வியாழன், 9 ஜூலை, 2015

குபேர பூஜை

குபேர பூஜை



ஹலோ ப்ரிண்ட்ஸ், இன்னிக்கு வெள்ளிகிழமை என்பதால் குபேர பூஜையைப் பற்றி  சொல்லலாம் என்று இருக்கேன். 

குபேர பூஜை செய்வதற்கு  முன்னால்  குபேரன் என்பவர்   யார் ? என்பதை சொல்ல விரும்புகிறேன் . என்ன பிரண்ட்ஸ் அதைப்  பற்றி பார்ப்போமா ?


குபேரன் 


குபேரன் பாற்கடலில் இருந்து தோன்றினார் .பிரம்மாவின் புத்திரன் புலஸ்தியரின் பேரன் குபேரன் .
மாற்றந்தாய்க்கு பிறந்தவன் ராவணன் .குபேரனிடம் இருந்து இலங்கையை அபகரித்தான் ராவணன் . 

குபேரனின் மனைவி பெயர்  சித்தரிணீ .குபேரனின்  இடது புறம் சங்க நிதி உள்ளார் . சங்கு வைத்திருப்பார் .வலது புறம் பதும நிதி உள்ளார் .தாமரை வைத்திருப்பார் .

    
குபேரன் சிவ பக்தன் . எட்டு திக்கு காவலர்களில்  ஒருவராக சிவன் இவரை நியமித்தார் .லக்ஷ்மி தேவி குபேரனை தன தானிய அதிபதி ஆக்கினார்.வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.

குபேரன் மடியில் கீரி பிள்ளை இருக்கும்.நோயற்ற  வாழ்வும் ,குறைவற்ற செல்வமும் தருபவர் குபேரன் .


குபேர பூஜையுடன் லக்ஷ்மி பூஜையும் செய்தால் குபேரனின் அருளுடன் லக்ஷ்மியின்  ஆசிர்வாதமும் 
கிடைக்கும். நான் வாரவாரம் குபேர லக்ஷ்மி பூஜை செய்கிறேன் .அதனுடைய பலனையும் அனுபவிக்கிறேன் .


  

குபேர பூஜை செய்வது எப்படி?

முதலில் சிறிது அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாவினால் மேலே உள்ளது போல 9 குபேர கட்டங்களை ஒரு மரப்பலகையில் போடுங்கள். பின்னர் அந்தக் கட்டங்களுக்குள் அரிசி மாவினால் எண்களை எழுத வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள எண் மீதும், ஒரு ரூபாய் நாணயத்தைத் தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

பின், அந்த மரப்பலகை எதிரே லட்சுமி குபேர படத்தை வைக்கவும்.நாணயத்தின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து, குபேர சுலோகம் சொல்ல வேண்டும். அவ்வாறு சுலோகம் சொல்லும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பூவை வைக்கவும், மீதமிருக்கும் பூவை குபேர படத்தின் மீது போடவும். இந்தப் பூஜையை மிகுந்த பய பக்தியுடன் செய்ய வேண்டும்.



பூஜை முடிந்த பின்னர், கட்டங்களில் உள்ள நாணயங்களை எடுத்து உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, கல்லாப்பெட்டியிலோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த குபேர பூஜையால் செல்வம் பெருகும். வறுமை அகலும்.

ஒன்பது வாரத்தில் ஒன்பது  நாட்களும்[ஒவ்வொரு வியாழன்]உபயோகிக்கும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அது லட்சுமி தேவிக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகும். 


அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும். அதை போடும் முன்பு தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கைகளை போல் தனக்கும் பல மடங்கு செல்வம் தரவேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும்.

லக்ஷ்மி குபேர மந்திரம் 


1.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள
சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!


2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச
குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!


3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய
ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!


4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!


5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!


6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!


7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!


8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!


9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!


10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!


11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!


12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!


13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!


14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!


15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!


16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!



என்ன நண்பர்களே ! நீங்களும் குபேர பூஜை செய்து பலன் பெறுமாறு ஆண்டவனை பிராத்திக்கின்றேன்.   


உங்கள் தோழி  ஈஸ்வரி 

6 கருத்துகள்:

  1. Indha poojai 9 vaaram seiyavenduma ..alladhu vaara vaara velli kizhamai seiyavenduma ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kubera poojai thursday evening seiya vendum.kuberarukku thursday viseshammana naal.vellikilamai seithaalum thappu illai.naan lakshmi poojai seivathaal kubera poojaiyum serthu seivean.venduthal nirai verum varai seiyungal.

      நீக்கு
    2. pothuvaga 9weeks kubera poojai seivannga.seiya seiya selvam ungal illaththil entha thangu thadai illaamal kidaikkum.

      நீக்கு
  2. Thanks alot for Ur reply mam... Deerga sumangaliyaga irruka oru simple poojai sollunga pls...

    பதிலளிநீக்கு