ஞாயிறு, 13 மே, 2018

ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

தொடர்புடைய படம்
அன்பு தோழிகளுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.எனக்கு பிடித்த கடவுளில் ஆஞ்சநேயரும் ஒருவர்.அவர் நடக்கவே முடியாத காரியங்களை மிகச்  சுலபமாக நடத்தி வைக்க கூடியவர்.கணவன் மனைவி சேர்த்து வாழ வழிவகுக்க கூடியவர்.

நாம் எந்த கடவுளை வணங்குவதாக இருந்தாலும் அவர்மீது முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும்.ஒருதடவை நம் கோரிக்கைகளை சொல்லி விட்டு, உடனே அது நிறைவேறவில்லை என்று சொல்லுதல் கூடாது.பூஜைகள் செய்யாவிட்டாலும் ஒரு 5நிமிடம் இறைவனை நினைத்து ஆத்மாத்தமாக கண்ணீர் மல்க உங்கள் கோரிக்கைகளை சொல்லுங்கள்.நிச்சயம் நம் குரலுக்கு செவிசாய்ப்பார் இறைவன் .நம் வீட்டில்  அம்மா  நமக்கு என்ன தேவைன்னு பார்த்து பார்த்து செய்வார்கள்.மானிட பிறவியான அம்மாவே அப்படி என்றால் நம்மை இந்த உலகத்தில் வாழ வைக்கும் அம்பாள் சும்மா இருப்பாளா?சொல்லுங்கள்.அம்பாள் மட்டுமல்ல எந்த தெய்வமும் நமக்கு நல்லது செய்யத்தான் செய்வர்.ஆகையால் மனம் தளராமல் ஒரே நிலையில் இருந்து இறைவனைப் பிராத்தியுங்கள்.

இது என்னுடைய எண்ணம்.ஆஞ்சநேயர் சீரஞ்சீவி.நம்மில் ஒருவராக இந்த உலகத்தில்  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.கடவுளை வணக்க நேரம் எனக்கு இல்லை நான் வேலைக்கு போகிறேன் என்று நிறைய பேர் சொல்லுவது உண்டு.நீங்கள் ஆடம்பரமாக பூஜை செய்ய வேண்டாம். ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் என்று உங்களால் முடிந்தவரை சொல்லுங்கள்.ஸ்ரீ ராமர் என்றால் ஆஞ்சநேயருக்கு மிகவும் விருப்பம் என்பது  நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.உங்களால் எவ்வளவு முறை சொல்ல முடியுமோ சொல்லுங்கள். ஸ்ரீராம் என்று சொன்னவுடன் ஆஞ்சநேயர் நம் கவலைகளை போக்க ஓடோடி வருவார்.

இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் மட்டும் போதும்.இந்த உலகத்தையும் நம் கைக்குள் கொண்டு வரலாம்.

ஜெய் ஸ்ரீராம் 




ஆஞ்சநேயரை  வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் 
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
இராமாயணத்தில் முக்கிய அங்கமாக திகழ்பவர் அனுமன் தான்.
வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.தொடர்புடைய படம்
அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.
verrilai malai anuman' க்கான பட முடிவு

தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.
தொடர்புடைய படம்
அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும்.
அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.
அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும்.
துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.

ஸ்ரீ ராம் என்று சொல்லுங்கள் முடிந்தால் இந்த சின்ன ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி பலன் பெறுங்கள். 

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாக 
ஸ்ரீராம தூத மஹாதீர 
ருத்ரவீர்ய ஸமத் பவ 
ஆஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத 
வாயு புத்ர நமோஸ்துதே.  

ஆஞ்சநேயரை வணங்கி அவர் அருளை  அனைவரும் பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.நிச்சயம் அவர் அருளால்  நாம் எல்லோரும் நன்றாக இருப்போம். 

ஜெய்  ஸ்ரீ ராம்  

இந்த பதிவை காண வந்த என் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல.உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.அது மேலும் எழுத தூண்டுகோலாக அமையும்.



வாழ்க வளமுடன் ஈஸ்வரி சரவணன் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக