வியாழன், 9 ஜூலை, 2015

குருவும்,தட்சிணா மூர்த்தியும்


குருவும்,தட்சிணா மூர்த்தியும்




நவகிரகங்களில் முக்கியமானவர் குரு.குரு பார்க்க கோடி நன்மை.பதவி ,அதிகாரம் தருபவர் குரு பகவான்.


நவகிரகங்களில்  சுப கிரகங்களாக  எண்ணப்படுபவை குரு,சுக்கிரன் ,சந்திரன் ,புதன் ஆகும்.
குரு வருடத்திற்கு 1முறை ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு  மாறுவார். குரு பெயர்ச்சியால்
விமோசனம்  ஏற்படும் .குழந்தை  இல்லாதவர்களுக்கு புத்திரபக்கியம்  கிடைக்கும் .குருபகவான்
காசு பணம் செல்வத்தையும்  கொடுக்கும் தன்காரனும் ஆவார் .


ஒருவரது ஜாதகத்தில் குரு இருந்த இடத்தை விட குரு பார்த்த இடங்கள் மிக சிறந்த பலன்களை
தரும்.

குரு பகவானுக்கு வெண் சுண்டல் மாலை வியாழக்கிழமை அன்று சாற்றினால் நினைத்த காரியம் நிறைவேறும் .


குருபகவானுக்கு சொல்லவேண்டிய எளிய பாடல்


மறை மிகு கலை நூல் வல்லோன்  வானவர்க்கு அரசன் மந்திரி
நறை  சொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபன் ஆகி
நிறை தனம் சிவிகை  மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி .


வடக்கு நோக்கி இருக்கும் கிரகம் குரு.


தட்சிணா மூர்த்தி






நவக்கிரக குரு வேறு .தெய்வ தட்சிணாமூர்த்தி குரு வேறு .நவக்கிரக குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி .


சிவன் கோவிலில் ,சிவனுக்கு வலதுபுறம் தெற்கு பார்த்த வண்ணம்  இருக்கும் தெய்வம் தட்சிணா மூர்த்தி . அவரையும் குரு என்பார்கள் .


குரு பகவானுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி ,மஞ்சள் நிற மலர் அல்லது முல்லை மலர் மாலை
சாற்றலாம்.

நவக்கிரக சந்நிதியில்  வியாழனுக்கு (குரு)அபிஷேக பூஜை செய்யலாம் .குருவின்  அதிதேவதை
தட்சிணாமூர்த்தி  என்பதால் அவருக்கும் பூஜை செய்யலாம்.


குரு பகவானுக்கு செய்த அர்ச்சனை பொருளாகிய தேங்காய் ,பழம்  முதலியவற்றை  கோவிலேயே
தானம் செய்து விட வேண்டும் .ஆனால் தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யும் பிரசாதங்களை
வீ ட்டிற்கு கொண்டு வரலாம் .


நவக்கிரகங்கள் படத்தை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது.தட்சிணா மூர்த்தியை வீட்டில் வைத்து வணங்கலாம்.


நன்றி வணக்கம் .






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக