ஞாயிறு, 5 ஜூலை, 2015

லக்ஷ்மி தேவி

ஹலோ நண்பர்களே என் பதிவினை படிக்கும் அனைவருக்கும்  நன்றி .

இன்று  நான் லக்ஷ்மி தேவியை வணங்குவதை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


பொதுவாக, எந்த சுவாமியை வணங்குவதாக  இருந்தாலும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை வணங்குதல் சிறந்தது.

அந்த நேரத்தில் செய்ய படும் பூஜை அதிக பலனை கொடுக்கும் .அந்நேரத்தில் தேவர்கள் நமக்கு ஆசீர்வாதம் செய்ய வருவர் .மாலை  நேரத்தில்  4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கு ஏற்றுவது நல்லது.

லக்ஷ்மி தேவி நம் வீடு தேடி வரவேண்டும் என்றால் முதலில் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் .லக்ஷ்மிக்கு இரண்டு நெய் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது.நெய் இருக்கும் இடத்தில் லக்ஷ்மி கண்டிப்பாக  இருப்பாள் .லக்ஷ்மி இருக்கும் இடத்தில் ஸ்ரீ மன்  நாராயணன் எப்போதும் இருப்பார் .

லக்ஷ்மியை வணங்கினால் அஷ்ட ஐஷ்வர்யம் உண்டாகும்.லக்ஷ்மி பூஜை செய்வதற்கு  உகந்த நாள் வெள்ளிகிழமை ஆகும் .லக்ஷ்மி பூஜையுடன் குபேரனையும் பூஜிப்பது மிகவும் நல்லது . நான் வெள்ளிகிழமை தொடர்ந்து லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் அனுபவ பூர்வமாக உணர்ந்து
சொல்கிறேன்.

லக்ஷ்மி தேவியை ஸ்லோகம் சொல்லி தான் அழைக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு தெரிந்த பாடல்களை  பாடியும் அழைக்கலாம்.துளசி செடி வைத்து வணங்குவது மிகவும் நல்லது.துளசி செடிக்கு தீபம் ஏற்றி 3 முறை சுற்றி வலம் வந்தால் சகல சௌபாக்கியமும், மாங்கல்ய பலமும்  உண்டா கும்.

அடுத்த பதிவில் சந்திப்போம்

நன்றி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக