செவ்வாய், 14 ஜூலை, 2015

நெய்வேதியம்

நெய்வேதியம் 


ஹலோ பிரண்ட்ஸ் எப்பிடி இருக்கீங்க? . அனைவரும் நன்றாக இருக்க நான் இறைவனை பிராத்திகிறேன் .



இன்னிக்கு நான்  நெய்வேத்தியம்  பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் 
மகிழ்ச்சி கொள்கிறேன்.  


தெய்வ நம்பிக்கை  உள்ளவர்கள்  அனைவரும் தினசரி இறைவனுக்கு பூஜை செய்யவேண்டும் என்று 
சாஸ்திரம்  சொல்கிறது .நம் வீட்டில் பூஜையறையில்  தெய்வங்களை வைத்து இருந்தால் மட்டும் 
போதாது .


தினமும் ஒரு 5நிமிடமாவது  கடவுளை நினைக்க வேண்டும் . ஏதோ  ஒரு வடிவில் நம்மை கடவுள் தினமும் பார்த்து கொண்டு இருக்கிறார் . நமக்கும் மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது  என  முழுமையாக நம்ப வேண்டும்.




எந்த பொருள்  வாங்கினாலும் முதலில் கடவுளின் பாதத்தில்  வைத்து இது நீ கொடுத்தது உனக்கு நன்றி என மனதார  சொல்ல  வேண்டும் .


நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கடவுள் அருளால்  மட்டும்தான் நடக்கிறது . இன்பமோ  துன்பமோ எது  நடந்தாலும் அதை கடவுளிடம் விட்டு விடுங்கள் . இதை தான் சரணாகதி என்பர்.
அதனால் தான் நாம் தெய்வத்திடம் விழுந்து வணங்கி சரணாகதி அடைகிறோம். 


தினமும் நாம் சமைப்பதை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து விட்டு சாப்பிடும் போது தான் நமக்கு 
அது பிரசாதம் ஆகிறது .


சாதம் ----நாம் கடவுளுக்கு  கொடுப்பது .அது கடவுளால் ஆசிர்வதிக்க பட்டு நமக்கே  திரும்பி 
வரும் போது  அது பிரசாதம் ஆகிறது.


உன்மையில் கடவுள் நம் உணவை சாப்பிடுவது இல்லை .கடவுளுக்கு நாம் உணவு கொடுப்பது இல்லை. அவர் முக்காலமும் அறிந்தவர் .அவரிடம் இல்லாதது ஒன்றும் இல்லை .நமக்கு தினமும் 
உணவு கிடைப்பது கடவுள் அருளால் தான் .அதற்காகத்தான் நாம் அவருக்கு நன்றி செல்லி வழிபடுகிறோம் .


கடவுளுக்கு தினசரி  நெய்வேதியம் பண்ணனும் என   நான் சொன்னேன் . சில பேர்  சொல்லுவாங்க நாங்க எல்லாம் வேலைக்கு போறவங்க. எங்களால்  எப்பிடி நெய்வேதியம் பண்ணமுடியும் ?என்று கேட்பது உண்டு. கவலை படாதீங்க . அதுக்கும் ஒரு வழி இருக்கு.


கடவுளுக்கு 18 வகை பட்சனத்துடன் தான்  நெய்வேதியம் செய்ய வேண்டும் என்று இல்லை .

பழங்கள் , உலர்   திராட்சை , கற்கண்டு ,பேரீச்சம்பழம் ,பால்    வைத்து நெய்வேத்தியம் பண்ணலாம் .


இந்த  மாதிரி எளிய முறையில் சாமியை வணங்குவது   கஷ்டம் ஒன்றும் இல்லையே! .

என்ன ப்ரண்ட்ஸ், நீங்களும் சாமிக்கு எளிய முறையை  பின்பற்றி  எல்லா  நலங்களும் பெறுங்கள் .


இப்பொழுது  எந்த கடவுளுக்கு எந்த நெய்வேதியம் விருப்பம்? என்பதை பற்றி பார்ப்போம் .


சிவன் -----வெண் பொங்கல் ,வடை ,வெறும் சாதம் 

பார்வதி ----சர்க்கரை  பொங்கல்,உளுந்து  வடை .

விநாயகர் ---மோதகம் ,அவல் ,சர்க்கரைப்  பொங்கல் ,கொண்டைக் கடலை ,அப்பம் ,முக்கனிகள் 
முருகன் ---வடை ,சர்க்கரை பொங்கல் ,வேக வைத்து தாளித்த கடலை பருப்பு ,தினை மாவு 

பெருமாள் -----லட்டு ,வெண்பொங்கல்,புளியோதரை 

ஓகே ப்ரண்ட்ஸ்
 மீண்டும் நாளை சந்திப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக