புதன், 15 ஜூலை, 2015

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி




ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி



ஹாய் பிரண்ட்ஸ் இன்னிக்கு நான் ஸ்ரீ  பாலா  திரிபுரசுந்தரியை  பற்றி  எனக்கு தெரிந்ததைப்  பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.


அம்பிகையை பல வடிவங்களில்  நாம் வழிபடுகிறோம் .அவற்றில் ஒன்பது வயது குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம் . அந்த அம்மையின் அருளையும்,பெருமைகளையும்  சொல்ல  வார்த்தையே  இல்லை .ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி  எடுத்து கொண்ட வடிவம் தான் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி வடிவம்.


பண்டாசுரனை வதம் செய்வதற்காக தோன்றினாள் பாலா தேவி .மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன்" பண்டன் "எனும் அரக்கன் .ஒரு பெண்ணை தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான் .அந்த சந்தோஷத்தில் தேவர்களையும் ,மற்ற வர்களையும் துன்புறுத்தினான் .அவர்கள் பராசக்தியை சரணடைய ,தேவி தன்  சேனைகளோடு  போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள்.

லலிதையின் அங்கத்திலிருந்து  தோன்றியவள்.ஒரு கையில்  அபய  முத்திரையுடன் ஜெப மாலையும்,
புத்தகம் ஏந்தி அருள் புரிகிறாள்.

பாலா என்றால்  சிறுமி எனவும் பொருள்படும் .பொதுவாகவே , சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர் .தீய எண்ணங்கள் இருக்காது.அதே போல்  சிறுமியாக இருக்கும்  இவளும் .பேதம் பாராட்டாமல் அருள்வாள். இவளை தியானித்தயுடனே மனதில் பிரசன்னமாவாள்.அன்பு மழை பொழிவாள்.



ஆற்றில் வந்தவள்

நெமிலியில் வசித்த வேதவித்தகர் "சுப்பிரமணிய அய்யர் "இரவில் தூங்கி கொண்டிருந்தார்.அப்போது அன்னை  பாலா கனவில் தோன்றினாள் ."அன்னை ராஜராஜேஸ்வரியின்  கட்டளையை ஏற்று ஆற்றில் வருவேன் .என்னை அழைத்து, உன் வீட்டில் அமர்த்தி கொள் "என்றாள்.

அய்யர்  ஆற்றுக்கு சென்று இடுப்பளவு நீரில் இறங்கி சிலையை தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் வீட்டிற்கு வந்தார்.மறுநாளும் தேடினார்.ஏமாற்றம்தான்.பித்து பிடித்தவர் போல் ஆனார்.மூன்றாவது   காலையில் ,எழும்போது நீல வானமும்,அதில் பறக்கும் பறவை கூட்டமும் நல்ல சகுனமாக தெரிந்தது.நம்பிக்கையுடன் ஆற்றுக்கு சென்றார்.நீரில் மூழ்கி  பார்த்தார் .அதுவரை அவருடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய பாலா இந்த தடவை அவர் கைகளில் கிடைத்தாள் .அந்த சிலை சுண்டு விரல் அளவில் இருந்தது.மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.


வீடே கோவிலாக மாறியது .


தன்  வீட்டிலேயே சிறுமி உருவில் இருந்த பாலாவை பிரதிஷ்டை செய்தார்.அய்யரின்  வீடே கோவிலாக மாறியது .இந்த வீட்டை "பாலா பீடம்"என்று அழைக்கின்றனர் .குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் அவர்களுக்கு பிடித்தமான மிட்டாய் பிரசாதமாக வழங்கப்படுகிறது .சரஸ்வதியின் அம்சமாக  இருப்பதால் நோட்டு புத்தகம் ,பேனா போன்ற பொருட்கள் பூஜையில் வைத்து பூஜித்தப் பிறகு மாணவர்களுக்கு  கொடுக்கிறார்கள் .பாலாவை வணங்குவதால் ஞாபக சக்தி உண்டாகும் குழந்தைகள்  கல்வியில் சிறந்து விளங்குவர் .


தெய்வங்களை   பால ரூபத்தில்  வழிபடுவதால் நமக்கு அவர்களுடைய அருள் எளிதில் கிடைக்கும்.



சிவம் எனபது அசையா பொருளாக உள்ளது .அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே
அன்னை பராசக்தி.மூம்மூர்த்திகளின்  செயல் ரூபமே சக்தி .சித்தர்கள் சிறப்பித்து கூறப்படும் தெய்வம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி .கருவூர் சித்தர் உள்ளிட்ட 18 சித்தர்களும் பாலா சந்நிதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.

மந்திர ஜெபத்தில் கணபதிக்கு  அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி மந்திரம்.ச்லோகங்களை ,ஸ்தோத்திரங்களை   விட மூலமந்திர ஜெபம் அந்த  குறிப்பட்ட
தெய்வத்திற்கு அருகில் நம்மை அழைத்து செல்லும் .

திரியட்சரி மந்திரம்


ஓம் / ஐம் / க்லீம் / செளம்

இதில் செளம் என்பதை (செளஹீம்) என்று சொல்லுவது சிறந்தது .

 ஐம் ----என்ற பீஜம் வாக் பீஜம் எனப்படுகிறது.
பிரம்மா ,சரஸ்வதி  இவர்களின் அம்சம். இம்மந்திரம் நல்ல பேச்சாற்றல்,ஞானம் ,அறிவு தரும்.

க்லீம்  ----என்ற பீஜம் காமராஜ  பீஜம் எனப்படும் .இதில் விஷ்ணு ,லக்ஷ்மி ,காளி ,மன்மதன்  இவர்கள்
அடக்கம் . இம்மந்திரம் நல்ல  செல்வம் ,செல்வாக்கு ,கெளரவம் ,வசீகரசக்தி,உடல் ,மனபலம் இவற்றை தரும்.

செளஹீம்  ------இப்பீஜத்தில் சிவன்,பார்வதி ,முருகன்அடக்கம். செளம்  என்ற பீஜத்தில்  இருந்தே
செளபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது .இப்பீஜம் செளபாக்கியம் நிறைந்த  வளங்களை தரும்.


இவ்வாறு மூம் மூர்த்திகளின்  பீஜத்தையும்  ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய்  என்ற  ஸ்ரீ பாலா
திரிபுரசுந்தரி .

என்ன ப்ரண்ட்ஸ் மந்திரமும் சொல்லியாச்சு, இனிமேல் சொல்ல ஆரம்பிக்க வேண்டியது தான் .

மந்திரத்தை சொல்லி பாலா  அன்னையின் அருளை அனைவரும் பெற நான் அன்னையை
வேண்டுகிறேன் .


நன்றி  வணக்கம் . நாளை சந்திப்போம் .


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக