வணக்கம். அறிமுகம்
என் பெயர் ஈஸ்வரி.இந்த வலைதளத்தில் இறைவனைப் பற்றிய முக்கிய வழிபாடுகளையும் , குறிப்புகளையும் படித்து ,தெரிந்து கொள்ளலாம் .நான் இந்த பதிவை எழுதுவதற்கு காரணம் என் போன்ற சக ஆன்மீக தோழிகள் இதை படித்து பயன் பெறுவார்கள் என்ற நல்ல எண்ணமே. கடவுள் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையினால் (எல்லாம் கடவுள் செயல் )இதை நான் எழுதுகிறேன்.
ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தெரிந்த முறையில் இறைவனிடம் பக்தி செலுத்துவர்.அதேபோல் நான் ஆண்டவனின் பெருமையை எழுதுவது எனக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணுகிறேன் .
ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தெரிந்த முறையில் இறைவனிடம் பக்தி செலுத்துவர்.அதேபோல் நான் ஆண்டவனின் பெருமையை எழுதுவது எனக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணுகிறேன் .
எந்த இறைவனை வழிபடுவதாக இருந்தாலும் முதலில் முழு முதல் கடவுளான விநாயகரை பிராத்தனை செய்தல் வேண்டும் .பின் அவரவர் குல தெய்வத்தை கும்பிடுவது மிகவும் நல்லது .குல தெய்வம் தெரியாதவர்கள் வெங்கடாசல பெருமாள் சுவாமியை குல தெய்வமாக எண்ணி ,வழிபடலாம். .பிறகு இதர தெய்வத்தை வணங்கலாம் .
நண்பர்களே! எனக்கு தெரிந்த விஷயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி
மறுபடியும் சந்திப்போம்
ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக