திங்கள், 3 ஆகஸ்ட், 2015

ஆடி 18 ம் பெருக்கு

ஆடி 18 ம் பெருக்கு


ஹலோ ப்ரண்ட்ஸ் 

இனிய காலை வணக்கம்.ஆடி மாதம் என்றாலே  அம்மனுக்கு திருவிழாதான்.இன்னிக்கு 18ம் பெருக்கு .ஆடி 
பெருக்கு காவேரி ஆற்றை சம்பந்தப்படுத்தி தான் ஆரம்பித்தது .

முன்னொரு காலத்தில் காவேரி 
ஆறு பெருக்கெடுத்து ஓடியது. தமிழ் நாட்டில்  காவேரி ,பெண்ணை ,பொருணை நதி ஓடுகிறது.
18 படித்துறைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆடி பெருக்கு எனப் பெயர் வந்தது.


காவேரி ஆறு தென்னிந்தியாவில் புண்ணிய நதிகளில் ஒன்றாகும் .ஸ்ரீ ரங்கம் கோவிலில் அம்மா மண்டபத்தில் பெருமாள் காவேரிக்கு சீர் வரிசை அளிக்கும் காட்சியை  கண்டால் , கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் .



பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவேரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆற்றங்கரையிலும்
நதி கரையிலும்  ஆடி பெருக்கை மக்கள் கொண்டாடுகிறார்கள் .இது கிராமப்புறங்களில் மிகச்
சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

பழங்காலத்தில்  காவேரி ஆற்றில் தண்ணீர் பிரச்சனை இல்லாத காலம் அது .

மக்கள் காலையில்  எண்ணெய் குளியல் செய்து ,புத்தாடையுடுத்தி மாலை ஆற்றங்கரைக்கு குடும்பத்துடன் சென்று ,ஓடிவரும் காவேரி அன்னைக்கு பூஜை செய்வர்.பின் தம்முடன் கொண்டு வந்துள்ள சித்ரன்னங்களான

புளியோதரை ,மாங்காய் சாதம் ,எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் ,மற்றும் சர்க்கரை சாதம் முதலியவை அன்னைக்கு நிவேதம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்பர் .



ஒரு முறத்தில் வெற்றிலை ,பாக்கு ,தேங்காய் ,பழம் ,பூ ,ரவிக்கைத் துணி ,காதோலை ,கருகமணி ,திருமாங்கல்யச் சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து ,மற்றொரு முறத்தால் மூடி எடுத்து செல்வர்.


ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து ,கற்பூரம் ஏற்றி வணங்குவர் .தீபங்களை ஒரு வாழை மட்டையில் வைத்து முறத்துடன் ஆற்றில் மிதக்க விடுவர்.





இன்றைய நாட்களில் ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் திருமாங்கல்யத்தை மாற்றி கொள்ளும் தினமாக அனுஷ்டிக்கின்றனர் .பழைய திருமாங்கல்யத்தை எடுத்து விட்டு புது மாங்கல்யத்தை அணிகின்றனர் .

 இப்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நகர் புறத்தில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள
குழாய்களில் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

ஆடி பெருக்கில்  ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம் கணவனின் நலனுக்காகவும் ,கன்னி பெண்களுக்கு சீக்கிரமே நல்ல கணவர் கிடைக்கவும் இன்று பூஜை செய்து வழிபடுகிறார்கள் .


என்ன தோழிகளே !சந்தோசமா ஆடி 18ம் பெருக்கை கொண்டாடுங்க .நாளை இன்னொரு பதிவில் சந்திக்கிறேன்.

நன்றி .
வணக்கம் .
`உங்கள் அன்பு தோழி   ஈஸ்வரி








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக