ஹலோ ப்ரிண்ட்ஸ் ! எப்பிடி இருக்கீங்க ?.என் பதிவை பாக்கிற அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .
சரி .இன்னிக்கு நான் கோலத்தை பற்றி நான் அறிந்ததை உங்களுடன் பகிரிந்து கொள்கிறேன் .
கோலம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அதிகாலை பொழுது வீட்டு வாசலில் பசும் சாணத்தில் நீர் தெளித்து வெள்ளை கோல பொடியால் புள்ளி வைத்து கோலம் போடுவது தான் .கிராமத்தில் பெண்கள் கோலம் போடுவதில் அதிக ஈடுபாடு கொள்கிறார்கள் .
கோலம் போடுவது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் .இப்போது அச்சு கோலம் போட்டு நிறைய வீடுகளில் நம்மை அசத்துகிறார்கள் .பண்டிகை காலங்களில் வண்ண கோலங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் .நம் முன்னோர்கள் காலத்திலேயே கோலம் போடும் பழக்கம் தோன்றியது எனலாம்.நம் முன்னோர்கள் எது சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கும் .காரணம் இல்லாமல் சும்மா சொல்ல மாட்டார்கள்.
தினம் அதிகாலையில் வாசலில் கோலம் போடுவதால் நல்ல பிராண வாய்வு பெண்களுக்கு கிடைக்கிறது .குனிந்து நிமிர்ந்து போடும் போது உடற்பயிற்சியாகயும்,அவர்களுடைய கற்பனை திறனை தூண்டும் விதத்திலும் அமைகிறது.மனத்தையும் உடலையும் ஒருமைப்படுத்த வழிவகுக்கிற து .
ஒரு பெண் எப்படிபட்ட மன நிலையில் இருக்கிறாள்? என்பதை கோலத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .தென் இந்திய மக்கள் கோலம் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.ஆ னால், இது மாறி , ஸ்டிக்கர் ஒட்டுவதால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது .இது மிகவும் வருந்ததக்க செய்தி .
அதிகாலையில் பெண்கள் நீராடி கோலம் போட்டு தீபம் ஏற்றி மகாலக்ஷ்மியை வழிபட்டால் நம் இல்லம் தேடி மகாலக்ஷ்மி வருவாள் .நம்மிடம் பகைமை உள்ளத்துடன் வீடுதேடி வருபவர்களுடைய
மனதை மாற்றும் சக்தி கோலத்திற்கு உண்டு.

கோலம் போடுவதால் நன்மைகள்

நட்புடன் பழகுவர் .
நம் முன்னோர்கள் சொன்ன வழியில் நம் குழந்தைகளை நாமும் கூட்டி கொண்டு செல்வதில் தப்பு ஒன்றும் இல்லையே!
சந்தனமும், ஜவ்வாதும், பாலும், நெய்யும் சேர்த்து வளருக்கின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போக போகிறது என்பதை ஞாபகப்படுத்தும் விதமாக நாம் மண்ணால் கோலம் போடுகிறோம்.
அரிசி மாவினால் கோலம் போடுவது சம்பிராதயத்திற்கு போடுவது மட்டுமல்ல.
சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து (எறும்பு , குருவி ) அவைகளுக்கும் உணவளிப்பது உயர்ந்த தானம் ஆகும் .
மங்களமான நிகழ்ச்சிகளுக்கு இரட்டை இழை கோலம் போடுவது நல்லது .கோலத்தை தெற்கு பார்த்து முடிக்கக் கூடாது .
தினமும் வாசலிலும், ,பூஜையறையிலும் கோலம் போட்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியும் ,ஆனந்தமும் தழைக்க வழி வகுப்போம்.
என் எண்ணத்தில் எழுந்த நல்ல கருத்துக்களை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்ற நல்ல மனதுடன் இந்த பதிவை எழுதி உள்ளேன்.
மீண்டும் வருவேன்.நன்றி வணக்கம்.
---ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக