தீபாவளி பழக்கங்களும் சில வழக்கங்களும்
தீபாவளி எண்ணெய்க் குளியல் ஏன்?
தீபாவளியன்று அதிகாலையில் எழ வேண்டும். வீட்டிலுள்ள ஒவ்வொரு பெரியவர்கள் காலிலும் நலங்கிட்டு மகிழ வேண்டும். தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள். தீபாவளிஅன்று எண்ணெய் தேய்த்துத்தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்.

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள் என்பதால், எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுவதாகவும்கூறப்படுகிறது. அவன் இறந்த நாளை புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகிறோம். பழங்காலத்தில் இலை மற்றும் சாணங்களை கொண்டு வெடிமருந்துதயாரித்துள்ளனர். அதில் இருந்து அந்தக் காலத்தில் பண்டிகைக் காலங்களில் வெடி வெடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீபாவளியில் சகோதரிகளுக்கு பரிசு வழங்கும் வழக்கம் ஏன்?
வட மாநிலங்களில் தீபாவளியை வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். பெரும்பாலானவர்கள் தங்களின் வியாபரத்திற்கு ஆண்டுப் புதுக்கணக்கை அன்றுதான் தொடங்குவார்கள்.

தீபாவளி அன்று அவர்கள் சகோதரிகளுக்கு பரிசு வழங்கும் பழக்கத்தை அவர்கள் வைத்திருக்கின்றனர். தீபாவளியை அவர்கள் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். ஐந்தாவது நாள் எமதர்மவழிபாடு நடக்கும். அதற்கு அவர்கள் ஒரு கதை வைத்திருக்கின்றர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான் எமன். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இதை நினைவு படுத்தும் விதமாக இன்றும் சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசுப் பொருள் வழங்கி வருகின்றனர்.
பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக