சிறப்பு மிக்க ஆடி வெள்ளி
ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் என் இனியமாலை வணக்கம் .
நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியிலே கடவுளை போற்றி ,அவள் புகழைப் பாடிக் கொண்டே இருக்கிறோம். சில பேர் அவங்களுக்கு தெரிந்த பாடல்கள் பாடியோ ,ஸ்லோகங்கள் சொல்லியோ கடவுளை வணங்குகிறார்கள் .அந்த வகையில் எனக்கு தெரிந்த சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
கடவுள் எனக்கு கொடுத்த வாய்ப்பை , பாக்கியமாக எண்ணி ,என் பணியை தொடங்குகிறேன்.
இன்று ஆடி மாதம் ஆரம்பமாகி விட்டது .வெள்ளி கிழமை என்றாலே விசேஷமான நாள்தான்.அதுவும் ஆடி வெள்ளி என்றால் சொல்லவா வேண்டும்?
பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு அம்மனை வழிபடுவதில் தான் சந்தோஷம் இருக்கிறது .
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் .அன்னை அன்பு உள்ளம் கொண்டவள் .அவளுடைய
கடைக்கண் பார்வை நம் மீது பட்டால் நம்முடைய துயரங்கள் ஒரு நொடியில் பறந்து போகும்.
கருணை கடல் நம் அன்னை .வெற்றி மேல் வெற்றி வர அன்னையை வேண்டுவோம் .
சாதாரணமாகவே, நம்மை பெற்று எடுத்த தாய் நம்மிடம் அன்பு வைத்து நமக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து செய்வார்கள். ஒரு நாள் தன் பிள்ளை சாப்பிடவில்லை என்றாலும் தாய் உள்ளம் தாங்காது .
பெற்று எடுத்தவர்களுக்கே இப்படி என்றால் நம் தாய்க்கு தாயானவள் சும்மாவா இருப்பாள் ?. ஓடோடி வந்து அருள் புரிவாள் என்பதில் சந்தேகமே இல்லை .
பல சோதனை வந்தாலும் நம்முடைய தாயின் திருவடியை சிக்கென்று பற்றி கொள்ள வேண்டும்.
சகல நலங்களையும் தந்து எல்லையில்லா ஆனந்தத்திற்கு கொண்டு செல்வாள் நம் அன்னை .
ஆடி வெள்ளி அன்று பால் பாயாசம் , சர்க்கரை பொங்கல் படைத்து பூஜை செய்யலாம் .
நாம் இல்லத்தில் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கு ஏற்றி ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர
நாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பட வேண்டும் .
பெண் பிள்ளைகளை அம்மனாக பாவித்து,உணவளித்து , ரவிக்கை,தாம்பூலம் ,வளையல் ,குங்குமச் சிமிழ் ,கண்ணாடி ,மருதாணி ,மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பித்து தேவியின் அருளை
பெறுங்கள் .
ஆடி வெள்ளியன்று, அம்பாள் காலையில் லக்ஷ்மியாகவும்,உச்சி கால வேலையில் பார்வதி தேவியாகவும் ,மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள் .
ஆடி மாதம் எப்படி அம்மன் மாதம் ஆனது ? அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறதா?
நண்பர்களே !
இதோ! அதையும் சொல்றேன் .கேளுங்க
பூமாதேவி பூமியில் அவதரித்த மாதம் ஆடி மாதம் . பார்வதியின் தவத்தை மெச்சி பரமசிவன், ஆடி
மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.
சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும் .ஆடி மாதம்
மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கம் ஆகி விடுகிறார் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் கிராமங்களிலும். நகரங்களிலும் மிக கோலாகலமாக அம்மனை வழிபடுகிறார்கள்.
ஆடி மாதம் வந்தாலே வரிசையாக விழாக்கள் வருவதை காணலாம் .ஆடி பூரம்,ஆடி பெருக்கு ,
விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி ,வரலட்சுமி விரதம் ,நவராத்திரி,ஆடி அமாவாசை போன்ற
விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி வழிபாடு செய்து மக்களுக்கு கொடுக்கிறார்கள் .
நல்ல மழை வேண்டி ,உடல் நலம் வேண்டி நம் முன்னோர்கள் அம்மனுக்கு வழிபாடு செய்தார்கள் .

ஆடி மாத விழா

அம்மனுக்கு பிடித்தவை
வேம்பு, எலுமிச்சை , கூழ் . இவை உடல் நலத்திற்கும் , வியாதியை தடுப்பதற்கும் உதவுகின்றன .
மாலை வேலையில் அகிலாண்டேஸ்வரி ,ஆதி பாரசக்தி,அம்பிகை ,மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபடலாம்.
ஆவணி மாதத்தில் வரலக்ஷ்மி விரதம் இந்த வருடம் வருகிறது .இதை வழிபட்டால் மாங்கல்ய பலம் கிடைக்கும் .
அடுத்த வெள்ளிக்கிழமை நிச்சயமாக அம்மனை வேண்டி , வழிபாடு செய்து பயன் பெறுவீர்கள்! என்ற
நம்பிக்கையுடன் என் பதிவை முடிக்கிறேன் .
ஓம் சக்தி . ஓம் சக்தி . ஓம் சக்தி
மீண்டும் நாளை அடுத்த பதிவில் ,
உங்கள் தோழி ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக