ஆன்மீக தேடல்

சனி, 13 ஜனவரி, 2018

பொங்கல் அன்று செய்ய வேண்டிய உணவுகள்

happy pongal2018 க்கான பட முடிவுஅன்பார்ந்த தோழிகளுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.என்னுடைய பதிவில் பொங்கல் திருநாளின் கொண்டாடத்தைப்பற்றி முந்திய பதிவில் எழுதி  இருக்கிறேன்.ஆதலால் இந்த பொங்கலுக்கு இனிப்பு சுவை உணவான பொங்கலை  செய்வது எப்படி? என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.


பொங்கல் அன்று செய்ய வேண்டிய  உணவுகள்  

கிராமங்களில் பொங்கல் அன்று காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் முதலில் ”””பால் பொங்கிருச்சா”””  என்று தான் கேட்பார்கள் அதற்கு  மற்றவர்கள் ”””பால் பொங்கிருச்சு”””என்று சொல்லிவிட்டு உங்களுக்கு என்று திருப்பி கேட்பார்கள். இது மிகவும் சுவையான அனுபவம். சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல் , பலகாய் குழம்பு என்று இம் மூன்றையும் செய்து கடவுளுக்கு படைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக உண்பார்கள். அந்தநாளில் இருக்கும் இன்பம் அந்த ஆண்டு முழுவதும் இருக்கும் என்பது நம்மிக்கை.  


சக்கரைப் பொங்கல்
sweet pongal க்கான பட முடிவு
தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி   – 1/2 கிலோ
  • பாசிப்பருப்பு – 200 கிராம்
  • வெல்லம்  – 1 கிலோ
  • பால்  – 1/2 லிட்டர்
  • நெய்   – 100 கிராம்
  • முந்திரி – 100
  • சுக்கு – சிறிது         
  • ஏலக்காய்  – 10
  • தேங்காய் – 1
முதலில் செய்யவேண்டியவை:
  • அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
  • பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
  • முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  • பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  • அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  • அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.
சிறிய குடும்பமாக இருந்தால் 1டம்ளர் அரிசிக்கு 1/4டம்ளர் பாசி பருப்பு போட்டு 4டம்ளர் தண்ணீரும் ,1டம்ளர் பாலும் சேர்த்து குக்கரில் வைத்தால் சரியாக இருக்கும்.ஒன்றரை டம்ளர் வெல்லம் சேர்க்கவும்.மீது பொருட்கள் உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம்.

வெண்பொங்கல் தொடர்புடைய படம்

 தேவையான பொருட்கள்: 

பச்சரிசி - 1 கப்

 பாசிப்பருப்பு - 1/2 கப்தண்ணீர் - 5 கப் 

இஞ்சி - 1 இன்ச் 

மிளகு - 1 1/2 டீஸ்பூன் 

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிது 

எண்ணெய் - 1/4 கப் 

நெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்

 உப்பு - தேவையான பொருட்கள் முந்திரி - 5-7 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, குக்கரில் ஒன்றாக சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, லேசாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து முந்திரியை சிறிது நெய் ஊற்றி வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மிளகு சேர்த்த தாளித்து, பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அத்துடன் மசித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் அதில் முந்திரியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வெண் பொங்கல் ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 


பொங்கல் அன்று இரண்டு பானைகளில் பொங்கல் வைக்கப்படும் சக்கரைப்பொங்கல் மற்றும் வெண்பொங்கல் இந்த வெண்பொங்கலுக்காக வைக்கப்படுவதுதான் பலகாய்குழம்பு. பார்த்து பார்த்து பக்குவமாக வைக்கும் போது கூட சில குழம்புகள் சுவையாக இருக்காது ஆனால் உடனடியாக வைக்கப்படும் இந்தகுழம்பின் சுவை! சொன்னால் புரியாது சுவைத்தால் தான்  அதன் சுவையை உணர முடியும்.  

தேவையான பொருட்கள்:
  • சாம்பார் வைப்பது எப்படி க்கான பட முடிவுமொச்சைக் காய்   – 200 கிராம்
  • பறங்கிக்காய்       – 250 கிராம்
  • கத்தரிக்காய்       – 200 கிராம்
  • அவரைக்காய்      – 200 கிராம்
  • தட்டப்பயத்தங்காய் – 200 கிராம்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 200 கிராம்
  • உருளைக்கிழங்கு    – 200 கிராம்    
  • தக்காளி            –  100 கிராம்
  • சின்ன வெங்காயம்  – 100 கிராம்
  • ப.மிளகாய்          –  10
  • வரமிளகாய்         – 10
  • பாசிப்பருப்பு         – 200 கிராம்
  • மஞ்சள்த்தூள்       – 1 ஸ்பூன்
  • எண்ணெய் (அ) வெண்ணைய்  (தேவைக்கு)
  • உப்பு      – தேவைக்கு
  • கறிவேப்பில்லை , கொத்தமல்லி – சிறிது
புளி-எலுமிச்சையளவு




வறுத்து அரைக்க:
மிளகாய்வற்றல்-2
மல்லி-2டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-அரைடீஸ்பூன்
கடலைபருப்பு-சிறிது 
தேங்காய் துருவல்-2டேபிள்ஸ்பூன்


தாளிக்க:
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு-தலா 1டீஸ்பூன்
மிளகாய்வற்றல்-2
கருவேப்பிலை-3இணுக்கு
பெருங்காயம்-2பின்ச்

காய்கறி,கிழங்கு வகைகளை அலசி நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கியவற்றை போட்டு மஞ்சள் பொடி,உப்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.பாசிப்பருப்பை லேசாக வெதுப்பி தண்ணீர் விட்டு வேக வைத்து வைக்கவும்.


வறுக்க சொன்னவற்றை சிவக்க  வறுத்து எடுக்கவும்.

வறுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

காய் வெந்து வரும்பொழுது அரைத்த மசால் சேர்க்கவும்.


புளி கரைத்து விட்டு கொதிக்கவிட்டு வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதி வந்து கெட்டியாகி வரும்,உப்பு சரி பார்க்கவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,
கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை,பெருங்காயம் தாளித்து கொட்டவும்.

சுவையான பொங்கல் காய்கறி கூட்டு ரெடி.
இதனை பொங்கப் பானையில் பொங்கும் வெண் பொங்கலுக்கு விட்டுக்கொண்டும்,தொட்டும் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.இது மீதியானால் சுண்டவைத்து மறுநாள் சாப்பிடலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் உங்கள் கருத்தை எழுதவும்.உங்களுக்கும் இதைப்பற்றி ஏதேனும் தெரிந்திருந்தால் அதையும் பகிரவும். 

இடுகையிட்டது Eswari நேரம் 8:53 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

aarthi cafe

BakthiTamil

BakthiTamil
Click to Launch Bakthi Tamil

Bakthitamil.com

Bakthitamil.com

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2022 (4)
    • ►  ஜூலை (2)
    • ►  மார்ச் (2)
  • ►  2021 (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (4)
  • ►  2020 (12)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (3)
  • ►  2019 (24)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (6)
  • ▼  2018 (354)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (37)
    • ►  மே (90)
    • ►  ஏப்ரல் (52)
    • ►  மார்ச் (54)
    • ►  பிப்ரவரி (34)
    • ▼  ஜனவரி (22)
      • நவராத்திரி காலத்தில் இல்லத்தில் தினமும்- -என்னென்ன...
      • அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான்
      • நல்லதை நடத்தித் தரும் யோக நரசிம்மர் கோவில்
      • நோய் தீர்க்கும் ரத சப்தமி விரதம்
      • ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள்
      • குறைவில்லா வாழ்வு தரும் தைப்பூச திருநாள்.!
      • நலம் தரும் திதிகளும் அவற்றின் பலன்களும்
      • சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களும் அதன் பலன்களும்!
      • வேண்டுதல் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு எலுமிச்சை மா...
      • ஐப்பசி மாத பௌர்ணமி
      • விஷ்ணுக்குரிய விரதங்கள் - வழிபாடுகள்
      • சிவபெருமானுக்கு படைக்கக்கூடாத பொருட்கள்
      • ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!
      • ஆரோக்கியம் காக்கும் பொங்கல் பொக்கிஷங்கள்
      • பொங்கல் அன்று சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டியவை
      • ஸ்ரீ சத்யநாராயண அஷ்டோத்திர சதநாமாவளி
      • ஆரோக்கியம் தரும் சூரியன் 108 போற்றி
      • சந்திரகிரகணத்தின் போது ஏன் உணவு உண்ணக் கூடாது என்ப...
      • சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்க...
      • பொங்கல் அன்று செய்ய வேண்டிய உணவுகள்
      • மந்திர ஜெபம் செய்யும்போது...
      • முருகனின் ஆறுபடை வீடுகளின் மகிமைகள்!
  • ►  2017 (204)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (25)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (16)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (13)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (14)
    • ►  மார்ச் (38)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (138)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (19)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2015 (63)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (10)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (24)

என்னைப் பற்றி

Eswari
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.