வியாழன், 10 மே, 2018

வாசற்படியில் என்ன செய்ய வேண்டும்?

தொடர்புடைய படம்


அன்பு தோழிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மங்களமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இந்த பதிவு குடும்பத்தலைவிகளுக்கு பயன் உள்ளதாக அமையும்.பொதுவாக வெள்ளிக்கிழமை லக்ஷ்மி குபேர பூஜை தொடர்ந்து நான் செய்கிறேன்.அத்துடன் நான் வீட்டில் வெள்ளிக்கிழமை என்ன செய்கிறேன் என்பதை இந்த பதிவில் சொல்கிறேன். 

வாசற்படியில் என்ன செய்ய வேண்டும்?



ஒருஇல்லத்தில் மங்கள சக்திகளை, லட்சுமி கடாட்ச சக்திகளை அளிக்கும் குபேரலோகத்திலிருந்து வரும் தேவதைகள் இந்த வாசற்படிகளில்தான்உறைகின்றன. மஞ்சள் நீரால் அலம்பி வழிபடுவதால் குபேர சக்திகள் பெருக ஏதுவாகும்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாசல் அலம்பி செம்மண்பட்டை  இட வேண்டும்.நம் வீட்டு தலைவாசல் படிக்கு இருபுறமும் மஞ்சள் பூசி சந்தனம்,குங்குமம் வைக்க வேண்டும்.தினமும் வாசற்படியை மஞ்சள் நீரால் அலம்ப வேண்டும். இது மிகவும் அவசியம். 
தொடர்புடைய படம்

வீட்டுவாசலில் துளசி செடி வளர்ப்பது மிகவும் நல்லது.அதற்கும் மஞ்சள் குங்குமம் வையுங்கள்.அதன்முன் செம்மண் பட்டை  இட்டு  கோலம் போடவேண்டும்.கோலம் போடுவது என்றால் கோலப்பொடி மட்டும் பயன்படுத்தக்கூடாது.கோலப்பொடியுடன் அரிசி மாவு கலந்து கோலம் போடுங்கள்.அந்த மாவு கொண்டு கோலம் போடும் போது  எறும்புகள்,சின்ன சின்ன பூச்சிகள் அதை சாப்பிடும்.அதனால் நாம் செய்த பாவங்கள் தொலையும்.வீட்டில் தெய்வசக்தி நிலைத்திருக்கும்.தொடர்புடைய படம்


 வாசற்படிகளை காலால் மிதித்தல் கூடவே கூடாது.நான் துளசி செடிக்கு வெள்ளிக்கிழமை பூஜை செய்வது உண்டு.துளசி சுலோகம் சொல்லி அகல் விளக்கு ஏற்றி வையுங்கள்.
துளசி இருக்கும் இடத்தில் எமபயம் ,தீய சக்திகள் அண்டாது. 

கோவில்களில் மட்டுமிண்டி, வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி கடவுளை தொழுது வணங்கும் பண்பு பெரும்பாலானவர்களது வீடுகளில் நாம் காண முடியும். விழா காலங்கள், முக்கிய பூஜை நாட்கள் என்று இல்லாமல், தினமும் அகல் விளக்கு ஏற்றும் பழக்கத்தை பல வீடுகளில் காணலாம்.

மார்கழி மாதத்தில் தினமும் காலையில் 2அகல் விளக்கை வீட்டுவாசல்படியில் ஏற்றுங்கள்.மார்கழி ஆண்டாளுக்கு உரிய நாளாதலால் காலையில் தீபம் ஏற்ற வேண்டும்.மற்ற மாதங்களில் தினமும் மாலை நேரத்தில் வாசலில் நீர் தெளித்து சதுர  வடிவ கோலம் போட்டு,2காம்பு உடைய வேப்பிலை செடியை கிழக்கு திசை நோக்கி அதன் நுனி இருக்குமாறு வைத்து அதன்மேல்  2அகல்விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி ,பஞ்சு திரி போட்டு ஏற்ற வேண்டும். 5வகை எண்ணெய் ஏற்றக்கூடாது. கவலை போக்கும் அகல் விளக்கு க்கான பட முடிவு

பஞ்சு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றுவதால் வாழ்க்கையில் சுபம் கூடும்அகல் விளக்கை கிழக்கு திசையில் ஏற்றினால் உங்களை பின்தொடரும் துன்பங்கள் நீங்கும், சமூகத்தில் நல்ல மதிப்பும், பெயரும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அகல் விளக்கு படம் க்கான பட முடிவு

வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு வேப்பிலை கிடைப்பது அரிது.ஆதலால் மாலை நேரத்தில் 2அகல் விளக்குகளை ஏற்றி லக்ஷ்மியை நம் வீட்டிற்குள் அழைக்கலாம்.தினந்தோறும் வீட்டுவாசலில் விளக்கு ஏற்றுவதால் சீக்கிரமாக நம் எல்லா குறைகளும் நீங்கி விடும். 

வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.விஷேச நாட்கள் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளும் கட்டுவது நம் வீட்டிற்கு நன்மையை தரும்.
 வாசற்படி பூஜை க்கான பட முடிவு
 மாவிலை தோரணம் காய்ந்தவுடன் அதை கழட்டி விட வேண்டும்.காய்ந்த இலை வாசலில் இருப்பது நல்லதல்ல.ஆதலால் தொடர்ந்து மாற்றி கொண்டு இருங்கள்.அழகுக்காக பிளாஸ்டிக் மாவிலையை கட்டாதீர்கள்.அதேபோல் எனக்கு காலையில் நேரம் இல்லை என்று சொல்லி ஸ்டிக்கர் கோலத்தை வீட்டு வாசல்படியில் ஓட்டக்கூடாது.தினமும் குடும்ப தலைவி கையால் கோலம் போடுவது சிறந்தது.நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமெனில் குடும்ப பெண் தன் கையால் கோலம் போடவேண்டும்.நம்முடைய வேலைக்காரர்களை கொண்டு கோலம் போடக்கூடாது.நம் வீட்டு பெண்குழந்தைகளுக்கு நாம் இதை கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும்.நாளை அவர்கள் குடும்பத்தையும் நல்ல ஆன்மீக வழிகளில் கொண்டு செல்ல அது வழிவகுக்கும்.

இந்த முறைதான் நான் கடைபிடித்து வருகிறேன்.குழந்தைகளுக்கு  பண்டிகைகள் எதற்காக செய்கிறோம் ?எப்படி செய்ய வேண்டும்? என சொல்லுவது நம் ஒவ்வொரு குடும்ப ஸ்தீரிகளுடைய கடமையாகும். நம் முன்னோர்கள் இதை எல்லாம் கடைப்பிடித்ததால் தான் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்ந்தார்கள்.நாமும் இதை பின்பற்றி இறைவனின் அனுக்கிரகத்தை பெறுவோம்.

எனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.இதைப்படிக்கும் தோழிகள் இதை கடைப்பிடித்தால் அதுவே நான் அம்பாளுக்கு செய்யும் சேவை ஆகும்.உங்கள் தோழிகளுக்கு இந்த பதிவை பகிருங்கள்.அவர்களும் பயன்  பெறட்டும்.

நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுள் சந்தோஷம் உண்டாகுவது மட்டுமில்லாமல் உங்கள் குடும்பமும் நல்ல முன்னேற்றம் அடையும்.

உங்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.நானும் தெரிந்து அதை கடைப்பிடிக்க உதவியாக இருக்கும்.இன்னும் எழுத தூண்டுகோலாக அமையும்.  
 support அண்ட் subcribe தமிழ்நாட்டு சமையல் you  tube in  my  சேனல் 

நன்றி வணக்கம்.
உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன் 





2 கருத்துகள்:

  1. Tnq so much fr sharing this . Expecting more like this news. I m very much interested in spirituality. Once again tnq madam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. nantri. see my YouTube channel Tamilnattu samayal this channel is related to god subscribe and support my channel

      நீக்கு