பெரியவா பார்வையில்
ஈஸ்வரன் படைப்பில் இந்த பூலோகத்தில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் தொன்று தொட்டு இருந்து வருகிறது.. .சூரியன் சந்திரன் ஆண் பெண் இன்பம் துன்பம் இன்னும் எத்தனையோ இருவகை படைப்புகள். இரு வகைஈஸ்வரன் படைப்பில் இந்த பூலோகத்தில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் தொன்று தொட்டு இருந்து வருகிறது.. .சூரியன் சந்திரன் ஆண் பெண் இன்பம் துன்பம் இன்னும் எத்தனையோ இருவகை படைப்புகள். இரு வகை படைப்பிலேயும் மிகவும் உயர்ந்த படைப்பு மனித பிறவி..
எண்பத்து நான்கு லக்ஷம் உயிரினங்களில் மிக உன்னதமான படைப்பு மனித படைப்பு. மற்ற உயிரங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒரே வித்யாசம் அறிவை பயன்படுத்தி சிந்திக்க தெரிந்த படைப்பு மனிதப்படைப்பு. விலங்குகளுக்கு பசியெடுத்தால் சாப்பிடும். உறக்கம் வந்தால் உறங்கும். காமம் கொண்டால் காமுறும். பசி எடுத்தால் வேட்டை ஆடி உண்ணும். அவைகளுக்கு தங்களுடைய பெருமையும் சக்தியும் தெரியாது.
ஆனால் மனிதனுக்கு அப்படியில்லையே!. மனிதன் சிந்திக்க தெரிந்தவன்.. இரு வகை படைப்பில் நல்லவைகளை மட்டும் தெரிந்தது கெட்டவைகளை விலக்கி செயல் பட தெரிந்தவன் மனிதன்..
ஒரு ரோஜா செடியில் கூட அழகான ரோஜா பூவும் இருக்கின்றன. அதே சமயத்தில் கையில் குத்தி ரத்தம் வரவழைக்கும் முட்களும் இருக்கின்றன. நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக முட்களை தவிர்த்து மலர்களை மட்டும் பறிக்கிறோம். இது நம் அறிவை கொண்டு செயல் படுவதால்தானே.. இதே தாத்பர்யம் தான் இங்கும்..
அசைவம் சாப்பிடுபவர்களின் குணாதிசயங்கள்
- ரஜோ குணமும் தமோ குணமும் மேலோங்கி இருக்கும். சத்துவ குணம் பின்னுக்கு தள்ளப்படும்.
- எளிதில் உணர்ச்சி வயப்படுவார்கள்.
- கட்டுக்கு அடங்காமல் கோபம் எளிதில் வரும்.
- கோபம் கொலையில் கூட முடியலாம்.
- காமத்திற்கு எளிதில் வயப்பட்டு விடுவார்கள்.
- செயல் படுவதற்கு முன்னால் உணர்வுகள் மேலோங்கி அறிவு பூர்வமான சிந்தனைகளை சிதைத்து விடும்
சைவம் சாப்பிடுபவர்களின் குணாதிசயங்கள்
- சாத்வீக குணங்கள் மேலோங்கி இருக்கும்.
- ரஜோ குணமும் தமோ குணமும் பின்னுக்கு தள்ளப்படும்
- எளிதில் அந்த அளவிற்கு உணர்ச்சி வயப்பட்ட மாட்டார்கள்.
- எதையும் சிந்தித்து செயல் படுவார்கள்.
- காமத்திற்கு அவ்வளவு எளிதில் அடிமையாக மாட்டார்கள்.
அந்த காலத்தில் இருந்தே காட்டில் தவம் செய்த முனிவர்களும் ரிஷிகளும் சைவ உணவையே உட்கொண்டு வந்தார்கள்..
அசைவம் சாப்பிடுபவர்கள் விவாதத்திற்கு சொல்லுவார்கள். கீரை பறித்து சாப்பிடுகிறீர்களே. அந்த கீரையை பறிக்கும் பொழுது கீரை செடிக்கு வலிக்காதா? என்று கேட்பார்கள்
இதற்கு மஹாபெரியவா சொல்கிறார். நிச்சயம் வலிக்கும் . ஆனால் உயிருள்ள விலங்குகளை வெட்டி சாப்பிடும் பொழுது இருக்கும் வலியும் உணர்வுகளும் தாவரங்களுக்கு அவ்வளவாக இருக்காது.
இது நான் நினைப்பது. எந்த விலங்கு தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்டுத்துகிறதோ அந்த விலங்கு மனித ஜாதிக்கு ஒப்பானது. அந்த விலங்கை கொன்று உண்ணுவது ஒரு மனிதனை கொண்டு சாப்பிடுவகற்கு சமம். (cannibalism).
உதாரணத்திற்கு நாம் வீட்டில் வளர்க்கும் பசுமாடுகளை எடுத்து கொள்வோம்..வீட்டில் எஜமானர் இறந்து விட்டால் அந்த வீட்டின் பசு மாடு உணவு உட்கொள்ளாது. கண்களில் கண்ணீர் விட்டு அழும். பார்த்திருக்கிறீர்களா? இங்கு தான் மனிதன் அறிவை பயன் படுத்தி சிந்திக்க வேண்டும்.
சன்யாசிகள் சாப்பிடும் உணவு: ஜீரணோபரணம்
சன்யாசிகள் இலக்கணப்படி வாழ்வதென்றால் எதையும் செடியில் இருந்தோ மரத்தில் இருந்தோ பறித்து உண்ணக்கூடாது. மரங்களில் இருந்து தானே கீழே விழும் பழங்களைத்தான் சாப்பிட வேண்டும்.அதுவும் விதைகளை சாப்பிடக்கூடாது . இந்த சன்யாச உணவு பழக்கத்திற்கு ஜீரணோபரணம் என்று பெயர்.
எப்பொழுது நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நம்முடைய உணவு பழக்க வழக்கங்களே காரணம் என்று தெரிந்து விட்டதோ நாம் ஏன் நாம் சாப்பிடும் உணவில் ஒரு கட்டுப்பாடு வைத்து கொள்ளக்கூடாது..
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக