வியாழன், 17 செப்டம்பர், 2015

புரட்டாசி சனிக்கிழமை விரதம்

ஹாய் பிரண்ட்ஸ்

வணக்கம் .இன்னிக்கு புரட்டாசி மாதம் ஆரம்பமாகி விட்டது.நாளைக்கு புரட்டாசி சனிக் கிழமை .
அதனால் புரட்டாசி சனிக்கிழமை விரதம் பற்றி எழுதுகிறேன் .

புரட்டாசி சனிக்கிழமை விரதம்  புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் கோவில்களிலும்,வீடுகளிலும் பெருமாளை வணங்குகினறனர்.
விரதம் இருக்காதவர்கள் இந்த மாதத்தில்  விரதம் இருப்பது  நல்ல பலனை தரும்.விரதம் இருப்பவர்கள் திருநாமம் இட்டு,சர்க்கரை பொங்கல்,வடை,எள் சாதம்  நைவேத்தியம் செய்து காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவர்.

சூரிய பகவானுக்கும் ,சாயா தேவிக்கும் மகனாக பிறந்தார் சனி .சனிக்கிழமை, சனி பகவானை நினைத்து, சனி தோஷம் உள்ளவர்கள் சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் இது .

ஏழரை சனி பிடித்தவர்களுக்கு கஷ்டமான காலம் .சனியை வணங்கினால் தாக்கம் குறையும்.
சனி பகவானை போல் கெடுப்பாரும் இல்லை .அவரை போல் கொடுப்பாரும் இல்லை .முதலில் கஷ்டங்களை கொடுத்து பிறகு ,நன்மையையும் செய்வார் சனி பகவான் .


சனி தோஷ காலங்களில் புத்திர பாக்கியம் குறைவு ,மரண பயம் .அதிக பிரயாணம் ,அதிக செலவு ,பண நஷ்டம் ,வீண் சச்சரவு ஏற்படும் .இதை போக்க ,சனிக்கிழமை அதிகாலையில் நல்லெண்ணெய் ஸ்தானம் செய்து .ஆலயம் சென்று கருப்பு துணியில் எள்ளை சிறு மூட்டையாக
கட்டி  நல்லெண்ணெய் ஊற்றி ,தீபம் ஏற்ற வேண்டும்.

அர்ச்சனை செய்து ,பின் சிவவிஷ்ணுவை வழிபட்டு தேவாரம் ஓதி ,விஷ்ணு ஸ்தோத்திரம் பாடி துதிக்க வேண்டும் .சனிக்கு அதிபதி விஷ்ணு .  

சனி வாகனமான காகங்களுக்கு உணவு வைத்தபின் ,உணவுண்ண  வேண்டும் .சனிக்கிழமை விஷ்ணு சகஸ்ர நாமம் படித்தால் நன்மை உண்டாகும்.


இந்தியாவின் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் மிகச் சிறப்பு வாய்ந்தது .சனி தோஷம் உள்ளவர்கள்
இங்கு சென்று வணங்கினால் தோஷம் விலகி நல்லது நடக்கும் .


இந்த மாதம் குல தெய்வ பூஜை ,நேத்திக்கடனுக்கு சிறந்த மாதம்.


சனிக்கிழமை பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போட்டு வழிபடுவர் .சிலர் வீடு வீடாக சென்று ,
அரிசி பிச்சை கேட்டு பெருமாள் கோவிலுக்கு கொடுப்பர் .காணிக்கை கொடுப்பவர்களும் கோவிலில் போடுவர் .

புரட்டாசியில் தான் நவராத்திரி வருகிறது .


நன்றி வணக்கம்
மீண்டும் மற்றுமொரு பதிவில்
உங்கள் தோழி ஈஸ்வரி



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக