திங்கள், 14 மே, 2018

சங்கின் மகிமை : வழிபாடு

சங்கின் மகிமை : வழிபாடு 
சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். 
அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 
சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது. 
இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர். 
வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். 
மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. 
வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. 
ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. 
இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும். 
ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். 
தொடர்புடைய படம்
கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம்




















1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும். 
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது. 
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். 
இதையே தர்ம சாஸ்திரம். "சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ... ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. 
சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். 
கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார். 
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். 
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். 
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும். 
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். 
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும். 
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம். 
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும். 
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது சங்கை பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும், ஏனேன்றால் பல அரிய புண்ணிய சக்திகளும், தர்ம சக்திகளும் சங்குகளில் குடிகொண்டிருக்கின்றன புனித தீர்த்தங்கள், கடல்களில் சங்குகளில் நீரை ஏந்தி தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசியை நமக்கு பெற்றுத் தருகிறது. நல்ல ஒழுக்கத்திற்கும் நலவழி காட்டுகிறது.
12. இறைவனை வழிபடsanghu poojai க்கான பட முடிவு
வாஸ்து பூஜை, அம்பாள் பூஜை, சிவ, விஷ்ணு, பிரம்ம பூஜைகளுக்கான பிரத்யேக சங்குகள் வலம்புரிச் சங்குகள் தான். அனைத்துச் சங்குகளில் எப்போதும் விதவிதமான ஓங்காரப் பிரணவ சப்தம் ஒலித்துக் கொண்டிருக்கும். இறைவன் பிரணவசக்கரமகவும், பிரணவ இயந்திரமாகவும், பிரபஞ்சத்திற்கு வழங்கிய போது சங்கில் பூரணம் பெற்றது.
13. செல்வம் சேர்ந்து, புகழ் ஓங்க
தினம் தோறும் சங்கு பூஜை செய்தால் செல்வம் சேரும். பிணிகள் விலகும். சங்கை நீரில் மூழ்கி எடுத்து துடைத்து சந்தனம், குங்குமம், புஷ்பம் சாற்றி சங்கில் தூய நீர் விட்டு இறைவனை பூஜித்து வேண்டும். சிறிது நீரை தலையில் தெளித்துக் கொண்டு, மறு நாள் அந்தச் சங்கு நீரை குடித்துவிட வேண்டும். சங்கு தீர்த்தம் அருந்துவதால் உங்கள் புகழ் ஓங்கும்.
14. இயற்கை சீற்றங்களைக் கூட மாற்றுகிற ஆற்றால் இந்த சங்கொலிக்கு உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. சங்கு தீர்த்தத்தால் செய்யப்படும் ஆராதனையானது, பூமா தேவிக்கு மிகுந்த அமைதியை அளிப்பதாக விளங்குகிறது.
15. கல்வியும், செல்வமும் பெருக
சங்கில் கல்வியும்,செல்வமும், சகல ஐஸ்வர்யமும் பொங்கும், சங்கில் கலைமகளின் கடாட்சியமும், நிறைந்திருக்கிறது. நான் முகனும், கலைமகளும் தம்பதி சகிதமாக அருள் வழங்குகிறார். சங்கிற்கு அருகில் இருக்கும் பொருட்களுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம், பேனா , பென்சில் போன்றவற்றை  வைத்து கல்விக்காவும் தொழிலுக்காகவும் பயன்படுத்தினால் எடுக்கும் முயற்சியில் இனிதே வெற்றி கிடைக்கும்.
16. சந்திராஷ்டம பலன் பெற
மேலும் ஒவ்வொரு ராசிக்கும் எட்டாமிடத்தில் சந்திரம் வரும் பொழுது அதைச் சந்திராஷ்டமம் என்கிறோம். அந்த தினகளில் மனம் ஒரு நிலைப்படவும், அலைச்சல்கள், எதிர்ப்புகள் குறையும், காரியத்த்டைகள் அகலவும், இச்சங்குகளில் குங்குமத்தை பூஜித்து, பவனானுக்குரிய மந்திரங்கள் ஓதி நெற்றியில் இடுவதுடன் செல்லும் இடமெங்கும் சந்திரனுக்குரிய அரிசியை சங்கில் வைத்து வழிப்பட்டு அதை எடுத்து இருக்கும் அரிசியுடன் சேர்த்து தானம் செய்தாலும் நல்லது சந்திராஷ்டத்தின் விளைவுகள் தாணியம்.
17 . சங்கு பூஜை
தினமும் காலையில் எழுந்தவுடன் காலைக் கடங்களை முடித்து பூஜை அறைக்குச் சென்று நேற்று சங்கில் ஊற்றி உள்ள நீரை வீட்டின் வாசல்படி மற்றும் முக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும். சங்கை மலர்களால் அர்ச்சித்து ஓம்,ஓம்,ஓம் என்று கூறி தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமையன்று பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து செய்ய வேண்டும். மறு நாள் சனிக்கிழமை அந்தப் பசும்பாலையும், துளசியையும் சாப்பிட்டு வந்தால் எப்படி நாள்பட்ட வியாதியும் குணமாகும். இந்த சங்கு பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வழி பட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் நாடி வரும். தினம் தினம் சங்கு பூஜை செய்பவர் இல்லத்தில் எல்லா எதிர்ப்புகளும் நீங்கி, அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு கிட்டும்.
18. சங்கு அபிஷேகம்தொடர்புடைய படம்
108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு புனித தீர்த்தத்தை அதில் நிரப்பி இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகம் சங்காபிஷேகம் எனப்படும். கார்த்திகை மாதம் சோம வாரத்தன்று சிவபெருமானுக்குச் செய்வது மிகவும் சிறப்பானது. சங்காபிஷேகம் கண் குளிரக் கண்டு இறைவனைத் தரிசித்து வழிபடுவதால் மனமகிழ்வு கூடும். சகல செல்வங்களும் வந்து சேரும். இப்படிப் பெருமைகள் பெற்ற வலம்புரிச் சங்கில் காசுகளை வைத்து முக்கிய தினங்களில் வழிபட்டு வந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது.
19.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தல் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.
20. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
21.வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நனம் செய்தால், நமக்கு 

பிரம்மஹத்தி தோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். "சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ ! "அங்க லஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்" என்று விளங்குகிறது. 

 சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
22: நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப்பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
23. வாஸ்து தோஷம் உள்ள  வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
24:செவ்வாய் தோஷம் விலக
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலப்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
25.அதிகக் கடன் வாங்கியவர்கள் பெளர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16- வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
26சுத்தமான் உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது ஓடிவிடும்.
27.ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்தால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
குழந்தைக்கு ஜூரம் போக
28.பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உதராட்சம் இட்டு அது ஊரிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோசஹ்ங்கள் அனைத்தும் விலகும்.
29.பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசிபோட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப் பஞ்சமே வராது.

30.காத்து கருப்பு சேஷ்டை உள்ள வீட்டில், பூஜை அறையில் ஒன்பது இடம்புரி சங்குகளை அடுக்கி ஒவ்வொரு சங்கினுள்ளும், ஒரு குண்டு மஞ்சள், ஒரு கருகுங்கிலிய கட்டி, ஒரு படிகாரக்கட்டி இவைகளை போட்டு தூப தீபம் காட்டி, வீட்டின் நான்கு மூளைகளிலும், நான்கு சங்குகளை புதைக்கவேண்டும். மீதம் இருக்கும் ஐந்து சங்குகளையும் வீட்டின் வாசலுக்கு நேராக கீழே புதைத்து விடலாம். இப்படி செய்தால் வீட்டில் காத்து கருப்பு சேஷ்டை அனுகாது.
மனை தோஷம் விலக
31.வீட்டை சுற்றி எட்டு திக்கிலும் எட்டு வலம்புரிச்சங்கையும் மண்ணில் புதைத்து விட்டால் மனை தோஷம் விலகும்.
32:புது வீட்டின் வாசப்படிக்கு கீழ் மூன்று இடம்புரி சங்கும், வாசப்படிக்கு மேல் மூன்று வலம் புரி சங்குகளையும் வைத்து வீடு கட்டினால் மங்கள கரமான வீடாக இருக்கும்.
புனித தீர்த்தமாக மாற
33.வீட்டின் கிணற்றிலோ அல்லது போரில் பெளர்ணமி திதி அன்று சந்திர உதயத்திற்கு பின் வலம்புரி சங்கினுள் இறைவன் படம் பொறிக்கப்பட்ட தங்க காசு அல்லது வெள்ளி காசு போட்டு சங்கில் கடல் நீரை நிரப்பிய வாழை மரத்தின் சாரை அதில் கொஞ்சம் இட்டு கங்காதேவியை மனதில் நினைத்து பூஜித்து கினற்றிலோ அல்லது போரிலோ போட்டு விட்டால் அந்த நீர் புனித தீர்த்தமாக மாறி விடும்.
ஜீவன் முக்தி பெற
34.மனிதர்கள் யாரேனும் இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவர்களுக்கு பச்சை பசும்பாலை வலம்புரி சங்கின் மூலம் வாயிலும், உச்சி தலையிலும் ஊற்றி வந்தால் அவர்களுக்கு ஜீவ முக்தியும், மறுபிறவி இல்லாமையும் இருக்கும்.
தீர்க்க  சுமங்கலியாக வாழ
35.சுமங்களிபூஜை செய்து குறைந்தது ஐந்து சுமங்கலிகளுக்கு வலம்புரி சங்கை தானமாககொடுத்தால், பெண்கள் தீர்க சுமங்களியாகவும் ஆரோக்கியத்துடன் நல்ல பிள்ளை பேறுகளும் நிலைத்து இருக்கும்.
எதிரிகள் பிரச்சனை தீர
36. மூன்று பெரிய இடம் புரி சங்கை அமாவாசை திதி அன்று  அபிஷேக ஆராதனை செய்து காளி அல்லது துர்கையை மனதில் நினைத்து கொண்டு பூஜை முறையுடன் அபிஷேக ஆராதனை செய்து ஒரு சங்கை வாசற்படியில் புதைத்து விட்டு இரண்டாவது சங்கை ஒரு சிகப்பு துணியில் கட்டி உத்திரத்தில் கட்டிவிட வேண்டும், மூன்றாவது சங்கை பூஜை அறையில் ஒரு பித்தளை கிண்ணத்தில் வைத்து அச்சங்குடன் கருகுங்குளியமும் மூன்று விரல் மஞ்சளையும் சேர்த்து வைத்து சந்தனம் பொட்டு இட்டு அமாவசை பெளர்ணமி வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் காளிதேவியையோ அல்லது துர்கையையோ நினைத்து பூஜித்து வந்தால் எதிரிகள் பிரச்சனை இருக்காது மற்றும் செய்வினை தொல்லைகள் அகலும்.
குடும்பம் சுபிக்ஷ்ம் பெருக
37:வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகூர்த்த நாளில் சுபவேளையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம்புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழை மரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேளையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால் நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும்.குடும்பம் சுபிட்ஷம் பெறும். பணம் வீண்  விரையம் ஆகாது.தெய்வகுறைகள் விலகும். குல விருத்தி அடையும்.
ஐஸ்வர்ய கடாசம் பெருகும்.
38: வலம்புரி சங்கில் நெய் ,தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு தேன் விட்டு பஞ்சு திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் ஐஸ்வர்ய கடாசம் பெருகும்.சுபகாரியங்கள் நடை பெறும்.
துஷ்ட சக்திகள் விலக
39. இடம்புரி சங்கில் இலுப்பை என்னை ஊற்றி சிறிதளவு வேப்பமரத்து வேரை அதில் இட்டு சிகப்பு சேலை துண்டு திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் துஷ்டசக்திகளும், தரித்திரங்களும் விலகும்.

40. வலம்புரி சங்கு வழிபாடு நமக்கு வளத்தை கொடுக்கும். இடம்புரி சங்கு வழிபாடு நமக்கு இடர்களை நீக்கி நன்மையை உண்டாக்கும்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக