முன்னோர் ஆசி பெற வழிபாடு!
இறந்தவர்களின் திதி வரும் அன்று பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது. அப்படி கொடுக்கும் அனைவரும், வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள். உங்கள் முன்னோர்களின் ஆசி, உங்களுக்கு முழுவதும் கிடைக்க, ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து, மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அவர்களை விட, உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை. நீங்கள் உயிருள்ள வரை, உங்கள் தாய், தந்தையரின் இறந்த திதி வரும் நாளில், சிராத்தம் செய்யுங்கள். இதைவிட உங்களுக்கு பெரிய காரியம், முக்கியமான காரியம் எதுவும் இல்லை. வாய்ப்பு இருக்கும் அன்பர்கள், நீங்களும் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்கலாம். காலையில் தினமும், நீங்கள் உணவு உட்கொள்ளும் முன் காகத்திற்கு உணவிடலாம். உங்கள் கடன் தீர்ந்தால் தான், உங்கள் பலம் பெருகும். உங்கள் சந்ததியை நீங்கள் காக்க முடியும். உங்கள் உணவை காகம் சாப்பிடும் போது உங்கள் கர்ம வினைகள் கரைய ஆரம்பிக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களும், விலகும். உங்கள் பின்னால், உங்கள் மேல் உயிருக்குயிராக பாசம் வைத்து இருக்கும் ஒரு படையே உருவாகும். நீங்கள் வெகு விரைவில் நிம்மதியும், புகழின் உச்சியிலும் நிற்பீர்கள். சூரிய சஞ்சாரத்தில் உத்தராயணம், தட்சிணாயனம் என்று இரு பிரிவுகள் இருக்கிறது.
இரவை ஆரம்பிக்கும் மாதங்களில், விண்ணில் இருந்து அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்திற்கும், தை மாதத்திற்கும் வரும் அமாவாசையில் நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த பூஜை, தர்ப்பணம் செய்தாலும், அவர்களை உடனே சென்றடையும். இறந்தவர்களின் திதி தெளிவாக தெரியாதவர்கள், இந்த ஆடி அமாவாசையன்றோ, அல்லது தை அமாவாசையன்றோ, பித்ரு பூஜை செய்து, பிண்டங்கள் கொடுக்கலாம்.
உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில், அதன்பின் உங்கள் குலதெய்வம், அதற்கு பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம். உங்களுக்கு ஒரு கஷ்டம், உடனே ஓடி வர்றது, உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி தான். இவர்களுக்கு பலம் கொடுக்கிறது, உங்கள் பித்ரு பூஜையும், தர்ப்பணமும் தான்.

பித்ரு பூஜை செய்ய, தர்ப்பணம் கொடுக்க வசதி இல்லை என்று நினைக்கக்கூடாது. உள்களால் என்ன முடியுமோ, அதை மட்டும் செய்யுங்கள் போதும். பித்ருக்களை வழிபட மந்திரம் தெரிந்திருக்க வேண்டும், ஐதீகம் புரிய வேண்டுமே என்று சிலர் தவிப்பார்கள், தயங்குவார்கள். அத்தகைய தவிப்போ, தயக்கமோ தேவை இல்லை.
தாயே தந்தையே நான் கொடுக்கும் இந்த தண்ணீரையும், எள்ளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட போதும். உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் மனம் குளிர்ந்து போவார்கள். எனவே பித்ரு பூஜைகள், தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாமல் இருந்து விடாதீர்கள். அதிலும் வரும் மகாளய அமாவசை தினம் மகிமை வாய்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக