நந்தி
ஹாய் ப்ரண்ஸ் ,
அனைவருக்கும் வணக்கம் . இன்னிக்கு நான் நந்தி தேவரை பற்றி தான் சொல்ல போறேன்.நாம் எல்லோரும் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபடுகிறோம்.ஆனால் யாரை முதலில் வழிபட வேண்டும் என்று நிறைய பேருக்கு தெரியாது.
எந்த காரியமானாலும் அதை முறைப்படி சரியாய் செய்தால் தான் அது சரியாக இருக்கும் .ஒரு சின்ன அன்றாட காரியத்திற்கே இப்படி செய்யும் போது உலகத்தையே படைத்த கடவுளை முறையாக கும்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லையே .
சரி இப்பொழுது யாரை முதலில் வழிபட வேண்டும் ?என்பதைப் பற்றி பார்க்கலாமா .வாங்க! பாக்கலாம் .
கொடிமரம்
முதலில் கொடிமரத்தை வணங்க வேண்டும் .கொடி மரம் என்பது இந்து கோவில்களில் பலி பீடத்துக்கு அருகில் ஏற்றப்படுவது ஆகும் .சிவலாயத்தில் மூலவரை நோக்கியே நந்தி ,கொடி மரம்,பலிபீடம் இருக்கும் .
பலிபீடம்
கொடி மரத்தை வணங்கிய பின் பலிபீடத்தை வணங்க வேண்டும் .
பலிபீடம் என்பது நந்தி தேவருக்கு பின் இருக்கும். பலிபீடம் பாசத்தை உணர்த்துகிறது.
நம்முடைய காம ,குரோத,லோப, மோக ,மத மாச்சரியங்களை பலி கொடுப்பதாக உறுதி செய்து
கொள்ள வேண்டும் .
நமது ஆணவம் ,அகங்காரம் பற்றுகளை பலி இட்ட பின்னரே தெய்வ சித்தி கிட்டும்.கோவிலின்
எட்டு மூலைகளிலும் அஷ்ட திக் பாலர்களாக இந்திரன்,அக்கினி ,எமன் ,நிருதி ,வருணன் ,வாயு ,
குபேரன் ,எசாணன் முதலியவர்களுக்கு தலைமை பீடமாக இருப்பது பலிபீடமாகும்.
பிறகு தான் நந்தி தேவரை வணங்க வேண்டும்.
நந்தி நந்தி என்று எல்லோரும் சொல்கிறோமே ? யார் இந்த நந்தி? தெரிஞ்சிக்க ஆசையா இருக்கா ?
வாங்க பாக்கலாம் .
நந்தி வாழ்க்கை
உத்தமமான முனிவர் கிலாதர் .அவர் பத்தினி சித்ரவதி அம்மையார் .இந்த முனி தம்பதியரின் தவப்பயனால் ,கைலைநாதன் ,ஸ்ரீ சைலம் போங்கள் என்று இருவரையும் அன்பு கட்டளை இட்டார் .
உலகை ஆளும் பரம் பொருளே சொல்லிய பிறகு கேட்கவா வேண்டும்? இருவரும் ஸ்ரீ சைலம்
வந்தார்கள் .புத்திர பாக்கியம் வேண்டி பல வேள்விகளை நடத்தினார்கள் . கடும் தவம் புரிந்தார்கள்.
கருணைக்கடலான நம் சிவபெருமான் அருளால் சூரியனை போன்ற பிராகசமான மகன் பிறந்தான் .
அன்னை சித்ரவதி தாய்மையுடன் பாசத்தை பொழிந்து மகனை சீராட்டி , தாலாட்டி வளர்த்தாள் .
தந்தை சும்மா இருப்பாரா ?அதுவும் முனிவர் ஆயிற்றே ? எனவே சகல கலைகளையும் அவர் தன் மகனுக்கு கற்பித்தார் .
வளர்ந்து வாலிப வயதை எட்டினார் நந்தி .எல்லா தாயாருக்கும் இருக்கும் ஆசை சித்ரவதிக்கு
வந்தது .அது தான் நந்திக்கு திருமணம் செய்து வைப்பது என்று . ஆனால் நந்தி பகவானோ
தவகோலம் பூண்டார் .
தன் தாய் ,தந்தையரை வணங்கி, "என்னை ஆசிர்வதியுங்கள் . நான் பரம்பொருளை காண கடும்
தவம் செய்ய போகிறேன் " என்றார் ரிஷி குமாரன் நந்தி.
நாமாக இருந்தால் மகனை தவம் செய்ய அனுப்ப தயங்குவோம் .ஆனால் எல்லாம் காலம் போடும்
கணக்கு என புரிந்து கொண்ட முனி தம்பதியர் நந்தியை ஆசிர்வதித்து வழி அனுப்பி வைத்தார்கள்.
விடை பெற்ற நந்தி பல ஆண்டுகள் அக்கினியில் நின்று கொண்டே தவம் செய்தார் .மெய் வருத்தசெய்த தவத்தின் பயனாக அந்த பரம்பொருள் நேரில் தோன்றினார் .
"மகனே !" எனது ஆணை எங்கும் நிறைந்தது .அதுபோல் இன்று முதல் உனது அதிகாரமும் எங்கும் நடக்கும் . அதனால் அதிகார நந்தி என்று சொல்லப்படுவாய் " என்று கூறினார் .
நந்தி தேவன் "அதிகார நந்தி" என பெயர் பெற்ற பின்னாலும் கடும் தவம் செய்தார் . அதன் பயனால்
மீண்டும் வரங்கள் சிவன் தந்தார்.
அனைத்து பூதங்களுக்கும் உன்னை தலைவனாக ஆக்குகிறேன்.சிவ ஞானத்தை உலகிற்கு போதிக்கும் ஆசிரியனும் நீயே .எனக்கு வாகனமாகவும் ,கைலையில் காவல் தெய்வமாகவும் நீயே
இருப்பாய் .என்னை போலவே நீயும் நித்தியனாக இருப்பாய் என்று வரமளித்தார் .
நந்தி சைவர்களுக்கு குரு. நந்தி என்றாலே ஆனந்த நிலையில் இருப்பவர் என்றே பொருள் .
நந்திக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு .
ருத் ------துக்கம்
ரன் -------ஓட்டுபவன்
துக்கத்தை ஓட்டுபவர் நந்தி .
இவரின் அனுமதி பெறாமல் சிவதரிசனம் செய்வது தவறு . அப்படி வணங்கினால் சிவனருள் கிட்டாது .
ஒரு சமயம் திருமால் சிவனை வணங்க நந்தியிடம் அனுமதி பெற்றே சென்றார் .கருடன் திருமால்
திரும்பி வராததால் வெளியில் நின்ற கருடன் நந்தி தேவனிடம் அனுமதி பெறாமல் சிவனிடம் செல்ல முயன்றார் . இதனால் கருடனுக்கும்,நந்திக்கும் சண்டை மூண்டது . நந்தி தேவரின் ஆவேச மூச்சில் கருடன் நிலை தடுமாறி விழுந்தார் .
தன்னை காக்க கருடன் திருமாலை நாடினார். திருமால் சிவனை வேண்ட நந்தியிடம் கருடனை
மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்க பெற்றார் .
சிவ ஆலயத்தில் நந்தி தேவர் எப்போதும் சிவனை துதித்து வணங்கியபடியே இருப்பதால் சிவனுக்கும் ,நந்திக்கும் குறிக்கே செல்ல கூடாது .
நந்தி வழிபாடு பிரதோஷ காலத்தில் செய்வது சிறப்பு .
பிரதோஷ காலம் சனி கிழமையாக இருந்தால் விசேஷம் .
பிரதோஷ காலம் பாவத்தை போக்கும் காலம் ஆகும் .பிரதோஷ காலத்தில் இருவரையும் துதிப்பது
1000 அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் .
திரயோதசி அன்று மாலை சூரிய அஸ்த மனத்திற்கு முன்னதாக ஒன்னரை மணி நேரம் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது .இந்த நேரத்தில் தான் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே
அண்டத்தின் மேலே நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார் .
பிரதோஷ காலத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் சிவபெருமானுக்குள் ஓடுங்கி விடுவதாக புராணம் சொல்கிறது .
நந்தி நிவேதனம்
அரிசி, பயத்தம் பருப்பு ,வெல்லம் ,திருகின தேங்காயை கலந்து பண்ணி பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு விஷேசமாக நெய்வேத்தியம் செய்திடல் வேண்டும் .
நந்தியின் நிறம் வெண்மை .வெண்மை தூய்மையை குறிக்கும்.அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மை .
சிறந்த பக்தியும் ,நற்குணமும் கொண்ட குழந்தை செல்வங்களும்,சகல காரிய சித்தியும் ,
உயர்ந்த பதவியும் ,நல்ல எண்ணங்களும் ,நல்லொக்கமும் கிடைக்கும் .எல்லாத்துக்கும் மேலாக
முக்தியெனும் வீடு பேற்றையும் அடையலாம் .
மதுரையில் தெப்பக்குளம் அருகில் மூத்தீஸ்வரன் ஆலயத்தில் வார வாரம் வியாழக் கிழமை மிகச்
சிறப்பாக நந்திக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது .நீங்களும் மதுரை செல்ல வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் .
என்னுடைய பதிவை நந்தி தேவரின் மந்திரம் சொல்லி முடிக்கிறேன்.
ஓம் தத் புருஷாய வித்மகே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி ப்ரசோதயாத்
நந்தி தேவரை வணங்கினால் சிவபெருமான் மகிழ்ச்சி அடைவார் .சரி நண்பர்களே! நான் நந்தியை பற்றி எழுதிட்டேன். இனிமேல் நீங்கள் நந்தி தேவருடன் சிவபெருமானை வணங்கி பலன்
பெறுங்கள் .
என்னுடைய பதிவு எல்லோருரையும் ஆன்மீக வழியில் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன் .
நாளை இன்னும் ஒரு ஆன்மீக தகவல்களுடன்
நன்றி வணக்கம் -----உங்கள் ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக