாம'  நாளாக  இருக்கவேண்டும்.




6. ' ராம நாம '  ஜெபத்தில்  நாம்  இருந்தால் , நமது  கர்ம வினையின்படி  ஏதேனும்  துக்கமோ , அவமானமோ  நிகழவேண்டியதாயின்  அவைகள்  தடுக்கப்படும் அல்லது  நமக்கு  அது பாதிப்பு  இன்றி   மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை  தாங்கும்  வலிமையையும், அதுவும்  பிரசாதமாக  ஏற்கும்  பக்குவமும்  வரும்,

7. எந்த  இடத்திலும்,  எந்த  நிலையிலும்  'ராம  நாமா'    சொல்லலாம்.  எங்கும்  உணவு  உண்ணுமுன்  'ராம  நாமா'  சொல்லிசாப்பிடலாம். இறைவனும்  அவனது   நாமாவும்  ஒன்றே!  



8.  'ராம  நாமா'  எழுத  மனம், உடம்பு, கைகள்           ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்  'ராம  நாமா'  சொல்ல   மனம்  மட்டும்  போதும்.

இதைதான்  "நா  உண்டு,  நாமா  உண்டு"   என்றனர்  பெரியோர்கள் .

9. ஒரு  வீட்டில் உள்ள பெண்  'ராம  நாமா'    சொன்னால்  அந்த  பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள்  அனைவரும்  பிறப்பு, இறப்பு  சக்கரத்திலிருந்து  விடுபடுவார்கள். அந்த  வீட்டினில்  தெய்வீகம்  நிறைந்துவிடும். அதுவே  கோவிலாகும் .


10. எல்லாவித  சாஸ்திர  அறிவும்  'ராம  நாமாவில்  அடங்கும்.  எல்லாவித  நோய்களுக்கும்  'ராம  நாமா' சிறந்த  மருந்து, துன்பங்களுக்கும்  அதுவே  முடிவு .



11. நமது  இலட்சியம்  அழியா  ஆனந்தமே. அது  'ராம  நாம ஜெபத்தால்  பெற  முடியும். 'ராம  நாமாவினால்   வினைகள்  எரிந்து,  எரிந்து  நோய்கள்  குறையும். சஞ்சிதம்,  ஆகாமியம்  கருகி  ப்ராரப்தம்  சுகமாக  அனுபவித்து  ஜீரணிக்கபடும்.

12. நமது  பயணத்தில்  பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ  செல்லும்போதும்  'ராம  நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள்  தவிர்க்கப்படும். 

காசி  விஸ்வநாதர்  கோவிலில்  மாலை வழிபாட்டின்  போது ( சப்தரிஷி   பூஜையின்  போது ) 
ஒவ்வொரு  நாளும், வில்வ  தளங்களில் சந்தனத்தால்  ராம நாமம்  எழுதி,   அவற்றை விஸ்வநாதருக்கு   சமர்ப்பிக்கிறார்கள்.




13. பெண்களின்  மாதாந்திர  நாட்களிலும்  'ராம  நாமா' சொல்லுவதன்  மூலம்   அந்த  பிரபஞ்ச சக்தியிடமே  அடைக்கலமாகிறோம்.'ராம  நாமா'  சொல்ல  எந்த  ஒரு  விதியும்  இல்லை.  மனமிருந்தால்  மார்க்கமுண்டு.

பெண்கள்  சமைக்கும்பொழுது  ராம நாமம்   சொல்லி சமைத்தால்,   அந்த  உணவே  ராம  பிரசாதமாகி ......அதை   உண்பவருக்கு  தூய  குணங்களையும் ,  நோயற்ற   தன்மையையும்  அவர்களது  உடல்  ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள்  இருப்பின்  குணமாகும். 

14. வேதங்களின்  படி  ஒருவன்  புண்ணிய நதிகளில்  நீராடி  பின்பு  வேதம்  கற்று,  பூஜைகளை  நியதிப்படி  செய்தவனாய்,  யோகியாய்  முந்தய  ஜன்மங்களில்  வாழ்ந்தவனாக  இருந்தால், சுமார்  40,00,000 பிறவிகளை  கடந்தவனாக  இருந்தால்  மட்டுமே  அவனால்   'ராம  நாமா' வை    ஒரு முறை  சொல்லமுடியும். 



15. 'ராம  நாமாவை  உரக்க  சொல்லுங்கள்.   காற்றில் ராம  நாம  அதிர்வு    பரவி,   உங்களை  சுற்றிலும்   காற்றில்  ஒரு தூய்மையை   ஏற்படுத்தும். கேட்கும்  மற்றவருக்குள்ளும்   அந்த   தூய அதிர்வு  ஊடுருவி   தூய்மை  மற்றும்  அமைதியை  கேட்பவருக்கும்    தரும்.

சுற்றியுள்ள  மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள்   எல்லாம்   'ராம நாமா'  கேட்டு  கேட்டு ..... அவைகளும்  மிக  உயர்ந்த  பிறவிகளை  பெறலாம்.  இதுவும்  சேவையே!  ..... யார்  அறிவர்?  நமது  முந்தய  பிறவிகளில்  நாமும்  'ராம  நாமா'  கேட்டு  கேட்டு  இப்போதைய  பிறவியினை  பெற  ஏதேனும்  ஒரு பக்தரின்  வீட்டருகில்  மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய்  இருந்தோமோ ! என்னவோ ........  அப்புண்ணிய  பலனை ..... ராமனே  அறிவான்.  

 'ராம  நாமா'  சொல்லும்பொழுது  ஏற்படும்  தூய  அதிர்வானது  காற்றில்  பதிந்துள்ள  மனிதர்களின்   தீய   எண்ணங்களால்  ஏற்பட்ட   தீய  அதிர்வுகளை ,தீய சக்திகளை....... .....நோய்க்கிருமிகளை  அழித்துவிடும்.



 'ராம  நாமா  அதிர்வு  நமது   ரத்தத்தில்  உள்ள  DNA  மற்றும்  gene coding...இல்  உள்ள   குணங்களுக்கு  காரணமான ........கோபம் , வெறுப்பு,  பொய்,  பொறாமை , சூது,  போன்ற   தீய  குணங்களின்  தன்மைகளுக்கு  காரணமான....gene coding யை  அழித்து .........ராம  நாம  அதிர்வு  ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு  காரணமான   ராமரின்  குணங்களை  ஏற்படுத்தும்.('யத்  பாவோ  தத்  பவதி'--எதை  நினைக்கிறாயோ  அதுவே  ஆகிறாய்!) 

 'ராம  நாமா'  சொல்ல  சொல்ல  .........பரப்ரம்மமே  ஆகிவிடுகிறோம் .

அகில  உலகையும்  வியாபித்து   காக்கும்  விந்தை  மிக்கதோர்   நுண்ணிய   சக்தியே  " ராம் ".

அதுவே   உருவம்   கொண்டபோது ,  தசரத ராமனாக , சீதாராமானாக,  ரகுராமனாக ,  கோதண்ட ராமனாக  பெயருடன்  ( நாம ரூபமாக )  வந்தது.


உண்மையில்  சத்தியமாம்   ஒரே  உண்மை  ராம்  ஒருவனே. ராம்  அனைத்திலும்  உள்ளான்,  அனைத்தும்   ராமில்  உள்ளன.  ராம்  ஒருவனே  உண்மையான ,  பேரன்பே  வடிவான  உணர்வுமய  வஸ்து .........பிரம்மம்  என்பதும்   அவனே !

எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர்   அனைத்தும்  ராமில்  ஒடுங்கவேண்டும். 

இடைவிடாது  ராம  நாமத்தை  ஜெபித்து  வந்தால்  அழியா  இன்பத்தை  ராம்  அருள்வான்  என ஸ்வாமி  பப்பா  ராமதாஸ்    தமது  தந்தையிடம்  உபதேசமும்  பெற்று  ராம  நாமத்தில்  கரைந்து  ராம  ரசமாய்,  அதன்  மயமாய்    தானே   ஆனார்.


16. நமது  ஒரே  அடைக்கலம் 'ராம  நாமா'.  அதுவே  நம்மை  சம்சார  சாகரத்தில்  இருந்து 
 கரையேற்றும். பிறவித்தளையை  அறுக்கும் .



17. மற்ற  எல்லா  தர்மங்களும்  ஒன்று  பாவத்தை  நீக்கும் .  மற்ற  ஒன்று  புண்ணியத்தை  தரும். ஆனால்  'ராம  நாமா'  ஒன்றே  பாவத்தை  அறுத்து, புண்ணியமும்  அர்ப்பணமாகி  பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி )    முக்தி  தரும்.

18. 'ராம  நாமா'  மட்டுமே  நன்மையே  கொண்டு வந்து  தரும் .  மருந்தின்  தன்மை  தெரியாமல்  சாப்பிட்டாலும்  அது  நோயினை  குணப்படுத்திவிடும்.  அது போல  'ராம  நாமா' வும்  சொல்ல சொல்ல  பிறவி  நோயை, துக்க  நோயை , 
ஆசை  என்ற   சம்சார  நோயை  அழித்துவிடும்.




19. நமது  கைகளால்  எது  கொடுத்தாலும்,  அது  நமது  தலைவனாகிய  ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில்  உள்ள  மனித வடிவில்  உள்ள எஜமான்  ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம்.  எது ,  எதனை  எவரிடம்  இருந்து  பெற்றாலும்  நமது  அன்னையாகிய  ஸ்ரீ ராமனே ( எதிரில்  உள்ள  மனித  வடிவில் )    கருணையுடனும், அன்புடனும் நமது    நன்மைக்காக    தருகிறான்.  இந்த  உணர்வு  பெருக, பெருக   ஸ்ரீ ராமனே   தந்து , வாங்குகிறான். ( எதிரில்  உள்ள  மனிதரை  கவனிக்காமல்   அவரின் ....அந்தராத்மவுடனே   பேசுகிறோம்.......ராம்!  அன்னையே   இந்த  உடலுள்   இருந்து  நீயே  பேசி, இயங்கி,  செயல்படுகிறாய் ......என  வணங்க,  நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன்  ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன்  ஸ்ரீ ராமன்.



20. 'ராம  நாமா' சொல்ல ,  சொல்ல  நிகழும்  எல்லா  செயல்களும் ,  நிகழ்ச்சிகளுக்கும்    ' அந்த  ஒன்றே !'  காரணமாகிறது என்பதும் ...... எல்லாம்  அந்த  பிரம்மத்தின்  விளையாட்டே !.......என்பதும்  உள்ளங்கை  நெல்லிக்கனியாய்  உணரப்படும் .




21.'ராம  நாமா'   சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன்  மூலம்  .....  பார்ப்பது  ராம்  ,  பார்வை  ராம்,  பார்க்கப்படுவது  ராம்,  கேட்பது  ராம், கேள்வி  ராம்,  கேட்கபடுவது  ராம்,  புலன்கள்  ராம்,   உணர்வது  ராம்,  உணரபடுவது  ராம், உணர்வு ராம், இந்த   பிரபஞ்சம்  ராம்,  இந்த  மனம்  ராம் , புத்தி  ராம்,  உடலும்  ராம்,  ஆன்மா  ராம்,  24   தத்துவங்கள்  ராம் ,  ..... .........நன்மை,   தீமை , இன்பம்  துன்பம் ,  எல்லாம்  ராம் ,   எல்லாம்   ராம் , எல்லாம்  ராம்.

நாமும் ராம நாமத்தை சொல்லி அவன் அருளை பெறுவோம்.




திங்கள், 20 பிப்ரவரி, 2017

51வகையான விநாயகர் வடிவங்களும்,அவர்களது பலன்களும்

  51வகையான விநாயகர் வடிவங்களும், அவர்களது பலன்களும்






1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.
26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.

31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை




ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை

ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை




ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய நமஸ்காரங்கள்.மேலும் மேலும் புதிய ஆன்மீக தகவல்களை சொல்லுவதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
எனக்கு தெரிந்த,அறிந்த ஆன்மீக  விஷயங்களை உங்களுடன் சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்த என் அன்னை ஆதிபராசக்திக்கு என் நன்றி.

நன்றி என்று ஒரு சொல்லால் கூற முடியாது.ஏன் என்றால் 'அவளின்றி ஓர் அணுவும் அசையாது'.நான் வாழும் இந்த வாழ்க்கை கூட அவளால் கிடைத்ததே.

இந்த அறிவுரை நமக்கும் உதவும் .


தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள்உதாசீனப்படுத்தியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்சிலர் மரம்செடிகொடியாவும்சிலர் மிருகமாகவும் பிறப்பார்கள்.மனிதன் வாழும் காலத்தில் தனது செயல்பாடுகளால் தான் உயர்வோ தாழ்வோ அடைவான்அதுபோலஅவனது வினைகளின் அடிப்படையிலேயே சொர்க்கத்துக்கேநரகத்துக்கோ செல்ல முடியும்.வெற்றிதோல்வி பற்றி கவலைப்படாமல் இன்ப துன்பங்களைச் சமமாக நினைத்து கடமையைச் செய்பவன்எப்பொழுதும்இன்பமாயிருப்பான்.எப்படி நல்ல இசையால் மான்பாம்பு ஆகியவையெல்லாம் மயங்குகிறதோஅதுபோல பணிவாகவும்இனிமையாகவும் பேசுபவன் எல்லோராலும் போற்றப்படுவான்.பிறரை மதிக்கும் தன்மைநேர்மைஅறிவு போன்ற நற்குணங்கள் வேலைக்காரர்களின் சேவையைப் போல மறுபிறவியிலும் தொடரும்கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்து உலக வாழ்வு என்ற மாயப்பற்றில் இருந்து விடுபடு.உலகில் பிறந்தால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும்அவற்றைக் கண்டு பதட்டப்படாதேசங்கடப்படாதேநிறைந்த கடலைப் போல இருஉனக்கு கிடைத்துள்ள பதவிபணத்தால் பெருமையோஅகம்பாவமோ கொள்ளாதே.பொறுமையாகஅமைதியாகநடுநிலையாக, @நர்மையாக இருநவரத்தினம் போல் ஜொலிப்பாய்."நான் மட்டுமே துன்பப்படுகிறேன்தனிமையில் இருப்பது போல உணர்கிறேன்என்று உனக்கு மட்டும் ஒரு தனித்துவத்தை வழங்கிக் கொள்ளாதேஉலகில் எல்லாருமே இதே நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.எப்படி மழைக்காலத்தில் கருத்த மேகங்களைக் கண்டவுடன் அன்னப்பறவைகள்கொக்குகள் வெளிப்படுகின்றனவோஅதுபோல் முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பலன்மறுபிறவியிலும் தானாகத் தொடரும்.சொந்த முயற்சியால் நாம் அடைந்த பொருள்சொர்க்கத்தில் இருந்து நம் கையில் விழுந்த பழத்துக்கு சமமானது.பல பெரியநல்லவல்லமையுள்ள மனிதர்கள்அவர்கள் மறைந்த பிறகும் நம் மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள்அவர்களில் நீயும் ஒருவராகும் நிலையில் இருந்து கொள்இருந்தாலும்மறைந்தாலும் உன் பெயர் நிலைத்திருக்க வேண்டும்.பிறப்பும் இறப்பும் அழுகையுடன் ஆரம்பித்து அழுகையுடன் முடிகிறதுஇதற்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பதெல்லாம் கனவு போல மறைந்து விடுகிறதுஇதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்.கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதேவருங்காலம் பற்றி திட்டமிட்டும் பயனில்லைநிகழ்காலத்தில் நல்லதைச் செய்வாழ்ந்து காட்டுஅதுவே நிஜம்.வாழ்க்கையில் நடப்பவற்றைக் கண்டு பயப்படுபவனுக்கு நிம்மதியே இருக்காதுஇவர்கள் படும் துன்பங்களில் இருந்து மீள விதியோபணமோஉறவினர்களோ உதவியும் செய்வதில்லைஉன் சுயமுயற்சியால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்.