ஹாய் எல்லோருக்கும் வணக்கம்
மதுரை மீனாக்ஷி
இன்னிக்கு வெள்ளிக்கிழமை .அதுவும் ஆடி வெள்ளிக் கிழமை .பெரும்பான்மையான மக்கள் காலை யிலேயே அம்மனை கோவில் சென்று வழிபடுவது உண்டு. நான் வெள்ளிகிழமை தோறும் , லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் அம்மா என் வீடு தேடி வந்திடுவாங்கள்.அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை
என்னுடைய பிரியமான தோழி உமா என்னிடம் ,மதுரை மீனாட்சியைப் பற்றி எழுதுமாறு கேட்டுக்கொண்டதால் அந்த மீனாக்ஷி அம்மன் அருளுடன் இந்த பதிவை எழுதுகிறேன் .
காசியில் இறந்தால் முக்தி .திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி .மதுரை வீதியில் நடந்தாலே முக்தி .
அந்த மதுரை மீனாட்சியைப் பற்றி கேட்டாலோ ,அவள் புகழை சொன்னாலோ நமக்கு நன்மை நிச்சயம் என்று நம்புவோம். எனக்கு கிடைத்த தெய்வீக அருள் உங்களுக்கும் கிடைக்க அந்த மீனாட்சி தாயாரை வேண்டுகிறேன்.
பொதுவாக சிதம்பரம் என்றால் சிவபெருமானுக்குதான் முதலிடம் .மதுரை என்றால் நம் அம்மா
மீனாட்சிக்கு தான் முதலிடம் .இதைத் தான் நிறைய பேர் மதுரைக்காரர்களை பார்த்து உங்க வீட்டுல மீனாட்ஷி ஆட்சிதானே ?என்று கிண்டல் செய்வார்கள் .
காரணம் மதுரை முழுவதும் அம்மாதான் இரவு ,பகல் என்று பாராமல் வலம் வந்து அருள் புரிகிறாள் .
மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் மீனாட்ஷி என பெயர் பெற்றாள் .அன்னையின்
கடைக்கண் பார்வை பட்டாலே சகல செளபாக்கியம் நம்மை வந்து சேரும்.மீனாக்ஷி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது .அம்மனுக்கு மரகத வல்லி ,தடாதகை ,அங்கையற்கண்ணி,
சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே .
மீனாட்ஷி பிறப்பு
அம்பிகை அவ்வப்போது பல அவதாரங்களை செய்து உலகிலுள்ள ஜீவராசிகள் அனைவருக்கும்
அருள்கிறாள் .அதில் ஒன்றுதான் சூர்யவம்சத்தில் நடந்தது .
மதுரையை ஆண்ட மலையத்வஜனுக்கும்,காஞ்சன மாலைக்கும் மகளாக, புத்ரகாமேஷ்டி யாகத்து அக்னியில் இருந்து 3 வயது பெண்ணாக வந்தவள் தான் மீனாட்ஷி . அக்னியிலிருந்து தோன்றிய பெண் மூன்று மார்புடன் தோன்றியதால் அரசன் அதை எண்ணி வருத்தப்பட்டான் .அப்போது ஒரு குரல் கேட்டது .எப்போது அவள் மனதிற்கு பிடித்த கணவனை காண்கிறாலோ அப்போது மூன்றாவது மார்பு மறைந்து விடும் என்று அந்த குரல் கூறியது .அந்த குழந்தைக்கு "தடாதகை "என்று பெயர் சூட்டினார் .
அரசன் 64 கலைகளையும் தன் மகளுக்கு கற்று தந்தார் .
தடாதகை எல்லா கலைகளிலும் வல்லவளாய் ,எட்டு திசைகளிலும் போரிட்டு வென்றாள் . பிறகு கைலாயத்தையும் வெல்ல வேண்டும் என்று சென்றாள் . அங்கு சிவபெருமானை கண்டவுடன் அன்னையின் உடலுள் ஒரு மாற்றம் .அவரே தன் மணாளன் என்ற உணர்வு மேலிட,அவருக்கு மாலையிடத் தயாராகிறாள் .
மதுரையில் ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது .தன் தங்கையை தாரை வார்த்து கொடுக்கிறார் நம் விஷ்ணு பெருமாள் .அன்று இரவு பல வண்ண பூக்களால் ஆன பல்லாக்கு வீதிகளில் வரும். இதற்கு பூப் பல்லாக்கு என்று பெயர் .சுந்தரேசரும் ,மீனாட்ஷியும் பல்லாக்கில் வந்து மதுரை மக்களுக்கு காட்சியளிப்பர் .
மதுரையில் அடுத்த நாள் தேரோட்டம் நடைபெறும்.மறுநாள் அழகர் ஆற்றில் இறங்குவார் .ஒவ்வொரு மண்டபமாக சென்று பக்தர்களுக்கு அருள் புரிகிறார் .இறுதியாக அழகர் கோவிலுக்கு சென்று விடுவார் .
முத்தமிழருக்கு இயல் ,இசை, நாடகங்களை காட்டும் கலைக் கோவிலாகவும்,சிலை கோவிலாகவும் மீனாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது.
பொற்றாமரை குளம்
இந்திரன், தான் பூஜிப்பதற்கு பொன் தாமரை மலரைப் பெற்ற இடம் .ஒரு நாரைக்கு சிவபெருமான் அருளிய வரத்தின்படி ,இக்குளத்தில் மீன்களும் ,நீர்வாழ் உயிரினங்கள் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.
இக்கோவிலில் மூலவர் சுந்தரேஸ்வரர்.இந்திரன்,வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம் .
மீனாட்க்ஷி அம்மன் கோவில் வெள்ளி அம்பலம் என்று அழைக்கப்படுகிறது . மதுரையில்
சிவபெருமான் பாண்டிய மன்னனுக்காக வலது காலை தூக்கி ஆடினார் என்பது சிறப்பு மிக்கது .
தலவிருட்சம் -----கடம்ப மரம் . மீனாட்ஷி அம்மன் கோவில் சுவர்களில் மீனாட்ஷி வரலாற்றை மிக அழகாக சித்திரம் வரைந்து ,பார்ப்பவர்களுக்கு எளிதாக புரியும்படி உள்ளது .
மதுரையில் வடக்கே குபேரன் வழிப்பட்ட பழைய சொக்கநாதர் கோவில் ,மேற்கே சிவனே லிங்க வடிவில் உள்ள தன்னை ,தானே வழிபட்ட இடம் நன்மை தருவார் கோவில் .கிழக்கில் வழிபட்ட ஐராவத நல்லூர் மூத்தீஸ்வரன் கோவில் ,தெற்கில் எமன் வழிபட்ட திருவாலவாய் கோவில் .
மதுரை திரு மீனாட்சி அம்மன் 108 போற்றி
2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி4. ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி5. ஓம் அரசிளங்குமரியே போற்றி6. ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி7. ஓம் அமுத நாயகியே போற்றி8. ஓம் அருந்தவ நாயகியே போற்றி9. ஓம் அருள்நிறை அம்மையே போற்றி10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி12.ஓம் ஆதியின் பாதியே போற்றி13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி14.ஓம் ஆனந்தவல்லியே போற்றி15.ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி16.ஓம் இமயத்தரசியே போற்றி17.ஓம் இடபத்தோன் துணையே போற்றி18.ஓம் ஈசுவரியே போற்றி19.ஓம் உயிர் ஓவியமே போற்றி20.ஓம் உலகம்மையே போற்றி21.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி22.ஓம் எண்திசையும் வென்றோர் போற்றி23.ஓம் ஏகன் துணையே போற்றி24.ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி25.ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி26.ஓம் ஒப்பிலா அமுதே போற்றி27.ஓம் ஓங்காரசுந்தரியே போற்றி28.ஓம் கற்றோர்க்கினியோய் போற்றி29.ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி.ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி31.ஓம் கல்யாண சுந்தரியே போற்றி32.ஓம் கனகமணிக் குன்றே போற்றி33.ஓம் கற்பின் அரசியே போற்றி34.ஓம் கருணயூற்றே போற்றி35.ஓம் கல்விக்கு வித்தே போற்றி36.ஓம் கனகாம்பிகையே போற்றி37.ஓம் கதிரொளிச் சுடரே போற்றி38.ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி39.ஓம் காட்சிக்கினியோய் போற்றி40.ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி41.ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி42.ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி43.ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி44.ஓன் கூடற்கலாப மயிலே போற்றி45.ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி46.ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி47.ஓம் சக்தி வடிவே போற்றி48.ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி49.ஓம் சிவகாம சுந்தரியே போற்றி50.ஓம் சித்தந்தெளிவிப்பாய் போற்றி
51.ஓம் சிவயோக நாயகியே போற்றி52.ஓம் சிவானந்த வல்லியே போற்றி53.ஓம் சிங்கார வல்லியே போற்றி54.ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி55.ஓம் செல்வத்துக்கரசியே போற்றி56.ஓம் சேனைத் தலைவியே போற்றி57.ஓம் சொக்கர் நாயகியே போற்றி58.ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி59.ஓம் ஞானாம்பிகையே போற்றி60.ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி61.ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி62.ஓம் தண்டமிழ்த்தாயே போற்றி63.ஓம் திருவுடை யம்மையே போற்றி64.ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி65.ஓம் திரிபுர சுந்தரியே போற்றி66.ஓம் திருநிலை நாயகியே போற்றி67.ஓம் தீந்தமிழ்ச் ச்சுவையே போற்றி68.ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி69.ஓம் தென்னவன் செவ்வியே போற்றி70.ஓம் தேன்மொழியம்மையே போற்றி
71.ஓம் தையல்நாயகியே போற்றி72.ஓம் நற்கனியின் சுவையே போற்றி73.ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி74.ஓம் நல்ல நாயகியே போற்றி75.ஓம் நீலாம்பிகையே போற்றி76.ஓம் நீதிக்கரசியே போற்றி77.ஓம் பக்தர்தம் திலகமே போற்றி78.ஓம் பழமறையின் குருந்தே போற்றி79.ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி80.ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி81.ஓம் பவளவாய்க் கிளியே போற்றி82.ஓம் பல்லுயிரின் தாயே போற்றி83.ஓம் பசுபதி நாயகியே போற்றி84.ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி85.ஓம் பாண்டிமா தேவியே போற்றி86.ஓம் பார்வதி அம்மையே போற்றி87.ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி88.ஓம் பெரியநாயகியே போற்றி89.ஓம் பொன்மயிலம்மையே போற்றி90.ஓம் பொற்கொடி அம்மையே போற்றி91.ஓம் மலையத்துவசன் மகளே போற்றி92.ஓம் மங்கள நாயகியே போற்றி93.ஓம் மழலைக் கிளியே போற்றி94.ஓம் மனோன்மணித்தாயே போற்றி95.ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி96.ஓம் மாயோன் தங்கையே போற்றி97.ஓம் மாணிக்கவல்லியே போற்றி98.ஓம் மீனவர்கோன் மகளே போற்றி99.ஓம் மீனாட்சியம்மையே போற்றி100.ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி101.ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி102.ஓம் யாழ்மொழியம்மையே போற்றி103.ஓம் வடிவழகம்மையே போற்றி104.ஓம் வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி105.ஓம் வேதநாயகியே போற்றி106.ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி107.ஓம் அம்மையே அம்பிகையே போற்றி108.ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
இந்த போற்றியை சொல்லி அம்மன் அருள் பெறுங்கள் .
அம்மா கருணை மழை பொழிந்தால் மட்டுமே நமக்கு நல்ல வாழ்வு அமையும் என்று சொல்லி ,நம்பிக்கையுடன் அம்மனை வேண்டுங்கள் .அம்மா நம்முடன் என்றும் இருப்பாள் என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக