உனக்கு வந்த சோதனைதான் சாதனையாக மாறப்போகிறது!
நான் பாபாவை எனக்கு தெரிந்த அளவில் நன்றாகத்தான் வணங்குகிறேன், ஆனால் அவர் எனக்கு மட்டும் சோதனையைத்தான் தருகிறார். இது ஏன் எனத் தெரியாமல் பாபாவினை வணங்கும் பல பக்தர்கள் தவிக்கிறார்கள். சோதனைகள் என்பவை ஆளாளுக்கு ஏற்றாற்போலத்தான் வரும். ஆன்மிக வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு உலக வாழ்க்கையில் விரக்தி ஏற்படவேண்டும் என்பதற்காக சோதனை வரும்.
அவர்கள் எதை சாதிக்க விரும்புகிறார்களோ அந்த சாதனையை வெற்றியாக்க சோதனைகள் தரப்படும். சுகத்திற்குப் பிறகு துக்கம் வரும் என்பதை புரியாதவர்கள்தான் சுகம் வந்தபோது அதை இன்முகத்தோடு ஏற்று களிக்கிறார்கள். துக்கம் வந்ததும் தாளாமல் அழுகிறார்கள். துக்கத்திற்குப் பிறகு வருகிற சுகம் கடைசி வரை நிலைத்து நீடிக்கும். அதை தக்க வைத்துக் கொள்ளும் படிப்பினையைத் தருவதற்காக பாபா தன் பக்தனுக்குத் சோதனைகளைத் தருகிறார்.
நமக்கு வர வேண்டியவைகளை வரவேற்றாலும், அல்லது முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும். அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதே சோதனையின் நோக்கம். சோதனைகள் நம்மை திடப்படுத்த வருகின்றன என்பதை உணர்ந்திட வேண்டும். உதாரணக் கதை ஒன்று கூறுகிறேன் கேளுங்கள்:
ஒரு திருடன் தனது மகனுக்குத் திருட்டுத்தொழிலைக் கற்பிக்க விரும்பினான். மகனுடன் சேர்ந்து ஒரு சேட்டுக் கடையில் நகையைக் கொள்ளையடிப்பது என முடிவு செய்து அந்தக் கடைக்குச் சென்று சத்தமே வெளியில் கேட்காதவாறு சுவரில் ஓட்டை போட்டார்கள்.
பையன் சொன்னான்: “அப்பா நான் போய் திருடிவருகிறேன்” என்று. மகனை ஆசீர்வதித்து விட்டு வெளியே காவலுக்கு நின்றான் அப்பா. பையன் திருடியதை மூட்டை கட்டுவதற்குள் அப்பா திடீரென ’திருடன், திருடன்’ என சத்தம் போட்டான். இதைக் கேட்டு திகைத்த பையன் திருட்டு மூட்டையுடன் பக்கத்திலிருந்த ஒரு பெரிய பெட்டியில் படுத்துக்கொண்டான்.
உனக்கு வந்த சோதனைதான் சாதனையாக மாறப்போகிறது!
நான் பாபாவை எனக்கு தெரிந்த அளவில் நன்றாகத்தான் வணங்குகிறேன், ஆனால் அவர் எனக்கு மட்டும் சோதனையைத்தான் தருகிறார். இது ஏன் எனத் தெரியாமல் பாபாவினை வணங்கும் பல பக்தர்கள் தவிக்கிறார்கள். சோதனைகள் என்பவை ஆளாளுக்கு ஏற்றாற்போலத்தான் வரும். ஆன்மிக வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு உலக வாழ்க்கையில் விரக்தி ஏற்படவேண்டும் என்பதற்காக சோதனை வரும்.
ஒரு திருடன் தனது மகனுக்குத் திருட்டுத்தொழிலைக் கற்பிக்க விரும்பினான். மகனுடன் சேர்ந்து ஒரு சேட்டுக் கடையில் நகையைக் கொள்ளையடிப்பது என முடிவு செய்து அந்தக் கடைக்குச் சென்று சத்தமே வெளியில் கேட்காதவாறு சுவரில் ஓட்டை போட்டார்கள்.
பையன் சொன்னான்: “அப்பா நான் போய் திருடிவருகிறேன்” என்று. மகனை ஆசீர்வதித்து விட்டு வெளியே காவலுக்கு நின்றான் அப்பா. பையன் திருடியதை மூட்டை கட்டுவதற்குள் அப்பா திடீரென ’திருடன், திருடன்’ என சத்தம் போட்டான். இதைக் கேட்டு திகைத்த பையன் திருட்டு மூட்டையுடன் பக்கத்திலிருந்த ஒரு பெரிய பெட்டியில் படுத்துக்கொண்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக