செவ்வாய், 8 மே, 2018

பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

தொடர்புடைய படம்பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

1. செல்வங்கள் பெருகும்.

2. கடன் தொல்லைகள் நீங்கும்.
3. நோய்கள் அகலும்.
4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.
5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.
6. வேண்டிய வரம் கிட்டும்.
7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.
8. நீடித்த ஆயுள் கிட்டும்.
9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.ஒவ்வொரு நாளும் மாலை 4.30 – 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால்  அது சனி மஹா பிரதோஷம் எனவும்திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால்  அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

பிரதோஷப் பாட்டு :

சிவாய நமஓம் சிவாய நமஹ!
சிவாய நமஓம் நமச்சிவாய!
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர!
ஆடியபாதா அம்பலவாணா!
கூடியே பாடினோம் பிழைபொறுப்பாயே!
அஞ்செழுத்தில் அமர்ந்த சுந்தரேசா!
நெஞ்சில் நிறைந்திருப்பாயே சொக்கேசா!
சுந்தரர்க்கு தோழனான சுந்தரேசா!
சம்பந்தர்க்கு தந்தையானாய் சொக்கேசா!
மண்சுமந்து கூலிகொண்ட சுந்தரேசா!
பெண் சுமந்து பெருமை கொண்டாய்!
தோடுடைய செவியனே சுந்தரேசா!
தூய வெண்ணீரணிந்தவனே சொக்கேசா!
நரியைப் பரியாக்கிய சுந்தரேசா!
நாரைக்கு முத்தி கொடுத்த சொக்கேசா!
மணிவாசகத்தின் ஒளியானாய் சுந்தரேசா!
தேவாரத்தோடு இணைந்திட்ட சொக்கேசா!
சிவசிவ சிவசிவ சபாபதே!
சிவகாமி சுந்தர உமாபதே!
காலகால காசிநாத பாகிமாம்!
விசாலாக்ஷி சகித விஸ்வநாத ரக்ஷமாம்!
ஆலால சுந்தரம் மீனாட்சி சுந்தரம்!
கல்யாண சுந்தரம் கடம்பவன சுந்தரம்!
நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!
சிவராஜா சிவராஜா சிவகாமி நாதா சிவராஜா!
என்னப்பன் அல்லவா என்தாயுமல்லவா!
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத் தேவா!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!

                சிவசக்தி சிவசக்தி சிவசக்தி ஓம்!

நந்தீஸ்வரர் துதி :

கந்தனின் தந்தையைத்தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்!
நந்தனார் வணங்குவதற்கு நடையினில் விலகி நின்றாய்!
அந்தமாய் ஆதியாய் அகிலத்தை காக்க வைத்தாய்!
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்!
ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்!
பொன்பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்!
சிந்தனை வளம் கொதிப்பை சிகரத்தில் தூக்கி வைப்பாய்!
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்!
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்!
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்!
சோலைக்குயில் வண்ணப் பூவைச் சூடும் நந்தி தேவா!
நாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்!
தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி!
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி!
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி!
தஞ்சமாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்!

சனி கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு பலன் அதிகம். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என்று அழைப்பர். பாற்கடலில் இருந்து அமிர்தத்தோடு தோன்றிய விஷத்தை சிவபெருமான் சனிகிழமையில்தான் உண்டார். ஆகையால்  சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.

அன்று கோயிலுக்கு சென்று வழிபடுவதால் சனியால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் விலகி செல்லும். ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் இன்று விரதமிருந்து வழிபட்டால் சனி பிரதோஷத்தன்று சிவன் கோயிலிற்கு சென்றால் ஐந்து ஆண்டுகள்  சிவன் கோயிலிற்கு சென்ற பலன்களை பெறலாம் என்கிறார்கள் சிவனடியார்கள்.

பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவன் கோவிலுக்கு சென்று அருகம்புல்லை நந்தி தேவருக்கு அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி நந்தியையும் சிவனையும் மனதார வழிபட்டு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின் சனிபகவானை வணங்க  வேண்டும். இதன் மூலம் சனி பகவானால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் விலகும்.

சனி பிரதோஷ வழிபாட்டை எவர் ஒருவர் முறையாக செய்கிறாரோ அவருக்கு 120 வருட பிரதோஷ வழிபாட்டிற்கான பலன்  கிடைக்கும் என்கிறது சிவகாமம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக