சனி, 19 மே, 2018

ஆன்மீக விஷயங்கள்


lakshmi devi க்கான பட முடிவு





வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்?


“ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே 
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.”
- என்ற ஸ்லோகத்தை சதா மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும். அதோடு கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும்  விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம: 
 வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
 ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ”

தலைக்கு மேல் கைகளை உயர்த்தி வணங்கக்கூடாது என்கிறார்களே, ஏன்? - 

திரௌபதியின் மானம் காக்க கண்ணன் வந்தது எப்பொழுது? இரு கைகளையும் மேலே தூக்கி, கண்ணா நீயே கதி என்று சரண் அடைந்தவுடன்  ஓடோடி வந்தானே!ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி இறைவனை வணங்கும்போது அவர்கள் இறைவனை  முழுமையாக நம்பி சரணடைகிறார்கள் என்றுதான் பொருள்.இவ்வாறு வணங்குவது அவர்களுடைய 
பக்தியின் வெளிப்பாடு. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தலைக்குமேல் கைகளை உயர்த்தி வணங்கலாம்.

சைவம், அசைவம் எது ஆன்மிகத்திற்கு ஏற்றது? தொடர்புடைய படம்
தான் வேட்டையாடிக் கொண்டு வரும் மாமிசத்தை தினமும் இறைவனுக்கு படைப்பதைத் தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார் கண்ணப்ப நாயனார்.  இறைவன் அன்றாடம் தனக்கு எந்த உணவை அளிக்கிறானோ, தான் எதை உண்டு உயிர் வாழ்கிறானோ, அதனையே இறைவனுக்கும் நைவேத்யம் செய்வதை  ஆண்டவனும் ஏற்றுக்கொண்டான்.உண்மையான பக்திக்கு சிரத்தைதான் முக்கியம்.மற்ற விஷயங்கள் அங்கே காணாமல் போகும்.ஆன்மிகத்திற்கு சைவம், அசைவம்  என்ற பேதம் ஏதும் கிடையாது.


நிறைமாத கர்ப்பிணிகள் நேருக்கு நேர் சந்திக்கக் கூடாது என்கிறார்கள்.குறிப்பாக சொந்தங்களுக்குள் சந்திப்பு நிகழக்கூடாது என்கிறார்களே, ஏன்?


மகப்பேறு மருத்துவரிடம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறைமாத கர்ப்பிணிகள் ஆலோசனை 

பெறுவதற்காக வந்திருப்பார்கள்.இந்த கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிரிலும், அருகிலும் அமர்ந்திருப்பார்கள். மருத்துவமனைக்குள் நடக்கும் போது ஒருவருக்கொருவர் எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். நீங்கள் கருதுவதுபோல்  நிறைமாத கர்ப்பிணிகள் எதிர் எதிரே சந்தித்துக்கொள்ளும்போது ஏதேனும் பிரச்னை உண்டாகலாம் என்ற கூற்றில் உண்மை இருந்தால் அதனை  மருத்துவர்கள்  அனுமதிப்பார்களா? 



ஆக இந்தக் கருத்தில் அறிவியல் ரீதியான உண்மை ஏதும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.குறிப்பாக சொந்தங்களுக்குள் கூடாது என்று  தனியாக ஒரு விதியைச் சொல்லியிருக்கிறீர்கள். கர்ப்பிணிப் பெண்களுக்குள் ஒருவருக்கொருவர் மனதிற்குள் உண்டாகும் எண்ண ஓட்டம் வயிற்றில் உள்ள  குழந்தையைச் சென்றடையலாம், உதாரணத்திற்கு பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பொறாமை எண்ணம் கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் எதிரெதிரே  சந்தித்துக்கொள்ளும்போது வெளியில் சிரித்தாலும்  மனதிற்குள் உண்டாகும் தீய எண்ணத்தின் அதிர்வலைகள் வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளையை  பாதிக்கக்கூடும் என்ற எண்ணத்தில் பெரியவர்கள்  இவ்வாறு சொல்லி வைத்திருப்பார்கள். இதைத்தவிர வேறெந்த காரணமும் இருக்க முடியாது.கர்ப்பிணிப்  பெண்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிரே சந்தித்துக்கொள்ளக் கூடாது என்ற கருத்தில் உண்மை இல்லை.



அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதால் வீட்டு வாசலில் கோலம் போடலாமா, கூடாதா? 
 வீட்டு வாயிலில் கோலம் போடுவது என்பது நல்ல  தேவதைகளை வீட்டிற்குள் வரவேற்பதற்காக. முன்னோர்களை துர்தேவதைகள் என்றும், முன்னோர்களுக்காக அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வதை கெட்ட  நிகழ்வு என்றும் கருதுவது முற்றிலும் தவறு. தர்ப்பணம் என்பது அமங்கலமாக நிகழ்வு அல்ல. வீட்டில் அல்லது பங்காளி வகையறாவில் யாரேனும்  இறந்துவிட்டால் இறந்த நாள் முதல் பத்து நாட்கள்வரை அல்லது கருமகாரியங்களைச் செய்து முடிக்கும்வரை வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. மற்ற  நாட்களில் அவசியம் கோலம் போடவேண்டும். தினசரி கோலம் போட்டால்தான் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.அமாவாசை நாளில் வீட்டில்  தர்ப்பணம் செய்தாலும், வீட்டு வாசலில் கோலம் போடுவதில் எந்தத் தவறும் இல்லை.



பூஜையின்போது மணி அடிப்பது ஏன்? 



“ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம் 
கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சனம்.”



- என்ற மந்திரத்தைச் சொல்லி மணி அடித்து பூஜையினைத் துவக்குவார்கள். பூஜை நடக்கும் இடத்திலிருந்து அசுரத்தனமான தீய சக்திகள் விலகிச் செல்லவும்,  பூஜைக்குரிய பிரதான தெய்வத்தை ஆவாஹனம் செய்வதற்குத் துணையாக சுபத்தினைத் தரக்கூடிய மங்களகரமான தேவதைகளின் சக்தி வந்து சேரட்டும்  என்பதற்காக இந்த மணியினை அடிக்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள். மணி ஓசையால் பூஜை நடக்கும் இடத்திலிருந்து தீய சக்திகள் விலகிச்  செல்கின்றன.மணியோசை ஒலிக்கும்போது அங்கே இறை சாந்நித்யம் வந்து சேர்ந்துவிடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.



பெண்கள் கழுத்தில் தாலி கட்டுகின்ற சம்பிரதாயம் எப்படிஏற்பட்டது?   thali chain designs க்கான பட முடிவு



இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.தாலி கட்டினால் மட்டும் அந்தத் திருமணம், இந்து திருமணச் சட்ட  விதிகளின்படி செல்லுபடி ஆகாது. பாணிக்ரஹணம் (மணமகளின் கரம் பற்றி உறுதி கூறுதல்), ஸப்தபதி (மணமகளின் வலது கால் கட்டை விரலை பிடித்து ஏழு  அடி எடுத்து வைத்தல்) ஆகிய நிகழ்வுகள் நடந்தால்தான் இந்து மத திருமண விதிகளின்படி திருமணம் நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். சாஸ்திர விதிகளின்படி  தாலி கட்டுதல் கிடையாது. ஆனால் புராணங்களில் தாலிகட்டுதல் என்கிற சம்பிரதாயத்திற்கான ஆதாரம் உண்டு. 



நம்மவர்கள் மீனாக்ஷி கல்யாணத்தை உதாரணமாகக் கொள்கிறார்கள். மீனாக்ஷி கல்யாணத்தின்போது சுந்தரேஸ்வரர், அன்னை மீனாக்ஷியின் கழுத்தில்  மங்கலநாண் அணிவித்தார் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு, திருமணத்தின்போது தாலிகட்டுகின்ற சம்பிரதாயம் தோன்றியிருப்பதாக சாஸ்திரம்  அறிந்த பெரியோர்கள் சொல்கிறார்கள். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக