ஞாயிறு, 6 மே, 2018

சுகப் பிரசவம் ஆக .. பதிகம்

சுகப்  பிரசவம்  ஆக .. பதிகம்தொடர்புடைய படம்

தன்மீது பக்தி கொண்ட ரத்தினாவதி என்ற செட்டிப்பெண்ணுக்கு ஆபத்தான கால கட்டத்தில் இறைவனே அவளது அன்னையாக மாறி சுகப்பிரசவம் நடைபெற உதவி செய்தார் என்ற ஐதீகமே காரணமாகும்.


    ருவுற்ற பெண்கள்  பிரச்சனைகள் இன்றி  சுகப்பிரசவம் நடக்க வேண்டி தினசரி இந்த பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் எளிதில் பிரசவம் நடக்கும். ஆகவே, பிரசவ சமத்தில் இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்து பலன் அடையலாம்.

    
   திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாமம் தாயுமானவர் ஆகும்.  இந்த கோவில் மலைக்கோட்டையில் உள்ளது.  இது தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. 
இறைவன்பால் அன்பு கொண்ட மங்கை ஒருத்தி காவிரியின் வட கரையில் வசித்து வந்தாள். இவளுக்குப் பிரசவ காலம் ஏற்பட்ட போது காவிரியில் வெள்ளம் பெருகியதால் தாய் தந்தையர் வந்து உதவ முடியவில்லை. ஆதனால்,  இந்த மாது திருச்சிராப்பள்ளி மேவும் இறைவனை வேண்ட,  இறைவன் அவளுடைய தாயின் வடிவில் வந்து மருத்துவம் பார்த்து பிரவசம் இனிதே நடைபெற அருளியதால்   “ தாயுமானவர் “ என்று அழைப்படலானார்.

இந்தத் தலத்து இறைவன் மீது திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய இந்த பதிகத்தினை  பாராயணம் செய்து வந்தால்  சுகப்பிர்சவம் இனிதே நடைப்பெறும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.

1. நன்றுடையானைத்  தீயதிலானை நரை வெள்ளேறு
    ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
    சென்றடையாத  திருவுடையானை சிராப்பள்ளி
   குன்றுடை யானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே

2. கைம் மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழை பாய் வாவ்
    செம்முகமந்தி கருவரை பேறுஞ்சிராப்பள்ளி
    வெம் முக வேழத்து ஈருளி போர்த்த விகிர்தா! நீ
    பைம்முக நாகம் மதிஉடன் வைத்தல் பழி அன்றே?

3. மந்தம் முழவம் மழலை ததும்பவரை நிழல்
    செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளிச்
    சந்தம் மலர்கள் சடை மேலுடையார் விடையூரும்
    எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

4. துறை மல்கு சாரற் சுனை மல்கு நீலத்திடை வைகிச்
    சிறை மல்கு வண்டுந் தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
    கறை மல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள் எம்
   பிறை மல்கு சென்னியுடையவன் எங்கள் பெருமானே

5. கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
    சிலை வரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
    தலைவரை  நாளுந் தலைவரல்லாமை  யுரைப்பீர்கள்
   நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே.

6. வெய்யதண் சாரல் வரிநிற வேங்கைத் தண்போது
    செய்ய பொன் சேருஞ் சிராப்பள்ளி மேய சொல்வனார்
   தையலோர் பாகம் மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில்
   ஐயமும் கொள்வர்  ஆரிவர் செய்கை அறிவாரே.

7. வேயுயர் சாரல் கருவிரலூகம்  விளையாடும்
    சேயுயர் கோயிற் சிராப்பள்ளி  மேய செல்வனார்
    பேயுயர் கொள்ளி கை விளக்காகப் பெருமானார்,
    தீயுகந்தாடல் திருக் குறிப்பாற் றாகாதே.

8. மலை மல்கு தோளன் வலிகெட வூன்றி மலரோன் தன்
    தலை கலனாகப் பவிதிரிந்துண்பர் பழியோரார்
   சொலவலை வேதஞ் சொல்வல கீதஞ் சொல்லுங்கால்
  சில போலுஞ் சிராப்பள்ளி சேடர் செய்கையே,

9. அரப்பள்ளி ஆயினும் மலர் உறைவானும் அறியாமைக்
    கரப்பள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல் சூழ்ந்த
   சிரப்பள்ளி மேய வார் சடைச் செல்வர் மனைதோலும் 
   இரப்புள்ளீர் உம்மையே திலர் கண்டால் இகழாரே.

10. நாணாது உடை நீத்தோர்களுங் கஞ்சி நாட் காலை
     ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்குஞ் சொல்
   பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
   செணார் கோயில்  சிராப்பள்ளி சென்று சேர்மினே,
 
11. தேனயம் பாடுஞ் சிராப்பள்ளி யானைத் திரை சூழ்ந்த
     கானல் சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
     ஞான சம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்
     வான சம்பந்தத் தவரொடு மன்னி வாழ்வாரே.
                       ---  திருசிற்றம்பலம்  ----   

   
  
                                                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக