திங்கள், 14 மே, 2018

கவலை போக்கும் தீபம் ..

Image may contain: indoor

கவலை போக்கும் தீபம் ..
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது. தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும்.

பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாகத் தீப வழிபாடு செய்யலாம். வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி,1 மணி நேரமாவது எரிவதற்கு எண்ணை விட்டு,தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.
வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.
தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு மாதம் அமாவாசை மற்றும் பவுர்ணமியில் திருவிளக்கு ஏற்றி விளக்கு பூஜை செய்தால் கீழ்கண்டபடி பலன்கள் கிடைக்கும்.
சித்திரை- தான்யம் உண்டாகும்
வைகாசி- செல்வம் கிடைக்கும்
ஆனி- விவாகம் நடக்கும்
ஆடி- ஆயுள் விருத்தி
ஆவணி-புத்திரபேறு உண்டாகும்
புரட்டாசி-பசுக்கள் விருத்தி
ஐப்பசி- பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை-நற்கதி உண்டாகும்
மார்கழி-ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்
தை-வாழ்வில் வெற்றி கிடைக்கும்
மாசி-துன்பம் அகலும்
பங்குனி-தர்மசிந்தனை பெருகும்
சுபகாரியங்களில் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்து விளக்கு ஏற்ற வேண்டாம். குத்து விளக்கு மும்மூர்த்திகளின் வடிவம்.


விளக்கின் அடிப்பாதம் - சரஸ்வதி பிரம்மம் அம்சம்

நடுதண்டுப் பகுதி - லட்சுமி நாராயண அம்சம்

நெய் தங்கும் பகுதி - பார்வதி பரமேஸ்வர அம்சம்

மேல்நோக்கி நீண்ட பகுதி - மஹேஸ்வர அம்சம்

சிகரம் - சதாசிவ அம்சம்

நெய் - நாதம்

திரி - பிந்து

சுடர் - திருமள்

ஒளிப்பிழம்பு - கலைமகள்

நெருப்பு 
- மலைமகள்

குத்து விளக்கில் அலைமகள்,மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இருப்பதால் கடவுளின் அம்சமாக கருதப்படுகிறது. 
கிழக்குத் திசை பார்த்து விளக்கேற்றி  வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்த்து   விளக்கு ஏற்றி வைக்கக் கூடாது.
காலையிலோ மாலையிலோ  கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.குளித்தவுடன் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.
வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.
தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.
மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.
இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.
வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக