செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

நறுமணம் கமழும் சாம்பிராணி


 சாம்பிராணி



ஹாய் பிரண்ட்ஸ்


அனைவருக்கும் என்  அன்பு வணக்கங்கள்.இன்னிக்கு நான் சாம்பிராணியைப் பற்றி பகிர்ந்து
கொள்ளலாம்னு இருக்கேன் .

சாம்பிராணி ஒரு மரப்பிசின்.அனைத்து மதங்களும் சாம்பிராணியை பூஜைக்காக  பயன்படுத்துகிறார்கள்.இந்து சமயத்தில் அனைத்து சடங்குகளிலும் ,வழிபாடுகளிலும் இது பயன் படுத்தப்படுகிறது.


நம் சுற்று சுழலில் உள்ள அசுத்தத்தை நீக்கவும் ,ஒரு நேர்மறையான சக்தி அளிப்பதற்கே சாம்பிராணி உதவுகிறது. போபாலில் அக்னி ஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே இதற்கு சான்றாகும்.



நமக்கு உண்டாகும் மிகப் பெரிய துன்பங்களை எல்லாம் ,அக்னி உருவாக காற்றோடு காற்றாக
பறந்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் சாம்பிராணி போட வேண்டும் .இறைவனின்
அருள் கடாட்சம் கிடைக்க நம் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு வணங்குவோம்.

தேள் ,பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நம் வீட்டில் வராமல் இருக்கவும் ,அலை மகளின் அருள்
கிடைக்கவும் அந்தி சாயும் நேரத்தில் தூபம் போடவும்.

தீய  எண்ணங்கள் அகல ,கண் திருஷ்டி போகவும் தினமும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும் .


சுமங்கலிகள் மங்கள நாளான செவ்வாய் ,வெள்ளியில் மாலை நேரத்தில் குளித்து விட்டு ,
தெய்வ படங்களுக்கு விளக்கேற்றி வைத்து ,சாம்பிராணி தூபமிட்டால் பீடைகள்,தரித்திரங்கள்
அகலும்.லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.



ஓம் லக்ஷ்மியே போற்றி! என்று சொல்லி ,என்  பதிவை முடிக்கிறேன் .

இன்னும் வேறொரு தலைப்பில் நாளை சந்திப்போம் .
ஈஸ்வரி 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக