ஸ்ரீவைபவ லட்சுமி விரத பூஜை கதை
வைபவங்களை வழங்கும் வைபவலட்சுமி
வாழ்வின் பதினாறு பேறுகளோடு அஷ்டலட்சுமிகள் தரும் எட்டு ஐஸ்வரியங்களையும் சேர்த்து, தன்னை வணங்குபவர்களுக்கு அருள்பவள் தான் வைபவலட்சுமி.
வைபவலட்சுமி விரத பூஜை மகிமையால் பல்லாயிரக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். வைபவலட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே முழுமையான பக்தியோடு வைபவ லக்ஷ்மியை மனதார வழிபட்டாலே உங்கள் சங்கடங்களை நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் தருவாள். பூஜை செய்வதற்கு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பக்தியும், நம்பிக்கையும் கொண்டு செய்யும் பூஜை பல மடங்கு பலனைக் கொடுக்குமென்பது சத்தியம், ஸ்ரீமகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீவைபவலக்ஷ்மியைப் பூஜிப்பதால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். .
மகாலட்சுமி, வைபவலட்சுமியாக வந்த கதையும், அதன் மகிமையும்:
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது அதில் இருந்து செந்தாமரை மலரில் அமர்ந்த வண்ணம் ஸ்ரீமகாலட்சுமிதோன்றினாள். அந்த மகாலட்சுமியை தேவர்களும், ரிஷிகளும் வணங்கி ‘ஸ்ரீசூக்தம்’ என்ற மந்திரத்தை சொல்லி துதித்தார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் செந்தாமரை மலர்மீது அமர்ந்திருந்த மகாலட்சுமியை நீராட்டின. எட்டு திக்குகளிலும் உள்ள அஷ்ட திக்கஜங்கள் (யானைகள்) தங்கள் துதிக்கையால் நீரை நுகர்ந்து ஸ்ரீமகாலட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. திருப்பாற்கடல் ஆண் உருவம் கொண்டு பஞ்கஜ (தாமரை) மாலையையும், திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது.
கந்தவர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். லட்சுமிதேவிக்கு நடக்கும் இந்த வைபவத்தைப் பார்த்து மகாவிஷ்ணு மகிழ்ந்து கொண்டிருந்த வேளையில், சூரியனின் மகன் ரேவந்தன் பாற்கடலை கடையும் போது வெளிவந்த ‘உச்சை சிரவஸ்’ என்ற குதிரையின் மேல் ஏறி திருமாலை வழிபட வைகுண்டம் வந்தான். அந்த குதிரையை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அப்பொழுது திருமால் மகாலட்சுமியிடம் இவன் யார்? என்று கேட்டார். தேவி இக்குதிரையில் லயித்து இருந்ததால் திருமால் கேள்வியைக் கேட்கவில்லை. பதிலும் அளிக்கவில்லை. திருமால் கோபம் கொண்டு மகாலட்சுமியை “நீ பெண் குதிரையாக பூலோகத்தில் பிறப்பாயாக” என்று சபித்துவிடுகிறார். இதைக் கண்ட ரேவந்தன் தூரத்தில் இருந்தபடி பெருமாளை வணங்கிவிட்டு சென்று விட்டான்.
திருமாலின் சாபத்தின்படி காளிந்தி நதியும், தமஸா நதியும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீமகாலட்சுமி பெண் குதிரையாக அவதரித்து வாழ்ந்து வந்தாள். சூரியனின் மனைவி உஷாதேவி தன் கணவனின் உக்ரம் (வெட்பம்) தாங்காமல் தன்னுடைய நிழலை (சாயாதேவி) பெண்ணாக்கி விட்டு குதிரை வடிவில் காளிந்தி நதியும், தமஸா நதியும் சந்திக்கும் இடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பெண் குதிரைவடிவில் இருந்த மகாலட்சுமி உஷா தேவியிடம். “உன் கணவர் உனக்காக தன் உக்ரத்தைக் குறைத்துக் கொண்டு உன்னை வந்து சேருவாராக; உங்களுக்கு அஷ்வினி தேவர்கள் குழந்தைகளாக பிறப்பார்களாக” என்று வரமளித்தாள்.
ஸ்ரீமகாலட்சுமி இல்லாத வைகுண்டம் கலையிழந்து ரம்யமில்லாமல் காட்சியளித்தது. மகாலட்சுமி.தேவி இல்லாத வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு மகிழ்ச்சியில்லை. அதனால் மகாவிஷ்ணு ஆண்குதிரை வடிவம் கொண்டு பெண்குதிரை வடிவில் இருக்கும் ஸ்ரீமகாலட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துப் போக வந்தார். அது சமயம் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதே நேரத்தில் யயாதியின் மகன் துர்வசு பிள்ளை வரம் வேண்டி தவம் இருந்தான். மகாவிஷ்ணு அவனுக்கு தங்களிடம் உள்ள குழந்தையைக் கொடுக்கும்படி ஸ்ரீமகாலட்சுமியிடம் கூறினார். ஸ்ரீமகாலட்சுமி அதற்கு சம்மதிக்கவில்லை.
அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியிடம் “சந்தான வைபவத்தைக் கொடு; இதனால் வைபவலட்சுமி என பூலோகத்தில் உன்னை அனைவரும் பூஜிப்பார்கள். நான் உன்னைத் தேடி வந்தது போல் வைபவலட்சுமியான உன்னை பூஜிக்கும் பெண்கள் தங்கள் கணவனோடு சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள். உன்னை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய சாபங்கள், தோஷங்கள் நீங்கும். நான் உன்னோடு கூடியிருந்து பக்தர்கள் வேண்டும் எல்லா வரங்களையும் கொடுப்பேன்” என பல வரங்கள் கொடுக்கிறார். பின்னர் தங்கள் குழந்தையை துர்வஸுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கின்றனர்.
அப்போது லக்ஷ்மி,
மங்களே மங்களதாரே
மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா.
என்ற ஸ்லோகத்தை அருளி,
“நான் அருளிய இந்த சுலோகத்தை தினமும் திருவிளக்குமுன் அமர்ந்து ஒன்பது முறை சொல்லும் பக்தைகளின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதோடு, மாங்கல்ய பலம் பெற்று புத்திரப் பேறுகளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்'' என்று சொல்லிவிட்டு இருவரும் வைகுண்டம் சென்றார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக