புதன், 22 ஜூலை, 2015

மகா பெரியவா

மகா பெரியவா


      குரு அருள் இன்றி எதுவும் நடக்காது .குருவுக்கெல்லாம் குரு நம் மகா பெரியவா.

நான் தெய்வபக்தி மார்க்கத்தில் ஆழமாக இருந்தாலும் எனக்கு குருவாக எமை வழி நடத்தி
செல்பவர்கள் இருவர். ஒருவர் சாய் பாபா.மற்றொருவர் மகா பெரியவா .

சாய் பாபாவும் சரி ,மகா பெரியவாவும் சரி .இருவரும் கூப்பிட்ட  குரலுக்கு ஓடோடி  வருபவர்கள் .

நீங்கள்  எந்த கடவுளை கும்மிட்டாலும் சரி .எல்லோருக்கும் ஒரு குரு அவசியம் தேவை .எனது
வாழ்க்கையில்  வந்த கஷ்டங்களை எல்லாம்  ஒரு நொடியில் தூளாக்கி   நிம்மதியை தந்து என்னை வழி  நடத்திசெல்பவர்கள் என் குருக்கள் .


எத்தனையோ தடவை நான் அனுபவப் பூர்வமாக நான் உணர்ந்து இருக்கிறேன்.இது என்
உள்ளத்தில் எழுந்த ,உணர்ந்த உண்மைகள் .

கடவுள் நம்மிடம் நேரில் வர மாட்டார் .ஆனால் இது போன்ற குருக்கள் மூலமாக நம்மிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார் .

கடவுளை நாம் நெருங்க வேண்டும் என்றால் முதலில் குருவின் அருளைப் பெற வேண்டும் .

இன்னிக்கு வியாழக்கிழமை .குருவுக்கு விசேஷமான நாள் .குருவுக்கு செய்யும் சேவையே  கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும் .


என் குருவாகிய மகா பெரியவா திருவடியை வணங்கி ,நான்  இன்னும் விரிவாக எழுத 
தொடங்குகிறேன் .என்னுடைய பதிவை நிறைய பேர் பார்ப்பதே  ,கடவுளின் அருளும் ,
குருவின் ஆசீர்வாதமும் தான் .

 குரு என்பவர் யார் ?


குரு என்றால் கனமானது ,பெரிது என்று அர்த்தம் .

கு ---இருட்டு ,  ரு ---போக்குவது .

குரு நம் வாழ்வில் ஏற்படும்  துன்பங்களை போக்குபவர் .பெருமை உடையவர் .மகிமை பொருந்தியவர் .

 எந்த மனச் சாந்திக்காக ஈஸ்வரனை அடைகிறோமோ அந்த சாந்தி எப்போதும் சுத்தமாய் ,
ஞானம் உடையவராய் ,அசைவு இலாத சித்தம் உடையவராக  இருக்கும் குருவை வணங்கும் 
போது  கிடைக்கிறது.

அதனால் தான்  குரு ப்ரஹ்மா குருர் விஷ்ணு : குரு தேவோ  மஹச்வர  என்று சொல்கிறோம் .

ஈஸ்வரனிடம்  உள்ள உத்தமான குணம் குருவிடம் இருக்கிறது .

 மகா பெரியவா நமக்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியம் .

பெரியவா என்று எல்லாராலும் அழைக்கப்படுகின்ற சந்திர சேகர சரசுவதி மே  20,1894 ஆண்டு 
பிறந்தார் .

இவர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் .காஞ்சி காமாட்சி அம்மையை வழிபடுபவர் .சுய நலம் இல்லாதவர் .மிக எளிமையான வாழ்வை  வாழ்ந்து காட்டியவர் .





அவருடைய இதயத்தில் சாட்சாத்  சர்வேஸ்வரன் தான் குடி கொண்டு  தன்னை நாடி வரும் 
பக்தர்களின்  தேவைகளை நிறைவேற்றுகிறார் .

பெரியவா எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வார்  .அவர் நடைக்கு  முன் யாரும் செல்ல முடியாது .அந்த அளவு வேகமாக நடந்து செல்வார் . 

அவருக்கு அள்ளி கொடுக்க ஆயிரம் பேர் இருந்தாலும் அவர் அதை விரும்பியது இல்லை .

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைத்தாலே போதும் .


ஒரு சமயம் மகா பெரியவாவை பார்த்து ஆசீர்வாதம் வாங்க பல பணக்காரர்கள் வந்திருந்தார்கள்.
அவர்களில் கடைசியாக வரிசையில் ஒரு வயதான பாட்டி கல்கண்டை பெரியவாவிடம் 
கொடுத்து ஆசீர்வாதம் வாங்க அந்த தள்ளாத வயதில் நின்று கொண்டிருந்தார் .


கருணை கடலான நம் பெரியவா தன்னுடைய சீடர்களை  அழைத்து பாட்டியை 
அழைத்து வர சொன்னார் .  பாட்டி கொடுத்த கல்கண்டை அன்புடன் ஏற்று கொண்டு வழி  
அனுப்பினர் .


இன்னுமொரு  சம்பவம்  இது . ஒரு சமயம் பெரியவா  மெளன விரதம் இருந்தார் . அந்த 
நேரம் பார்த்து பார்வையற்ற  குழந்தைகள் அவரை பார்த்து ஆசீர்வாதம் வாங்க வந்திருந்தார்கள்.
அவர்களுக்காக தன்னுடைய விரதத்தை விட்டுவிட்டு குழந்தைகளுடன் பேசினார் .

பெரிய பதவியில் இருப்பவர்கள் விரதத்தின் போது  வந்தாலும் பெரியவா பேச மாட்டார் .

பெரியவா திருவடி சரணம் 





 



குருவின்  திருவடிக்கு மதிப்பு அதிகம் .நம் இஷ்ட தெய்வமே குருவாக வந்திருக்கிறார்  என்ற 
நம்பிக்கை  நம் எல்லோர் மனதிலும் வர வேண்டும் .அப்போது தான் எளிதில் முக்தி கிடைக்கும் .

குருவின் திருவடிகளை உறுதியாக பற்றி கொண்டால் சகலமும் நமக்கு கிடைக்கும் .

பெரியவா  ஜாதி மத பேதம் இல்லாதவர் .எந்த மொழி. எந்த மதம் ,எந்த  நாட்டினராக   இருந்தாலும் பெரியவா   என்று கூப்பிட்டால் ஓடி வந்து நம்மைக் காப்பார் .

குருவிடம் நாம் நெருங்கும் போது குருவிடம் இருக்கும் அனைத்து நல்லவற்றையும் நாமும் 
பின்பற்ற தொடங்குகிறோம் .

அவர்களுடைய மகிமைகளை கேட்பதும் , படிப்பதும் நம் தீய எண்ணங்களை களைத்து  நல்  
வழிக்கு செல்ல தூண்டுகோல் ஆகிறது .



எளிய பாடல் 


பெரியவா பாதம் போற்றி 
பாப விமோசனம் தரும் பாதம் போற்றி 
கைகள் போற்றி 
நலமா எனக் கேட்டு என்றும் அருள் 
கொடுக்கும் கைகள் போற்றி 
கண்கள் போற்றி 
காந்தமென  நமை இழுக்கும் காண  காண 
அமைதி தரும் கண்கள் போற்றி 
காவி உடை போற்றி தெளிவு நடை போற்றி 
தீர்க்க  தரிசனம் போற்றி என் குரு நாதா 
உந்தன் பாதாரவிந்தம் போற்றி போற்றி.


இந்த பாடலை தினமும் பாடி நம் குருவாகிய பெரியவாவை வணங்கி துதிப்போம்.

என் பதிவினை பார்த்து பயன் பெறுவீர்கள்! என்ற நம்பிக்கையுடன் என்   பதிவை முடிக்கிறேன். 
மீண்டும் நாளை சந்திபோம் .

நன்றி .வணக்கம் .














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக