வினை தீர்க்கும் விநாயகர்
ஹலோ நண்பர்களே!போன பதிவில் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் என்று சொன்னேன்.ஏன் வணங்கவேண்டும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் .விநாயகரை மஞ்சளாலும் , பசும் சாணத்தாலும் மற்ற இதர பொருள்களை பிடித்து வைத்து ஆவாரணம் செய்து வழிபடலாம் .மனதில் நினைத்தாலே ஓடி வந்து
அருள் புரிவார் .கருணை கடல் விநாயகர் தன்னை நாடி வருபவருக்கு சகல நலங்களையும் அள்ளி தருவார் .
எந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்னால் விநாயகரை வணங்க வேண்டும் .அப்படிப்பட்ட வரத்தை ஈசன் விநாயகருக்கு அளித்தார் .ஈசனும் ,முருகனும் ஒரு சமயத்தில் விநாயகரை வண ங்காமல் சென்றதால் அவர்கள் சென்ற காரியம் நிறைவேறாமல் போனது .பிறகு விநாயகரை வண ங்கி விட்டு காரியத்தை முடித்தனர் .
எதை எழுதுவதாக இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் .அதாவது ஓம் என்ற பிரணவ மந்திரத்தை கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.எந்த கடவுளை போற்றினாலும் ஓம் என ஆரம்பித்து போற்ற வேண்டும்.
குட்டிக் கும்பிடுதலும் தோப்புக்கரணமும்
ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் காவிரி நதியை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்துக் கொண்டார். வினாயகப் பெருமான் காகம் வடிவெடுத்து அந்த கமண்டலத்தை தட்டி விட்டு காவிரி நதியை விடுவித்தார். பின்னர் ஒரு அந்தண சிறுவனாக வடிவெடுத்து நின்றார். கோபம் கொண்ட அகத்திய முனிவர் அந்த அந்தண சிறுவனின் தலையில் குட்டினார். அப்போது வினாயகப் பெருமான் தனது சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காக தான் காவிரி நதியை விடுவித்ததாக கூறினார். அகத்திய முனிவரும் தமது தவறிற்கு வருந்தி தன் தலையில் தானே குட்டி கொண்டு வினாயப் பெருமானிடம் தன்னை மன்னித்து அருளும்படி வேண்டிக் கொண்டார். அன்றிலிருந்து தலையில் குட்டிக் கும்பிடும் பழக்கம் தொடங்கியதாக கருதப்படுகிறது.
கஜமுகாசுரன் என்ற அசுரன் ஒரு சமயம், தேவர்களைஅடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட்டு வணக்கம் செலுத்த வைத்தான். வினாயகப் பெருமான் அந்த அசுரனை அழித்து தேவர்களை விடுவித்தார். அசுரனிற்கு போட்ட தோப்புக் கரணத்தை தேவர்கள் வினாயகப் பெருமானுக்கு போட்டு பக்தியுடன் வணங்கினர். அன்று முதல் வினாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஆன்மீக ரீதியாக நாம் தோப்புக் கரணம் போடும் போது நமது உடலில் தூங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்படுகிறது. குட்டிக் கும்பிடும் போது நமது தலையிலிருக்கும் அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தி உடல் பூராவும் பரவி நமக்கு சுறுசுறுப்பும் புத்துணர்வும் தருகிறது. இந்த தத்துவத்தை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக் கொள்கிறது.
அருகம்புல் வழிபாடு
அனலாசுரன் என்ற அசுரன் உலகத்து மக்களையும், தேவர்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறி,பொசுக்கி விடுவதனாலேயே அவனுக்கு அனலாசுரன் என்ற பெயர் வந்தது.
அவனின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் தேவர்கள் சிவ-சக்தியிடம் முறையிட்டனர். சிவனும் வினாயகரிடம் அனலாசுரனை வதம் செய்யும்படி கூறினார். வினாயகரும் அனலாசுரனுடன் போரிட்டார். அனலாசுரனை வெற்றி கொள்ளமுடியாத வினாயகர் அவனை பிடித்து விழுங்கி விட்டார். வினாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். பிள்ளையாரை அந்த வெப்பம் கடுமையாக தாக்கியது. அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக கங்கை நீர் அபிசேகம் செய்யப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. அப்போது ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து வினாயகரின் தலை மீது வைத்தார். அனலாசுரன் வினாயகர் வயிற்றினுள்ளே சீரணமாகிவிட்டான். வினாயகரின் எரிச்சலும் அடங்கியது. அன்று முதல் வினாயகர் தன்னை அருகம்புல்லால் அர்ச்சிப்பவர்களிற்கு தான் சகல நன்மைகளையும் செய்வேன் என அருள்பாலித்தார்.

அருகம்புல் அர்ச்சனையால் ஞானம், கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும். வினாயகருக்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே ஈடாகவில்லை என்ற ஒரு புராணக்கதையும் உள்ளது. முத்தியைத் தரவல்லது அருகம்புல். அதாவது நமது சகல பாவங்களையும் களைய வல்லது.
விநாயகரை வணங்குபவர்களை சனி பகவான் நெருங்க பயப்படுவார் .சனியின் ஆதிக்கம்
குறைவாக இருக்கும்.
என்ன நண்பர்களே! இனிமேலாவது, யாரையும் சனியனே என்று திட்டாதீர்கள்.
என்ன நண்பர்களே! இனிமேலாவது, யாரையும் சனியனே என்று திட்டாதீர்கள்.
விநாயகர் அகவல் ,காரிய சித்தி மாலை,எளிமையான பாடல்கள் பாடியும் தூய்மையான மனதுடன் வணங்கி பலன் பெறுங்கள் .
நாளை அடுத்த பதிவில் சந்திப்போம் . நன்றி வணக்கம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக