திங்கள், 20 ஜூலை, 2015

ஐராவதம்

ஹலோ பிரண்ட்ஸ்


         வணக்கம் . நாம்  எல்லோரும்  இந்த அவசர உலகத்தில் ஓடிகிட்டே இருக்கிறோம்  . எவ்வளவோ 

வேலைகள் இருந்தாலும் கடவுளுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.கடவுள் யாரிடமும் எதையும் 

கேட்பது  இல்லை . நாம் தான் அவரிடம் மனம் உருகி  கேட்க வேண்டும்.


என்னடா! இன்னும் சொல்ல வேண்டியதை சொல்லாமல்  இருக்கேன்னு நினைப்பீர்கள் .சரி 

நான் சொல்ல போறது  யானையைப் பற்றி தான். யானை என்றால்  குழந்தைகள் முதல் பெரியவர்

வரை பிடிக்கும் . அதுவும் நான் சொல்ல போகிற யானை சாதாரண யானை இல்லையில்லைங்க.

தேவலோகத்து யானை .  

இந்த படத்தை பார்த்தாலே உங்களுக்கெல்லாம் தெரியும் . ஆமாம் . இன்னிக்கு  ஐராவதம் 

என்று அழைக்கப்படும் இந்திரனின்  யானையை பற்றிதான் சொல்லலாம் என்று  இருக்கேன் .


வாங்க . பாக்கலாம் .


ஐராவதம் 



இந்திரனின் வாகனம் ஐராவதம் .எல்லா யானையை விட ஐராவதம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் 

அது  மிகவும் கர்வம் கொண்டு இருந்தது . இந்திரன் "விருத்திராசுரனை வென்று விட்டு மமதையில் 

தேவலோகத்திற்கு ஐராவத யானை  மீதேறி வந்து கொண்டிருந்தான் ". தேவர்கள் எல்லாம் 

இந்திரனை வரவேற்க வந்திருந்தார்கள்.


துர்வாச முனிவர் மிகவும் கோபக்காரர் . அவருக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் .அவருக்கு கோபம் 

வந்தால் "இந்தப்பிடி சாபம்" என்று சபித்து விடுவார்.அப்படிப்பட்ட முனிவரிடம் ஒரு சமயம் 

ஐராவத யானை மாட்டிக் கொண்டது .

துர்வாச முனிவர் சிவபெருமானை மலர் தூவி வணங்கி வழிபட்டார் .அவர் பக்திக்கு மகிழ்ந்த ஈசன்,

தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார் .இறைவன்  தந்த 

பிரசாத்தைத் தன்  கமலண்டத்தில் வைத்து கொண்டார் .

தொடர்புடைய படம்
மலரை இந்திரனுக்கு கொடுத்து அவன்  நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்  

பொற்றாமரையை  இந்திரனிடம் கொடுத்தார் .

 இந்திரன் அதை வாங்கி யானையின்  மத்தகத்தின் மீது வைத்தான் .


அழகும்,பதவியும் பெற்ற ஐராவதம் கடவுளின் அருளை பெறவில்லை .யானை அதை தும்பிக்கையால் 

எடுத்து கால்களில் போட்டு  மிதித்து விட்டது .துர்வாச முனிவர் கோபம் கொண்டார் .இந்திரனை 

பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்று போவாய் . அவனுடைய சக்காரயுதம் உன் 

தலையை  கொய்து விடும் என சாபம் இட்டார் .இந்திரன் ஒரு மானிடனிடமா  நான் உயிர் 

விடுவது ?என  முனிவரிடம்  சாபத்தை மாற்றி அமைக்கும்படி கெஞ்சினான் . முனிவர் கொடுத்த 

சாபத்தை திரும்பி பெற முடியாது . வேண்டுமானால் அவன் உன் தலையை கொய்யும் போது 

உன் கீரிடத்தை  மட்டும் பறித்து செல்லும் நிலை வரும் என கூறினார் .







ஐராவதத்திடம் உன்  வெள்ளை நிறம் அழிந்து,தேவலோகத்து  யானையான  நீ பூலோகம் சென்று  காட்டுக்குள்

பிற யானைகளுடன் கலந்து ,நூறாண்டு காலம் காட்டில் சுற்றி திரிவாய் .பிறகு இந்திரலோகம்

அடைவாய் என சாபமிட்டார்.வெள்ளை யானை கண்ணீர்  வடித்தது .


பிறகு  பூலோகம் வந்து கடம்ப வனத்துக்கு புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட

மதுரையம்பதி.அங்கிருந்த  சொக்கலிங்கத்துக்கு  அது  பொற்றாமரைக்  குளத்தில்  இருந்து

தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது .தாமரையை பறித்து வந்து தூவி

வழிபட்டது .அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் முன் தோன்றினார் .

தொடர்புடைய படம்


ஐராவதமே ! இந்த நொடியிலிருந்து உன்னுடைய சாபம் நீங்கியது .நீ இந்திரலோகம் திரும்பலாம்

என்றார்.யானை சிவனிடம்,தங்களை பிரிய மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருந்து

விடுகிறேன் என்றது .தங்களின் விமானத்தை தாங்கும் யானைகளில்  ஒன்றாக என்னையும் வைத்து

கொள்ள வேண்டும் என்றது .


அதற்கு சிவபெருமான் இந்திரன் என் பக்தன்.அவனை சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும்

நீ இந்திரலோகத்திற்கு செல் என்று சொல்லி ஐராவதத்தின் சுய உருவத்தை தந்தார் .


வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்திற்கு ஐராவதநல்லூர் என்ற  பெயர் வந்தது .

இந்திரன் ஐராவதம் இருக்கும் இடம் அறிந்து வந்தான். சிவனிடம் ,யானையின்  கோரிக்கையை



நிறைவேற்றும் வகையில்  தான் எழுப்பிய விமானம் தன்  பெயரால் இந்திர விமானம் என

அழைக்கப்படவேண்டும் என்றும் , வெள்ளை யானை தன்னை தாங்குவது  போல் அந்த

விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது  போன்ற தோற்றம் வேண்டும் என்றும்

கேட்டுக் கொண்டான் .அதன்படியே ,8 வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதர் விமானத்தை

தாங்கியுள்ளனர் .


என்ன ப்ரண்ட்ஸ்! ஐராவத யானையைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள் .இதை எழுதியது எல்லாம்


கடவுள் எனக்கு கொடுத்த அருள் என்று  கருதி, என்றும் கடவுளின் அருள் எனக்கும்,என்


பதிவை பொறுமையாக பார்த்த அத்தனை அன்பர்களுக்கும்   கிடைக்க வேண்டும் என்று


சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன்.


நன்றி .


ஓம் நமச்  சிவாய

நாளை மீண்டும் இன்னும் ஒரு தலைப்பில் .
உங்கள் ஈஸ்வரி














2 கருத்துகள்: