தீட்டு என்றால் என்ன?
தீட்டு என்கிற சொல் புரிந்து கொள்ளப்படாமலேயே காலம் காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம். தீட்டு என்பது என்ன? இறைவன் இருக்கும் இடத்தில் இந்த தீட்டுகள் ஆகாது.
தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப்பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால்தான் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.
தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும், சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்காக இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள். தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் ஆகியனவாகும்.
1) காமத்தீட்டு
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசைவைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் பற்றிய ஞாபகமாகவே இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்துவிட்டால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
இல்லையென்றால் நீடித்த வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்திக்க முடியாது. இதனால்தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றார்கள்.
2)குரோதத் தீட்டு.
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.
சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள், சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிபேர். கோபம் எழும்பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சிவசப்பட்டவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றி சிந்தனை செய்ய முடியாது. இதனால்தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.
3) லோபத் தீட்டு
லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருட்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீயவழியில் பொருட்களைச் சம்பாதிக்கும் நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழநினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருட்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே.
இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால்தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள்.
4)மதத்தீட்டு.
மதம் என்பது கர்வம் (ஆணவம்). ஒருவரையும் மதிக்காது மமதையோடு இருப்பது. எதையும் தான் மட்டுமே சாதிக்க முடியும் என்ற கர்வத்தினையும் தருவது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதையும், ஆணவத்தால் யாவரையும் துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடையும் குணத்தினையும் தருவது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால்தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.
5)மாற்சரியத் தீட்டு.
மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் நலமாய் வாழ்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் வேதனைப்படுவது. எந்த நேரமும் நாம் அவரைப்போல நல்லபடியாக இல்லையே என்று தன்னையே நொந்து கொள்ளவைக்கும். எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, அவர்களெல்லாம் எப்பொழுது கஷ்டப்படுவார்கள், எப்பொழுது அழிவார்கள் என்று நெகடிவாக எண்ணத் தூண்டுவது.
தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மை வளரும். நல்லபடியாக இருக்கும் யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாத எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால்தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இவற்றைத் தீண்டுபவர்களே தீட்டு உடையவர்கள் ஆகிறார்கள். இவர்களால் இறைவனை உணர முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுக்கள் அண்டவே அண்டாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக