திங்கள், 14 செப்டம்பர், 2015

சரஸ்வதி

என் அன்பு தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம் . 

ஆன்மீக தேடலில் என்னுடைய பயணம் 
தொடர்ந்து செல்ல என் இஷ்ட  தெய்வங்களை வணங்குகிறேன் .உங்களையும் அழைத்து செல்வது இறைவன் செயலாக எண்ணி என் பதிவை தொடர்கிறேன் .


இன்னிக்கு நமக்கு கல்வி செல்வத்தை தரும் சரஸ்வதியைப் பற்றி பார்ப்போம் 

சரஸ்வதி , நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி .வெண் பட்டுயுடுத்தி ,கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும்  வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள் .அள்ள அள்ள  குறையாத செல்வம் கல்வி செல்வம்.அதை வழங்குவது சரஸ்வதி  தாய் .                                                                              

கல்வி ,ஞானம் ,கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும்.சரஸ்வதி தேவி மூல மந்திரம் ,அஷ்டோத்ர நாமம் ,நாமாவளி ,சுலோகம் கூறி வழிபடலாம் .இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம் . சரஸ்வதிகுரிய  பாடல்கள் பாடியும் வணங்கலாம் .


புதன் கிழமை காலையில்  கிழக்கு நோக்கி அமர்ந்து ,சரஸ்வதி 12 நாமங்களை சொன்னால் ,கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும் . 

12 நாமங்கள் 

பாரதி 
சரஸ்வதி 
சாரதாதேவி 
ஹம்சவாகிணி 
ஜகதீக்யாதா 
மகேஸ்வரி 
கெளமாரி 
பிரம்மச்சாரிணி 
வித்யதாத்ரிணி 
வரதாயினி 
ருத்ரகண்டா 
புவனேஸ்வரி 



மாணவர்கள்,பணி  புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் 
உயரவும்,இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம் .

சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல் ,வடை ,பாயாசம் செய்து வழிப்படலாம் .இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு ,பேரீச்சம் பழம் ஏதாவது வைத்து வணங்கலாம் .

படிக்கிற குழந்தைகள் சரஸ்வதியை வணங்க அம்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும் .சகல நலங்கள் 
பெற சரஸ்வதியை புகழ் பாடி போற்றுவோம்.

நன்றி வணக்கம் 
 ஈஸ்வரி 





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக