ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

வெற்றியை தேடி தரும் வன்னி மரம்

Related imageஅன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு  ,என்  இனிய வணக்கங்கள் .


என்  பதிவை பார்க்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . வரலக்ஷ்மி விரதம் முடிந்து ,புரட்டாசியும் வந்தாச்சு .போன இதழில் புரட்டாசி சனியைப் பற்றி எழுதியிருந்தேன்.

என்ன அடுத்து எழுதுவது ?என ஒவ்வொரு தடவையும் யோசித்து எழுதுகிறேன் .அதன்வரிசையில் இன்று வன்னி மரத்தை எழுதுகிறேன் .




 வெற்றியை தேடி தரும் வன்னி மரம்

வன்னி மரம் பூக்காது .இது ஒரு அற்புதமான மரம் .வன்னி மரம் ஜெய தேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது .இது வெற்ற்றியை தேடி தரும் மரம் . இது சிவாலயங்களில் இருக்கும் .


மகா பாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தின் போது  தமது ஆயுதங்களை வன்னி மரத்தடியில் 
மறைத்து வைத்ததால் வெற்றி  பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன .நம்மை ஆளும் உமா தேவி  வன்னி மரத்தடியில் தான் வாசம் செய்கிறாள் .




வன்னி மரத்தடி விநாயகர் 




வன்னி மரத்தடியில் விநாயகர் இருப்பது சிறப்பு வாய்ந்தது .பால் ,பன்னீர் ,இளநீரால் அபிஷேகம் 
செய்து ,வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன்,மனைவி கருத்து வேறுபாடு மறைந்து ,குடும்பம் 
ஒற்றுமை பெறும் .குழந்தை பேறு  கிட்டும்.

மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவிலில் வன்னி மர விநாயகர் மிகச் சிறப்பு வாய்ந்தவர் .இந்த படம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வன்னி மர  விநாயகர் . வன்னி மரத்தடியில் பச்சரிசி மாவு அல்லது பச்சரிசியை தூவி எறும்புக்கு  உணவளித்தால் தேவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் .எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் .அதிகாலையில் வழிபடுவது நல்லது .


ராமபிரான் , இராவணுடன் போருக்கு செல்லும் முன் ,வன்னி மரத்தை வணங்கி விட்டு,சென்றதாக 
புராணங்களில்  கூறப்படுகிறது .வன்னி மரம் சிவ பெருமானின் அம்சம் .இந்த மரத்தடியில் தியானம் 
செய்தால் கேட்டது கிடைக்கும் .வில்வத்திற்கு  அடுத்தது வன்னி மரம் தான் சிவனுக்கு உரியது .

விநாயகருக்கும் ,சனீஸ்வரனுக்கும் விருப்பமான இலை வன்னி இலை .சனி தோஷம் உள்ளவர்கள் வன்னி இலையால் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் சனி தோஷம் விலகும் .

விஜய தசமியின் போது  துர்க்கா தேவி மகிஷனை அழிக்க ,வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும்.பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதங்களை வைத்து விட்டு பராசக்தியை வழிபாட்டு விஜயதசமி அன்று ஆயுதத்தை எடுத்து போர் புரிந்தார்கள்.மகாபாரத போரில் வெற்றியும் கண்டனர்.அன்று 21முறை வன்னி மரத்தை சுற்றி வர நினைத்தது நடக்கும்.


இம்மரத்தை வணங்கினால் பரீட்சையில் ,வழக்குகளில் ,வாழ்வில் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். 

என்னுடைய இணையத்தை பார்க்கும் தோழிகள்! என்னை  ஊக்குவிக்கும் விதமாக உங்கள் கருத்துக்களை  கூறினால் அது எனக்கு ஒரு உற்சாகமாக இருக்கும்.

எனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து  கொண்ட சந்தோசத்துடன் இந்த பதிவை  முடிக்கிறேன் .

மீண்டும் என் ஆன்மீகப் பணி  தொடரும் ---தோழி ஈஸ்வரி சரவணன் 

தோழிகளே என்னுடைய பதிவைப்பார்த்து எனக்கு ஆதரவாக உங்கள் கருத்தையும் தெரிவித்தீர்கள்.உங்களுக்காக நான் tamilnattu samayal என்ற you tube சேனலை புதிதாக ஆரம்பித்துள்ளேன்.அதில் எனக்கு தெரிந்த சமையல்,ஆன்மீக தகவல்களையும் பகிர்ந்துள்ளேன். உங்கள் support அண்ட் subcribe  கொடுங்கள்.
















11 கருத்துகள்:

  1. அற்புதமான விபரங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான விபரங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வன்னிமரம் காய் கயிக்கும் மற்றபடி நல்ல அருமையான தகவல்.

    பதிலளிநீக்கு
  4. வன்னிமரம் காய் கயிக்கும் மற்றபடி நல்ல அருமையான தகவல்.

    பதிலளிநீக்கு
  5. வன்னிவினாயகர் அருளால் அகிலம்விரைவில் நலம் பெற வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு