எது ஒன்று உன் மனதையும் உன்னையும் இறுக்குவது போல உணர்கிறாயா?
மனதில் கோபம் ,ஆதங்கம், வெறுப்பு என தேவையில்லாத எல்லா சுமைகளையும் சுமந்துக் கொண்டு ஏன் இப்படி உன் நிம்மதியை இழக்கிறாய்.
ஒரு நிமிடம் உன் மனதை அமைதி படுத்த போராடுகிறாய்.
உன்னை அழுத்தும் அனைத்தும் அறிந்தவன் நான் உன் மனதிலும் உன் உலகத்திலும் உனக்காக வாழ்கிறேன்.
நான் எப்படி வெறுமையாய் நின்றுக் கொண்டு இருப்பேன்.
கையில் சுடுபட்டாலே தாங்காத நீ உன் மனம் வெப்பம் நிறைந்து சூடாய் கொதிக்கின்றது.
உன் மனதில் ஒடும் எதிர்மறை எண்ணங்கள் உன்னை வலு இழக்க செய்கிறது.
மனதில் பலம் இல்லாமல் தவிக்கிறாய் உன்மனதில் உள்ள குமுறலும் நான் அறிவேன்.
அப்பா எல்லாம் உங்களுக்கு தெரியும் ஆனால் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் என்கிறாயா?,
கஷ்டம் யாருக்கு இல்லை படைத்து காக்கும் இறைவனுக்கும் கஷ்டம் இருக்கிறது தன் பிள்ளைகளின் முந்தைய கர்மவினையால் அவதிப்பட்டு துன்புறும் போது.
என் நாமத்தை நீ உச்சரிக்கும் போது யாகத்தில் எரிகின்ற தீ போல் உன் கர்ம வினைகள் எரிந்துவிடும்.
என் நாமமே உனக்கு பாதுகாப்பு கவசமாய் இருக்கும் அதை தாண்டி வேறு எதுவும் உன்னை அண்டாது.
முட்களால் குத்தி காயப்பட்டு உன் பாதம் இனிமேல் மலர் மேல் நடக்க போகின்றது.
நீ ஒரு காரியத்திற்காக போகிறாய் என்றால் உனக்கு முன்னரே சென்று உன் தேவையை பூர்த்தி செய்து காரியத்தை முடித்து வைத்து இருப்பேன்.
அதனால் நீ மகுடமாய் உயர போகும் காலம் வந்து விட்டது, நீ தேடிய அலைந்தது எல்லாம் இனிமேல் உன் கையில் வந்து சேரும்.
அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன்.
நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன்.
உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும், உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன் உன்னில் எப்போதும் நான் இருப்பேன்.
எல்லாம் சரியாகிவிடும் எதற்கும் அஞ்சாதே உன்னோடும் உன் குடும்பத்தோடும் நான் இருக்கிறேன்
என் பிள்ளை என்னிடம் அடம்பிடிக்கும், கோபப்படும் சண்டையிடும் அதே போல் அழும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்.
பிள்ளை என்றால் தன் தாயிடம் தான் இப்படி நடந்து கொள்ள முடியும் நீ உன் துவாரகாமாயீ தாயிடம் நடந்து கொள்கிறாய்.
உன் சந்தோஷத்தில் என் சந்தோஷம் இருக்கிறது, உன் அழுகையில் என் கண்ணீரும் இருக்கிறது உன் சண்டையில் என் மேல் நீ கொண்ட தாயின் உரிமை இருக்கிறது.
அடம்பிடிக்கும் போது உனக்கான பக்குவத்தை நல்லது கெட்டது தெரிய வைக்க வேண்டும்.
உன் கோபத்தில் உன்னை அமைதியாகி உன்னை நல்வழிபடுத்த வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது.
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ.
நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா செல்வ வளங்களைப் பெற்று சீரும் சிறப்புமாய் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்.
ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் :
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"என்று நம்மால் சொல்ல முடியும் வரை சொல்லவும்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக