செவ்வாய், 21 ஜூலை, 2015

தமிழ் கடவுள் முருகன்

தமிழ் கடவுள் முருகன்



ஹாய் ப்ரண்ட்ஸ்  

 வணக்கம் . இன்னிக்கு நான் முருகனைப் பற்றி சொல்லலாம் என்று  இருக்கேன் .

முருகன் என்று  சொன்னாலே உங்களுக்கெல்லாம் வேல், இரண்டு  மனைவிகள் ,மயில் போன்றவை ஞாபகத்திற்கு வரும் . முருகன் சைவ கடவுளான சிவன்,பார்வதி தம்பதிகளுக்கு  மகன்.இவர் 
அண்ணன் விநாயகர்,திருமால் மாமா  ஆவார் .

முருகன் பிறப்பு 



    







சிவபெருமான் தனது  நெற்றிக்கண்ணில்  இருந்து நெருப்பினை வெளியிட , அதை தாங்கிய வாயு 
பகவான் சரவணப் பொய்கை ஆற்றில்   விட்டார் .அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். 

அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைக்கும் பொழுது , ஆறுமுகமாக 
முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள்   கூறுகின்றன .

இந்திரனின் மகள் தெய்வானை ,குறத்தி மகள் வள்ளி என இரு மனைவிகள் . குறிஞ்சி நிலத்தின் 
கடவுள் முருகன் .பண்டை காலத்தில் கெளமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் 
வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது .

முருகனுக்கு கந்தன்.கடம்பன்,குமரன்,குகன்,சுப்பிரமணியன், சுவாமிநாதன் என இன்னும்  பல பெயர்கள் உள்ளன .


பன்னிரு கரங்கள் 
      


சிவனைப் போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என்றால்  முருகனுக்கு  ஆறுமுகம் மொத்தம் 18 கண்களை  உடையவர். முருகனுக்கு பன்னிரு கரங்கள்  உள்ளன .



முருகனின் அவதாரத்தின் நோக்கமே  அசுரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து 
தேவர்களை காப்பது .அதன்படி ,முருகப் பெருமான் அவதாரம் எடுத்து ,சூரபத்மனை அழித்து ,
அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி ,மயிலை வாகனமாகவும்,சேவலை கொடியாகவும் 
ஏற்று கொண்டு அருளினார் .

சூரபத்மனை முருகபெருமான் சம்ஹாரம் செய்ததால்  தேவர்கள் துயரம் நீங்கியது . முருக பெருமானுக்கு  தன்னுடைய நன்றியைச்  செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான்.அதன்படி, முருக பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது .




முருகனின்  அடியவர்கள்


அகத்தியர் ,நக்கீரர் ,ஒளவையார் ,குமர  குருபரர் ,பாம்பன் சுவாமிகள்,கிருபானந்தவாரியார்
ஆகியோர் முருகனின் அருளை பெற பல பாடல்களைப் பாடி அருளும் பெற்றுள்ளனர் .

பாம்பன் சுவாமிகள் ------உயிர் எழுத்து  12,மெய்யெழுத்து 18 சேர்ந்து 30 முதல் எழுத்துக்களை
கொண்டு பாடப்பட்ட பாடல் சண்முக கவசம்  ஆகும்.இது மந்திரத்தன்மையை வெளிப் படுத்தும்
நூலாகும் .

அருணகிரிநாதர் ---முருகனின் அருள் வேண்டி பாடிய பாடலின் தொகுப்பே திருப்புகழ் .
திரு என்றால்  அழகு என்று பொருள் . அழகனாகிய முருகனை புகழ்வதால் ,திருப்புகழ் என்று
பெயர் பெற்றது. 


தைப்பூச  நாளில் இறைவனோடு கலந்தவர் வள்ளலார்.திருத்தணி முருகனை தரிசிக்கும்
பேறு பெற்றார்.கந்த கோட்டப் பதிகம்  புகழ் பெற்றது .

வாய் பேச முடியாத குழந்தையான  குமர குருபரர் பாடிய பாடல் கந்தர் கலி வெண்பா .இதனை
பாடினால் வாக்கு வன்மை  உண்டாகும்.  

சுப்ர மணிய  புஜங்கள் ஆதி சங்கரால் பாடப்பட்டது .இதை படிப்பதால் தீராத நோய் தீரும் .


ஐஸ்வர்யம்,திரு ,வீரியம் ,வைராக்கியம் ,புகழ் ,ஞானம்  என்ற இறைமை குணமாக முருகனின்
ஆறுமுகமாக திகழ்கின்றன.

முருகன் அகத்தியருக்கு தமிழ் மொழியை கற்று கொடுத்ததால் "தமிழ் கடவுள்" ஆவார்



ஆறு படை வீடு



திருப்பரங்குன்றம் -------தெய்வானையை மணந்த திருத்தலம் .

திருச்செந்தூர் --------சூரபத்மனோடு  போரிட்டு ,வென்று  வெற்றி வாகை சூடிய திருத்தலம் .

பழனி ----------மாங்கனிக்காக விநாயகரோடு போட்டியிட்டு  தோற்ற கோபத்தில் தண்டாயுத பாணியாக நின்ற திருத்தலம் .


சுவாமி மலை------தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும்
திருத்தலம் .

திருத்தணி ----சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து ,குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலம் .

பழமுதிர்சோலை -----ஒளவைக்கு பழம்  உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு  காட்சி தரும் திருத்தலம் .

முருகனின் மூல மந்திரம்


சரவண பவ ஓம்

சரவண  பவ மந்திரத்தை சொன்னால் செல்வம் ,கல்வி,
இம்மைக்கு நுகர வேண்டிய பொருள் அனைத்தும் கிடைக்கும் .


ஓம் என்ற பிரணவத்தை  சேர்த்து சொன்னால் முக்தி பெறுவது நிச்சயம் .

ச --லக்ஷ்மி
ர --கலைமகள்
வ --போக மந்திரம்
ண ---சத்துரு நாசம்
ப --மித்ரு செயம்
வ --நோயற்ற வாழ்வு

என எல்லா எழுத்துக்கும் பொருள் உண்டு .

பாடல்


வேல் பிடித்த  கையினில் செங்கோல் பிடித்து நின்றவா!
வேண்டி வந்த யாவையும் விரைந்தளிக்கும் மன்னவா !
கால்பிடித்தயென்  மனக்கலக்கம் நான் உரைக்கவா !
கண்திறக்க வேண்டும் தென்பழனி ஆண்டவா !

பழனி ஆண்டவர் சன்னதியில் இதை பாடினால் ,வளமான வாழ்க்கை அமையும் .




        முருகபெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க நான் மனதார வேண்டுகிறேன் .அவருடைய புகழை செல்லுவதில் நான் பெரும்   மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லாம் அவன் செயல் . அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.


அடுத்தடுத்து என் பதிவினை பார்க்கும் அன்பு நெஞ்சங்களுக்கு  என் நன்றி .

நாளை சந்திப்போம் .  ----உங்கள் தோழி ஈஸ்வரி .



2 கருத்துகள்: